என் அழகிய அசுரனே ஆருயிர் காதலனே
சோழத்தூர்
தமிழ்நாட்டில் எழில் வனப்புமிக்க கிராமங்களில் ஒன்றான சோழத்தூர் இயற்கை வளம் மிக்க பூமி செயற்கை காற்றைப்படாத பூமி எனலாம் சோழத்தூர் என்ற பெயர் கேட்டாலே சுற்றுவட்டாரங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடுங்கும் அவ்வூருக்கும் அவ்வளவு எளிதில் யாராலும் நுழைந்து விட முடியாது அப்படிப்பட்டவர் எவரேனும் கெட்ட என்னத்துடன் ஊருக்குள் நுழைந்தால் அவ்வூரில் முதுகெலும்பு இருக்கும் இடம் தெரியாமல் அழித்துவிடும்…
ஏழை எளியோர்க்கு பாதுகாப்பாகவும் கலியுக வீரனாகவும் தீமை கொண்டு கொண்டவர்களுக்கு எமனின் சாயலாகவும் யாருக்கும் அடங்காது காட்டாற்று வெள்ளமாகவும் தனிக்காட்டு ராஜாவும் சீறிப்பாய்ந்து வரும் சிங்கமாகவும் திகழ் பவன்…
இவை அனைத்திற்கும் சொந்தக்காரன் ருத்ரதேவ்..
ஆறடி ஆண் மகன் பெண்கள் பராபட்சமின்றி கவர்ந்திருக்கும் காந்த கண்ணழகன் பால் வண்ண மேனி கூர்மையான நாசி கண்களில் எதிர்த்து நிற்பவரை வதம் செய்திடும் தீட்சண்ய பச்சை பார்வை கொண்டவன் கை பூஜை முறுக்கேறி கன்னியர்களை கவர்ந்திடும் மன்மதன்…. அழகான மீசையுடன் திகழும் ஆணிலக்கணம் பெற்றவன்.…
வியாபாரத்திற்கென்று பெயர் புகழ்பெற்ற டெல்லியில் பிறந்தவன் அவனின் பெற்றோர் ஆசைக்கிணங்க அவர்களின் சொந்த ஊரான சோழத்தூரில் படிப்பு முடிந்தவுடன் இங்கிருந்து வெளியூருக்கு வேலைக்கு போய் வந்து கொண்டிருக்கிறான் தந்தையான இலக்குவன் மிகப்பெரிய வணிக பைல்வான் தாயார் ராதிகா எக்ஸ் ஐபிஎஸ் ஆபீஸர் தந்தையின் அறிவையும் தாயின் தைரியத்தையும் ஒருங்கிணைப்பு பெற்றவன் மகா கெட்டிக்காரன்…
இந்த முறையும் கோடை விடுமுறைக்கு சோழத்தூர்க்கு பெற்றோரோடு தங்கி செல்வதற்கு வந்திருக்கிறான். அதோடு அவன் எடுத்த கேஸ் முடிப்பதற்காகவும் இன்னும் சில பல ரகசிய வேலைகளை பார்ப்பதற்காகவும் சோழத்தூரை நாடி வந்திருக்கிறான் எங்கு திரும்பி பார்த்தாலும் பச்சை பசலென்று நடுவில் ஆங்காங்கே வீடுகளும் நிலத்தில் ஒரு வீடு மட்டும் அரண்மனை போல காட்சி அளித்தது அந்த வீட்டைச் சுற்றியும் ஆடு, மாடு கோழிகள் என பட்டறை அமைத்து அதை பார்ப்பதற்கும் தனித்தனியே ஆட்களை வைத்து பராமரித்து வருகின்றனர்…
ராதிகா தன் கணவருக்கு உணவை பரிமாறிக் கொண்டு என்னங்க இன்னைக்காவது உங்க பிள்ளை கிட்ட பேசுங்க என்று இன்னும் இரண்டு இட்லிகளை எடுத்து வைத்துக் கொண்டே சொல்ல ஏமா இப்படி காலையிலே படுத்துற அமெரிக்கா பிரதமர் கிட்ட கூட நான் போய் என்னோட பிசினஸ் டீலிங் பேசி என்ன அவ்ளோ புகழ்ந்து பேசுறாங்க ஆனா நம்ம பையன் இருக்கிறான் பாருமா அக்யூஸ்ட் பார்வையாலே எடை போடுற மாதிரி அப்படி ஒரு பார்வை பார்க்கிறான்…
இல்ல தெரியாம தான் கேட்கிறேன் நான் அவனுக்கு அப்பனா இல்ல நான் அவனோட பையனா எப்ப பாரு ஒரு பார்வை பார்க்கிறான் பாருமா இந்த ஸ்கூல்ல பேரண்ஸ் டீச்சர் மீட்டிங் வெப்பாங்கல்ல இந்த டீச்சர்கள் எல்லாம் கம்ப்ளைன்ட் பண்றப்போ இந்த பேரண்ட்ஸ் எல்லாம் பசங்கள ஒரு பார்வை பார்க்குவாங்க அவ்வளவு கருணை கொடூரமா முறைக்குறாம்மா சாப்பிட்டுக்கொண்டே மனைவியை பார்த்து அவன் இந்த பார்வை தான் பார்க்கிறான் இப்பதான் புரியுது அவனுக்கு அந்த பார்வை எப்படி வந்துச்சுன்னு உன்கிட்ட தான் வந்து இருக்கு அப்படின்னு சொல்ல ராதிகா கரண்டி எடுத்து கணவனை அடிக்க போக.…
படிகளில் ஷூவின் சத்தம் தடக் தடக் என்று கேட்க அத்தோடு அந்த பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர் அவனைப் பெற்ற புண்ணியவான்..
படிகளில் இருந்து இறங்கி வந்தவன் டைனிங் டேபிளை நோக்கி போகமால் பார்வையாலே பெற்றோரிடம் விடைப் பெற்றுக் கொண்டு புறப்பட பெற்றவள் பின் தொடர்ந்து வந்து தேவ் என்று அழைக்க திரும்பிப் பார்த்து என்னம்மா என்று கேட்க ஒரு ப்ரோபோசல் வந்துருக்கு ஜஸ்ட் ஒரு மீட் பண்ணிட்டு வாயேப்பா என்று சொல்ல அதுவரை அவன் அம்மா சொல்வதை அசட்டையாக கேட்டவன் தீடிரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க அவன் திரும்பிப் பார்ப்பதற்க்குள அவனின் தாயின் முகம் இரத்தமாக காட்சியளித்தது.…
