உயிராக வந்த உறவு – அத்தியாயம் 8

தாரணி அர்ச்சனாவிடம் பேசிவிட்டு போனை வைக்கவும் அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று அவள் மனம் சந்தோசப்படுவதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வேண்டாம் என்று இவள் இதழ்கள் சொன்னாலும் ஆனால் மனம் இன்னும் அவன் அன்பிற்காக ஏங்கி தவிக்கத்தான் செய்கிறது. இன்னும் அவன் யாருக்கும் சொந்தமாகவில்லை என்றதும் தாரணிக்கு அப்படி ஒரு சந்தோஷம்

இந்த பிரிவும் இவளாக தேடிக் கொண்டது தானே. இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் நெருக்கம் அவ்வளவு சீக்கிரம் காற்றில் கலந்து போய்விடுமா.?

அந்த பழகிய நாட்கள் இன்னும் தாரிணியின் மனதில் புது புது மழை வாசனையோடு தான் இருந்தது.

கல்லூரி முடிந்து, சாயங்காலம் சற்று சோர்வாக இருந்த நேரம். வானம் ஆரம்பத்திலேயே சாம்பல் நிறம் பூசிக் கொண்டு நின்றது. “மழை வரும் போல இருக்கு,” என்று தாரணி சொன்னபோது, தீரன் சிரித்தபடியே வண்டியை ஸ்டார்ட் பண்ணினான்.

“வந்தா வரட்டும்… அதனால என்ன நீ என்கிட்ட சொன்ன மாதிரி இன்னைக்கு நாம கண்டிப்பா பீச்சுக்கு போயிட்டே வரலாம்,” என்று சொன்ன அவன் குரலில் ஒரு சின்ன துடிப்பு இருந்தது.

“டேய் மழையில நனைஞ்சு என்னால வர முடியாதுடா” என்று அவள் செல்லமாக சிணுங்க

“ உன்னைய நான் பத்திரமா கூட்டிட்டு போவேன் அம்மு சொன்னா புரிஞ்சுக்கோ,ஒன் டே கூட வெளியே வர மாட்டானா எப்படி டி..சரி அப்ப நான் ஒரு ரூமுக்கு வரவா”என்று அவன் கேட்கவும்

“நீங்க ஒன்னும் வர வேண்டாம் சார் வண்டிய ஸ்டார்ட் பண்ணுங்க” என்று அவன் காதை மெல்ல திருகியபடி அவள் சொல்லவும்

வண்டி நகர, கொஞ்ச நேரத்தில் அவள் அவன் முதுகுடன் இறுக்கமாக ஒட்டிக்கொள்ள காற்று முகத்தில் மோத

தாரணி அவன் தோளில் மெதுவாக சாய்ந்தாள்.

அவர்கள் கல்லூரியிலிருந்து அருகிலையே கடற்கரை என்பதால் கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே கடற்கரைக்கு வரவும்,

 உடனே தீரன்,”இந்த கடல் இன்னும் கொஞ்சம் தள்ளி இருந்திருக்கலாம் அதுக்குள்ள வந்திருச்சு” என உதட்டை சுழித்தபடி சொல்லவும் 

“ஹம் ஆசை தாண்டா உனக்கு ரொம்ப,வண்டி நிப்பாட்டிட்டு வா” என அவள் சொல்லவும்

அவனும் வண்டியை ஒரு இடத்தில் நிப்பாட்டி விட்டு அவளுடன் அவள் அருகே கையைப் பிடித்தபடி நடக்க

காற்றுக்கு அவள் கார்மேக கூந்தல் அவன் முகத்தில் பட, தன் துப்பட்டாவை இரண்டு கைகளால் பிடித்து சரி பண்ணியவள் அதுவும் அவன் முகத்தில் பட்டதும்,” அம்மு இப்படியே உன் கூட லைஃப் லாங் இருக்கணும் டி”என சொல்லி அவள் கையை இறுக்கமாக பிடித்தான்

அந்த நாள் கடல் வேற மாதிரி இருந்தது.

