ஜன்னலருகே உட்கார்ந்து தாரணி இன்னும் அசையாமல் இருந்தாள். அவள் பார்வை வெளியில் இருந்தாலும், மனம் மட்டும் அந்த மழை நாளிலேயே சிக்கி இருந்தது. கண்களில் கண்ணீர் வறண்டிருந்தாலும், அவள் மனம் இன்னும் ஈரமாகவே இருந்தது. அந்த நேரத்தில் அவள் தோளில் மெதுவாக ஒரு கை விழ,அவள் திடுக்கிட்டாள்..
பழகிய பாதுகாப்பான ஒரு தொடுதல். தாரணி திரும்பிப் பார்த்தாள். நிஷா அவள் அருகில் வந்து உட்கார்ந்து
“இந்த மாதிரி நினைவுகள் வந்தா வலிக்கும் தான் தாரு,உன் மனசுல இருக்கிறதா சொல்லு” என்று நிஷா மெதுவாக சொல்ல
அவள் எதுவும் சொல்லாமல் கண் கலங்க,
தீரன்ன நீ எவ்வளவு உண்மையா காதலிச்சேன்னு எனக்கு தெரியும் நிஷா சொல்ல,தாரணி எதுவும் பேசவில்லை. அவள் கண்களில் மட்டும் ஒரு நொடி ஈரம் மின்ன
நிஷா அவள் கையை பிடித்தபடி,“நீ தோத்தவள் கிடையாது. சில காதல்கள் வாழ்க்கையோட சேராம போகலாம்; ஆனா அதுக்காக அவை பொய் ஆகிடாது என்று சொல்லி அவள் தாரணியின் கையை இறுக்கமாகப் பிடித்தாள்.
“இப்போ நீ தனியா இல்லை. நீ ஒரு அம்மா. உன் வாழ்க்கை இப்போ உன் கையில இருக்கு. கடந்த காலம் நெனச்சி இப்படியே அழுதுட்டே இருக்க போறியா? அதுக்கு தான் இங்க வந்து இருக்கியா, நீ உன்னோட வாழ்க்கையில் நடந்தது பத்தி என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். ஆனா நீ இப்போ அதை நினைச்சா உனக்கு அழுகை தான் வரும் கண்ணீர் தான் மிச்சம்..ஆனா அது உன் எதிர்காலத்தை முடிவு பண்ண முடியாது.”என அவள் சொல்லவும்
அந்த வார்த்தைகள் தாரணியின் நெஞ்சில் மெதுவாக இறங்க
அவள் தலை குனிந்தபடி கண்ணீரை துடைத்து விட்டு ஒரு பொய்யான புன்னகையை சிந்த, “நான் ரொம்ப பலஹீனமா இருக்கேன் போல தோணுது நிஷா,” என்று அவள் சொல்ல
நிஷா தலையசைத்த படி. “பலஹீனம் இல்ல. நீ இன்னும் உன் வாழ்க்கையில் கொஞ்சம் போராடனும்.அது தான் உன் பலம்.” குழந்தையின் அருகே பார்த்து, “இந்த குட்டி தான் உன் பதில்,” என்று நிஷா சொன்ன அந்த நொடியில் தாரணி ஆழமாக மூச்சு இழுத்தாள். மழை நினைவுகள் இன்னும் அங்கே இருந்தாலும், அவை இப்போ அவளை மூழ்கடிக்கவில்லை. தோழியின் குரல், தோளில் இருந்த அந்த கை அவளுக்கு மெதுவாக கரையை காட்டியது.
