ரயில் நகர்ந்த நொடியிலேயே அவளின் மனம் பின்னால் ஓட ஆரம்பித்தது.
ஒவ்வொரு சக்கர சத்தமும் ஒரு நினைவாக மாறியது. சில நினைவுகள்அவளின் நெஞ்சை நெரித்தது.சில நினைவுகள்
அவளை இன்னும் உடைத்தது.
“நீ எங்க போறே?”அன்று கேட்ட குரல்
இன்னும் அவளின் காதில் ஒலித்தது.
“நான் போறேன்…எனக்கு இங்க மூச்சு முட்டுது” என்று சொல்லிவிட்டு
திரும்பிப் பார்க்காமலே
சென்னையை விட்டுப் போன அந்த நாள்.
அவள் கண்ணீரோடு சிரித்தாள்.
அன்று அவளுக்கு தெரியவில்லை மீண்டும் இதே இடத்தில் யாரை சந்திக்கக் கூடாது என்று நினைத்தமோ அவர்களை தான் மீண்டும் சந்திக்க போகிறோம் என்று..
மடியில் இருந்த குழந்தை சற்றே அசைந்தான்.அவள் உடனே
அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.
“உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்”என்று மனதுக்குள் சொன்னாள்.அவளின் கண்களில்
கண்ணீர் நிறைந்தது.துடைக்க முயற்சி செய்யவில்லை.அந்த கண்ணீரில்
வலி மட்டுமில்லை,தீர்மானமும் கலந்து இருந்தது.
ரயில் வேகமாக ஓடியது.
நேரமும் ஓடியது.அவள் வந்து சேர வேண்டிய இடம் மெதுவாக நெருங்கிக் கொண்டிருந்தது.அறிவிப்பு ஒலித்தது.
“அடுத்த ஸ்டேஷன்… சென்னை…”
அந்த வார்த்தை ஒரு காலத்தில் அவளை உடைத்தது.இப்போது அதே வார்த்தை
அவளை எழச் செய்தது.
ரயில் நின்றதும் தாரணி மெதுவாக தன் இருக்கையை விட்டு எழுந்தாள்.
குழந்தையை தூக்கி கொண்டு
ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தாள்.
தாரணி தன் மனதில் ஒரு முடிவோடு ரயில் வாசலில் வந்து நின்றபடி மெதுவாக இறங்கினாள்.
இப்போ அவள் யாரையும் நம்ப வேண்டாம்.தன் குழந்தையையும்
தன் வாழ்வையும் காப்பாத்திக்கணும்.
அதற்கான முதல் அடியாக
தோழியுடன் தங்கி ஒரு அலுவலகத்தில் பணி புரிவதற்காக வந்திருந்தாள்.
அவள் தன் மொபைலை எடுத்துப் பார்க்க அதிகாலை ஆறு மணியை காட்டியது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவள் மேலே அண்ணாந்து பார்க்க,மழை நின்றிருந்தது.
ஆனால் அவளின் கண்களில்
இன்னும் ஈரம் ஒட்டி இருந்தது.
கையில் இருக்கும் மொபைலில் தன் தோழியின் விலாசத்தை ஆட்டோ புக் பண்ணுவதற்காக டைப் பண்ணினாள். அவர் புக் பண்ணிய இரண்டு நிமிடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் அவள் அருகே வந்து நிற்கவும், அதில் ஏறி தன் தோழி தங்கியிருக்கும் இடத்திற்கு சென்றாள் தாரணி..
வீட்டு வாசல் கதவு மெதுவாக திறந்தது.
நிஷா…என்று மெதுவாக அழைத்தபடி வாசலிலேயே நின்றாள் தாரணி..
மூன்று வருடங்களுக்குப் பிறகு அவள் கண்களுக்கு தெரிந்த முகம்மாறவே இல்லை.அதே கண்கள்,அதே சிரிப்பு.
அவள் பெயரை உச்சரிக்கும் போதே
நிஷாவின் குரல் சற்று நடுங்க,தாரணி சிரிக்க முயற்சி செய்தாள்.ஆனால்
ஏதோ வாயால் சொல்ல முடியாத சோகத்தை கண்கள் சொல்லியது..
மூன்று வருடம்.கல்லூரி நாட்களில்
ஒரே அறை,ஒரே கனவு,ஒரே கண்ணீர்.
“சென்னையை விட்டு எப்போதும் போக மாட்டோம்”என்று சொன்ன இரண்டு பெண்கள்.அன்று தாரணி எதுவும் சொல்லாமலேபோய்விட்டாள்.