அலைகள் சத்தமா கரையை அடிச்சு திரும்பிக் கொண்டிருந்தது. வானம் கருப்பாகி, சூரியன் மறைந்து கொண்டிருந்த நேரம். இருவரும் காலணிகளை கழற்றி, மணலில் நடக்க ஆரம்பித்தார்கள். தாரணி சிரித்துக் கொண்டே தீரன் முகத்தை பார்க்க,அந்த சிரிப்பு தீரனின் மனசுக்குள் ஏதோ ஒரு உறுதியை ஊட்டியது.

“இந்த மாதிரி நிமிஷங்கள் தான் நம் வாழ்க்கையை ரொம்ப அழகாக்கும்,” என்று அவன் சொன்னபோது, 

அவள் அவனை பார்த்தபடி

“நீ இருக்கற வரைக்கும் என் வாழ்க்கை எப்பவும் அழகா தான் இருக்கும் தீரா” என்று மெதுவாக அவள் சொல்ல

அந்த நொடி…முதல் துளி மழை அவன் முகத்தில் விழ,பிறகு இன்னொரு துளி.

“என்னடா மழை பெய்து, என்னைய நனையாம பார்த்துப்பன்னு சொன்ன”என அவள் மேலே வானத்தைப் பார்த்தபடி இரண்டு கைகளையும் விரித்து தீரன் இடம் சொல்ல

“ஆமா டி செல்லம் நீ என் மனசுக்குள்ள இருக்க,என் இதயத்துக்குள்ள உன்னைய பத்திரமா பூட்டி வச்சிருக்கேன்.அங்க வந்து உனக்கு மழை பெய்யுமா சொல்லு” என அவன் சிரித்தபடி அவள் கன்னத்தைப் பிடித்து சொல்ல

போடா என அவள் அவன் கையை தட்டி விட

பிறகு வானமே உடைந்தது போல மழை.

இருவரும் சிரித்தபடியே எங்கேயாவது ஒதுங்க இடம் இருக்கிறதா என பார்த்து ஓட ஆரம்பித்தார்கள்.மழை நனைந்த மணல் கால்களில் ஒட்டியது.தாரணியின் சுடிதார் முழுக்க நனைந்தது.

தீரன் தன் ஜாக்கெட்டை கழற்றி அவளின் தலையில் பிடித்தான்.“வேணாம்… நீயும் நனையறே,” என்று அவள் சொன்னாள்.

“நீ நனையாம இருந்தா போதும்,” என்று அவன் சொல்லி சிரிக்க

திரும்ப வண்டி எடுக்கும் நேரத்துக்குள் மழை இன்னும் கடுமையானது. ரோடு சரியா தெரியவில்லை. கண்ணாடியில் மழை அடிச்சு பார்வை மங்கியது.

“இப்படியே வண்டி ஓட்ட முடியாது தாரு,” என்று தீரன் வண்டியை ஓரம் நிறுத்தினான்.

அருகில் ஒரு சின்ன ஹோட்டல்.

பழைய கட்டிடம்.வாசலில் விளக்கு மங்கலாக எரிந்தது.“இன்னிக்கு இங்கேயே தங்கலாமா?”என 

அவன் கேட்ட விதத்தில் எந்த தவறும் தெரியவில்லை அவள் கண்ணுக்கு..

தாரணி ஒரு நொடி யோசித்தாள். வேண்டா டா இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்படியே என் ரூமுக்கு போயிடலாம். என்னை அங்க விட்டுட்டு நீ போ எப்படியோ” என அவள் சொல்ல 

அடிப்பாவி என அவன் கோபமாக வண்டியை எடுக்க, கொஞ்ச நேரத்தில் குண்டு குழிக்குள் வண்டியை விட்டபடி வேக வேகமாக தாரணியின் ரூமுக்கு வந்த சேர,”போங்க மகாராணி உங்க ரூம் வந்துருச்சு” என அவன் சொன்ன நேரத்தில் அவள் வேகமாக இறங்கி நீயும் போ என பின்னாடி திரும்பி பார்த்து சொல்ல

