கண்கள் பேசுதே அத்தியாயம் -15

அத்தியாயம் -15

பெங்களூருவில் பார்த்த ரேவதியை கைப்பேசி வழியாக நட்பை தொடர்ந்தான் நம் ரவிவர்மன். இரவு பகல் என இருவரும் சேட் செய்து மகிழ்ந்தனர். 
“ரேவதி சாப்பிட்டியா “

“ம்ம் நீ” இப்படி அக்கறையாக ஆரம்பித்த உரையாடல்  எல்லாம் முன்னேறி சென்றது. இருவரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை பகிர துவங்கினர். அவளுக்கு தேவையான அறிவுரை உள்பட அனைத்தும் அவளிடம் பகிர்ந்தான்.

“ரவி சாரி நேத்து உன் டெக்ஸ்ட் க்கு ரிப்ளை பண்ணவே முடியலை “என்றாள் ரேவதி.

“ஏன் என்ன ஆச்சு”என்றான் ரவி சற்று அக்கறையோடு கேட்க தனக்கு உடம்புக்கு முடியவில்லை என்றாள் ரேவதி உடனே சும்மா இருப்பானா ரவி “ஐயோ நான் இப்பவே கிளம்பி பெங்களுர் வரவா “என்றான்.

“என்னது இதுக்கெல்லாம் வருவியா”என்றாள்.

“ஏன் உன்னை பார்க்க எனக்கு காரணமா வேணும் நான் வரேன்”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்”என்று கெஞ்சினாள். சரி சரி அப்படினா உடம்பை பத்ரமா பார்த்துக்க . நீ டாக்டர் கிட்ட போய்ட்டு வந்து ஒழுங்கா மாத்திரை சாப்பிடு இல்லைனா அவ்ளோ தான் சொல்லிட்டேன் என்றான் ரவி வர்மன்.

“சரி சரி நீ முதல்ல ஒழுங்கா நல்ல ஜாப் போற வழியை பாரு”என்றாள்.

“ம்ம்க்கும் நானே அதான் ட்ரை பண்றேன் . சரி பெங்களூர் ல உனக்கு தெரிஞ்ச கம்பெனி ல ரெக்கம்மெண்ட் பண்ணு ரேவதி ” என்று ரவி கேட்டதற்கு சரி நான் ட்ரை பண்றேன் என்று கூறி போனை வைத்தாள். இவனோ நாளைக்கே பெங்களூர் செல்வது போல கனவு கண்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு இங்கிருந்து அங்கு போனால் போதுமென்று இருந்தது. ஆம் எப்ப பாரு வீட்டில் ரோஜாவின் டாப்பிக் ஓடிக்கொண்டே இருக்கிறது. ரவி வர்மன் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. கேட்டால் ஆண்பிள்ளை அவன் வாழ்க்கை அவன் பார்த்துப்பான் என்று கூறிவிட்டு போகிறார்கள். அவனை பற்றி சிந்திக்க அக்கறை கொள்ள ரேவதி தான் என்ற முடிவுக்கு வந்துவிட்டான் ரவி வர்மன்.

ரேவதி போனை வைத்துவிட்டு அவனை பற்றி சிந்தித்தாள். 

‘ஹாஹா வாழ்க்கை எவ்ளோ ஹேப்பியா இருக்குல இதுக்கு என்ன காரணம்? ம்ம் ரவி மேல எனக்கு இருக்கிறது நட்பா இல்லை லவ்வா ? ஆங் நம்ப மேல ஓவரா அக்கறை காட்டுறானே? இந்த அக்கறை நட்புல சகஜம் தான் ஆனால் உடனே கிளம்பி வரேன்னு சொல்ற அளவு இருக்கான்னா அப்போ இது லவ் தான். ‘என்று சொல்லி தனக்கு தானே சிரித்துக் கொண்டாள்.

அடுத்து என்ன தோன்றியதோ தெரியவில்லை கொஞ்ச நேரத்தில் அவனுக்கு வீடியோ கால் தந்தாள்.

“ஹே ரேவதி இப்பதானே பேசினோம் அதுக்குள்ள என்ன”என்றான் ரவிவர்மன்.

“ஏன் பேசக் கூடாதா சார்”

“ஹே லவ்லி பேசலாம் அதெல்லாம் ஒன்னும் இல்லை ஆனால் எதாவது எமர்ஜென்ஸியா ன்னு யோசிச்சேன் “என்றான் .

“அதெல்லாம் இல்லை உன் முகம் பார்க்க ஆசையா இருந்துச்சு அதான்”

“ஓஹோ ஓகே……ஆமா ரேவதி நீ ஏன் நெத்தில பொட்டு வைக்கிறதே இல்லை”என்றான் ரவி உடனே அருகில் இருந்த பொட்டு பேக்கட்டை எடுத்து அதிலிருந்து ஒரு பொட்டு எடுத்து வைத்தாள்.

“ஆங் இப்ப பாரு எவ்ளோ அழகா இருக்க “என்றான் .

