“உனக்கு என்ன தான் டி பிரச்சனை, நீ எதுக்கு உங்க ஊர்ல இருந்து இங்க வந்த?என்னென்னமோ சொல்ற நீ இப்ப ரித்திக் காணும்னு போலீஸ் வரைக்கும் போனா யாரோ மிரட்டுறாங்க.. உன்னை சுத்தி என்ன தான் நடக்கு எனக்கு ஒண்ணுமே தெரியல” என நிஷா தலையில் கை வைத்தபடி தாரணி இடம் சொல்ல
பிறகு தாரணி வீட்டுக்கு வந்தபின் நிஷாவிடம் மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
“என் அக்கா பெயர் அனன்யா… அவள் கணவர் விக்ரம்…”அவள் குரல் மெதுவாக நடுங்கியது.
விக்ரம் மாமா ரொம்ப நல்ல நல்லவர் நிஷா… என் அக்காவை உயிருக்கு உயிராக காதலித்தவர், வீட்ல பாத்து பண்ணி வச்ச கல்யாணம் தான்… அவளுக்காக எதையும் செய்ய தயாரக இருந்தவர்…”என சொல்ல
நிஷா கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
அதன் பிறகு “இதெல்லாம் எனக்கு நீ காலேஜ் படிக்கும் போதே தெரியுமேடி,அதுக்கப்புறம் என்னதான் நடந்துச்சு.. ஆமா நீ தீரன் கிட்ட யாரையோ கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லிட்டு தான போன. இங்க வந்த ஒரு குழந்தையோட இருக்க இப்ப கேட்டா உங்க அக்கா குழந்தையின் சொல்ற, அக்கா எங்கன்னு கேட்டா விட்டுட்டு போயிட்டாங்கங்கிற..எனக்கு ஒண்ணுமே புரியல தாரணி,தயவு செஞ்சு தெளிவா சொல்லு” என அவள் கேட்கவும்
“ சொல்லுறேன்.. அக்கா மாமா வாழ்க்கைல எந்த பிரச்சனையும் இல்லாம நல்லா தான் போயிட்டு இருந்துச்சு.ஆனா… பிரச்சனை அவர்களோட வாழ்க்கையில் வேற இடத்தில் இருந்தது…” என்று தாரணி ஒரு ஆழ்ந்த மூச்சு விட
“திருமணமாகி இரண்டு வருடம் ஆன பிறகும் என் அக்காவுக்கு குழந்தை இல்லை,அதுக்காக மாமியார் வீட்டில் தினமும் சண்டை என சொல்லும் போதே
அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் நிரம்பியது.
என் அக்காவை தினமும் குறை சொல்ல ஆரம்பிச்சாங்க,பெண்ணு இருந்தா குழந்தை பெத்துதான் ஆகணும்… இல்லேன்னா என்ன பயன்…’ என்று சொல்லி அவளை தினமும் அவமானப்படுத்தினாங்க…என்று சொல்லும் போதே நிஷாவின் முகம் சுருங்கியது.
“அப்போ விக்ரம் என்ன செய்தார்…?” என்று கேட்டாள்.
தாரணி மெதுவாக“அவர் எப்போதும் என் அக்கா பக்கம் தான் நின்னார்…”
“யாராவது அவளை காயப்படுத்தினா உடனே சண்டை போட்டார்…”அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
பிறகு மெதுவாக சொன்னாள்.
“ஒரு நாள் டாக்டரிடம் செக் பண்ணினப்போ ஒரு உண்மை தெரிய வந்தது,அது என் அக்காவுக்கு குழந்தை பிறக்க முடியாது “அந்த வார்த்தை சொல்லும் போது தாரணியின் குரல் உடைந்தது.
“அந்த உண்மை தெரிஞ்ச வீட்டில் இன்னும் பெரிய பிரச்சனை வரும் ,… ‘விக்ரம் மாமாவை அவங்க அம்மா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ’ என்று தினமும் சொல்ல ஆரம்பிச்சிரூவாங்க…”என மாமா பயந்து..
