உயிராக வந்த உறவு – அத்தியாயம் 21

அலுவலகத்தில் நடந்த அந்த சம்பவத்துக்குப் பிறகு அர்ச்சனா அமைதியாக இருந்தாலும், அவள் மனம் மட்டும் தீயாக எரிந்துக் கொண்டிருந்தது.

தாரணிக்கு திருமணம் முடிந்து குழந்தை இருக்கிறது என்று தெரிந்த அந்த நொடியில் அவள் மனதில் ஒரு திட்டம் உருவாகிவிட்டது.

“இப்போ தான் சரியான நேரம்…

தீரனை உடனே கல்யாணம் பண்ணிக்கணும்…” என்றஎண்ணத்தோடு அந்த மாலை அவள் நேராக தீரனின் வீட்டிற்கு சென்றாள்.

வீட்டில் தீரனின் அம்மா அமர்ந்து கொண்டிருந்தார்.“வா மா அர்ச்சனா…” என்று அன்பாக வரவேற்றார். அவனுக்கு அப்பா இல்லை அதனால் அவன் அம்மாவை இவள் எப்படியோ பேசிய மயக்கி விட்டாள், அதனால்  அம்மாவிற்கு அர்ச்சனாவை அதிகமாக பிடிக்கும்..

அர்ச்சனா அவர்களின் அருகில் அமர்ந்தாள். கையில் அம்மாவை பார்க்க பழங்கள் வாங்கிக் கொண்டு வந்து இருந்தாள். அதை அவர்களிடம் நீட்ட,”என்னம்மா உனக்கு தான் உடம்பு சரியில்லை, என்னால தான் உன்னை வந்து பார்க்க முடியல எனக்கு பிரஷர் அதிகமாகி கால் வலிமா எதுவும் நினைச்சுக்காத” என சொல்லவும் 

அச்சோ பரவால்ல,அதான் உங்க பையன் என் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டார்களே என சொல்லி சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

“ஆண்டி… நான் ஒரு விஷயம் சொல்லணும்.”

“சொல்லு மா…”

அவள் முகத்தில் கவலையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

“நான் இதை சொல்லாம இருந்தா தீரன் வாழ்க்கை கேள்விக்குறியாய் ஆயிடுமோ என்று பயமாக இருக்கிறது.”என சொல்ல

அந்த வார்த்தை கேட்டதும் தீரனின் அம்மா “என்ன மா நடந்தது?”என கேட்க

அர்ச்சனா மெதுவாக“அந்த தாரணி பற்றி…”என சொல்லவும்

அவர்களின் முகம் சற்றே மாறியது. “என் பையன காதலிச்சு விட்டுட்டு போனவளை பத்தி ஏமா பேசுற, அவளால என் பையன் ரொம்ப கஷ்டப்பட்டான். அவன் வாழ்க்கையை திரும்ப மீட்டு எடுத்ததே நீதான்.. இப்ப எதுக்கு அவள் பேரை சொல்ற?” என தீரனின் அம்மாவிடம் பெயரை சொன்னாலே கோபப்படும் அளவுக்கு ஒரு கதையை உருவாக்கி அர்ச்சனா சொல்லி இருந்தாள்..

“அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு ஆண்டி… ஒரு குழந்தையும் இருக்கு.”என சொல்ல

அந்த வார்த்தை வீட்டில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“என்ன…?” என்று தீரனின் அம்மா நம்ப முடியாமல் பார்த்தார்.

அர்ச்சனா தொடர்ந்து“ஆமாம்… நான் என் கண்ணால பார்த்தேன். ஆனா இன்னும் அவள் தீரன் வாழ்க்கையில வர முயற்சி பண்ணுறாங்க.”என சொல்லவும்

“என்னம்மா சொல்ற நீ?” என்ன தீரன் அம்மா கோபப்பட, 

“நான் இதை சொல்லாம இருந்தா தீரன் மீண்டும் அவளை நம்பிடுவான் என்று பயமாக இருந்தது.”என அர்ச்சனா சொல்லி முடிக்க

தீரனின் அம்மா சற்று கோபமாக 

“அப்படி ஒரு பெண் என் மகன் வாழ்க்கையில இருக்கக் கூடாது.”என சொல்ல

அர்ச்சனாவின் உள்ளம் இதை கேட்டதும் மகிழ்ந்தது.அவள் மெதுவாக சொன்னாள்.“அதனால தான் நான் ஒரு முடிவு எடுத்தேன் ஆண்டி.”