பிறகு மீண்டும் உரையாடல் நீண்டது. வீடியோ கால் என்பதால் அவ்வப்போது தனது ஆடையை சரி செய்து கொண்டே இருந்தாள் ரேவதி. அதையும் கவனித்தான் ரவி.

“ஹாஹா என் மேல இன்னும் நம்பிக்கை வரலை போலயே”என்றான்.

“ஐயோ அதெல்லாம் இல்லை”

“பின்ன ஏன் அப்பப்போ சரி பண்ணிட்டு இருக்க”

“ம்ம் இது இயல்பானது தானே”

“சரி சரி ஆனாலும் உன் கழுத்துக்கு கீழ இருக்கிற மச்சத்தை பார்த்துட்டேன் “என்றான்.

“ம்ம் அடப்பாவி ”

“ஏன் பார்க்க கூடாதா ”

“ச்சீ இதுக்கு தான் நான் வீடியோ கால் பண்றதே இல்லை “என்றாள்.

“ஹே ஹே சாரி சாரி நான் சும்மா சொன்னேன் “என்றான் ரவி.

“ஹே ரவி எனக்கு நிஜமாவே மச்சம் இருக்கு “என்றாள்.

இருவரும் சிரித்துக் கொண்டனர்.

பிறகு போனை வைத்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க துவங்கினர் நாட்கள் இப்படி உருண்டோடி சென்றது இருவருக்கும் காதல் மலர்ந்தது. உறவினர் ஒருவர் வீட்டு வீசேஷத்திற்கு ரேவதி வருவதாக இருக்க இவனும் அவளை காண ஓடோடி சென்றான். 

“ஹாய் ரேவதி”

“நைஸ் மீட்டிங் யூ டா ரவி” இருவரும் அந்த விசேஷத்தில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்து அவன் தன்னை அவளுடைய உறவினர்கள் இடையே அறிமுகம் செய்து கொண்டான். 

“ரேவதி ஸோ ஸ்வீட் அபோட் யுவர் ஃபேமிலி”என்றான்.

“எங்க வீட்ல எல்லாரும் ஸோஷியலா தான் பழகுவாங்க “என்றாள் ரேவதி.

ரேவதியும் அவனும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர். இருவரும் பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை அவன் அந்த பங்க்ஷனிலேயே தங்கி விட்டு பிறகுதான் வீட்டில் கேட்க விரும்பினான். மணி இரவு பத்து ஆகிவிட்டது. வீட்டில் தமிழரசியும் பிரபஞ்சமும் எங்கடா போயிட்டு வந்த இவ்வளவு நேரம் என்று கேட்டதற்கு ஃப்ரெண்டோட பங்க்ஷன் மா என்றான். ஆனால் அதற்கு மேல் அவர்கள் எதுவும் கேள்வி கேட்கவே இல்லை. இவனும் ரேவதி பார்க்கத்தான் போனேன் என்றும் சொல்லவில்லை அப்படியே உறங்கி விட்டான். மறுநாள் பொழுது இனிதே விடிந்தது ஒவ்வொரு நாளும் அவன் எழுந்திருக்கும் போது அவன் பார்க்கும் முதல் குட் மார்னிங் மெசேஜ் தேவதையிடம் இருந்துதான் வந்திருக்கும். 

“குட் மார்னிங் “மெசேஜ் இருந்தது.. அதை பார்த்ததும் இவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கும் இவன் குட்மார்னிங் என்றான்.  

இருவருடைய உரையாடலும் குட்மார்னிங் ஆரம்பித்த பிறகு அப்படியே நீண்டு கொண்டே போனது அன்பு அக்கறை பாசம் அதெல்லாம் தாண்டி இருவருக்கும் இடையே பரத காதல் உண்டானது. 

ரேவதி கூறியபடியே அவனுக்கு பெங்களூருவில் வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தாள்.

இந்த தகவலை அவனுக்கு போன் செய்து கூறினாள் 

“ஹே நீ கேட்ட மாதிரி உனக்கு வேல ஏற்பாடு பண்ணியாச்சு அடுத்த மாசம் நீங்க வர மாதிரி இருக்கும்”என்றாள்.

“அப்படியா ஓகே ரொம்ப தேங்க்ஸ்”

“தேங்க்ஸ் சொன்னா போதுமா? எனக்கு கிப்ட் எதுவும் வாங்க மாட்டியா”என்றாள்.

“முதல் மாசம் சம்பளம் வாங்கின உடனே உனக்கு தான் முதல் கிப்ட்”. என்றான்.

அதெல்லாம் நீ அப்புறமா தரலாம் ஆனா இப்போ நீ எனக்கு ஒரு கிப்ட் தரலாமே என்றாள். இவனுக்கோ அவள் என்ன சொல்கிறாள் என்று புரியவே இல்லை பிறகு யோசித்து விட்டு “அந்த கிப்ட் தான் நான் நேர்ல மட்டும் தான் தருவேன் என்றான்” இவளோ வெட்கப்பட்டு போனை வைத்தாள். இவனும் போனை வைத்துவிட்டு அங்கு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்தான். இதைப்பற்றி வீட்டில் கூறினான்.

