கண்கள் பேசுதே அத்தியாயம் -16

அத்தியாயம் -16

மதியழகன் திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் காரைக்குடியில் செய்து கொண்டிருந்தான் பாரம்பரிய முறையில் மதியழகன் நம் கதாநாயகி ரோஜாவுக்கும் திருமணம் நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ளது அதனால் பரபரப்பாக எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு அவனை செய்து கொண்டிருக்கிறான் அவனுக்கு உதவியாக அவனுடைய பெரியப்பா மகன்கள் மகள்கள் எல்லாம் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றனர். 

இங்கு நம் கதாநாயகி ரோஜாவோ திருமண நாள் நெருங்கிக் கொண்டிருப்பதால் மனதிற்குள் என்னென்னவோ என்ன ஓட்டங்களோடு அமர்ந்திருந்தால் திருமணம் ஆகி புதியதாக கோப்பெருந்ததை வீட்டில் மருமகளாக செல்ல போகிறோம் அந்த புது உலகம் எப்படி இருக்க போகிறது ஏற்கனவே பழகிய வீடு குடும்பம் என்றாலும் திருமணம் செய்து கொண்டு மொத்தமாக அங்கேயே இருக்கப் போகிறோம் என்று நினைக்கும் போது அவளுக்குள் ஒரு வித பயமும் பதட்டமும் ஏற்பட்டது ஆனால் மதியழகன் நல்லவன் தான் அவளை நன்றாக பார்த்துக் கொள்ளும் நபர்தான் என்ற நம்பிக்கையில் ஒரு பக்கம் இருக்கிறாள். இதற்கிடையில் ராஜாவுடன் இருக்கும் நட்பை எப்படி விளக்கிக் கொள்வது என்ற குழப்பமும் அவளுக்குள் இருக்க தான் செய்தது இதைப் பற்றி ராஜாவிடம் பேச தீர்மானித்தால் அன்று கடற்கரையில் ராஜாவும் ரோஜாவும் சந்தித்துக் கொண்டனர். 

“ராஜா நெக்ஸ் வீக் எனக்கும் அத்தை மகன் மதிக்கும் கல்யாணம் ஆகப்போகுது”என்று நேரடியாகவே அவனிடம் கூறினான் இதைக்கேட்டு ஒரு நொடி அவன் அமைதியாக அமர்ந்தான் என்னதான் அவளுக்கும் இவனுக்கும் இடையே விவாகரத்து நடந்து இருந்தாலும் என்னதான் இருந்தாலும் அவள் முன்னாள் மனைவி முன்னாள் மனைவி மட்டுமல்ல தற்போது ஒரு நல்ல நண்பியும் கூட அப்படி இருக்கும் போது அவளை மொத்தமாக நாம் பிரிய போகிறோம் இனி நட்பு ரீதியாகவோ அல்லது வேறு எந்த ரீதியாகவோ அவளுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள முடியாது என்று நினைக்கும் போது அவனுக்குள் ஒரு வித கலக்கம் ஏற்பட்டது. 

 

“என்ன ராஜா எதுவும் சொல்லவே மாட்டேங்குறீங்க “

“என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிற “

“இல்லை எனக்கு கல்யாணம்…..”

“இருக்கட்டும் சந்தோஷமா இரு “

“அவ்வளவு தானா வேற எதுவும் சொல்ல மாட்டியா?”

“இப்ப நான் என்ன சொன்னாலும் அது உன் மனசுக்கும் சமாதானம் ஆகாது என் மனசுக்கு சமாதானம் ஆகாது நீ நல்லா இருந்தா அதுவே போதும் மத்தபடி உன் கிட்ட வேற எதுவும் எனக்கு சொல்ல தோன்றவில்லை”என்றான் ராஜா .

அவள் அறியாமல் அவனுடைய கண்கள் கலங்கிக் கொண்டிருந்தது அதை சற்றும் அவள் கவனிக்கவில்லை அவளுக்கு தெரியாமல் இவனே தன்னுடைய கட்சிக்கு எடுத்து துடைத்துக் கொண்டான் மேலும் எதுவும் பேசாமல் திரும்பிக் கொண்டான். 

மனதுக்குள் ஆயிரம் முறை தன் தவறு செய்து விட்டோம் என்பதை புலம்பிக்கொண்டே இருந்தான். அவனுடைய புலம்பல் அவனுக்கு மட்டுமே கேட்டதே தவிர அவளுக்கு எதுவும் கேட்கவே இல்லை அவள் அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்பதை எதிர்பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள். 

“ராஜா “என்று அவனுடைய தோள்பட்டையை தட்டி அழைத்தால் அவனும் சற்று திரும்பி பார்த்தான். 

“அடுத்து உன் லைஃப் ல நீ என்ன பண்ண போற “என்றாள் ரோஜா. 

“நான் எப்பவும் போல வேலை ,வீடு ,அம்மா அப்பா னு காலத்தை அப்படியே தள்ளப்போறேன் அதான் நீ என் வாழ்க்கைல இல்லைன்னு ஆயிடுச்சு ல”என்றான். 

“நான் இல்லைன்னா என்ன ராஜா உனக்கென ஏற்ற ஒரு ஜோடி இல்லாமையா இருக்க போறாங்க உனக்கு நீ ஏன் ஒருத்தர நீ தேடக்கூடாது புதுசா உன்னுடைய லைஃபை நீயே ஸ்டார்ட் பண்ண கூடாது”என்றாள் ரோஜா.