’போக தான் போறேன் கல்நெஞ்சகாரி என்னை எப்படி மழையோட போக சொல்ற’ என அவன் மனதில் திட்டவும் 

அந்த நேரத்தில் டமால் என்று இடி விழும் சத்தம் கேட்டு தாரணி ஒரு நிமிடம்,” தீரா கொஞ்சம் உள்ள வந்துட்டு போடா நிஷா ரூம்ல இல்ல. இந்த இடியோட அப்புறம் நான் தனியா அனுப்பிட்டேன்னு என்னை மனசுக்குள்ளயே ராட்சசி திட்டுவ” என அவள் சொல்லவும் 

அவன் முகத்தில் ஒரு புன்னகை வந்தது. வருண பகவானை மேலே பார்த்தபடி தெய்வமே தெய்வமே என்று கண்ணால் பாட

“என்னடா உள்ள வரலையா?” என அவள் திரும்பவும் கேட்க

பரவால்லைங்க மேடம் நான் மனசுல நினைக்கிறது எல்லாம் தெரிஞ்சுக்கிறீங்க என்று அவளிடம் சொல்லியபடி வண்டியை வேகமாக நிப்பாட்டி விட்டு அவளுடன் அந்த அறைக்குள் வந்தான்.

எங்க ரூம்ல எல்லாம் அப்படித்தான் இருக்கும், எல்லாத்தையும் அங்கங்க போட்டு வச்சிருப்போம் எதையும் எடுக்காத நிஷா திட்டுவா என அவள் சொல்ல

அப்படியே குளிரில் நடுங்கியவன் இதழ்கள் படபடக்க அவளை பார்க்கவும் ஒரு டவளை கொண்டு வந்து அவனிடம் நீட்டினாள்..

“அம்மு இந்த படத்துல காட்டுற மாதிரி டவலை வைத்து தலையெல்லாம் துடைத்து விட மாட்டியா?” என அவன் ஈரம் சொட்ட அவளிடம் கேட்க 

“ஹம் பண்ணுவாங்க பண்ணுவாங்க” என சொன்னவள் டவளை எடுத்து அவன் தலையில் நீர் சொட்டுவதை மெதுவாக துடைத்து விட,

மழை…இரவு…

அந்த அறை சின்னது.ஆனா சுத்தமாக இருந்தது.ஜன்னல் வழியாக மழை சத்தம் தெளிவாக கேட்க,காற்று ஈரமாக உள்ளே நுழைந்தது.தாரணி ஜன்னலருகே நின்றாள்.வெளியே பார்த்தபடி,

“எப்படி இவ்வளவு வேகமா மழை பெய்து” என்று சொன்னாள்.

தீரன் பின்னால் வந்து நின்றான்.

அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஒரு விரல் அகலம் தான். மழை பெஞ்சா என்னடி நல்லது தானே என அவளின் காதருகே அவன் மெதுவாக சொல்ல

திடீரென டப் என்று பவர் கட் ஆக,அந்நேரம் மின்னல் வெட்டியதும் தாரணி பயந்து தீரனின் மார்பில் சாய 

அவன் அவள் கையை பிடித்தான்.அந்த பிடியில் உரிமை இல்லை.நம்பிக்கை.

மழை சத்தம் அதிகமானது.அவள் அவன் மார்பில் மெதுவாக தலை புதைக்க,

அவன் கையால் அவளின் முடியை ஒதுக்கி“நீ இப்படி அருகில் இருந்தா,

உலகம் மறந்துடும்,”என அவன் சொன்ன போது குரல் மழையை விட மென்மையாக இருந்தது.தாரணி மெதுவாக வெட்கப்பட்டு சிரிக்க,

அந்த சிரிப்பில் வெட்கம் இருந்தது.

பாதுகாப்பும் இருந்தது.அவர்கள் பேசவில்லை.அவசியமும் இல்லை.