எங்கெங்கோ ஒரு வாரம் வேலைக்கு அலைந்தால். ஆனால் அவள் அலைந்தது தான் மிச்சம் எந்த வேலையும் அவளுக்கு கிடைத்த பாடில்லை.இப்படியே பாரமாக நிஷா வுடனும் இருக்க முடியாது கண்டிப்பாக வேலை வேண்டுமென்று நினைத்தவளுக்கு ஏனோ மணி அடிப்பது போன்று மொபைல் ஒலிக்க
போனை எடுத்து காதில் வைத்தவள் அது தீரன் அலுவலகத்தில் இருந்து தான் என புரிந்து கொண்டாள்.அவளை நாளைக்கே வேலைக்கு வரும்படி மறுமுனையில் உத்தரவை பிறப்பித்து இணைப்பு துண்டிக்கப்பட்டது
இப்போது அந்த தீரன் இருக்கும் அலுவலகத்தில் வேலைக்கு போய் சேர வேண்டுமா என்ற எண்ணம் அவள் மண்டையைக் குடைந்தது. ஆனாலும் இந்த ஒரு வாரத்தில் அவள் பட்ட கஷ்டம் நினைத்து பார்க்கும் போது கிடைத்த வேலையை விட வேண்டுமா என்று யோசித்தாள்.
ஒரு வாரம்.அந்த ஏழு நாட்களும் தாரணிக்கு ஒரே மாதிரி கடந்து போகவில்லை. ஒவ்வொரு நாளும் அவள் மனசு ஒரு தடவை உடைந்து, மீண்டும் தன்னைத் தானே ஒட்டிக்கொண்டது. நிஷாவின் வார்த்தைகள் அவள் உள்ளுக்குள் மெதுவாக வேர் பிடித்திருந்தது. “நீ பலவீனமில்லை”… அந்த உணர்ச்சியோடு தான், அடுத்த நாள் காலை தாரணி கண்ணாடி முன் நின்றாள். முகத்தில் ஒரு அமைதி. கண்களில் ஒரு உறுதி. கடந்த காலத்தின் தடயங்கள் மறையவில்லை; ஆனாலும் அவை அவளை நிறுத்தவும் இல்லை.
குழந்தையை நிஷாவிடம் ஒப்படைத்து, அவள் அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
அந்த கட்டிடத்தை அவள் ஏற்கனவே பார்த்திருக்கிறாள். ஆனாலும் இன்றைய பார்வை வேறு. இது அவன் இடம் இல்லை… இது என் வேலைக்கான இடம், என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டாள். லிப்டில் ஏறும்போது, இதயம் சற்று வேகமா துடிக்க,அவள் தன்னை சமாளித்துக்கொண்டாள். கதவுகள் திறந்ததும், குளிர்சாதன காற்றோடு சேர்ந்து பழைய நினைவுகளும் உள்ளே வந்தது.ரிசெப்ஷனில் அவள் பெயரை சொன்னபோது, அந்த பெண் சற்று ஆச்சரியமாக பார்த்தாள். “மாம், உங்களை உள்ளே போகச் சொன்னாங்க,” என்றதும், தாரணி ஒரு நொடி நின்றாள்.
“தீரன் சார் உள்ள தான் இருக்காங்க போங்க எதுக்கு நிக்கிறீங்க” என்று அந்த பெண் சொல்லவும் அவள் எதுவும் சொல்லாமல் மெதுவாக யோசித்தாள். என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று மன உறுதியோடு சரி செய்தபடி உள்ளே நுழைந்தாள்
உள்ளே, தீரன் இருக்க,அவள் வந்ததை அவன் எதிர்பார்த்திருந்தான் போல. அவன் கண்கள் அவளை ஒரு கணம் தடுத்து நிறுத்தியது. அந்த பார்வையில் கோபமும் இல்லை, முழு அமைதியும் இல்லை.ஒரு அடக்கப்பட்ட கலக்கம். தாரணி அவன் கண்களை நேராக பார்த்தாள். அவள் தலையை தாழ்த்தவில்லை. அவள் குரல் நடுங்கவில்லை.“நான் வேலைக்காக வந்திருக்கேன்,” என்று அவள் சொன்னாள்.
