என்னை என்ன நினைப்பான்

அந்த நைட்…

வெளியில மழை இல்லை. ஆனாலும் வீட்டுக்குள்ள ஒரு சத்தமில்லா கனத்த தன்மை.

காற்று கூட மெதுவாக தான் அசைஞ்சது.

விக்ரம் பக்கத்துல படுத்திருந்தான்.

அவன் மூச்சு சமமாக, ஆழமாக போய்க்கிட்டிருந்தது.

ஒரு நாளுக்கு மேலான களைப்பு… உடனே தூங்க வச்சிருந்தது.

ஆனா அவளுக்கு?

கண்ண மூடினா கூட தூக்கம் வரலை.

முதல்ல…

ஒரு சின்ன சந்தோஷம்.

“இவன் கூட தான் இருக்கேன்”ன்னு 

 ஒரு மென்மையான நிறைவு.

அதுக்கப்புறம் தான்…

மனசு மெதுவா வேற திசைக்கு வழுக்க ஆரம்பிச்சது.

நான் தப்பா பண்ணிட்டேனா?..

அந்த கேள்வி அவளோட மனசுக்குள்ள எங்கிருந்தோ வந்து உட்கார்ந்துச்சு.

அதை துரத்த முயற்சி பண்ணினா, இன்னும் வலுவா திரும்பி வந்துச்சு.

விக்ரம் முதல்ல சொன்ன வார்த்தைகள் அவளுக்கு ஞாபகம் வந்தது.

வேணாம்… இதுக்கப்புறம் பின்னாடி நினைச்சா நமக்கே கில்ட்டா இருக்கும்.

அவன் சொன்னப்போ…

அது அவளை பாதுகாக்கற வார்த்தையா தான் தோணிச்சு.

ஆனா இப்போ… அதே வார்த்தை வேற அர்த்தம் எடுத்துக்கிட்டது.

அவன் இப்போ என்ன நினைப்பான்?

நானே போய் கேட்டேனே… சி… இது எவ்வளவு பெரிய அசிங்கம்.அவனுக்கு நான் ஒரு கேரக்டர் இல்லாத பொண்ணா தெரிஞ்சிருப்பேனா?

அவளுக்கு திடீர்னு உடம்பெல்லாம் சூடா வந்தது.

முகத்துல வெட்கமில்லை…

அதுக்கு பதிலா ஒரு விதமான,அசிங்கமான பயம்.

விக்ரமோட முகத்தை திரும்பி பார்த்தா.

தூக்கத்துல கூட அவன் முகம் அமைதியா இருந்தது.

அந்த அமைதி தான் அவளுக்கு இன்னும் பயம் கொடுத்தது.

தூங்கிட்டான்…

அதாவது அவனுக்கு இது பெருசா இல்லையா?..

அந்த ஒரு எண்ணமே…

அவளோட நெஞ்சை பிசைய ஆரம்பிச்சது.

அவள் மெதுவா அவன் பக்கம் திரும்பி,

குரல் குலுங்காம பேச முயற்சி பண்ணினா.

விக்ரம்…

ஒரு சின்ன அசைவு.

அவன் தூக்கத்துலேயே ம்…ன்னு சொன்னான்.

அவள் அந்த ஒரு …ம்,லே பதில் தேடினா.

ஆனா அது பதிலா இல்ல.

அது ஒரு அலட்சியமா அவளுக்கு தோணிச்சு.

“நான்…

இன்னிக்கு…

தப்பு பண்ணிட்டேனா?”

அவளோட குரல் தான் அவளுக்கே அன்னியமா கேட்டது.

பயம், வெட்கம், குழப்பம்…

எல்லாம் கலந்து ஒரு சின்ன குரல்.

நீ…

நான் அப்படி கேட்டதால…

என்னை கெவலமானவளா நினைக்கிறியா, இல்ல?

அவன் முழுசா விழிக்கவே இல்லை.