“என்ன முடிவு?”

அவள் நேராக பார்த்து சொன்னாள்.

“நம்ம கல்யாணத்தை சீக்கிரமா பண்ணிக்கலாம்.”என சொல்லவும்

அந்த வார்த்தை கேட்டதும் அவர்கள் சில நொடிகள் யோசித்தார்கள்.

“அது நல்லதுதான் மா… உனக்கும், தீரன்க்கும் கல்யாணம் ஆயிட்டா எல்லா பிரச்சனையும் முடிஞ்சிடும்.” என்று சொல்ல

அர்ச்சனாவின் முகத்தில் ஒரு வெற்றி சிரிப்பு தோன்றியது.“நாளைக்கே நல்ல நாள் பார்க்கலாம் ஆண்டி எங்க அப்பா கிட்ட சொல்லி.”என அவள் பேசி கொண்டே இருக்கும் போது,

அதே நேரத்தில் கதவு திறந்து தீரன் உள்ளே வந்தான்.அவன் முகத்தில் சோர்வு.“அம்மா… என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க?”என கேட்க

தீரனின் அம்மா மகிழ்ச்சியாக

“உன் கல்யாணம் பற்றி தான் பேசிக்கிட்டு இருக்கோம்.” என்று சொல்லவும்

தீரன் அதிர்ச்சியாக அர்ச்சனாவை பார்த்தான்.

“என்ன…?”

“அடுத்த மாதம் இல்ல… இந்த மாதத்திலேயே உனக்கும் அர்ச்சனாவும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று முடிவு பண்ணிட்டோம்.”

அந்த வார்த்தை தீரனை அமைதியாக்கியது.

அவன் ஒரு நொடி அர்ச்சனாவை பார்த்தான்.

அவள் முகத்தில் அமைதியான சிரிப்பு.

ஆனால் அந்த சிரிப்பின் பின்னால் இருந்தது ஒரு திட்டம்.

“தீரன் மனம் மாறுவதற்கு முன்னாடியே

அவனை என் வாழ்க்கையில கட்டிப் போடணும்.” என்ற எண்ணம்..

இப்ப எதுக்கு அம்மா அவசர அவசரமா என்ன அவன ஆரம்பிக்கும்போதே “என்னடா நம்ம அர்ச்சனா என்னென்னமோ சொல்ற, நீ திரும்ப அந்த தாரணி..” ஆரம்பிக்கும் போது 

“சரிமா உங்க இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிறேன் வேற எதுவும் பேசாதீங்க” என அவன் ஏற்கனவே நொந்து போயிருந்ததால் தாரணி பற்றி மேற்கொண்டு தொடர விரும்பவில்லை..

அர்ச்சனா அவன் வேறு எதுவும் பேசாமல் தீரனின் மனம் மாறுவதற்குள் அவன் மனைவியாக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது.

“ ஓகே ஆன்ட்டி நான் அப்பா கிட்ட பேசிட்டு நல்ல நாள் குறிச்சிட்டு சொல்றேன்” என்று வேகமாக கிளம்பினாள் 

அவனுக்குத்தான் இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. தன்னுடன் நெருங்கி பழகியவள் யாரையோ திருமணம் செய்து கொண்டு எங்கேயோ போய்விட்டாள் என்று நினைத்த நேரத்தில் தன் முன் மீண்டும் வந்தவள் இப்போது குழந்தை இருக்கிறது என்று சொல்கிறாளே என இரவு முழுவதும் தூங்காமல் அதையே யோசித்துக் கொண்டு இருந்தான்..

