அத்தியாயம் -7
ரோஜா அன்று வழக்கம்போல் யோகா கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவளுக்கு அழைப்பு வந்தது முதலில் அந்த அழைப்பை எடுக்க வேண்டாம் என்று நினைத்தவர் இந்த ஏதோ தோன்ற அவளுடைய கைபேசியை எடுத்துப் பார்த்தார் அதில் மதியழகன் என்று இருக்க உடனே அவனுடைய அழைப்பை எடுத்து பேச முற்பட்ட இந்த முறை அவன் எடுக்கவில்லை.
“சரி அப்புறம் எடுத்துக் கொள்ளலாம்”என்று அவனும் விட்டு விட்டான் போலும். இவளும் கிளாஸ் எடுத்துக்கொண்டு இருந்ததால் வேறு வழியின்றி மொபைலை எடுத்து பயன்படுத்தாமல் தனியே வைத்து விட்டாள்.
ஒரு வகையில் யோகா கிளாஸ் நல்லபடியாக போய்க்கொண்டிருந்தது.
நேரம் தற்போது காலை பதினொரு மணி. வயதானவர்களுக்காக ஸ்பெஷல் வகுப்பு என்பதால் அவள் அவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
அவர்களுடைய வாழ்க்கை அனுபவத்தை பற்றி எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரியா இருக்காது சிலருக்கு மேடும் பள்ளமா இருக்கும், சிலருக்கு எப்போதும் எதாவது கஷ்டங்கள் இருந்துட்டு இருக்கும் சிலருக்கு மகிழ்ச்சியாகவே இருக்கும் அப்பப்ப சில மன கசப்பு வரும். ஆனால் அதெல்லாம் தாண்டி வரும் போது நாம் யார் நமக்கு என்ன தேவை அப்படிங்கிறத புரிஞ்சிட்டு அதன்படி நடக்கணும்”
என்று பெரியவர் ஒருவர் கூறிக்கொண்டு இருக்க இவளுக்கு மனசு லேசானது.
பிறகு வகுப்பு முடிந்ததும் மீண்டும் தன்னரைக்குள் புகுந்து கொண்டாள் அப்போதுதான் நினைவுக்கு வந்தது மதியழகன் தனக்கு அழைப்பு விடுத்தது எனவே உடனே போனை எடுத்து மதியழகனுக்கு கால் செய்தாள்.
“ஹாய் ரோஜா”
“ஹாய் மதி”
என்று இருவரும் பேச துவங்கினர். இருவரும் ஊரில் நடந்த விஷயம் முதல் கொண்டு இப்ப வரை வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர்.
அப்போதுதான் அவளுக்கு விவாகரத்து நடந்த டாபிக் ஆரம்பமானது.
“இப்ப எல்லாம் ஓகே தானே என்று அவன் கேட்டதும் அவள் சரி என்றபடி தலையை ஆட்டினாள்”
அவள் தலையை ஆட்டுவது அவனுக்கு எப்படி தெரியும் போனில் அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார்கள் எனவே மீண்டும் அவளுடைய பெயரை உச்சரித்தார் ரோஜா என்று அவள் பெயரை உச்சரித்தான்.
“ஆங் மதி நான் இருக்கேன் சொல்லு”
“என்ன என்ன ஒரு மாதிரி அமைதி ஆயிட்ட என்று அவளிடம் கேட்டதற்கு ஒன்றுமில்லை நான் சரியாக தான் இருக்கிறேன் என்று கூறினாள்.
மறுபடியும் எப்பொழுது வீட்டிற்கு வரப் போகிறாய் என்று அவன் கேட்டதற்கு பார்க்கணும் நேரம் கிடைக்கும்போது வருகிறேன் என்று கூறினாள். அவனுடைய வாழ்வில் இதுவரை எந்த பெண்ணும் வரவில்லை என்றபோது முதன்முறையாக அவளிடம் நட்பு பாராட்டுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. சின்ன வயதில் ஊருக்கு வந்தபோது அவளிடம் பேசியதுண்டு சில நேரங்களில் விளையாடியது உண்டு. ஆனால் வளர்ந்த ஆளான பின்பு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதே இல்லை. ஏதேனும் விசேஷம் என்றாலும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து கொள்வார்களே தவிர உறவாடியது பெரியதாக இல்லை அதனால் இருவருக்கும் ஆன பரஸ்பர அன்பு இதுவரை உதித்ததில்லை.
“ஹே மதி …. கிணத்துல நீச்சல் அடிக்க எனக்கு இன்னும் கத்து தரியா “என்று அவள் கேட்டதற்கு அதற்கென்ன நான் கற்றுத் தருகிறேன் ஊருக்கு வா என்றால் மதியழகன்.
எதுக்கு வரணும் இல்லையோ கிணத்துல நீச்சல் அடிக்கவாது நான் கண்டிப்பா ஊருக்கு வருவேன் என்று கூறினால் ரோஜா.
