என் துணை – 8

இருவரும் பேசிக் கொண்டே தாஜ்மஹாலை சுற்றி வந்தனர். திரவ்யாவிற்கு நிறைய ஐடியாக்கள் ஆர்யானால் வழங்கப்பட்டன. மனதிருப்திக்காகவும், அதீத சந்தோஷத்திலும் போட்டோக்கள் எடுத்து குமித்திருந்தாள். அவளின் சிறு சிறு செயலையும் புன்னகையோடு ரசித்து பார்த்தான் ஆர்யன்.

 

“அவ்ளோதான், வெளிச்சம் போயிடுச்சு. எனக்கும் டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன்” என அவனிடம் விடை பெற்று கிளம்பினாள். அவளின் நினைவுகளோடே அவனும் தன் பாதையில் சென்றான்.

 

முதல் சந்திப்பிலேயே ஆர்யனின் மனதை கவர்ந்திருந்தாள் திரவ்யா. மீண்டும் அவளை சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. ஆனாலும் அவள் மேல் ஒரு இனம் புரியாத அன்பு உருவாகி அவளின் மகிழ்ச்சி நிறைந்த முகம் அவனின் ஆழ்மனதில் பதிவாகியிருந்தது.

 

அவளின் நினைவுகளோடே தன் ஹோட்டல் அறைக்கு செல்லும் தளத்தில் நடந்து கொண்டிருந்தான் ஆர்யன். அப்போது லிஃப்டில் இருந்து இறங்கி தன்னை கடந்து சென்று கொண்டிருந்த திரவ்யாவை பார்த்தான்.

 

“ஹலோ எக்ஸ்கியூஸ் மீ!” என ஆர்யன் கூற, அவனின் குரலில் திரும்பி பார்த்தவள், “ஹே… நீங்க என்ன இங்க?” என்று கேட்டாள்.

 

“ஹலோ, இதையே நான் ஏன் கேட்க கூடாது? மேடம் இங்க என்ன பண்றீங்க? ஒரு வேள என்னை ஃபாலோவ் பண்ணிட்டு வறீங்களா?” என்ற ஆர்யன் திரவ்யாவின் முறைப்பை கண்டு, “சும்மா லுல்லாய்க்கு, காலம் காலமா பொண்ணுங்க தானே இந்த வார்த்தையை யூஸ் பண்றீங்க? ஒரு சேஞ்சுக்கு நான் முதல்ல கேட்டுட்டேன்” என்றான் குழந்தை போல்.

 

அவன் செய்கையில் சிரித்தவள், “நான் இங்க தான் ரூம் புக் பண்ணிருக்கேன். இது தான் என்னோட ரூம்” என்றாள்.

 

“வாட் அ சர்ப்ரைஸ்?! நானும் இங்க தான் தங்கியிருக்கேன். அது தான் என்னோட ரூம்” என்றவன் அவளின் அறைக்கு அடுத்து எதிர் அறையை காட்டினான்.

 

“ஓஹ், ரொம்ப வசதியா போச்சு. ஓகே நாளைக்கு மீட் பண்ணலாம். கொஞ்சம் வேலை இருக்கு.” என்றவள் அவனிடம் விடை பெற்று தன்னறைக்குள் புகுந்தாள்.

 

அலைச்சலினால் படுத்ததுமே ஆழ்ந்த நித்திரைக்குப் போய்விட்டாள் திரவ்யா. அடுத்த அறையில் இருந்த ஆர்யனுக்கோ நிலைமை தலைகீழாய் இருந்தது. நீண்ட நேரமாக உறங்க முயன்றும் திரவ்யாவின் பூ முகமே மீண்டும் மீண்டும் விழியில் தோன்ற, தன் மனதிற்கு முன்பு தானே தோற்றுப் போனான். 

 

‘யார் நீ? எத்தனையோ பேரழகிகளை திரும்பி கூட பாக்காம கடந்து வந்தவன் நான். உன்ன பார்த்த கொஞ்ச நேரத்திலயே எனக்குள்ள இவ்வளவு மாற்றத்த கொண்டு வந்துட்டியே? என்னை என்ன தான்டி பண்ணுன?’ என தனக்குள் புலம்பியாவறே கண்களை மூடினான். விடாமல் அவனை இம்சத்துக் கொண்டே இருந்தாள்…

 

“அவ்வளவு தூரம் என் மனசுல பதிஞ்சிட்டியா? இப்பவே செக் பண்ணி பார்த்துடுறேன்…” என எழுந்தவன், அவள் உருவத்தை ஓவியமாய் வரைய உக்காந்தான்.

 

அந்த நேரத்தில்தான் பட்டர்ஃபிளை தன் ரெக்கையை விரித்து பறப்பது போல் தாஜ்மஹாலின் முன்பு அவள் துள்ளி குதித்து விளையாடியதை ஓவியமாய் வரைந்தான். அவன் மனக்கண்ணில் பதிவாகியிருந்த அவள் உருவத்தை, தத்ரூபமாய் வரைந்து முடித்தவனுக்கு தன் விழிகளை தன்னாலேயே நம்ப முடியவில்லை. 