மறுபக்கம் அர்ச்சனா காரில் டிரைவருடன் சென்று கொண்டு இருக்க ஏதோ ஒரு பாடல் ஒலிக்கவும் அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது..மாலை நேரம். கல்லூரி வளாகம் மெதுவாக அமைதியாகிக் கொண்டிருந்தது.மாணவர்கள் பெரும்பாலும் வெளியேறி விட,

மரம் நிறைந்த அந்த பாதையில் தாரணி மெதுவாக நடந்துக்கொண்டிருந்தாள்.

அவள் கையில் சில புத்தகங்கள்.

அந்த நேரத்தில் பின்னால் இருந்து ஒரு குரல் “ஹேய்… தாரணி!”என அழைக்க,

அவள் திரும்பி பார்த்தாள்.

அது தீரன்.

“என்ன?” என்று அவள் சிரித்தபடி கேட்டாள்.

“நீ இன்று என்னை முழு நாளும் தவிர்த்துட்டே இருந்தே… ஏன்?” என்று தீரன் கேட்டான்.

தாரணி சிரித்தபடி,“அப்படி ஒன்றும் இல்ல.” என சொல்ல

“பொய் சொல்லாதே,” என்று தீரன் அவள் முன் வந்து நின்று அவள் கையை பிடிக்க,

தாரணி சற்று பதற்றமாக சுற்றி பார்த்தாள்.

“யாராவது பார்த்தா…?” என்று அவள் மெதுவாக சொன்னாள்.

தீரன் சிரித்து கொண்டே 

“நம்ம கல்லூரில எல்லாருக்கும் தெரியும்… நீ தான் என் உயிர் என்று.”

“உயிர் ஆ?” என்று தாரணி கண்களை உயர்த்திப் பார்த்தாள்.

“அப்போ என்ன?” என்று தீரன் கேட்டான்.

அந்த கேள்விக்கு தாரணி பதில் சொல்லவில்லை.

ஆனால் அவள் முகத்தில் ஒரு வெட்கம்.

அந்த நிமிடம் இருவருக்கும் மிகவும் அழகான அமைதி.சில நொடிகள் கழித்து தீரன் மெதுவாக அவளை நெருங்க,

தாரணி அதிர்ச்சியுடன் அவனை பார்த்தாள்.

“தீரன்… யாராவது பார்த்துடுவாங்க…”

“பார்த்தா என்ன?” என்று அவன் மெதுவாக சொன்னான்.

“நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன் தாரணி.”அந்த வார்த்தை கேட்டவுடன் தாரணியின் கண்கள் மெதுவாக கண்ணீரால் நிரம்பின.

அவள் மெதுவாக சொன்னாள் 

“நானும் தான்…” அதுக்காக காலேஜ்ல இப்படி பக்கத்துல வந்து நிப்பியா? என அவள் கேட்க 

அந்த நொடியில் தீரன் அவளது நெற்றியில் மெதுவாக தன் இதழை பதிக்க,

 

தாரணி கண்களை மூடி அந்த நிமிடத்தை உணர்ந்தாள்.அது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் அழகான ஒரு நினைவு.ஆனால்…

அந்த காட்சியை தூரத்தில் இருந்து

யாரோ ஒருவர் பார்த்துக்

கொண்டிருந்தாள்.

அது அர்ச்சனா.

அவள் அந்த மரத்தின் அருகே நின்று எல்லாவற்றையும் பார்த்தாள்.

தீரன் தாரணியின் கையை பிடித்ததும்

அவளது மனம் எரிந்தது.

“தீரன்… என்னை ஒரு நாளும் இப்படிப் பார்த்ததே இல்லை…” என்று அவள் கண்களில் பொறாமை.

தாரணி சிரித்ததும்

அவளுக்கு அது தாங்க முடியவில்லை.

அவள் மனதில் ஒரு எண்ணம் உருவானது..“தீரன் என்னோட தான் இருக்கணும்…அந்த தாரணி அவன் வாழ்க்கையில் இருக்கக் கூடாது.”என்று..