அவன் குரல் மட்டும்…

தூக்கத்துல இருந்து வந்த மாதிரி.

“ம் …ம் …”

அவ்வளவுதான்.

அந்த ம்…

அவளுக்கு நிம்மதியா இல்ல. அவன் என்ன நிலையில இருக்கான் என்று அவளுக்கு புரியவே இல்லை . அவன் சொல்லப்படாத வழிகள் அவளுக்கு தெரியல ,

அப்படின்னா…

அவன் என்னை இப்படித்தான் நினைக்கிறான்?

அந்த இடத்துல தான்…

அவளோட மனசு முழுசா உடைஞ்சது.

தூங்கிட்டு இருக்குற ஒருத்தன்கிட்ட

இப்படி கேள்வி கேட்டதே தப்போன்னு தோணிச்சு.

அதுக்கு மேல…

அவனோட அந்த அலட்சியமான பதில்

அவளை முழுசா தனிமையா ஆக்கிட்டது.

விக்ரம் அசையவே இல்லை. ஆழ்ந்த தூக்கம்,

இப்போ இங்க இருந்தா…

நாளை காலை

அவன் முகத்தை எப்படி பார்ப்பேன்? அவன் முன்னாடி நான் ஒரு விலை மாது வாங்கி விட்டேனா?… இப்படி எல்லாம் யோசித்து அவள் மனதுக்குள் பயங்கர பயம் ஏற்பட்டது.

அவன் கண்களில்

அவள் நினைச்ச அந்த கேவலம் தெரிஞ்சிடுமோன்னு.

எனக்கு மட்டும் தான் இது இவ்வளவு பெருசா தோணுதா?

அவளோட மனசோடே மட்டும்

விழிச்சுக்கிட்டு இருந்தது.

அவளுக்கு திடீர்னு ஒரு எண்ணம்.

இங்கிருந்து போயிடலாமா?…

இல்ல… இப்போ வேணாம்.

அந்த எண்ணம் வந்ததும், அவள் மெதுவா அவன் கைகளிலிருந்து விலக முயற்சி பண்ணினா.

அதுக்குள்ள அவன் கண் திடீர்னு விழிச்சுட்டது.

ஒரு நொடிக்கு அவன் அவளை பார்த்தான்.

அந்த பார்வையில கேள்வி இல்லை.

அது பழகிய ஆசை மாதிரி இருந்தது.

அவள் கொட்ட கொட்ட முழிச்சி இருப்பதை பார்த்ததும்,

அவளை அள்ளி அணைத்து அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்தான்.

அந்த முத்தத்தில் அவனுடைய பெருமூச்சு ஆழ்ந்த சத்தமாக அவளுடைய காதுகளுக்கு கேட்டது ஆனால் மனதுக்கு கேட்கவில்லை அவன் நிம்மதியாக இருக்கிறான் என்று… அவளைப் பற்றி தவறாக எண்ணவில்லை என்று,

விக்ரம் நிலாவை பார்த்து என்ன? ன்னு கேட்கவே இல்ல.

அவன் அந்த இடத்துலயே மறுபடியும் அவளைக் கைப்பிடிச்சான்.

முதல்ல…

முதலாவது தடவை…

அந்த நெருக்கம் ரெண்டு பேருக்கும் பிடிச்சதுதான்.

அவளுக்கும்.

அவனுக்கும்.

அதுல ஒரு பரஸ்பர சம்மதம் இருந்தது.

ஒரு இனிமையான இணைவு.

ஆனா இப்போ…

இது வேற மாதிரி.

அவன் முன்போலவே இருந்தான்.

அதே ஆர்வம்.

அதே வேகம்.

ஆனா அவள்?

அவள் அமைதியா இருந்தா.

எதிர்ப்பு இல்ல.

ஆனா ஈடுபாடும் இல்ல.

அவன் கவனிக்கல.

அவளோட அந்த அமைதியை

அவன் புரிஞ்சுக்கவே இல்லை.