நிஷா அவளை “ஹே தாரு வந்துட்டியாடி”என்று அவளை இறுக்கி அணைக்க சொல்லும் போது தான் முழுசா அவளை பார்த்தாள்.அப்போதுதான்,அவளின் கையில் இருந்த அந்த குழந்தையை பார்த்ததும் ஒரு நொடி.
நிஷாவின் மூளை அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“தாரணி…?”இது..அந்த ஒரு அழைப்பில்
ஆச்சரியமும், அதிர்ச்சியும்,
ஆயிரம் கேள்விகளும் கலந்து இருந்தது.
தாரணி மெதுவாக தலையசைத்தாள்.
“ஆமா, நிஷா என் மகன் தான் என்று தன் மார்போடு அணைத்துக் கொண்டாள்…”அவள் பதில் சொல்லவில்லை.ஆனால் அவளின் கண்கள்முழு கதையையும் சொன்னது.
நிஷா மெதுவாக அருகில் வந்து,
குழந்தையை பார்த்தாள். அவன் உறங்கிக்கொண்டிருந்தான்.
அந்த உறக்கத்தில் கூட ஒரு அமைதி இருந்தது.
“இவன்…?”என்று கேட்கும் போது
நிஷாவின் குரல் உடைந்தது.
“என் உயிர்…” என்றாள் தாரணி.
அவ்வளவு தான்.அதற்கு மேல்
விளக்கம் தேவையில்லை.
நிஷா தாரணியை
மெதுவாக அணைத்துக்கொண்டாள்.
“என்ன நடந்துச்சு,எனக்கு தெரியணும்”
“ஆனா அதுக்கு முன்னாடி…”
“நீ இங்க பாதுகாப்பா இருக்கணும்”
அந்த ஒரு வாக்கியம்
மூன்று வருட சுமையை
தாரணியின் நெஞ்சிலிருந்து
சற்றே இறக்கிவிட்டது.
தாரணி கண்களில் இருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது..ஆனால்,இந்த முறை
வலிக்காக இல்லை.
நிம்மதிக்காக.
கல்லூரி காலத்தில் அவளை சிரிக்க வைத்த அதே தோழி. இப்போது
அவளை உடையாமல்
பிடித்து நிறுத்துகிறாள்.
நிஷா குழந்தையின்
சின்ன கையை தொட்டுப் பார்த்தாள்.
“மூன்று வருடம் கழிச்சு
நீ மட்டும் திரும்பி வந்திருந்தா
நான் அதிர்ச்சி அடைந்திருப்பேன்…”
“ஆனா இப்போ நீ ஒரு தாயா வந்திருக்க…” என அவள் சொல்ல
தாரணி மெதுவாக “நிஷா…எல்லாமே சொல்றேன்.ஆனா இப்போ இந்த குழந்தைக்கு ஒரு வீடுத் தேவை…”என சொல்லவும்
நிஷா உடனே சிரித்தபடி,, “இந்த வீடு அப்போவும் உன்னோடது தான்…
இப்போவும் அதே தான்…”என சொல்ல
தாரணி மனதில் புது நம்பிக்கை வந்தது.சில உறவுகள் நேரத்தால் பிரியலாம்…ஆனா அவை உடையாது. மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அந்த நட்பு மீண்டும் உயிர் பெற்றது.
அறை அமைதியாக இருக்க, ரித்விக் மெதுவாக உறங்கிக்கொண்டிருந்தான்.
வெளியில் மழை சத்தம் மட்டும்.
நிஷா தாரணியை பார்த்தாள்.
மூன்று வருட இடைவெளி இருந்தாலும்,
அவள் முகத்தில் பதிந்திருந்த அந்த வலி
நிஷாவுக்கு புதிதல்ல. சற்று தயங்கியபடி நிஷா அவளின் அருகே வந்து “தாரணி…
இவனோட…அப்பா…?”என கேட்க,
அந்த வார்த்தை தாரணியின் நெஞ்சில்
எதிர்பாராத இடத்தில் விழுந்தது. ஒரு நொடி,அவள் மூச்சு சற்று தடுமாறியது.
கண்கள் குழந்தையின் முகத்திலேயே நின்றது.
“இவன் தூங்குறான் பாரு…” என தாரிணி மெதுவாக சொல்லி, குழந்தையின் கன்னத்தை அவள் விரலால் தடவினாள்.
