ஏகா காதலன் – 7

அத்தியாயம் 7

 

எழுந்து நின்ற இளங்கிளிக்கோ கண்களில் நீர் கட்டிக் கொண்டது.. 

 

தன்னைப் பற்றியும், தன் நடத்தையைப் பற்றியும் சந்தேகிப்பவனைக் கண்டு மனம் வெம்பிப் போனாள்.. 

 

இறந்துப் போன திருப்பதி தாத்தாவின் நினைவும் சேர்ந்து வர, மனதோடு சேர்ந்து உடலும் சோர்ந்துப் போனது.. 

 

அவளும் தன் தாத்தாவின் நினைவுகளில் இருந்து மீண்டு வந்து விட தான் துடிக்கிறாள்.. 

 

ஆனால் வளன் போன்றவர்கள், அவளை அலட்சியமாகவும்.. அற்பமாகவும் நடத்துவதைப் பார்க்க.. பார்க்க இவளுக்கு, தானும் மாண்டு விட மாட்டாமோ, என்கின்ற எண்ணம் தான் வந்தது.. 

 

வித்யா அவளுக்கான வேலையைக் கொடுத்து விட்டுச் சென்றாள்.. 

 

இளங்கிளியோ எந்த வித பற்றுதலும் இன்றி தான் வேலை செய்யவே ஆரம்பித்தாள். 

 

அவளுக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை.. 

 

இப்படி ஒரு பிழைப்பு தான் பிழைக்க வேண்டுமா?.. யார் இவன் தன்னை மட்டம் தட்டிப் பேச, இவனுக்கு கீழ் நான் வேலை செய்வதா?.. என தன்மானம் தலை தூக்கியது அவளுக்கு.. 

 

வளனை ஒப்பிடுகையில் ராசபாண்டி எவ்வளவோ மேல் என்பது போல் தான் தோன்றியது.. 

 

அவன் கூட அவளின் நடத்தையை சந்தேகப்பட்டு பேசியதில்லை.. 

 

சிக்கீரம் ஊருக்குச் செல்ல வேண்டுமென்ற தீர்மானத்தை எடுத்தவளுக்கு, அங்கிருக்கவேப் பிடிக்கவில்லை.. 

 

வித்யாவிடம் கூட சொல்லாமல், கொள்ளாமல் வேகமாக வெளியே வந்தாள்.. 

 

முத்து சொன்ன பஸ்சிலேயே ஏறி வந்தவள், வீட்டிற்குள் நுழையும் நேரம் மதியம் என்பதால் வீட்டில் அனைவரும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.. 

 

வேகமாக தன்னறைக்குச் சென்றவள், யாரிடமும் சொல்லாமல் தன் பையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.. 

 

அவனிடமிருந்து தப்பித்துச் செல்ல வேண்டுமென நினைத்தவள் அறியவில்லை.. அவனிடம் தான் வசமாக சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்று.. 

 

ஏதோ டென்சனிலேயே சுற்றிக் கொண்டிருந்த வளன், சிசிடிவி கேமராவைக் கூட பார்க்கவில்லை.. 

 

அவனுக்கே இளங்கிளியிடம் தான் நடந்துக் கொண்ட முறை அதிகம் என்று தோன்றியது..

 

இதுவரை எந்தப் பெண்ணிடமும் இப்படி நடந்துக் கொள்ளவில்லை என அவன் சொல்ல மாட்டான்.. 

 

ஏனோ பெண்கள் என்றாலே ஒரு வித இளக்காரம் அவனுக்கு.. 

 

அவர்களால் என்ன சாதித்துக் கிழித்து விட முடியும்?.. என மமதையாக பேசிக் கொண்டு சுற்றுபவன்.. 

 

இளங்கிளியின் அனாதரவான நிலை அவனுக்கு எள்ளி நகையாடிட சாதமாகிப் போனது. 