“பெங்களூர் தானே போய்ட்டு வா ”

“வாழ்த்துக்கள் டா தம்பி”என்றாள் ரோஜா . வீட்டில் உள்ள அனைவரும் வாழ்த்துக்கள் கூறிய அவனை இனி முகத்தோடு பெங்களூர் அனுப்பி வைத்தனர் இவனும் பெங்களூருத்து சென்றான் அங்கு முதலில் அவனுக்கு தங்குவதற்கு எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ரேவதி மூலம் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதால் அவனுக்கு எந்த கவலையும் இல்லாமல் நீரை அழைத்து சென்று நேரே அறைக்கு சென்று தங்கி விட்டு பிறகு மறுநாள் காலை 10 மணி அளவில் இன்டர்வியூ சென்றார் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த வேலை என்றாலும் ஃபார்மாலிட்டிக்கு ஒரு இன்டர்வியூ வைக்கப்பட்டது இவனும் அதை லவ் யு கடந்த கொண்டான் இவனுடைய பர்பாமென்ஸ் அந்த கம்பெனியில் விடவும் பிடித்திருந்தது ஒரு முக்கியமான ப்ராஜெக்ட்க்கு இவன் தந்த ஐடியா அவர்களை வெள்ளை ஈர்த்தது இவனும் அங்கு வேலைக்கு சேர்ந்து கொண்டான் வார இறுதியில் சனி ஞாயிறு ரேவதியுடன் நேரத்தை கழித்தான்.

பெங்களூர் டேஸ் என்பது போல் அழகான நாட்களை ரேவத்தியுடன் கழிக்க தொடங்கினான். மெல்ல மெல்ல அவனுக்கு தமிழரசி பிரபஞ்சன் ரோஜா இவர்களை பற்றிய சிந்தனையெல்லாம் மறந்து தற்போது வேலை காதல் என்ற சிந்தனை மட்டும் தான் அவனைப் போல் ஊடுருவியது. 

இன்றும் வார இறுதி என்பதால் ரேவதி உடன் ஷாப்பிங் மால் சென்றிருந்தான். 

“உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ என்றான் ரேவதி இடம் அவளோ அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் உன்னுடன் கைகோர்த்து சற்று தூரம் நடந்து சென்றாலே எனக்கு போதும் என்றாள். 

“அப்படியெல்லாம் விட முடியாது நீதான சொன்ன உனக்கு கிப்ட் வேணும்னு உனக்கு என்ன கிப்ட் வேணுமோ அதை நீயே வாங்கிக்கோ என்றான்”

“சும்மா உன்ன கலாய்க்க தான் கெத்து வேணும்னு கேட்ட மத்தபடி எனக்கு எந்த கிப்ட் வேண்டாம்”

“நீ இப்படி தான் சொல்லுவ இல்ல நானே உனக்கு வாங்கி தரேன் என்று விலை உயர்ந்த ஆடை ஒன்றை அவளுக்கு பறிக்காத தந்தான். அந்த கலர் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அந்த டிசைனும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது முதல் முதலில் அவன் வாங்கித் தந்தது என்பதா அதை உடனே ட்ரையல் ரோமில் சென்று போட்டு பார்த்து அவனுக்கு காண்பித்தாள். அவர்களுக்கு இடையே காதல் வளர்ந்தது. காதல் வளர வளர ஊடல் கூடல் என இவர்களது காதல் வாழ்க்கை முன்னேறி சென்றது. இருவரும் காதலை தாண்டி கூடலில் இணைய ஆரம்பித்தனர் அந்த கூடலே அவர்களுக்கு இன்னும் அதிகப்படியான காதலர் தினம் உண்டு பண்ணியது குடும்பத்தை விட்டு தள்ளி இருப்பதன் அட்வான்டேஜ் காரணமாக ரவி அவளிடம் நெருக்கமாக பழக துவங்கினான் அவளுக்கும் அது பெரியதாக தவறாக ஒன்றும் தோன்றவில்லை என்பதால் அதுமட்டுமில்லாமல் இரவின் மீது அளவு கடந்த அன்பு இருப்பதால் அவள் எல்லாவற்றிற்கும் சம்மதித்தாள். 

இருவரும் எப்படி இருந்தாலும் காதலிக்கிறார்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் அந்த நம்பிக்கையில் தான் இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழக துவங்கினர். இந்த நெருக்கம் அவர்களது வாழ்க்கையை திருப்பி போடுமா ஒரு பொருத்திருந்து பார்ப்போம். இவர்கள் பேசுவது பழகுவது எல்லாம் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாது தெரிந்தால் பேயோட்டி விடுவார் தமிழரசி அந்த பயம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது அவன் இதனால் சென்னை வருவதே தவிர்த்தான்.  

தொடரும்

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page