அந்த ஒரு வாக்கியத்தில், அவள் தன் கடந்த காலத்தை அந்த அறைக்கு வெளியே விட்டு விட,
அவனோ அவளை நோக்க,இன்று அவள் வேற மாதிரி இருந்தாள். மென்மையான இளஞ்சிவப்பு சுடிதார். எந்த ஆடம்பரமும் இல்லை. ஆனால் அவள் அணிந்த விதமே அந்த உடையை அழகாக்கியிருந்தது. தலையை முழுக்க விரித்து விட்டிருந்தாள். அந்த கார்மேக கூந்தலில் ஒரு சிறிய கிளிப் மட்டும் இருக்க,அது கூட அவளின் அழகை மேலும் வெளிச்சப்படுத்தும் அளவுக்கு இருந்தது.
தீரன் தன்னுள் ஒரு நிமிடம் அமைதியாக அவளை ரசிக்க,இவளுக்கு இந்த அளவுக்கு அழகு இருந்ததா… இல்லை நான் ரசிக்க மறந்துட்டேனா…?
அவள் நடந்து வரும் போதெல்லாம், அவள் முடி தோள்களை வருடி அசைய,அவன் பார்வை தன்னிச்சையாக அவளின் முகத்தில் நின்றது.
அந்த புருவங்கள் சற்று கூர்மையான வளைவு. கோபம் வந்தால் ஒன்றாக சேர்ந்து நின்று விடும். சிரித்தால் மெதுவாக உயர்ந்து கண்களில் ஒளி வீசும்.இன்று அவை அமைதியாக இருந்தாலும், அந்த வளைவின் பின்னால் எவ்வளவு உணர்ச்சிகள் புதைந்து கிடக்கின்றன என்று அவனுக்கே தெரியும்.
அவளின் கண்கள்…
ஒரு காலத்தில் அவன் உலகமே அந்த கண்களில் தான் இருந்தது.இன்று அவன் முன் நின்றும் அவனைத் தவிர்த்து பார்க்கின்றன.அவளின் இதழ்கள்மெல்லியவை. பேசாமல் இருந்தாலும் ஏதோ சொல்லும் மாதிரி.
அந்த இதழ்கள் ஒரு காலத்தில் அவன் பெயரை மெதுவாக உச்சரித்தது நினைவுக்கு வந்ததும் அவன் உள்ளம் திடீரென்று இறுக்கமாயிற்று.
அந்த உதடுகள் இப்போ என்கிட்ட பேசாம இருக்கறது தான் பெரிய தண்டனை…
அவள் மேசை அருகே சென்று கோப்புகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தாள். அவள் கவனம் வேலையில் இருந்தாலும், அவன் கவனம் முழுவதும் அவளிலேயே.
அவள் கைகளை அவன் பார்த்தான். மெதுவான அசைவுகள். நாணமும் தைரியமும் கலந்த நிலை.அவள் சிரிக்கவில்லை. ஆனாலும் அவளின் முகம் அமைதியாக ஒளிர்ந்தது.
எவ்வளவு கோபம் இருந்தாலும்…
எவ்வளவு வெறுப்பு இருந்தாலும்…
இந்த அழகை நான் மறுக்க முடியுமா?
அவன் மனதில் ஒரு குரல்.
இது தான் என்னை மீண்டும் பலவீனமாக்குறது…
அவள் திடீரென்று அவன் பக்கம் திரும்ப,ஒரு நொடி அவர்களின் கண்கள் சந்தித்தன.அந்த ஒரு நொடியில்,
ரசிப்பு மறைந்து அதிகாரம் முகத்தில் திரும்பிவிட,தீரன் தன் பார்வையை உடனே திருப்பிக் கொண்டான்.
சார்…என்று அவள் அழைக்க,
அந்த ஒரு வார்த்தை அவனுக்கு ஏதோ இழந்த உணர்வை மீண்டும் நினைவூட்டியது.அவளை அவன் பார்ப்பது ரசிப்பாக இருந்தாலும்
அதை வெளியில் காட்ட முடியாதவன்.
அவளை இன்னும் காதலிக்கும் மனசு,
ஆனா அவளுக்கு முன் அதிகாரியாக நிற்க வேண்டிய நிர்பந்தம்.