 

வளன் தன் வேலையில் மூழ்கியிருந்த நேரம், 

 

“வளன்..” என்றான் ராம்.. 

 

“ம்ம்..” என்றான் வளன்.. 

“உன்னைப் பார்க்க லாயர் சண்முகம் வந்திருக்காரு..” என்றதும், வளனின் கண்கள் இடுங்கியது.. 

 

“என்ன சொல்லுற டா.. லாயர் ஆங்கிளா?..” என்றவன், ஒரு கணம் யோசித்து, 

 

“சரி வரச்சொல்லு..” என்றான்.. 

 

சிறிது நேரத்தில் சண்முகம் உள்ளே நுழைந்தார்..

 

“வாங்க ஆங்கிள், ஜூஸ் ஆர்  காஃபி..” என்றான் புன் சிரிப்புடனே, 

 

“எதுவும் வேண்டாம் வளன்.. நான் உன்கிட்ட முக்கியமாக ஒரு விஷயம் சொல்லத்தான் வந்தேன்..” 

 

“ம்ம்.. சொல்லுங்க ஆங்கிள்.” என்றான், புருவம் முடிச்சிட, 

 

“அது..” என இழுத்தவருக்கு, சிறு தயக்கமும் இருந்தது.. 

 

“என்னாச்சி ஆங்கிள்.. எனி ப்ராப்ளம்?.. மோஹிஸா ஓகே தானே?..” என அவரின் மகளைப் பற்றி விசாரித்தான்.. 

 

காலேஜ் படிக்கும் பெண், ஏதாவது தகராறா இருக்குமோ என்று தான் யோசித்தான்.. 

 

“அச்சோ.. இல்லை வளன், அவ ஃபைன்.. இது உங்க குடும்ப விஷயம்..” என்றார் சிறு தயக்கத்துடன், 

 

“எங்க குடும்ப விஷயமா?.. என்ன ஆங்கிள்?.. எங்க குடும்பத்துக்கென்ன?.. ஆல் ஃபைன் ஆங்கிள்..” என்றான் சிறு எள்ளல் நிறைந்த புன்னகையுடன்,

 

“அது.. எப்படிச் சொல்லுறதுன்னே தெரியலை ப்பா.. சொன்னா முறையா இருக்குமான்னு தெரியலை?.. ஆனா சொல்லாம இருக்கவும் முடியலை..” என்றார் பீடிகையாக,  

 

“அங்கிள் நீங்க சொல்லாம இப்படி மென்னு முழுங்குறது தான் சரியில்லை..” என்றான் சிறு கண்டிப்புடன், 

 

“தாத்தா உயில் எழுத சொல்லியிருக்காரு..” என்றதும், ஒரு கணம் அதிர்ந்துப் போனான் வளன்.. 

 

“உயிலா?..” என்றவனின் முகமே பசையற்று வெளிறிப் போனது.. 

 

“ஆமா வளன்.. உயில் தான்..” என்றவரை சற்று அதிர்ந்து தான் பார்த்தான் வளன்.. 

 

அவனுக்கு உயிலே நெருடலைத் தான் கொடுத்தது.. 

 

“ஓஹ்.. யார் பேருக்கு என்னவெல்லாம் எழுதி வச்சிருக்காரு?..” என கேட்கும் பொழுதுக் கூட அவன் முகம் சாதாரணமாகத் தான் இருந்தது.. 

 

விஸ்வநாதனின் நண்பன் திருப்பதி இறந்து போனதால், தானம் இறந்து விடுவோம் என்ற பயத்தில் தான் விஸ்வநாதன் உயில் எழுதி வைக்கச் சொல்லியிருக்கிறார் என்று தான் நினைத்தான்.. 

 

“வளன்.. அடையார், அம்பத்துர் என தொடங்கி கிட்டத்தட்ட 4 பிரான்ஞ்ச்களை உங்க அண்ணன் தீபன் பேர்ல எழுதி வச்சிருக்காரு..” 