அந்த நாளே அர்ச்சனாவின் மனதில்

ஒரு ஆபத்தான பொறாமை விதை விதைக்கப்பட்டது.அதே பொறாமை தான்

இன்று ஒரு பெரிய சதியாக மாறி இருந்தது.

அவள் தூரத்தில் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.தீரன் தாரணியுடன் பேசும் ஒவ்வொரு நிமிடமும்

அவளுடைய மனத்தில் ஒரு தீ போல பொறாமை எரிந்தது.

“தீரன் என்கிட்ட தான் இருக்கணும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தாள்…அந்த தாரணி அவன் வாழ்க்கையில இருக்கக் கூடாது,”

என்று அவள் மனதில் முடிவு செய்தாள்.

ஒரு நாள் கல்லூரியில் தாரணி நூலகத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.அந்த நேரத்தில் அர்ச்சனா அவளிடம் வந்து அமர்ந்தாள்.

“தாரணி… நான் உன்னிடம் ஒரு விஷயம் சொல்லணும்,” என்று மெதுவாக சொன்னாள்.

தாரணி சிரித்தபடி கேட்டாள்.

“என்ன அர்ச்சனா?”

அர்ச்சனா சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

பிறகு மெதுவாக சொன்னாள்..

“தீரன் உன்னை உண்மையா காதலிக்க மாட்டான்.”என சொல்ல

தாரணி அதிர்ச்சியுடன் அவளை பார்த்தாள்.“அப்படி ஏன் சொல்ற?”

அர்ச்சனா கவலையுடன் பேச ஆரம்பித்தாள்.“நேற்று நான் அவனையும் அவன் நண்பர்களையும் பேசிக்கிட்டு இருக்கும் போது கேட்டேன்…

அவன் சொன்னான்,‘தாரணி ரொம்ப emotional… கொஞ்ச நாள் time pass பண்ணிக்கலாம்’ என்று.”

அந்த வார்த்தை தாரணியின் இதயத்தை உடைத்தது.“அது… உண்மையா?” என்று அவள் மெதுவாக கேட்டாள்.

அர்ச்சனா தலையை கீழே குனிந்தபடி,

“நான் உன்னை காயப்படுத்த நினைக்கல…ஆனா நீ ஏமாறக் கூடாது என்பதற்காக தான் சொல்றேன்.”என்று சொல்லவும்,தாரணி பேச முடியாமல் அமைதியாக இருந்தாள்.

அவள் மனதில் ஒரு பெரிய சந்தேகம் உருவானது.

அதே நேரத்தில்,அர்ச்சனா இன்னொரு சதி செய்தாள்.அவள் தீரனிடம் சென்று

“தாரணி உன்னை பற்றி நல்ல விதமா பேச மாட்டா…” என சொல்ல

தீரன் அதிர்ச்சியுடன்“என்ன?”

“அவள் சொல்றாள்…என்று கேட்க

‘தீரன் நல்ல நண்பன் தான்…

ஆனா நான் அவனை serious ஆ காதலிக்கல’ என்று.”சொன்னாள்

அந்த வார்த்தை தீரனின் மனத்தையும் காயப்படுத்தியது.அந்த நாளிலிருந்து…

தீரனும் தாரணியும் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்ள ஆரம்பித்தார்

அவர்களின் காதலில்முதல் விரிசல் ஏற்பட்டது என அர்ச்சனா நினைத்தால்.

அந்த விரிசலுக்குக் காரணம் அர்ச்சனா.

“இது தான் ஆரம்பம்…” என்று அவள் நினைத்தாள்.இப்போ நீங்க இருவரும் தானாகவே பிரிஞ்சு போவீங்க.” என்று ஒரு வில்லத்தனமான சிரிப்புடன் அன்று நின்று கொண்டு இருந்தவள் இப்போது காரில் இதையெல்லாம் நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தாள்..

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போகுமா,அப்படி நினைத்தால் அது பூனையின் மடத்தனம்.. காதலில் இவள் என்ன சதி செய்தாலும் அவர்கள் பிரிவு இவளால் ஏற்பட்டது இல்லை..

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உயிராக வந்த உறவு
774 10 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page