 

அவன் இதுவரை வரைந்த ஓவியங்களிலேயே இதுதான் மிகச்சிறந்தது! அதை அப்படியே தன் பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்.

 

அதன்பிறகே நிம்மதியாய் உறங்கினான். மறுநாள் காலையில் கிளம்பி வெளியே வந்தவன், பக்கத்து உணவகத்தில் உணவு உண்டு கொண்டிருந்தான். ஏடிஎம் சென்ற திரவ்யாவும், அதே நேரம் அங்கு வந்தாள்.

 

“ஹே ஆர்யன்! நீங்களும் இப்போ தான் சாப்பிடுறீங்களா? நல்ல வேள தனியா உக்காந்து சாப்பிடணுமேன்னு நினைச்சிட்டு வந்தேன். கம்பெனிக்கு நீங்க இருக்கீங்க” என்றவள் அவனருகே அமர்ந்தாள்.

 

“இவ்வளவு நேரம் எங்க போனீங்க?” 

 

“ஏடிஎம்க்கு போனேன், அது என்னடான்னா என்னை சுத்தல்ல விட்டுடுச்சு. உங்களுக்கு இன்னைக்கு ஏதாவது முக்கியமான வேலை இருக்கா?” என்று ஆர்யனை பார்த்து கேட்டவள் அவன் பதில் கூறும் முன்பே, “இல்லன்னா என் கூட ஷூட் பண்ண வர்றீங்களா?” என்று முடித்தாள்.

 

கடைசி வரியை கேட்டவனுக்கு மனதில் குத்து பாடல் ஒன்று ஓட, “ஓஹ் எஸ்! இன்னைக்கு எனக்கு எந்த வேலையும் இல்ல. ரொம்ப ஃப்ரீ தான்” என்று கூறினான்.

 

உணவருந்தி முடித்து விட்டு இருவரும் உடனடியாக தாஜ்மஹாலுக்கு சென்றனர். திரவ்யா விருப்பப்படியே அவளுக்கு புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது. யதேட்சையாய் ஆர்யன் தாஜ்மஹாலின் அழகினை ரசித்துக்கொண்டு நிற்க, அதுவே ஒரு கவிதை போல் இருந்தது. அதை அப்படியே புகைப்படமாய் எடுத்துக்கொண்டாள் அவள்.

 

பிறகு இருவரும் இணைந்து ஊரைச் சுற்றி, தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்பினர். அந்த நேரத்தில் திரவ்யாவிற்கும் ஆர்யனின் மேல் நன்மதிப்பு உண்டாகியிருந்தது. அறைக்கு வந்து இருவரும் பொருட்களை பிரிக்கையில், அவன் பையில் இருந்த ஓவியத்தை பார்த்து விட்டாள். தன்னை அவன் நுட்பமாக வரைந்திருப்பதை கண்டு உறைந்து போனாள் பெண்ணவள்.

 

திடுக்கிட்டவன், “உன் பர்மிஷன் இல்லாம வரைஞ்சது தப்புதான். பட், நான் எதிர்பார்த்த ஓவியம் இதுதான். ஏன் எப்படி எதுக்குன்னு என்கிட்ட கேட்காத. எனக்கு புடிச்சது, வரைஞ்சுட்டேன்” என்று குற்ற உணர்ச்சியோடு கூறி முடிக்க, அவளோ பதில் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

 

“கோபமா?” என்று கேட்டதற்கு இல்லை என தலையாட்டியவள், தன் கேமராவை கையில் எடுத்தாள்.

 

“சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. எனக்கும் இந்த போட்டோ தான் பெர்ஃபெக்ட்டா வந்தது. எடுத்துட்டேன்… போட்டியில ஜெயிச்சா உங்க கிட்ட சொல்லிக்கலாம்னு நினைச்சேன்” என்று நீட்ட, அதில் அவன் உருவம் தெரிந்தது.

 

“நைஸ், என்னை பத்திரமா வச்சுக்க” என்றவன் பார்வையில் காதல் நிறைந்து வழிந்தது. 

 

“உண்மைய சொன்னா எனக்கும் உங்கள புடிச்சிருக்கு, பட் இது நடக்காது. சோ, நம்ம வழிய பார்த்து போவோம்…” என்று அவன் சொல்ல வேண்டியதை இவள் சொல்லிக் கொண்டிருந்தாள். 

 

அடுத்த நாளே திரவ்யா சென்னைக்கு செல்ல தயாராகிவிட்டாள். ஆர்யனும் வேண்டுமென்றே அவளோடு பயணித்தான். அவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் அவளின் அன்பை யாசிக்கும்படி இருக்க, உள்ளுக்குள் உடைந்து நொறுங்கினாள். இறங்கும் நேரம் வந்ததும் அவளையறியாது அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, கண்கள் கலங்கி நின்றாள். 

 

“ஹேய் வாட் ஹேப்பெண்ட்?”

 

“டிஸ்டர்ப் பண்ணாதீங்க, எனக்கு அழணும். என் சூழ்நிலையை நினைச்சு அழணும்.” 