நிஷா புரிந்துகொண்டாள்.ஆனால் கேள்விஅவளின் மனத்தில் இன்னும் உயிரோடு இருந்தது. “நீ சொல்லலாம்னா சொல்லு…இல்லாட்டி…”என சொல்லிவிட்டு நிஷா அமைதியாக,
தாரணி ஜன்னலுக்குப் பக்கத்தில் சென்று,வெளியே பார்த்தாள்.
சென்னை மழை…
மூன்று வருடங்களுக்கு முன்
அவளை அழ வைத்த அதே மழை.
“சில கதைகள்,எவ்வளவு பேசினாலும்
முடிவுக்கு வராது, நிஷா…”
அவள் குரல் உடைந்தது.
ஆனால் அவள் கண்களில்
கண்ணீர் வரவில்லை.
“இவனுக்காக நான் நிறைய சமாளிச்சிருக்கேன்…”
“இப்போவும்
சமாளிக்கத்தான் வந்திருக்கேன்…” அந்த வார்த்தைகள் ஒரு பதில் போல இல்லை.
ஆனால் முழு உண்மையையும்
சுமந்திருந்தது.நிஷா எதுவும் கேட்கவில்லை.அவள் அருகில் வந்து,
தாரணியின் தோளில் கையை வைத்து
“சரி டி, அவன் கிட்ட எதுவும் நான் கேட்க மாட்டேன்” என அவளை சொல்ல
தாரிணி மெதுவாக திரும்பி, நிஷாவை பார்த்தபடி,ஒருநாள் சொல்றேன்,
அதுவரைக்கும் இவன் மட்டும் போதும்.
அவள் குழந்தையை மீண்டும் அணைத்துக்கொண்டாள்.
அறை முழுக்க அமைதி. குழந்தையின் மூச்சுச் சத்தம் மட்டும்நிசப்தத்தை உடைத்துக் கொண்டிருந்தது.
நிஷா தாரிணியை பார்த்துக் கொண்டே இருந்தாள்.அவளுக்குத் தெரியும்.
கல்லூரி காலத்திலிருந்தே. தாரிணி – தீரன் உயிருக்கு உயிராக காதலித்த இரு காதல் நெஞ்சங்கள்.அவர்கள் சிரிப்பை பார்த்தவர்கள்,பிரிவை நம்பவே முடியாதவர்கள்.அதனால் தான்
நிஷாவின் மனம்அந்த பெயரை
மெதுவாக தொட்டது.
“தாரணி…நீயும்…
தீரனும்…” என அவள் சொல்லி முடித்ததற்கு,
அவ்வளவுதான்,அந்த பெயர்
அவளின் காதில் விழுந்த நொடியில்
அறையில் இருந்த காற்றே மாறியது.
இதுவரை அமைதியாக இருந்த தாரணி
திடீரென்று நிமிர்ந்து “நிஷா!” என கோபமாக கத்தினாள்..
அவள் குரல்அவளுக்கே புதிதாக இருந்தது.“அந்த பெயரை
மறுபடியும்என் முன்னாடி
உச்சரிக்காத!” என அவள் சொன்னதும்
ரித்வி திடுக்கிட்டு அசைய,
தாரணி மெதுவாக அவன் முதுகை தட்டியவாறு,“உனக்கு எல்லாம் தெரியும் தானே?எப்படி காதலிச்சோம்…”
“எவ்வளவு கனவு கட்டினோம்…”
அவளின் கண்கள் கனத்த கண்ணீரால் நிரம்ப
“அதே காதல் தான் என்னை இப்படி
சிதைச்சு போட்டது!” என அவள் சொல்ல
உடனே நிஷா,“தாரணி, நான்..அது இல்ல!” என ஏதோ சொல்ல வர,
“நீ பேச வேண்டாம் நிஷா” என்று அவள் கோபமாக சொல்ல
தாரணியின் கோபம் வருடங்கள் முழுக்க
அடக்கி வைத்த வலி.அந்த பெயர்
காதலா இருந்தப்போ என் உயிர்…”
“ஆனா இப்போ அது ஒரு காயம், நிஷா!”
நான் மறக்கணும்னு நினைக்கிறேன் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தாது பிளீஸ்..
“அவன் இல்லாம நான் சாகல…ஆனா வாழ்றதுக்குஒவ்வொரு நாளும்
போராடறேன்” என்ன சொல்லும் போதே அவளின் குரல் உடைந்தது.
நிஷா எதுவும் பேசாமல் அவளை பார்க்க,அவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
மன்னிச்சுடு…டி,உன்னை காயப்படுத்தணும்னு நான் நினைக்கல” என்று அவள் சொன்னதும்
தாரணி மெதுவாக மூச்சை இழுத்தாள்.
