அத்தியாயம் -14
என்னடா நான் உன்னை ரேவதியோட பேசுவதை கண்டிச்சேன்னு நீ ராஜா கூட நான் பேசுறதை தப்புன்னு சொல்றியா என்று வினவ அவனோ அது வேறு இது வேறு அக்கா என்று சொல்லி புரிய வைத்தான்.
“நான் ஒரு பொண்ணு கிட்ட ஃப்ரெண்ட் லியா பேசுறது வேற எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை ஆனா உனக்கு ராஜாவோட டிவோர்ஸ் ஆகி இப்போ மதி கூட எங்கேஜ்மெண்ட் ஆகிருக்கு. உனக்கு லைஃப் ல கிடைத்த செக்கண்ட் சான்ஸ் புரியுதா?”என்றான் ரவி.
இப்போது தான் அவள் புத்திக்கு எட்டியது தான் தவறு செய்கிறோம் என்று ஆனால் ராஜாவை முற்றிலும் வெறுக்க இயலாது ஏற்கவும் இயலாது ஆனால் இதை எப்படி ராஜாவிடம் கூறி விலகுவது என்று குழப்பத்தில் இருந்தாள் ரோஜா.
நிச்சயம் ஆனதிலிருந்து அங்கு மதியோ இவள் நினைப்பாகவே இருந்தான். அவளை பார்க்க வேண்டும் பேச வேண்டும் பழக வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது ஆனால் நேரில் வந்து சந்திக்க எல்லாம் அவனுக்கு தைரியம் இல்லை அதனால் ஃபோனில் பேச நினைத்து கால் செய்தான்.
“ஹலோ ரோஜா…”
“ஆங் மதி சொல்லுங்கள் ”
“உன்கூட பேசணும் போல இருந்துச்சு அதான் கால் பண்றேன். மதியம் மில்லுக்கு வேற போய்டுவேன் அப்பறம் புதுசா டைல்ஸ் ஷோரூம் ஒன்று ஓபன் செய்றேன் மதுரைல அங்கேயும் போகணும் ஆங் சரி உன்கிட்ட பேசிட்டு மற்ற வேலை பார்க்கலாம் னு “என்று இழுத்து இழுத்து பேசினான்.
“டைரக்டா பேச ஆசையா இருக்கு சொல்லலாமே மதி”என்றாள் ரோஜா.
“சொல்லலாம் தான் ஆனால்……”
ஆண்கள் வெட்கப்படும் தருணம் உன்னை பார்த்த பின்பு தான் கண்டுக்கொண்டேன் என்ற வரிகள் அவன் நியாபகத்திற்கு வந்தது சிரித்துக் கொண்டு “ஆங் அப்பறம் ரோஜா உன்கிட்ட ஒன்னு சொல்லணும்”
“என்னது மதி”
“லவ் யூ ரோஜா”என்று ஃபோனில் முத்தமிட்டான் . அந்த முத்தம் அவ்வளவு அழுத்தமாக இருந்தது அவன் அவளை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை பறைச்சாற்றியது . இவள் அந்த முத்தத்தின் ஆழத்தை கண்டு வியந்து போனாள். ஒருபுறம் மனம் மாறி இருக்கும் முன்னாள் கணவன் ராஜா இன்னொரு புறம் மதியழகன். ஒரே நேரத்தில் இருவரின் காதலையும் மன்னிக்கவும் அன்பை ஏற்று கொள்வது நாகரிகமற்றது. ஆனால் எந்த அன்புக்காக எவ்வகையான காதலுக்காக துடித்தாளோ அது தாராளமாக அவள் வாழ்வில் கிடைத்தது. ஆனால் அதை யாரிடமிருந்து ஏற்பது என்ற குழப்பமே அவளுக்கு மிஞ்சியது. மூஞ்சில் அடித்தபடி மதியை வேண்டாம் என்பதா அல்லது ராஜாவை வேண்டாம் என்பதா.?
மதியழகன் இதுவரை திருமண பந்தத்தை பார்க்காதவன் . முதன்முதலில் என்னை நேசித்து என்னை மணக்க நினைக்கும் தூய அன்புடையவன் அதுமட்டுமின்றி விரிசல் அடைந்திருந்த உறவு மீண்டும் பசை போட்டது போல் ஒட்டிக்கொண்டு இருக்கிறது இதற்கிடையே நான் எப்படி மதியை வேண்டாம் என்பது. விவாகரத்து வாங்கியது தெரிந்தும் என்னை கோப்பெருந்தேவி மருமகளாக ஏற்றுக் கொள்ள தயாரானபோது அப்போதே புரிந்து விட்டது அவர் என்னை எப்படி அவ்வீட்டில் நடத்துவார் என்று. மகாராணி போல் அல்லவா நடத்துவார். அப்படியிருக்க அந்த வாழ்க்கையை கெடுத்து கொள்ள முடியுமா ? கண்டிப்பா முடியாது. ஆனால் இப்போது ராஜாவை எவ்வாறு வேண்டாம் என்பது யோசிக்க யோசிக்க தலைவலி தான் வந்தது.