 

“அழுது முடிச்சுட்டேனா முகத்தை கொஞ்சம் காட்டு. பார்த்துட்டு அப்படியே வரைஞ்சு தரேன்” என கிண்டலாய் சொன்னவனின் நெஞ்சில் அடித்தாள்.

 

“நானே என் காதல உன்கிட்ட சொல்லவும் முடியாம, உன்னோட காதல ஏத்துக்கவும் முடியாம தவிச்சிட்டு இருக்கேன்! நீ வேற நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு இருக்க” என்று புலம்பியவளை தன்னை விட்டு விலக்கினான் ஆர்யன்.

 

“உன் நடவடிக்கையே உனக்கு என்னை எந்த அளவு பிடிக்கும்ன்னு சொல்லிருச்சு. இப்போ இருந்து யூ ஆர் மைன். யாருக்காகவும் உன்ன விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறவும் ரயில் நிற்கவும் சரியாக இருந்தது.

 

ஆர்யனை விட்டு பிரிய மனமின்றி ரயிலில் இருந்து இறங்கினாள். அவளுடன் அவனும் இறங்கினான்.

 

“என்ன? நான் எங்க போனாலும் என் கூடவே வருவியா?” 

 

“நீங்க ஃபர்ஸ்ட் நான் எங்க இருந்து வர்றேன்னு விசாரிச்சீங்களா மேடம். நானும் சென்னைல தான் இருக்கேன். ஓவியம் வரையிறது மட்டும் இல்ல, டேமேஜ் ஆன ஓவியங்களை சரி செஞ்சு கொடுக்கிறதும் என் வேலை. சென்னையில ஆறு மாசமா ஒரு ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு. சோ, என்னோட ஸ்டாப்பும் இது தான்” என்று கூற அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

 

“ஹேய் ஃபர்ஸ்ட் இந்த முட்ட கண்ண வச்சிட்டு உருட்டி உருட்டி பாக்குறத நிறுத்து தியா. நிஜமா அத என்னால ஹேண்டில் பண்ண முடியல” என்றவன் அவள் கண்களில் சட்டென தன் முதல் முத்திரையை பதிக்க, “என்ன பண்ற, பப்ளிக் பிளேஸ்ல?” என்று அவனை தடுத்தாள். 

 

“ஓ, உனக்கு இப்படி ஒரு வீக்னஸ் இருக்கா?” என்று கேட்டபடி அவள் இதழை நெருங்கினான்.

 

“ஆர்யன்…” பதறி விலகினாள்.

 

“அப்போ உன் பிரச்சனை என்னனு சொல்லு” என்று கேட்டவனிடம் உண்மையை கூற ஆரம்பித்தாள்.

 

“உன்ன மட்டும் இல்ல, இந்த உலகத்துல யாரோட காதலையும் அக்ஸெப்ட் பண்ணிக்கிற சூழ்நிலைல நான் இல்ல. இதெல்லாம் தெரிஞ்சு தான் நான் சென்னைக்கே வந்தேன். ஆனாலும் உன் கிட்ட நான் தோத்து போய்ட்டேன். ப்ளீஸ் என்னை தப்பா நினைக்காத. என் குடும்பத்த பலி கொடுத்து, என்னால உன்ன கல்யாணம் பண்ணிக்க முடியாது” என்று அழுதவள், தன் குடும்பத்தில் நிகழ்ந்தவற்றை எல்லாம் ஒன்று விடாமல் கூறினாள்.

 

“அவ்வளவு தானா? இதுக்கு தான் நீ இவ்வளவு பயந்தியா?” என அவன் சாதாரணமாக கேட்டான்.

 

“என்ன? என் அம்மா, அப்பாவ கன்வீன்ஸ் பண்றது ரொம்ப ஈஸின்னு நினைச்சிட்டு இருக்கீயா?” 

 

“இல்ல, மே பி என் அம்மா அப்பாவ வச்சு பேசுனா எல்லாம் சரியாகும்ன்னு நினைக்கிறேன். நான் இதை ஒரு அரேஞ்ச் மேரேஜ் மாதிரி பன்னுனா உனக்கு சம்மதமா? அப்போ நீ என்ன அக்செப்ட் பண்ணிப்பியா?” என கிண்டலாக கேட்டு அவளின் தோளை தட்டினான் ஆர்யன்.

 

“நிஜமா தான் சொல்றியா? இதெல்லாம் நடக்குமா?” என ஆர்வமாக கேட்டவளின் கையை தன் கையோடு இணைத்து கொண்டான். 

 

“உனக்காக நடத்தி காட்டுறேன். ஐ லவ் யூடி!” என கூறியவன் திரவ்யா தங்கியிருக்கும் விடுதி வரை அவளை அழைத்து சென்றான்.

 

தன் ஆசை இவ்வளவு சுலபத்திற்கு நிறைவேறும் என்று அவள் நினைக்கவே இல்லை. எந்த சிரமமும் இன்றி, காதல் கைகூடி விட்டதே! என்று சிலாகித்தாள்.

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
223 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
304 15 1
வேண்டினேன் நானுன்னை
532 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
450 12 0
கற்றது காதல்
211 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page