கண்கள் பேசுதே அத்தியாயம் -13

அத்தியாயம் -13

ரோஜா அன்று வழக்கம் போல் எழுந்து பால்கனியில் யோகா செய்ய வந்திருந்தாள். சிலுகிலு காற்று அவள் முகத்தில் வீசியதும் மெல்ல ஆசுவாசமானாள். பிறகு யோகா செய்ய ஆரம்பிக்கும் போது அவள் வீட்டு வாசலில் கார் ஒன்று நுழைவதை கவனித்தாள். யார் என்று பார்ப்பதற்குள் காரிலிருந்து கோப்பெருந்தேவி இறங்குவதை கண்டு மகிழ்ந்தாள். பின்னாடியே மதியழகன்.

“ஹே மதி நீயா”என்று ஆச்சரியமாக பார்த்து ஹாலுக்கு வந்தாள். அதற்குள் தமிழரசி பார்த்துவிட்டு “வாங்க அண்ணி என்று வரவேற்றார்”.

பிரபஞ்சன் நீண்ட நாள் கழித்து தன் சகோதரி வருவதை கண்டு பூரித்து போக அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

முதல் அவர்களுக்கு காபி பரிமாறப்பட்டது பிறகு எல்லோரும் பேச துவங்கியபோது தான் எடுத்து வந்த பட்டு புடவையை எடுத்து அவளிடம் அதாவது ரோஜா விடம் தந்தார்.

நல்ல அரக்கு நிற புடவை கட்டினாள் அவளுக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அந்த புடவையை ஏன் அவர் தந்தார் என குழப்பமாக பார்க்க ரோஜா ஏதோ பரிசு என்று நினைத்து கொண்டு தயாராகி வந்தாள். தான் வாங்கி வந்த மல்லிப்பூ அவள் தலையில் சூடினார் கோப்பெருந்தேவி.

“அண்ணே அண்ணி வாங்க தட்டு மாத்திக்கிலாம். போன்ல கேட்டேன் நீங்க மௌனமாகவே இருந்தீங்க சரி நேர்ல போய் தட்டு மாத்திக்கலாம் னு வந்துட்டேன். நான் எடுத்த முடிவு சரியா தப்பா தெரியவில்லை ஆனால் இந்த முடிவு தெளிவாக யோசிச்சு எடுத்தேன்.

“மாமா எனக்கு ரோஜாவை ரொம்ப பிடிக்கும்”என்றான் மதி.

“மதியையும் ரோஜாவுக்கு பிடிக்கும் “என்றார் தமிழரசி. ஆனால் ரோஜா எதுவும் பேசாது அமைதியாக நின்றாள். 

“என்னதான் இருந்தாலும் ரோஜாவை ஒரு வார்த்தை கேக்கலாம் என்றார் பிரபஞ்சன்.

ரோஜாவும் மதியும் தனியே பேச அனுமதிக்க இருவரும் பின்னால் இருக்கும் தோட்டத்தில் வந்து நின்றனர்.

“சாரி ரோஜா உனக்கு இது சங்கடமா இருந்தா”என்றான் மதி.

“உங்க மேல வருத்தமோ சங்கடமோ எனக்கு எதுவும் இல்லை ஆனால்…..”

“என்ன ஆனால் ”

“இல்லை உடனே இதெல்லாம் தேவை தானா “என்றாள் ரோஜா.

“தேவை தானா னு கேட்டா சொல்ல தெரியவில்லை ஆனால் உனக்கு இதுல விருப்பம் இருக்கும் னு நினைச்சு தான் வந்தேன் ஒருவேளை விருப்பம் இல்லைனா சொல்லிடு.

“மதி …..சரி சம்மதம்”என்று சொல்லி விட்டு விறுவிறுவென நடந்தாள்.  அதற்குள் மற்ற ஏற்பாடு எல்லாம் நடந்து கொண்டிருக்க இவர்கள் உள்ளே வந்தது தட்டு மாற்றி அவர்களை மோதிரம் மாற்றும் படி கூறினார்கள். மோதிரம் மாற்றியவுடன் இருவர் முகத்திலும் ஏதோ பிரகாசமான ஒளி. அந்த ஒளி தெரியவே இருவரும் அதில் முழு விருப்பத்துடன் இருக்கிறார்கள் என பெரியவர்கள் புரிந்து கொண்டு அடுத்த வேலையை கவனித்தனர். அதன் பின் அவர்களுக்கு மதிய வேலை சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டது. சேலையை மாற்றும் நேரம் அவளுக்கு பாட்டி ஊரில் நடந்த நிகழ்வு நியாபகம் வந்தது. 