நிஷா அதிர்ச்சியுடன் “அப்போ என்னாச்சு…?” என கேட்க
தாரணியின் கண்களில் ஒரு பெருமை தெரிந்தது.
அவர் கோபமாக சொன்னார்…
‘எனக்கு அனன்யா தான் போதும்… அவள இல்லாம நான் வாழ முடியாது’ என்று எல்லாரிடமும் சொன்னார், பிரச்சனை என்கிட்ட தான் இருக்கு என்று தன் மீது பழியை தூக்கி போட்டுக் கொண்டார்…”
நிஷா ஒரு நிமிடம் அமைதியாக இருக்க,
ஆனால் தாரணி மெதுவாக தலை குனிந்தாள்.என் அக்கா மனசு அதைக் கேட்டு உடைந்து போயிட்டது…”
“தன் காரணத்தால தான் விக்ரம் வாழ்க்கை கெடக்கூடாது என்று நினைக்க ஆரம்பிச்சா…”
“தாரணி… நீ என்ன சொல்ல வர்றே?”
தாரணி மெதுவாக கண்ணீர் துடைத்தாள்.அதனால தான் என் அக்கா ஒரு பெரிய முடிவு எடுத்தாள்…”
அவள் குரல் மெதுவாக குலுங்கியது.
அந்த முடிவு தான் இந்த ரித்விக் இந்த உலகத்துக்கு வர காரணம்”என சொல்ல
அந்த வார்த்தை கேட்ட நிஷா முழுக்க அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
நிஷா அந்த வார்த்தையை கேட்டதும் சில நொடிகள் பேச முடியாமல் தாரணியை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவள் மனதில் பல கேள்விகள் ஓடின.
“தாரணி… என்ன சொல்றே நீ…? அந்த முடிவு, ரித்விக் பிறக்க காரணம்?” என்று மெதுவாக கேட்டாள்.
தாரணி கண்களை மூடி ஒரு ஆழ்ந்த மூச்சை விட்டாள். அந்த நினைவுகள் அவள் மனதை மீண்டும் காயப்படுத்த ஆரம்பித்தது.
“ஆமா நிஷா அந்த நாள் தான் எங்கள் வீட்டில் எல்லாம் மாறி போச்சு”அவள் மெதுவாக சொல்ல ஆரம்பித்தாள்.
“டாக்டர் ரிப்போர்ட் வந்த நாளே என் அக்கா முழுக்க உடைந்து போயிட்டா, வெளியில யாரிடமும் சொல்லாமல் இருந்தாலும் உள்ளுக்குள் அவள் தினமும் அழுதுட்டே இருந்தா…”
விக்ரம் மாமா எவ்வளவு சமாதானப்படுத்தினாலும் அவள் மனசு அமைதியாகவே இல்லை.சில நாட்களாக மாமியார் மனதில் ஒரு சந்தேகம் ஊர்ந்து கொண்டே இருந்தது. அனன்யா பேசும் சில வார்த்தைகள் அவள் நடக்கும் விதம் ஏதோ சரியாக இல்லை என்று தோன்றியது.
அந்த மாலை மாமியார் அமைதியாக விக்ரமையும் அனன்யாவையும் அழைத்து ஹாலில் உட்கார வைத்தார். மாமனாரும் அருகில் இருந்தார்.
“ஒரு விஷயம் கேட்கணும்…” என்று மாமியார் கடுமையாக ஆரம்பித்தார்.
அனன்யா கொஞ்சம் பதட்டமாக அவர்களை பார்த்தாள்.“என்ன அம்மா…?” என்று மெதுவாக கேட்டாள்.
மாமியார் கையில் இருந்த ஒரு காகிதத்தை மேசை மீது போட்டார்.
“இதுக்கு நீ என்ன சொல்றே…?”
அது ஒரு மருத்துவமனை ரிப்போர்ட்.
அதை பார்த்தவுடன் அனன்யாவின் முகம் வெண்மையாக மாறிவிட்டது.
மாமியார் கோபமாக பேச ஆரம்பித்தார்.