அவள் மனசுக்குள்ள கேள்விகள் ஓடிக்கிட்டிருந்தது.

நான் ஏன் வேண்டாம்னு சொல்லல?”

இல்ல…

அவன் புரியுற அளவுக்கு நான் சொல்லல.”

அவன் என்னோட அமைதியை இப்போது சம்மதமா எடுத்துக்கிட்டானா?

அவளுக்கு அந்த நேரத்துல

அவனை தள்ளும் சக்தியும் இல்ல.

அவனை முழுசா ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் இல்ல.

அவள் கண்ணை மூடிக்கிட்டா.

அது ரசிப்புக்காக இல்ல.

அது தன்னை மறைத்துக்கறதுக்காக.

அவனுக்கு மட்டும் தான்

அந்த நெருக்கம் இன்னும் தேவைப்படுற மாதிரி இருந்தது.

அவளுக்கு அது ஒரு வெற்றிடமா மாறிக்கிட்டிருந்தது.

நான் இங்க இருக்கேன்…

ஆனா முழுசா இல்ல.

அந்த உணர்வு

அவளை உள்ளுக்குள்ள இருந்து மெதுவா உடைத்தது.

அவன் அவளை பார்த்திருந்தா கூட

அவளோட முகத்துல

அந்த முதல் தடவையில இருந்த ஒளி இல்லாததை

கவனிச்சிருக்கலாம்.

ஆனா அவன் பார்க்கல.

அவன் அவளுக்குள்ள என்ன ஓடுதுன்னு

அவன் தெரிஞ்சுக்க முயற்சி கூட பண்ணல.

அதற்கான வாய்ப்பும் ஏற்படவில்லை, ஏனென்றால் தடுத்தும் அவனை முழுவதுமாக ஏற்றுக் கொண்டது அவள் மட்டுமே…

அந்த நொடிலே தான்

அவள் புரிஞ்சுக்கிட்டா

ஒரே செயல்…

 ஒரே நெருக்கம்…

ஆனா மனசு ரெண்டு பேருக்கும் ரெண்டு இடத்துல இருக்கு.

அந்த உண்மை

அவளுக்கு வலிக்காமல் இல்லை.

அவன் முதல்ல தடுத்தப்போ

அது பயத்தால இல்லை.

அவளை இழிவா நினைக்கற மனசு அவனுக்கே இல்ல.

அவனுக்கே தெரிஞ்ச விஷயம் ஒண்ணு இருந்துச்சு

இவள் வெறும் இந்த நொடியுக்காக இல்ல…

என் வாழ்க்கைக்கே.

அதனால தான்

வேணாம்ன்னு சொன்னான்.

அவளோட மனசு இன்னும் சின்ன சின்ன சிதறலோட இருக்குன்னு அவனுக்கு தெரியும்.

அந்த சிதறலுக்கு மேல

தான் ஒரு காரணமா இருக்கக்கூடாதுன்னு அவன் நினைச்சான்.

என் உணர்ச்சிகள் அவளுக்குள்ள குழப்பமா மாறக்கூடாது.

நாளைக்கு அவள் தனியா நின்னா

இன்னைக்கு நடந்தது அவளை குத்தக்கூடாது.

அந்த அக்கறைதான்

அவனை முதல்ல விலக்கி நிக்க வச்சது.

ஆனா…

அவளே அவனோட அந்த எல்லையை தாண்டி வந்தப்போ,

அவனுக்குள்ள இருந்த கட்டுப்பாடு மெதுவா உருக ஆரம்பிச்சது.

இது வெறும் ஆசை இல்லைன்னு

அவனுக்கே தெரியும்.

காதல் தனியா இருந்தா

அது அமைதியான பாசம்.

ஆனா அந்த காதலுக்குள்ள காமம் கலந்தா,

அது உயிரோட உரிமை மாதிரி மாறிடுது.