முதலில் ராஜாவை பற்றி மதியிடம் சொல்லிவிடலாம் என முடிவு எடுத்து அவனை பற்றி பேச ஆரம்பித்தாள்.
“மதி நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்”
“என்ன?”
“ராஜா”
“என்ன ராஜா”
“அதாங்க என் முன்னால் “என்று ஆரம்பிக்கும் போதே புரியுது புரியுது சொல்லு என்றான்.
“ராஜா இப்போ மனசு மாறி திருந்தியிருக்காரு என்கிட்ட நட்பா பழகுறாரு “என்று ஆரம்பித்தாள்.
” No problem as a friend but”என்று ஏதோ சொல்ல வந்தவன் சரி விடு அதை பத்தி எதுவும் நீ என்கிட்ட சொல்ல வேண்டாம் உனக்கு என்னை கட்டிக்க விருப்பமா இல்லையா ? என்றான் மதியழகன்.
“விருப்பம் தான்”என்றாள்.
“அப்போ நம்ப கல்யாணம் விஷயம் தவிற வேறு எதை பத்தியும் என்கிட்ட பேசாதா ஓகேவா “என்றான் மதி.
“சரிங்க ”
போனை வைத்துவிட்டு அவன் மில்லுக்கு கிளம்பினான்.
மில்லுக்கு கிளம்பியதும் அவள் சொன்னதை எல்லாம் மறந்தே போனான் ஆனால் இவ்வளவுதான் அவன் சொன்னதை நினைத்து யோசித்துக்கொண்டிருந்தால் நாம் சொன்னதை கேட்டு அவன் தவறாக ஏதேனும் எடுத்துக் கொண்டன என்றும் மனதுக்குள் போட்டு குழப்பிக் கொண்டால் தேவையில்லாமல் அவன் மனதை நாம் கிடைத்து விட்டோமோ என்று கூட யோசித்துக் கொண்டிருந்ததால் இப்போது ராஜாவை பற்றி நான் பேசியிருக்கக் கூடாது தேவையில்லாமல் நான் பேசி விட்டேனோ என்றெல்லாம் மனதுக்குள் ஒதுங்கி கொண்டு இருந்தால் ரோஜா இது என்னடா ஒரே போராட்டமாக இருக்கிறது ஒரு காலத்தில் காதலுக்காக அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன் ஆனால் இப்போதோ எனக்கு அது ஏராளமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது ஆனால் அதை எப்படி அனுபவிப்பது அல்லது எப்படி தவிர்ப்பது என்று குழப்பத்தில் நான் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன் ஒரு பக்கம் ராஜா இன்னொரு பக்கம் வலி இவர்களை எவ்வாறு நான் எதிர்கொள்ள போகிறேன் ஆனால் மதியிடம் ராஜாவை பற்றி ஓரளவு சொல்லி வைத்ததும் சரிதான் என்பது போல் இருக்கிறது ஆனால் இப்போது மதியை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று ராஜாவிடம் எவ்வாறு நான் கூறப்போகிறேன் என்ற மனதுக்குள் யோகிக்கு கொண்டு இருந்தால் ரோஜா.
மதியழகன் மில்லுக்கு சென்று நெல்லு மூட்டைகள் எல்லாம் இறக்கி வைத்துவிட்டு பிறகு மதுரை செல்ல காரில் புறப்பட்டான். மதி பார்க்க வாட்டசாட்டமான உடல் தோற்றம் வெளியே செல்லும் போது வேட்டி சட்டையுடன் தான் செல்வான். இன்றும் அப்படித்தான்.
அவன் உண்மையில் அவ்வளவு நல்லவன். ரோஜாவை பற்றிய இறந்த காலத்தையும் அல்லது எதிர்காலத்தையோ பற்றி எல்லாம் அவனுக்கு பேச எதுவும் விருப்பமில்லை தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தில் உண்மையாக வாழ வேண்டும் என்ற சாங் அவனுடைய மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது அதனால் தான் ரோஜா தன்னுடைய முன்னாள் கணவன் ராஜாவை பற்றி ஏதோ சொல்ல வரும்போது அதை தடுத்து நிறுத்தி விட்டான் மற்றபடி அவளை காயப்படுத்த வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவும் இல்லை அப்படி ஒருநாளும் அவன் நினைக்கவும் மாட்டான்.
மதுரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தான் புதியதாக ஆரம்பிக்கும் ஷோரூம் பற்றியும் அவனுடைய மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அந்த ஏரியாவின் செக்ரெட்டரி வருவதாக இருப்பதால் முன்கூட்டியே எல்லா ஏற்பாடும் செய்து வைத்திருந்தான் பிறகு சிறப்பு விழாவுக்கு வரும் அனைவருக்கும் உணவளிக்கவும் அவன் ஏற்பாடு செய்திருந்தான். அதெல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறதா என்பதை இன்னும் போனில் கேட்டு தெரிந்து கொண்டாள் திறப்பு விழாவுக்கு கோப்பெருந்தேவி சிறிது நேரம் கழித்து வருவதாக கூறினார். அதனால் கோப்பெருந்தேவியை தன் தந்தையுடன் வருமாறு கூறிவிட்டு இவன் மட்டும் தனியே காரில் பயணித்தான். அந்த பயணம் தனியே என்பதால் அவன் மனதில் என்னென்னவோ ஓடியது.
முன்னிறுக்கையில் அவன் அருகே அவள் அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் கற்பனை செய்து கொண்டிருந்தான் அதற்கான நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை அவன் உணர்ந்தால் எப்படி நல்லபடியாக திருமணம் செய்து கொண்டு அவளுடன் இனிமையான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு கொண்டிருந்தான் இவன் அப்படியே நினைத்துக் கொண்டு இருக்கையில் மதுரையும் வந்தடைந்தது மதுரை வந்தடைந்ததும் நீரே கிழக்கு வீதியில் இருக்கும் ஜிகர்தண்டா கடைக்கு சென்றான் அந்த ஒரு ஜிகர்தண்டா வயசு வைத்து விட்டு பின்பு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு பிறகு திறப்பு விழாவுக்கு காரில் ஏறி சென்றான் அதற்குள் எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறியது செகரட்டரியையும் வந்தார் அதற்குள் கோப்பெருந்தேவியும் தந்தையும் வந்து விட்டனர் இவ்வாறு எல்லாரும் வந்து விடவே இவன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்தி முடித்தான். அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது இந்த காட்சிகள் எல்லாத்தையும் அவன் படம் பிடித்து கதாநாயகி ரோஜாவிற்கு அனுப்பினான்.
“ஆக்சுவலி நீ மட்டும் தான் மிஸ்ஸிங் என்பதை” குறிப்பிட்டு அவன் அனுப்பி இருந்தான் அதை பார்த்ததும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது தன்னை பற்றி யோசிக்கவும் ஒரு நபர் இருக்கிறார் என்பதை நினைத்து பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
இந்த சந்தோஷத்திற்கு எல்லாம் தான் தகுதியானவளா என்பதை ஒருமுறை யோசித்துக்கொண்டிருந்தால், ஆம் நான் தகுதியானவள் தான் என்பதை உறுதி செய்துகொண்டு yes I’m deserve it என்ற மனதில் சொல்லிக் கொண்டு பிறகு அவன் அனுப்பிய காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் ஒவ்வொரு படத்திலும் அவன் வேட்டி சட்டையுடன் இருப்பதை பார்த்து ரசித்தாள். திருமணத்திற்கு முன்பு எப்படிப்பட்ட கணவன் வேண்டும் என்று மனதில் நினைத்து வைத்திருந்தாலோ அந்த குறிப்புகளுக்கு ஏற்ற மாதிரியே அவன் அமைந்திருந்தான். அவன் தோற்றமும் சரி அவன் குணாதிசயங்களும் சரி எல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருக்க இப்படி ஒரு வாழ்க்கையை யார் தான் வேண்டாம் என்பார்கள். தன்னுடைய தம்பி ரவியும் வர்மன் கூறியது போல இது அவளுடைய வாழ்க்கையில் கிடைத்திருக்கும் செகண்ட் இதை தவறவிடக்கூடாது என்று நினைத்தாள். மனதில் சிரித்துக் கொண்டே மீண்டும் மீண்டும் எதையெதையோ நினைத்தாள்.
எந்தப் பக்கம் பார்க்கும்போது வாழமுண்டு நீ எந்த பாத ஏகும் போதும் ஊரும் உண்டு என்ற வரிகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது அந்த வரிகளை எல்லாம் நுணுக்கமாக ரசித்து கொண்டிருந்தால் நாம் வாழ்க்கைய ஓட்டத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் நமக்கான ஒரு வாழ்க்கை நமக்கான ஒரு தேடல் எல்லாம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் எப்படி அதை உணர்ந்து கொள்கிறோம் என்பதில் தான் நம் வாழ்க்கையை அடங்கி இருக்கிறது. என்றெல்லாம் அவள் யோசித்து புரிந்து கொண்டு பிறகு மதியழகனை திருமணம் செய்து கொள்ள மனதளவில் என்பது சதவீதம் தயாராக இருந்தாள். மீதி சதவீதம் என்னவோ?
தொடரும்….
தொடரும்