“இத்தனை நாள் நாங்களே உன்னை குறை சொல்லி திட்டிக்கிட்டு இருந்தோம்… ‘உனக்கு குழந்தை வரல’ன்னு…”ஆனா இந்த ரிப்போர்ட் என்ன சொல்லுது தெரியுமா…?”
அவள் குரல் நடுங்கியது.
“உனக்கு குழந்தை வர முடியாததுக்குக் காரணம் நீ இல்லை, என் மகன் என்று சொன்ன…!”அனன்யா தலை குனிந்தாள்.
விக்ரம் அமைதியாக இருந்தான்.
மாமியார் தொடர்ந்து“அப்போ நீ ஏன் இத்தனை நாள் பொய் சொல்லி நம்ம வீட்டில நடிச்சிருக்க அப்படித்தானே உண்மையிலேயே என் பையனுக்கு தான் பிரச்சனையா?”என்று மாமனாரும் கோபமாக பார்த்தார்.
உனக்கு தெரிஞ்ச விஷயத்தை மறைத்து எங்களை எல்லாம் முட்டாள்களா நினைச்சியா…?”என அவன் அம்மா சொல்ல
அனன்யா கண்ணீர் விட்டாள்.
அது வந்து நான்.. நான் பயந்துட்டேன்… உண்மை சொன்னா… நீங்க என்னை ஏற்றுக்க மாட்டீங்கன்னு பயந்தேன்…”அதான் விக்ரமுக்கு பிரச்சனை என மாத்தி சொல்லிட்டோம் என்று அவள் சொல்ல
அதனால தானா நாங்க தினமும் உன்னை திட்டிக்கிட்டு இருக்கும் போது நீ எதுவும் பேசாம நின்னு கொண்டே இருந்தே…? அது உனக்கு பரவாயில்லை தானே…?” என்று சொல்ல
அந்த வார்த்தை அனன்யாவின் மனதை கிழித்தது.அவள் அழுதபடி சொன்னாள்.
“நான் இந்த வீட்டை விட்டுப் போக விரும்பல,அதனால தான்…
இந்த வீட்டை பிடிச்சதால தானா இவ்வளவு பெரிய பொய்,ஒரு பெண்ணா உனக்கு வெட்கமே இல்லையா…?” என்று
மாமனாரும் கடுமையாக பேசினார்.
குடும்பம் நம்பிக்கையில தான் நிக்குது… நீ அந்த நம்பிக்கையையே உடைச்சுட்டே…என்று ஆளு ஆளுக்கு பேச
அனன்யா தரையில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.அந்த நேரத்தில் விக்ரம்
“அவளை மட்டும் குறை சொல்லாதீங்க…”என சொல்ல
அவன் அம்மா அவனை அதிர்ச்சியாக பார்த்தார்.
அதென்ன அர்த்தம்…?
விக்ரம் மெதுவாக சொன்னான்.
“இந்த பொய் சொல்லணும்னு முடிவு எடுத்தது… நானும் தான்…”என சொல்லவும் அந்த வார்த்தை கேட்டதும் அனைவரும் அமைதியாகி விட
ஆனால் அந்த வீட்டில் அந்த நாள் முதல் ஒரு விஷயம் உடைந்து போயிருந்தது.
அது…நம்பிக்கை.
அந்த இரவு அனன்யா தனியாக அறையில் உட்கார்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.அவள் மனதில் ஒரு பயம் மட்டும் இருந்தது.இந்த உண்மை எல்லாம் வெளியே வந்துட்டு… இன்னும் என்ன நடக்கும்…?”
ஆனால் அவளுக்குத் தெரியவில்லை…
அந்த வீட்டில் நடந்த இந்த சண்டை ஒரு நாள் அவர்களின் வாழ்க்கையை இன்னும் பெரிய விபத்துக்கு கொண்டு போகப்போகிறது என தாரணி சொல்வதை நிஷா கேட்டு கொண்டே இருந்தாள்
அதுக்கு அப்புறம் ஒரு நாள் என் அக்கா என்னை தனியா அழைத்துப் பேசினா..அது.. தாரணி அந்த தருணத்தை நினைத்து கண்களை கீழே குனிந்தாள்.