என்னமோ தெரியவில்லை ரோஜாவுக்கு இந்த சிட்டி லைவ் இந்த டிராபி இந்த ஆடம்பரமான வீடு வசதி எல்லாம் ஒரு மாதிரி வெறுப்பாக தான் இருந்தது. அந்த வெறுப்போடு சேர்ந்து தற்போது அவளுக்கு விவாகரத்து ஆன வெறுப்பு ஒருபக்கம். எனவே எப்படியாவது ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு மறுபடியும் காரைக்குடி பக்கம் போக வேண்டும் என்று யோசித்துக்கொண்டு இருந்தாள் ரோஜா. அவள் யோசித்தபடி சரியாக ஊரிலிருந்து ஒரு இறப்பு செய்தி வந்தது. யார் போகிறார்களோ இல்லையோ நான் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால் ரோஜா அதற்கு ஏற்றார் பிரபஞ்சன் தமிழரசி யார் யார் போலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் முதலில் ஓடி வந்து அப்பா நான் வருகிறேன் என்று கூறினாள் ரோஜா.
“ஆமா நீ எதுக்கு நீ வந்து நான் தேவையில்லாம உன் வாழ்க்கையை பத்தி எதாவது கேள்வி கேட்டுட்டே இருப்பாங்க”என்ற தமிழரசி.
“மத்தவங்க கேட்கிறார்கள் என்பதற்காக நான் வராமல் இருக்க முடியுமா என்றாள் ரோஜா”
“அப்படி இல்லடி இங்க சிட்டில இருக்குறதுக்கும் ஊர்ல இருக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு ஊர்ல இருக்கிற ஜனங்களுக்கு ரொம்ப நோய்நொய்ன்னு கேட்டுட்டே இருப்பாங்க அவங்களுக்கு பதில் சொல்ல மாலாது”
“யார் கேள்வி கேட்டா என்ன கேள்வி கேட்கிற யாரும் நம்ம பொண்ணோட வாழ்க்கையை சரி பண்ண போறது இல்ல அப்புறம் எதுக்கு அத பத்தி எல்லாம் நம்ம யோசிக்கணும் நம்ம பொண்ணு வரணும்னு ஆசைப்பட்டாய் வரட்டும்”என்றார் பிரபஞ்சன்.
“அது சரி நீங்க எல்லாம் போறீங்க ஓகே நான் என்ன பண்றது சாப்பாட்டுக்கு என்றான் ரவிவர்மன்.
“நீ ஆர்டர் பண்ணி சாப்பிட்டு போ என்றார் தமிழரசி.
“அம்மாவும் அக்காவும் இருக்கறப்ப நான் ஏன் ஆர்டர் பண்ணி சாப்பிடணும் என்றான் கிண்டலாக.
“அப்போ ஒன்னு பண்ணு பேசாம நீ ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கோ”என்றார் தமிழரசி.
ஆமா ஏற்கனவே நடந்த ஒரு கல்யாணத்துல இருந்தே நம்ம இன்னும் மீண்டு வரல இல்ல எனக்கு வேற பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ண போறீங்களா அதெல்லாம் வேண்டவே வேண்டாம் எனக்குனு ஒரு பொண்ணு எப்போ புடிச்சிருக்கோ அப்பதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் அதுவரைக்கும் கல்யாணத்தை பத்தி யாரும் பேசவே கூடாது என்றான் ரவிவர்மன்.
” ரொம்ப பெரிய ஆள் ஆயிட்டடா நீ”என்றாள் தமிழரசி.
“சரி சரி இப்படியே பேசிட்டு நின்னுட்டு இருந்தா சாவுக்கு போக முடியாது கெளம்புங்க என்று கூறி மூவரும் வெளியே நடந்தனர்.
ஆளுக்கு ஒரு பையாக தூக்கி கொண்டு கார் டிக்கியில் பைகளை வைத்துவிட்டு மூவரும் காரைக்குடி நோக்கி காரில் பறந்தனர். நம் கதாநாயகி ரோஜா வர போகும் செய்தி அங்கு மதியழக்கு தெரிந்து விட்டது. சாவுக்கு வரமாட்டேன் என்று கூறியவன் கூட நானும் உடன் வருகிறேன் என்று கூறினான்.
“இப்படியே நல்லது கெட்டதுக்கு வந்து போன தாண்டா உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகும் என்றார் கோப்பெருந்தேவி “
“ஆமா இப்படியே சொல்லிட்டு இருங்க”என்றான் மதியழகன்.
“டேய் நீ வேணும்னா பாரு கண்டிப்பா உனக்கு இந்த வருஷம் நடக்கும் டா என்றார் கோப் பெருந்தேவி.
“சரி அம்மா சொன்னா நடக்காம இருக்குமா கண்டிப்பா நடக்கும்”என்றான்.
ஆனால் யாருடன் அந்த கல்யாணம் நடக்கப்போவது என்பது விதி தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது ரோஜாவை காணும் எதிர்பார்ப்பில் மதியழகன் மதியழகனை காணும் எதிர்பார்ப்பில் ரோஜாவும் இருக்க. சாவு வீட்டுக்கு அனைவரும் திரண்டனர்.
ரோஜா ஒரு கருப்பு கலர் சல்வார் அணிந்து கொண்டு கருப்பு துப்பட்டாவுடன் அங்கு அமர்ந்திருப்பதை கண்டால் மதியழகன் அவனும் தடுப்புச் சட்டை தான் அணிந்து கொண்டு வந்திருந்தான். பார்க்கும் போதே ஹே ரோஜா என்று கூப்பிடனும் போல இருந்தது. ஆனால் அவன் கூப்பிடவில்லை. ரோஜா அவளாகவே திரும்பி பார்த்தாள்.
தொடரும்