தீரன் எதுவும் சொல்லாமல் மேசையின் ஓரத்தை பிடித்த படி மெதுவாக எந்திரித்து அவள் அருகே சென்று நீ இவ்வளவு தைரியமா திரும்பி வருவாள் என்று அவன் நினைக்கவில்லை என்று சொல்ல
அவள் மட்டும் தான் அறைக்குள் இருந்தாள்.தாரணி உள்ளுக்குள் ஒரு ஆழமான மூச்சு இழுத்து விட்டபடி,
இந்த முறை நான் உடைய மாட்டேன், என்று மனசுக்குள் உறுதி எடுத்தாள்.
அவள் மேசையின் முன் நின்றிருக்க, முகத்தில் எந்த வேண்டுகோளும் இல்லை. கண்களில் ஒரு அளவான அமைதி. அந்த அமைதி தான் தீரனை அதிகமாக குத்தியது.தீரன் மீண்டும் நாற்காலியில் சாய்ந்து, கைகளை மடக்கிக் கொண்டு அவளை பார்த்தான்.
என்னாச்சு எங்கெங்கயோ சுத்தி திரும்ப இங்கேயே வந்துட்டீங்களா என அவன் ஒரு அதிகார தோரணையுடன் சிரித்தபடி கேட்க
அந்த சிரிப்பில் நக்கலும் இருந்தது. நீ இங்க வர மாட்டேனு நினைச்சேன்ன்னு சொல்லாமலேயே சொல்லும் சிரிப்பு.
தாரணி அவன் முகத்தை அசையாமல் பார்த்தபடி, “வேலை செய்ய வந்து இருக்கேன் சார்”என்று சொல்ல
அவள் குரலில் எந்த உணர்ச்சி ஏற்றமும் இல்லை. அது தான் தீரனை இன்னும் சீண்டியது.
“வேலை?”
அவன் புருவம் சற்றே உயர்ந்தது.
இது உனக்கு புதுசு இல்லையே… என்று அவன் சொல்ல
அந்த வார்த்தை ஒரு கத்தி போல இருந்தது. கடந்த காலத்தை மீண்டும் நினைவு படுத்தி குத்தியது.
தாரணியின் விரல்கள் சற்றே நடுங்க,ஆனாலும் சார்
“நம்ம தனிப்பட்ட விஷயம் இப்போ இங்க பேச வேண்டாம்,” என்றாள்.
ஓ ஹோ என்று அவன் அவளை பார்க்க
“நீங்க கொடுக்குற வேலைதான் முக்கியம்.”என அவள் சொல்ல
தீரன் மெதுவாக எழுந்தான். மேசையைச் சுற்றி நடந்து வந்து, அவள் முன் நின்றபடி,அவனின் பார்வை மேலிருந்து கீழே பார்க்க அந்த பார்வையிலேயே அதிகாரமும் ஏளனமும் கலந்து இருந்தது.
“நீ இங்க தாங்கிக்க முடியுமா?”
“பழைய விஷயங்களை எல்லாம் தினமும் பார்த்துக்கிட்டே வேலை செய்ய முடியுமா உன்னால?”என கேட்க
தாரணி அவன் கண்களை நேராக பார்த்தபடி,“நீங்க தாங்கிக்க முடியுமா?” என்று திருப்பிக் கேட்டாள்.
அந்த நொடியில் தீரனின் முகத்தில் இருந்த ஏளனச் சிரிப்பு ஒரு நொடிக்கு மங்க,அவன் எதிர் பார்க்காத பதில். அவன் பழகிய தாரணி இல்லை இது.
ஆனாலும் அவன் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,“பாக்கலாம்,” என்றான்.
உங்களால் முடியும்னா என்னால முடியும் என தாரணி அவனை முறைத்தப்படி பதில் சொல்ல,
அவளின் அனல் வீசும் பார்வைகள் கூட அவனுக்கு ஐஸ் கட்டி மீது நிற்பது போல் இருந்தது..