அவள் என்னிடம் சொன்னது,நான் இன்னும் மறக்க முடியல…”
“தாரணி… என் காரணத்தால விக்ரம் வாழ்க்கை கெடக்கூடாது… அவருக்கு ஒரு குழந்தை வேண்டியது அவசியம்…” என்று அவள் சொன்னாள்.
“அக்கா… நீ என்ன பேசுறே…?” என்று.
தாரணி குரல் மெதுவாக சொல்ல
அப்போ அவள் என்னை பார்த்து சொன்னாள்,நான் குழந்தை பெத்துக் கொடுக்க முடியாது… ஆனா இந்த வீட்டுக்கு ஒரு குழந்தை வரணும்,அது விக்ரமோட குழந்தை தான் இருக்கணும்…” இதை கேட்கும் போது
நிஷாவின் கண்கள் பெரிதாகின.
“அதனால…?”
தாரணி மெதுவாக தலையசைத்தாள்.
ஆமா… அந்த முடிவை அவள் எடுத்தா…
“மாமாவிடம் கூட முதலில் சொல்லாமல்… டாக்டரிடம் பேசி ட்ரீட்மென்ட் எடுத்தா, ட்ரீட்மெண்ட் மட்டும் நல்லபடியா நடக்கலாம் விக்ரம் குழந்தையை செயற்கையான முறையில் நான் பெற்று கொடுக்க வேண்டுமென்று அக்கா நினைத்தாள்..
என்னடி சொல்ற நீ என நிஷா அதிர்ச்சியாக கேட்கவும்
ஆமா அதனால தான் நான் காலேஜ் முடிச்சதும் தீரன் கிட்ட எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டாங்கன்னு பொய் சொல்லிட்டு போகணும்னு நினைச்சேன். அதுக்கப்புறம் மனசு கேட்காம அவன்கிட்ட உண்மைய சொன்னதுக்கு உங்க மாமா மேல உனக்கு காதல் போல அதனால தான் அவன் குழந்தை உன் வயித்துல சுமக்க போறியா நீ, என்னைய அசிங்க படுத்துற மாதிரி பேசிட்டான்.. எங்க லவ் அதோட முடிஞ்சிடுச்சு..
ஆனா அந்த கடவுள் மனசு வச்சு எங்க அக்காவுக்கு எப்படியோ ஒரு குழந்தையை இயற்கையான முறையில் இல்லாமல் செயற்கையான முறையில் ஒரு கருவை சுமக்கிறதுக்கு அவளால முடிஞ்சது
அந்த குழந்தை தான் ரித்விக்…என்று சொல்லி அவள் கண்ணீர் துடைத்தாள்.
அவன் பிறந்தது என் அக்கா வாழ்க்கையில ஒரே சந்தோஷம்…ஆனா,
அந்த வார்த்தை சொல்லும் போது தாரணி குரல் உடைந்தது.
அவள் அந்த சந்தோஷத்தை அதிக நாள் அனுபவிக்க முடியல,
என்னாச்சு டி என நிஷா பதறி கேட்டாள்.
தாரணி மெதுவாக ரித்விக் பிறந்த சில மாதங்களிலேயே என் அக்கா உடல் நிலை மோசமா போயிட்டது,அவள் இறக்கும் முன் அந்த குழந்தையை என் கையில் வைத்து சொன்னா…இவன் இனி மேல் உன் பொறுப்பு தாரணி, நீ தான் இவனுக்கு அம்மா…’ என்று சொல்லும் போதேதாரணி கட்டுப்பாடில்லாமல் அழ ஆரம்பித்தாள்.
அதனால தான்… நான் எல்லாரிடமும் அவன் என் பையன் என்று சொன்னேன்…”
இதை கேட்டு நிஷாவின் கண்களும் கண்ணீரால் நனைந்தது.அவள் மெதுவாக தாரணியின் கையை பிடித்தாள்.