அவன் அவள் நெற்றியில் மெதுவாக முத்தமிட,அவள் கண்களை மூடிக்கொண்டாள்.அந்த நொடி முழுக்க அவனுக்கே சொந்தமானது போல உணர்ந்தாள்.இரவு நீள்ந்தது.மழை ஓயவே இல்லை.

 

இரண்டு பேரும் காதல்களும் தனிமையில் நன்றாக வளர்ந்தது. அந்த குளிருக்கும் இரவுக்கும். அவளின் அணைப்பு அவனுக்கு தேவைப்பட்டது அவளை விடுவதாக தெரியவில்லை இறுக்கி அணைத்தான்.அவளும் அவனிடமிருந்து விடுபட நினைக்கவில்லை. தன்னவன் தானே என்ற உரிமையில் அவளும் அவனிடம் மயங்கி கிடந்தாள்..

அவனது கைகள் பெண் அவளின் உச்சியில் இருந்து மெதுவாக நாசி நோக்கி நகர்ந்து, அவளின் இதழ்களில் கோலம் இட்டுக்கொண்டு இருக்க, அவளது கழுத்து சூட்டில் இடத்தை தேடி  தன் முகத்தை அதில் புதைத்தபடி “அம்மு ஐ லவ் யூ”என அவன் சொல்லவும் 

அவளும் “லவ் யூ தீரா” என அவனை சொன்னபடி மூச்சு வாங்க, படார் என்று பவர் வந்தது 

இரண்டு பேரும் இருக்கும் நிலையை உணர்த்தபடி சிறிது இடைவெளி விட்டு தள்ளி இருக்க, தாரணி… தாரு.. சாரி அது வந்து என அவன் ஏதோ சொல்லப் போக 

“இதுக்குத்தான் ரூம்க்கு வரணும்னு சொன்னியடா” என அவள் கேட்கவும் 

அப்படி இல்லடி அது வந்து என அவன் சொல்ல

“சரி சரி நீ கிளம்பு” என அவள் சொல்ல 

“ஏய் மழை பெய்துடி எப்படி கிளம்ப?” என அவன் கேட்கவும்

 “சரி அப்ப பேசாம உட்காரு நான் காபி போட்டு தரேன் குடி”என அவள் சொல்ல 

இந்த குளிருக்கு இதமா வேற என்னமோ கிடைக்கும் நெனச்சேன். கடைசில எனக்கு கிடைக்கப்போறது காபி தானா என அவன் மனக்குரல் தாரணிக்கே கேட்டதோ என்னமோ அவனை பார்த்து சிரித்தபடி தேநீர் போட்டுக் கொண்டு வந்தாள்

இரண்டு பேரும் அந்த இரவில் தேனீர் கோப்பையை கையில் வைத்தபடி அவர்கள் சின்ன விஷயங்களைப் பற்றி பேசினார்கள்.

கனவுகள்,எதிர்காலம்.

“நம்ம வீட்டுல ஜன்னல் பெரியதா இருக்கணும்,” என்று தாரணி சொல்ல

“ஏன் மழை பெய்யும் போது ரசிச்சு பாக்கவா ,” என்று அவன் கேட்க

“ஹம்..அப்போ நீ என்கிட்டே உட்கார்ந்திருக்கணும்,” என்று அவள் சொல்லி சிரித்தாள்.

அந்த சிரிப்பு தான் அவனுக்கு உலகம்.

அந்த இரவு…எதுவும் அவசரமில்லை.

எதுவும் தேவை இல்லை,இரு இதயங்கள் மட்டும்மழை போல ஒன்றுக்குள் ஒன்று கரைந்தது.

ஆனால் இன்று…

அந்த நினைவு தாரணியின் மனதில் வரும் போது,அவள் உணர்ந்தது ஒன்று தான். எனக்கு எதுவும் நிரந்தரம் இல்லை என அவள் மனதில் நினைத்து கண் கலங்க,அவள் பின்னால் ஒரு கை வந்து தொட்டது சடார் என்று திரும்பி பார்த்தாள்..

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
உயிராக வந்த உறவு
789 10 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page