 

“ஒஹ்..” என்றான் மிகச் சாதாரணமாக, 

 

தன் அண்ணனுக்குச் சொத்து போவதில் அவனுக்கு எந்தவித ஆட்சபேனையும் இல்லையே.. 

 

“மீதி..” என்றான், சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தபடி, 

 

“அப்பா, அம்மா ரெண்டு பேர் பேர்லையும் 4 ப்ரான்ஞ்ச் எழுதி வச்சிருக்காரு.. அதை நியமிக்கிறதுக்கு நம்பிக்கையான ஆள் போட வேண்டியது பசங்க உங்க ரெண்டு பேரோட பொறுப்பு” 

 

“ம்ம்.. குட்..” என்றான் வளன்.. 

 

“அடுத்து 4 எனக்கு.. 1 ஆர்த்திக்கா?..” என்றான் சிரித்துக் கொண்டே, 

 

அவன் கணக்கில் 13 பிரான்ஞ்ச்களை பிரித்தால், இப்படித்தானே வர வேண்டும் என்று தான் நினைத்தான்.. 

 

“இல்லை வளன்.. ஆர்த்தி பேர்ல பேங்க் அக்கவுண்ட் சேவிங்க்ஸ் மட்டும் தான் போட்டிருக்காரு..” 

 

“ஓஹ்.. அப்போ மீதியிருக்கிற ஒன்னு..” என்றான் நிமிர்ந்து அமர்ந்திருந்தவாறே, 

 

“மீதி 1 பிரான்ஞ்சை உங்க யாருக்கும் எழுதலை..” 

 

“எங்க மூணு பேருக்கும் எழுதலைன்னா, புதுசா யாருக்கு?.. அப்பா பேர்லையா?..” என்றான் வளன், 

 

நிச்சயமாக அது அப்பா பேரில் இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்தது.. 

 

“மீதியிருக்கிற ஒரு பிரான்ஞ்.. இதுவா?..” என்றான் பூமியை நோக்கிக் கைக்காட்டியபடி, 

 

அவனுக்குத் தெரியுமே அவர்கள் தொழிலின் அஸ்திவாரமே இந்த பிரான்ஞ் என்று.. 

 

“சொல்லுங்க ஆங்கிள்.. மீதி ஒன்னு இதுவா?..” என்றான்.. 

 

“அது.. அது..” என இழுத்தவரைக் கண்டு கண்கள் சுருக்கியவன், 

 

“அப்போ இந்த பிரான்ஞ்சை எங்க வீட்டுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல், ஒருத்தர்க்கு எழுதி வச்சிருக்காரா?..” என்றவனின் முகம் இறுக்கமாகியது.. 

 

“ஆமா வளன்..” 

 

“யாருக்கு?..” என கேட்கும் பொழுதே, அதீத கோபத்தை அவன் உள்ளடக்கியிருக்கிறான் என்பது புரிந்தது. 

 

“அது..” என்றவர், சற்று தணிந்த குரலில், 

 

“விஸ்வநாதன் சாரோட ப்ரண்ட் திருப்பதி அவுங்க பேத்தி இளங்கிளி பேர்ல தான்” என சொல்லி முடித்ததுமே நாற்காலியை விட்டு எழுந்தவன், தன் டேபிளில் இருந்த அத்தனை பொருட்களையும் விசிறியடித்தான்.. 

 

“யார் சொத்தை யார் அனுபவிக்கிறது?.. என்னை என் தாத்தாவையும் வளைச்சிப் போட்டுட்டாளா அவ?..” என தரக்குறைவாக பேசினான் வளன்..  

 

“வார்த்தையை அளந்துப் பேசு வளன்..” என்றார் எச்சரிக்கும் குரலில், 

 

“என்ன அளந்துப் பேசணும்?.. ஹான் என்ன பேசணும்?.. எவன் கூடவோ உரசிக்கிட்டு சுத்துற அவளுக்கு, மரியாதை ஒன்னு தான் கேடா?.. *****” என கெட்ட வார்த்தையிலேயே திட்ட ஆரம்பித்து விட்டான்.. 