“தாரணி… நீ ஒரு பெரிய தியாகம் பண்ணிருக்கே…”ஆனால் உங்க மாமா குடும்பம் என்ன ஆச்சு என கேட்க
அதற்குள் மீண்டும் அந்த மிரட்டல் கால் வர, ஒரு ரிங்கிலேயே கட்டானது. சில நிமிடங்கள் கழித்து தாரணி அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ள ஆனால் போன் கால் போகவில்லை..தாரணியின் மனம் முழுக்க குழப்பமாகி போனது. ரித்விக் எங்கே இருக்கான், அவன் சாப்பிட்டானா… அழுதானா… என்று ஆயிரம் கேள்விகள் அவள் மனதை துளைத்துக் கொண்டிருந்தது.
அவள் மனதில் ஒரே ஒரு சந்தேகம் மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்தது.
“இது அர்ச்சனா வேலை தான்…”
அந்த எண்ணம் வந்தவுடன் அவள் உடனே மொபைலை எடுத்தாள். கை நடுங்கிக் கொண்டே அர்ச்சனாவின் எண்ணை அழைத்தாள்.
நிஷா அவளை பார்த்து பதற்றமாக கேட்டாள்.தாரணி… யாருக்கு போன் பண்ணுறே…?என்று
தாரணி கண்ணீர் மல்க மெதுவாக
“அர்ச்சனா…இந்த வேலை அவள் தான் பண்ணிருப்பா நிஷா…” என சொல்லிய சில நொடிகளில் அழைப்பு ரிங் ஆனது.
பிறகுஅர்ச்சனா அழைப்பை எடுத்தாள்.
“ஹலோ…”அவள் குரல் வழக்கம் போல குளிர்ச்சியாக இருந்தது.
தாரணி ஒரு நொடி கூட தாங்க முடியாமல் உடைந்து போனாள்.
“அர்ச்சனா… ப்ளீஸ்…”
அவள் குரல் முழுக்க அழுகை.
அர்ச்சனா சற்றே ஆச்சரியமாக கேட்டாள்.
“என்ன தாரணி… இப்படி அழுறே…?”
தாரணி நேராக கேட்டாள்.
“ரித்விக் எங்கே இருக்கான்…?”
அந்த வார்த்தை கேட்டதும் மறுபக்கம் சில நொடிகள் அமைதி நிலவியது.
அர்ச்சனா மெதுவாக சிரித்தாள்.
“என்ன சொல்றே…? உன் குழந்தை எங்கேன்னு என்கிட்ட கேக்குறியா…?”என்று அவள் சொல்ல தாரணி அழுதுகொண்டே பேசினாள்.
அர்ச்சனா… உனக்கு என்ன கோபம் இருந்தாலும் என்னிடம் வைத்துக்கோ,ஆனா அந்த குழந்தைக்கு எதுவும் செய்யாதே…” என சொல்லும் போதே அவள் குரல் நடுங்கியது.
அவன் இன்னும் சின்ன பையன்,அவன் எதுவும் தெரியாதவன்…”நிஷா பக்கத்தில் நின்று கண்ணீர் துடைத்துக் கொண்டாள்.
தாரணி தொடர்ந்து கெஞ்சினாள்.
“ப்ளீஸ் அர்ச்சனா… ரித்திக்கை விடு,
“நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்,நான் இந்த நகரத்தையே விட்டு போயிடுறேன்,தீரன் வாழ்க்கையில நான் ஒரு போதும் திரும்ப வர மாட்டேன்…”அந்த வார்த்தை கேட்டதும் அர்ச்சனா குரல் கொஞ்சம் கோவமாக “நீ என்ன நினைக்கிறே தாரணி…? நான் இவ்வளவு கீழ்த்தரமா இருக்கேன்னு நினைக்கிறியா…?” என்று சொல்ல
தாரணி திடுக்கிட்டாள்.“அப்படின்னா… ரித்விக் உன்னிடம் இல்லையா…?”
இல்லை..என அர்ச்சனா குளிர்ந்த குரலில் சொன்னாள்.
ஒரு நொடி அமைதி.
பிறகு அவள் மெதுவாக சொன்னாள்.