“ப்ச்ச் இப்ப ஏன் அதெல்லாம் நியாபகம் வருது”என்று நொந்து கொண்டு பிறகு வேறு உடைக்கு மாறினாள்

“கோப்பெருந்தேவி கல்யாண தேதி எப்ப வச்சிக்கலாம்”என்று பிரபஞ்சன் கேட்க அதற்கு கோப்பெருந்தேவி ஊரில் சென்று தேதி பார்த்து ஜோசியரிடம் கலந்து ஆலோசித்து சொல்வதாக கூறினார். 

கல்யாண தேதி இதைப்பற்றி எல்லாம் பேசும் போது ரோஜாவுக்கு முகம் படபடத்தது. அந்த படபடப்பு ஏன் எதற்கு என்று அவளுக்கே புரியவில்லை. பிறகு அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் கோப்பெருந்தேவி மற்றும் மதி கிளம்பினார்கள்.

நாட்கள் அப்படியே உருண்டோடி சென்றது.  யோகா பற்றிய ஒரு கான்பரன்ஸ் ஒன்று பெங்களூரில் நடைப்பெற இவளோ அங்கு ரவியுடன் கிளம்பினாள். 

ரவி வர்மன் அங்கு வந்திருக்கும் அனைவரிடமும் நன்கு பழகினான். இதற்கிடையில் அங்கு வந்திருந்த ரேவதியிடம் பேசினான் .

“ஹாய் ஐயம் ரவிவர்மன்”

“சூப்பர் நான் ரேவதி” இருவரும் அறிமுகம் ஆகினர். இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அந்த நட்பில் அவன் இவ்வுலகத்தையே மறந்தான் அந்த அளவு அவளை மிகவும் பிடித்திருந்தது.

இவர்கள் பழகுவதை ரோஜா சற்று கண்டித்து பார்த்தாள் பிறகு வேலைக்கு ஆகாது என்று அப்படி மே விட்டுவிட்டு பிறகு தான் வந்த வேலையில் கவனம் செலுத்தி பிறகு அந்த வேலையை முடித்து மீண்டும் ஊருக்கு கிளம்பும் போது ஊரை சுற்றி பார்த்து கிளம்பலாம் என நினைத்தனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர தன் நண்பரிடம் கூறினான் ராஜா.

“ராஜா ரொம்ப தேங்க்ஸ்”என்றாள் நம் ரோஜா .

“எனக்கு எதுக்கு தேங்க்ஸ் ”

“இல்லை தேங்க்ஸ் சொல்லி தானே ஆகணும்”

“அடேங்கப்பா அப்போ நான் உனக்கு யாரோல ”

“நான் அப்படி சொல்லவே இல்லையே ”

“சரி சரி விடுங்க” இவர்பேசுவதை கவனித்தான் ரவி. ஆனால் அதை அவள் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் ரவி விடுவதாக இல்லை அக்கா என்னை மட்டும் ரேவதி கிட்ட பேச கூடாது சொல்லிட்டு நீங்க என்னடா ராஜா கூட பேசுறிங்க என்று ரோஜா விடம் கேட்டான்.

“இது என் பர்சனல் ”என்றாள் அதற்கு மேல் ரவி எதுவும் கண்டுக்கவே இல்லை இருவரும் சென்னை வந்து சேர்ந்தனர் . சென்னை வந்து சேர்ந்ததும் கூட இருவரும் பேசிக்கொண்டே இருப்பதை கவனித்தான் ரவி. அவனுக்கு இது சரியாக படவில்லை அதனால் தன் தந்தை பிரபஞ்சனிடம் சொல்லிவிட நினைத்து கூறினான்.

“அப்பா அக்கா இதெல்லாம் பண்றது சரியே இல்லை”

“ராஜா கிட்ட நார்மலா தானே பேசுறா அதை தப்பா நாமளே எடுத்திக்கிட்டா எப்படி ”என்றார் பிரபஞ்சன். ஓகே டேட் இதுக்கு மேல நான் தலையிடல ஆனால் ஒன்று மதி கூட எங்கேஜ்மெண்ட் ஆயிடுச்சு ஸோ இதெல்லாம் நல்லாஇல்லை அவ்வளவு தான். ஓகேவா .

“ப்ச்ச் பாத்துக்கலாம் டா ”

அதற்குள் ரோஜா அங்கு வந்துவிட என்னப்பா என்னை பத்தி உன் மகன் என்ன சொல்றான். 

“ம்ம் நீ ராஜா கூட பேசுவதை பத்தி தான் பேசுறான் ”

“ஓஹோ அது சரி ”என்று தம்பியை பார்த்து முறைத்தாள்.

தொடரும்

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page