எனக்கு கோபம்,உன் மேல இல்ல,என் மேல…அந்த காதல் மேல…” என சொல்லிக்கொண்டே அவள் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“சரிடி நீ ரெஸ்ட் எடு இன்டர்வியூக்கு போகணும்ன்னு சொன்னல்ல, கொஞ்ச நேரம் கழிச்சு குளிச்சிட்டு கிளம்பு.நானும் நைட் ஷிப்ட் முடிச்சிட்டு இப்ப தான் வந்தேன், டயர்டா இருக்கு..அம்மா வேற ஊர்ல இருந்து போன் பண்ணுவாங்க” என சொன்னபடி நிஷா அந்த அறையில் இருந்து வெளியே செல்ல,
தாரணி மௌனமாக அந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை பார்த்தாள். அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். அவள் மெதுவாக கதவை பூட்ட,
பூட்டு விழும் சத்தம் கூட
அந்த பிஞ்சு குழந்தையின் நிசப்தத்தை கலைக்கக் கூடாதுஎன்று அவள் மூச்சை அடக்கிக்கொண்டாள்.
அவனின் நெற்றியில் ஒரு சின்ன முத்தம்.அந்த முத்தத்தில்
ஒரு தாயின் பாதுகாப்பும் ஒரு பெண்ணின் நிம்மதியும் கலந்து இருந்தது.
அறை மங்கலான வெளிச்சத்தில் மூழ்க,
தாரணி மெதுவாக கண்ணாடி முன் வந்து நின்றாள்.
மூன்று வருடங்கள் அவள் முகத்தில் சோர்வு,கண்களில் ஒரு வலி,
ஆனால் அந்தக் கண்களுக்குள்…
இன்னும் தீரன் தான்.
அவள் தன்னை பார்த்துக் கொள்ளவில்லை.அவள் பார்த்தது
ஒரு காலத்தில்அந்த கண்ணாடி முன்
இருவராக நின்ற அந்த தருணத்தை.
அவன் பின்னால் நின்றான். அவளின் கண்ணாடிப் பிரதிபலிப்பில்
அவனின் சிரிப்பு தெரிந்தது.
“உன்ன விட இந்த உலகத்துல எதுவுமே எனக்கு பெருசா இல்ல தாரணி,உன்னைய நான் அழகா பார்த்துக்கணும்” என சொல்லி
அவன் அவளின் கையை பிடித்த தருணம்.
அதே கண்ணாடி,அதே இடம்.
தாரணி மெதுவாக கண்ணாடியைத் தொட்டாள்.
விரல்கள் நடுங்கின.அந்த கண்ணாடி குளிராக இருந்தது.ஆனால் நினைவுகள்
சூடாக இருந்தது.
“இந்த கண்ணாடி பொய் சொல்லாது,
நீ சிரிச்சா,அது திருப்பி சிரிக்கும். நீ எப்பவுமே அழக்கூடாது என்னோட தாரணி எப்பவும் கண்ணாடி முன்னாடி சிரிச்சிட்டே இருக்கணும் ”என்று தீரன் சொன்னதுஅவளின் காதில் ஒலித்தது.
அவள் மெதுவாக சிரிக்க,அந்த சிரிப்பில்
வலி இருந்தது.ஆனால் காதலும் இருந்தது.காதல் போய்விடவில்லை.
அது காயமாய் மாறி உள்ளே பதிந்திருந்தது. அவள் கண்களில் ஒரு ஏக்கம்..
“நீ இல்லாம,நான் மாறிட்டேன்…”
“ஆனா உன்னை மறக்கல…”அதை
அவள் சத்தமில்லாமல் மனதுக்குள் சொன்னாள்.
கண்ணாடியில் தெரிந்த தாரணி அவனை உருகி உருகி உயிராக முன்பு காதலித்தவள். ஆனால் இப்போது தாய்.
கண்ணாடி முன் நின்றிருந்த தாரணியின் மூச்சு மெதுவாக கனத்தது.
ஏதேதோ நினைவுகள் ஒன்றிரண்டு அல்ல.அவளின் மனதில் அடுக்கடுக்காய்
மோதிக்கொண்டே இருந்தது.
தீரன் அவன் சிரிப்பு.அவன் பேசியது,
அவன் மௌனம் என நினைத்துக் கொண்டே இருந்தவள்
“எதுக்கு இன்னும் நினைக்குறேன்?”
“எதுக்கு இன்னும் வலிக்குது?”