 

சண்முகத்தால் காதுக் கொடுத்து கேட்க முடியவில்லை.. 

 

“ஸ்டாப்பிட் வளன்.. படிச்ச பையன் மாதிரி பிகேவ் பண்ணு.. ஏதோ தேர்ட்ரைட் பொறுக்கி மாதிரி பேசிட்டு இருக்கிற?.. அந்தப் பொண்ணு எப்படின்னு எனக்குத் தெரியாது. ஆனா உங்க தாத்தாவை மரியாதையில்லாம பேசுறதை என்னால ஏத்துக்க முடியாது..” என்றவரை எரிப்பது போல் முறைத்தவன், 

 

“வெளியே போயிடுங்க ஆங்கிள்.. கோபத்துல உங்களை ஏதாவது சொல்லிடப் போறேன்..” 

 

அவனின் நிலை அவருக்குப் புரியாமல் இல்லை.. 

 

“இன்னும் ரிஜிஸ்டர் பண்ணலை.. நீங்க எல்லாரும் பேமிலியோட பேசிட்டுச் சொல்லுங்க.. நான் அப்புறம் ரிஜிஸ்டர் பண்றேன்..” 

 

“ரிஜிஸ்டர் பண்ணிடுங்க அங்கிள்..” என்றவனை அதிர்ந்து பார்த்தார் சண்முகம்.. 

 

“என்ன சொல்லுற வளன்?..” 

 

ஆமா அங்கிள் ரிஜிஸ்டர் பண்ணிடுங்க.. என் தாத்தாவோட ஆசை எதுவும் நிறைவேறாம இருக்கக்கூடாது..” என்றவனின் முகமோ ரெளத்திரத்திலும், கோபத்திலும் செந்தணலாய் ஜொலித்தது.. 

 

அவனுக்கு அங்கிருக்கவே முடியவில்லை..  

 

அங்கிருந்து வெளியேறிய வளன் நேராகச் சென்றது என்னவோ பாருக்குத் தான்.. 

 

குடித்தான்.. குடித்தான்.. தன் மனதில் எரிமலை சீற்றமாய் பொங்கிக் கொண்டிருக்கும் கோபம் அடங்கும் வரை குடிக்க ஆரம்பித்தான்.. 

 

இரவு 11 மணியைக் கடந்த பின்பும் வளன் குடிப்பதை நிறுத்தவில்லை.. 

 

விஸ்வநாதனோ வீட்டில் இளங்கிளியை எதிர்பார்த்துக் காத்திருந்தவர், வளனும் வீட்டிற்கு வரவில்லை என்பதால், வேலை அதிகம் என்று நினைத்துக் கொண்டார்.. 

 

இன்னும் 1 வாரத்தில் பொங்கல் வர இருப்பதால், கடை சற்றுக் கூட்டமாகத் தான் இருக்கும் என அவர் அறிவாரே.. 

 

ராம் தான் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.. 

 

“வா டா ராம்..” என்ற விஸ்வநாதனின் கண்களோ, அவனிற்கு பின்னால் தான் பார்த்தது.. 

 

“யாரை தாத்தா பார்க்குறீங்க?..” என்ற ராமின் தோளில் சாய்ந்தபடி நின்றிருந்த தன் பேரனை புருவம் சுருக்கிப் பார்த்தவர், 

 

“என்னடா இன்னைக்கு ஏதாவது பிசினஸ் பார்ட்டின்னு குடிச்சிட்டு வந்துட்டானா?..” என கோபமாக கேட்டார்.. 

 

அடிக்கடி இது நடப்பதால், அவர் அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை.. 