“இவள் தான்…”

“என் எல்லாமே…”

அந்த எண்ணம்

அவனோட மனசுக்குள்ள

அவளை இன்னும் நெருக்கமா இழுத்துக்கிட்டே போச்சு.

அவனுக்கு அவள்

ஒரு உடம்பு இல்லை.

ஒரு உணர்வு.

ஒரு நம்பிக்கை.

ஒரு வாழ்க்கை.

அதனால தான்

அவனோட ஒவ்வொரு நெருக்கமும்

அவளுக்கு உரிமையா தான் தோணிச்சு.

அதிகமா இருந்துச்சு…

ஆனா கெட்டதா இல்லை.

அவள் “வேணாம்”ன்னு சொல்லல.

அதே நேரம்

அவள் முழுசா முன்னெடுத்து வரல.

அவள் ஏற்றுக்கிட்டா.

“நீ என்ன செய்தாலும்

நான் எதிர்க்க மாட்டேன்.”

அந்த மாதிரியான அமைதி.

அவள் அவனோட வேகத்துக்கு

தன்னை பழக்கிக்கிட்டா.

அவனோட உணர்ச்சிக்கு

தன்னை ஒப்படைச்சுக்கிட்டா.

அவனுக்கு அது

ஒரு சம்மதமா தான் தோணிச்சு.

அவளுக்குள்ள என்ன ஓடுதுன்னு

அவனுக்கு அந்த நேரத்துல புரியல.

காதலும் காமமும் சேரும்போது

அவனுக்குள்ள

அவளைப் பற்றின புனைப்பு இன்னும் பெருசா வளர்ந்தது.

இவள் என் ஆள்.

என் உயிர்.

என் வாழ்க்கை.

அந்த எண்ணங்களோட தான்

அவன் அவளோட அருகாமையை அனுபவிச்சான்.

ஆனா அவள்…

அவள் அவனோட காதலுக்குள்ள

முழுசா இல்ல.

அவனோட நம்பிக்கைக்குள்ள

மௌனமா இருந்தா.

அந்த மௌனம் தான்

பின்னாடி

அவங்க ரெண்டு பேருக்குள்ள

அர்த்தம் மாறப்போற இடம்.

அந்த இரவு முழுக்க

அவங்க ரெண்டு பேருக்குள்ள இருந்த மோகம்

சத்தமில்லாம விளையாடிக்கிட்டே தான் இருந்தது.

அவளுக்கும் அது பிடிச்சிருந்தது.

மறுக்கவே முடியாத அளவுக்கு.

அவன் அருகாமை…

அவன் வெப்பம்…

அவன் காதல்—

எல்லாமே அவளுக்கு தேவைதான்.

ஆனா அதுக்குள்ளே

ஒரு சின்ன தயக்கம்.

கண்ணுக்கு தெரியாத ஒரு தடுப்பணை.

அது உடம்பைத் தடுக்கல…

மனசை மட்டும் தடுத்து நிக்குது.

மெதுவா

அவன் அவளை இறக்கி

தன்னோட மார்புக்குள்ள அணைத்துக்கிட்டான்.

அவள் நெற்றியில ஒரு அமைதியான முத்தம்.

அதுல ஆசை இல்ல.

அதுல உரிமை கூட இல்ல.

அதுல இருந்தது

பாதுகாப்பு.

அவன் அப்படியே தூங்க ஆரம்பிச்சிட்டான்.

அவளும் முதல்ல

தூங்குற மாதிரி தான் இருந்தா.

கண்களை மூடி

உடம்பு முழுக்க சோர்வோட

அசைவில்லாம படுத்திருந்தா.

ஒரு தடவ

அவன் அவளோட முகத்தை பார்த்தான்.

அந்த முகத்துல

இரவில இருந்த ஒளி இல்ல.

அமைதி.

ஒரு விதமான களைப்பு.

அந்த காட்சியே போதும்.