என்று அவள் தன்னிடமே கேட்டு கொண்டாள்.
கண்ணாடியில் தெரிந்த முகம்
அவளுக்கே பிடிக்கவில்லை.
அந்த கண்களில் பலவீனம்,காத்திருப்பு.
மறைக்க முடியாத காதல்.
திடீரென்று, அவள் கை உயர்ந்தது.
ஒரே அடியில் கண்ணாடி உடைந்து,
சில்லுகள் சிதறின.
அவளின் இதயம் உடைந்த மாதிரி
ஒவ்வொரு துண்டும் தரையில் விழுந்தது.
போதும்,இனி அந்த காதல் வேண்டாம்..
இனி அந்த பெயர் வேண்டாம்!” என அவள் சத்தமாக சொல்லவும் அந்த குரல்
அறையை நிரப்பியது.
ஆனால் அந்த உடைந்த கண்ணாடியில் கூட தீரன் தான் அவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
கண்ணீர் வழிந்தபடியே
அவள் குளியலறைக்குள் சென்றாள்.
நீர் அவள் மேல் விழுந்தது. தண்ணீரோடு கண்ணீரும் சேர்ந்து சென்றது..
அவன் இல்லாம நான் வாழணும்,இனி என் வாழ்க்கை என் குழந்தைக்காக…”
அவள் கண்களை மூடிக்கொண்டாள்.
நீரோடு சேர்ந்து அவளின் பழைய தாரணியும் சென்றாள்
சிறிது நேரம் கழித்து,அவள் வெளியே வந்தாள்.முடியை சுருட்டிக் கட்டினாள்.
சாதாரண சுடிதார், கண்ணாடி இல்லாத சுவரை பார்த்து ஒரு ஆழ்ந்த மூச்சு விட்டபடி, “இந்த இன்டர்வியூ தான்
என் வாழ்க்கையின் முதல் படி, எல்லாம் நல்லபடியா போகணும் என மனதில் நினைத்துக் கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டாள்
நிஷா அவளின் அருகே வந்தாள்.
“டென்ஷன் ஆகாத தாரு,நீ தைரியமானவள்” என்று தோழி சொன்ன போது தாரணி ஒரு சின்ன சிரிப்பு மட்டும் சிரித்தாள்.
“உனக்கு தொல்லை கொடுக்குறேன்னு நினைக்காத, இன்னைக்கு ஒருநாள் மட்டும் ரித்விக்கை பாத்துக்கோ நாளைக்கு கேர்டக்கரில் விட்டுட்டு வேலைக்கு போறேன்” என தாரணி சொல்லவும்
“ப்ச்.. நீ தைரியமா போடி நான் பாத்துக்குறேன்” என்று நிஷா சொன்னதும்
“ரொம்ப தேங்க்ஸ்” என தன் தோழியை கட்டி அணைத்து வெளியே வந்து அவளின் ஸ்கூட்டியை எடுத்தபடி அந்த அலுவலகத்திற்கு சென்றாள் தாரணி..
இன்று இன்டர்வியூருக்காக நிறைய ஆட்கள் இருப்பதை பார்த்தவளுக்கு மனதில் ஒரு பதட்டம், கையில் ஒரு நடுக்கம். அங்கே இருக்கும் ஒரு இடத்தில் போய் அவள் அமர்ந்து நேர்காணலுக்கு தயாராக இருந்தாள்.
“அடுத்த கெண்டிடேட்…”என்று குரல் ஒலித்தது. தாரணி மெதுவாக எழுந்து அதிகாரி அறைக்குள் உள்ளே நுழைந்தாள்.அறை அமைதியாக இருந்தது.பெரும் பொறுப்பில் இருக்கும்அதிகாரி எதிரே அமர்ந்திருந்தான்.
தலை குனிந்தபடி ஃபைல் பார்த்துக்கொண்டிருந்தான்.
“Please take your seat…”என சொன்னபடி அவன் தலை நிமிர்ந்தான்.
அவன் ஆதித்யா தீரன்.அதே கண்கள்.
அதே முகம்.ஆனால் இப்போது
அவன் ஒரு அதிகாரி.
அந்த ஒரு நொடி. அறையில்காற்றே நின்றது.தாரணியின் உள்ளம்ஒரே நொடியில் நூறு துண்டுகளாக உடைந்தது.அந்த காதலன்…
இப்போது அவளின் எதிரே விதியாய் அமர்ந்திருந்தான்.
அவன் கண்களில் அதே அதிர்ச்சி.பலகேள்விகள்