 

“இல்லை தாத்தா.. இது வேற?..” என்றவனுக்கு, சண்முகம் மதியம் வந்ததைப் பற்றி சொல்ல முடியவில்லை.. 

 

“சரி டா.. இளங்கிளி எங்கே?..” என்றார் பரிதவிப்பாக, 

 

அவ்வளவு போதையிலும், வளனின் காதில் இளங்கிளி என்ற வார்த்தை தெளிவாகக் கேட்டது.. 

 

“என்ன தாத்தா என்கிட்ட கேட்குறீங்க?.. அவ வீட்ல தானே இருப்பா..” என்றான் ராம்.. 

 

“அவ வீட்டுல இருந்தா நான் ஏன் டா உன்கிட்ட கேட்கப் போறேன்.. அவ 6 மணியில இருந்தே வீட்டுக்கு வரலை..” என்றார் விஸ்வநாதன் சற்று பதட்டமாக, 

 

“ஒரு நிமிஷம் தாத்தா..” என்ற ராம்.. தன் தோளில் கிடந்தவனை அங்கிருந்த சோபாவில் படுக்க வைத்தான்.. 

 

“தாத்தா.. அந்தப் பொண்ணு நேத்து மாதிரி 6 மணிக்கு வந்திடும்னு தான் நான் நினைச்சேன்.. ஆனா நீங்க வரலைன்னு சொல்லுறீங்க?.. நல்லா தேடுனீங்களா?.” என்றான் ராம்.. 

 

“இல்லை இளங்கிளி வீட்டுக்கே வரலை..” என பின்னாடி இருந்து கேட்டக்குரலில், உடல் விறைத்துப் போனது ராமிற்கு.. 

 

அதுவரை இளகிய அவனின் முகம் கூட இறுகிப் போனது.. 

 

“சொல்லு ராம்.. இளங்கிளிக்கு என்னாச்சி?.. செக்யூரிட்டிக்கு கால் பண்ணி, அவ அங்கே இருக்காளான்னு தேடச் சொல்லு..” என்றார் ஆணையிடும் குரலில், 

 

“வெய்ட் பண்ணுங்க தாத்தா..” என்ற ராம்.. இரவு நேர செக்யூரிட்டி பணியில் இருக்கும் நபருக்கு போன் செய்து தேடச் சொன்னான்.. 

 

கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு பின்பு செக்யூரிட்டியிடம் இருந்து அழைப்பு வந்தது.. 

 

“சார், நாங்க எல்லா இடத்துலையும் தேடிட்டோம்.. ஆனா இளங்கிளி இல்லை..” 

 

“அப்போ அவ எங்கே?..” என ராம் பரிதவிப்பாக, விஸ்வநாதனைப் பார்க்க.. 

 

அவரும் சற்று பதட்டமாகத் தான் இருந்தார்.. 

 

“அவ எங்கே போயிருப்பா?.. ரொம்ப நல்லப் பொண்ணு..” என்றாள் ஆர்த்தி.. 

 

நாட்டில் நடப்பதை பற்றி நினைத்துக் கொண்டே, 

 

“ய்யார்ர்ர்ர்.. ந்ந்நல்லப் பொண்ணு.. அவளா?..” என வானம் அதிர சிரித்தபடி எழுந்த வளன், 

 

“எல்லா இடத்துலையும் தேடுனீங்களே தாத்தா.. முத்துவோட வீட்டுல தேடுனீங்களா?..” என தள்ளாடியபடி கூறினான்.. 

 

“யார் முத்து?..” என்றனர் விஸ்வநாதனும், ராமும் ஒன்றாக… 

 

“அதான்.. நம்ம வீட்டுல டிரைவர் வேலை பார்க்கிறானே.. முத்து.. அவன் தான்.. இளங்கிளியோட லவ்வர்..” என அசராமல் விஸ்வநாதனின் தலையில் குண்டைத் தூக்கிப் போட்டான் வளன்.. 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
ஏகா காதலன்
275 0 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page