அவன் அவளோட முதுகுல

மெல்ல மெல்ல

ஒரு அம்மா தன்னோட குழந்தையை

தட்டிக் கொடுக்குற மாதிரி

தட்டிக்கிட்டே இருந்தான்.

அந்த தட்டலோடே

அவன் நிம்மதியா தூங்கிட்டான்.

சில நிமிஷத்துக்கப்புறம்

அவன் பெருமூச்சு விடுற சத்தம்.

ஆழ்ந்த உறக்கத்தோட அந்த ஒலி.

அதுதான் அவளுக்கு சைகை.

அவள் மெதுவா

அவனோட கையிலிருந்து

விலக ஆரம்பிச்சா.

ஒரு நொடியும் அவனை எழுப்பக்கூடாதுன்னு

மனசுக்குள்ள பிரார்த்தனை.

எழுந்து உட்கார்ந்தா.

அவளோட ஆடைகள்

அறை முழுக்க சிதறிக்கிடந்தது.

ஒவ்வொன்னா…

வேகமா…

அதே நேரம் சத்தமில்லாம

சேகரிச்சுக்கிட்டா.

வேற ஒரு டிரெஸ்.

சுருக்கமான, பழக்கமான அசைவு.

குளிச்சு முடிச்சதும்

முகத்துல எந்த அலங்காரமும் இல்ல.

போகணும்.

இப்போவே போகணும்

அவன்கிட்ட எதுவும் சொல்லாம.

அப்போ தான்

பின்னால இருந்து

ஒரு புலம்பல்.

அவன் தூக்கத்துல.

“நீ…

என்னோட உலகம்…”

அந்த குரல்

ஒரு ஆணோடது இல்ல.

ஒரு குழந்தையோடது.

“உன்னை விட்டா…

எனக்கு யாரும் இல்ல…”

அவளோட கால்கள் அங்கேயே நின்னுடுச்சு.

போக மனசு இல்லை.

வேகமா திரும்பி

அவன்கிட்ட ஓடி வந்து

அவன் நெற்றியில

ஒரு அமைதியான முத்தம்.

அவன் முகத்தை

பார்க்குற தைரியம் அவளுக்கு இல்ல.

அந்த கண்களில்

அவள் பயந்த கேள்வி தெரிஞ்சிடுமோன்னு.

“இப்படிதான் நடக்கும்னு தான்

அவன் முதல்ல பயந்தான்…”

அவள் பயந்ததும் அதேதான்.

“அவன் என்னை அசிங்கமா நினைச்சிடுவானோ?”

விடியற நேரம்.

கிட்டத்தட்ட நாலு மணி.

அவன் வாங்கிக் கொடுத்த

உடைகளை மட்டும் எடுத்துக்கிட்டு

அவள் வேகமா கிளம்பிட்டா.

எதுவும் தெரியாம

அவன் ஆழ்ந்த உறக்கத்துல.

அந்த ஆழம்

சாதாரணமா வந்தது இல்ல.

சின்ன வயசிலிருந்தே

அவனுக்கு வாழ்க்கை

ரொம்ப கஷ்டம்.

பணம் வந்தாலும்

மனசுக்குள்ள தனிமை போகல.

நாளுக்கு நாள்

நிம்மதியில்லாத தூக்கம்.

ஆனா இன்றைக்கு

“என்னோடவள் என் கூட இருக்கா”

அப்படிங்கிற ஒரே நம்பிக்கையில

அவன் நிம்மதியா தூங்கிக்கிட்டிருந்தான்.

அவளால தான்

அந்த தனிமை

ஒரு இரவு முழுக்க

மறைந்திருந்தது.

இது தெரியாமல், தவறான புரிதலும், சங்கடமும் ஒன்று சேர்ந்து அங்கிருந்து வெளியில் செல்ல வேண்டும் என்ற முடிவை அது எடுக்க வைத்தது.

இனி என்ன நடந்தது என்று நாளைக்கு பார்க்கலாம்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page