“அப்படி ஒரு நபரை நான் பார்ப்பேன் நானே தெரியல அப்படியே பார்த்தாலும் மறுபடியும் காதல் கல்யாணம் இப்படி அந்த மாதிரியான ஒரு வாழ்க்கைகுள்ள நான் போக விரும்பல ஏற்கனவே உன்ன கஷ்டப்படுத்தியதற்கு தண்டனையா தான் இப்ப நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் மறுபடியும் வேற ஒரு பொண்ண நான் கஷ்டப்படுத்த விரும்பல நான் இப்படியே இருந்துட்டு போறேன்”என்றான் ராஜா

“ உனக்கு இன்னமும் குற்ற உணர்ச்சி போகல இல்ல? நீ என்கிட்ட அட்டாச்மென்டா இல்லாததுக்கு காரணம் உன்னுடைய பிரச்சனை உன்னோட மனரீதியான பிரச்சனை அதிலிருந்து இப்ப நீ வெளில வந்துட்ட இனி உன் வாழ்க்கையில பழைய மாதிரி எதுவும் நடக்காது கண்டிப்பா நீ ஒரு புது மனுஷனா மாறிவிட்ட கண்டிப்பா நீ சந்தோஷமா ஒரு பொண்ணோட உன்னால வாழ முடியும் அந்த நம்பிக்கையும் முதல்ல நீ உன் மனசுக்குள்ள விதைச்சுக்க”என்றாள் ரோஜா.

“பார்ப்போம் சரி அப்படி ஒரு விஷயம் என் வாழ்க்கையில நடந்துச்சுன்னா கண்டிப்பா உனக்கு நான் சொல்லி அனுப்புறேன்”என்றான் ராஜா. இவளும் சரி என தலையாட்டி விட்டு அங்கிருந்து நகர மனமில்லாமல் சற்றே திரும்பி எப்போது அதிர்ச்சியாக இருந்தது அங்கு மதியழகன் நின்று கொண்டிருந்தான். அவன் எப்போது சென்னை வந்தான் அதுவும் எப்போது தன்னை தேடி இங்கு கடற்கரைக்கு வந்தான் என்று அவளுக்கு எதுவும் தெரியாது அவன் வரப்போகம் செய்து கூட அவளுக்கு எதுவும் தெரியாது. திடீரென அவன் இங்கு வந்து நின்றது அவளுக்கே பேர் அதிர்ச்சியாக இருந்தது தற்போது மதியழகனை எவ்வாறு எதிர்கொள்வது என்று அவளுக்கே புரியவில்லை. 

 

மதியழகன் ஏதோ ஒரு குழப்பத்தில் நின்று கொண்டிருந்தான். இவர்கள் பேசிய அத்தனையையும் அவன் கேட்டு விட்டான் போலும் அதனால் அவனுடைய முகமே வாடி இருந்தது அந்த மாற்றத்தை இவளும் புரிந்து கொண்டு பச்சோ எல்லாமே கேட்டுட்டாரு போலையே என்று நினைத்துக் கொண்டு “மதி ஐயம் சாரி நான் நார்மலா தான் இவர் கிட்ட பேசிட்டு இருந்தேன் “என்று அவனிடம் சமாளிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் அவளோ அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை எல்லாம் கவனித்து விட்டான் என்று அவன் முகமே காட்டி கொடுத்து விட்டது அல்லவா அதனால் எதுவும் பேசாத ரோஜா கொஞ்ச நேரம் அமைதியா இரு என்றான். 

“சார் சாரி நான் ரோஜாவை மீட் பண்ணி பேசியிருக்க கூடாது அவளை தப்பா நினைக்காதீங்க “என்றான் ராஜா.

“ஒரு நிமிஷம் பொறுமையா இருங்க ராஜா மன்னிப்பு கேட்க வேண்டியது நீங்களா இல்ல ரோஜாவா”என்றதும் ரோஜா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். 

“என்ன ரோஜா அதிர்ச்சியா பாக்குற ? இவ்வளவு நேரம் நீ ராஜா கிட்ட பேசிட்டு இருந்தியே அவர் கண்கலங்கியதை நீ கவனிச்சியா?”என்றான் மதியழகன்.

“இல்லை….அது”

“இங்க பாரு ரோஜா ராஜாவோட மனசுல நீ இன்னுமும் இருக்க அவரால என்னைக்குமே உன்னை மறக்கவே முடியாது சந்தர்ப்ப சூழ்நிலைல நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சு இருந்தாலும் இப்போ அவர் மனசுல நீ மட்டும் தான் இருக்க நீ ஜாலியா என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துருவ அதுக்கப்புறம் ராஜாவோட நிலைமையை பத்தி நீ யோசித்து பார்த்தியா?”

மதியழகன் கேட்டதும் அவளால் பதில் எதுவும் கூற முடியவில்லை. “அதான் அவரவர் வேற ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்க சொல்லி இருக்கேன் கண்டிப்பா அவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையும்”என்றாள் ரோஜா. 

“ஹாஹா டைவர்ஸ் அடுத்து இன்னொரு கல்யாணம் உனக்கு வேணும்னா இதெல்லாம் நார்மலா தெரியலாம் ஆனால் எல்லாருக்கும் அப்படி இல்லை தானே?”

“மதி……”

“ரோஜா நீ அவரை டிவோர்ஸ் பண்ண என்ன காரணம்?”

“அது நானே சொல்றேன் மதியழகன். ஆக்சுவலி எனக்கு அவள் மீது அட்ராக்ஷன் எதுவும் இல்லாமல் அவளை கண்டுக்காம வேலை வேலைன்னு சுத்திட்டு இருந்தேன். பேஸிக்கலி நான் asexual “என்றான் ராஜா.

“Asexual…ம்ம் இது மனசு சம்மதம் பட்ட நார்மலான விஷயம் தான். செக்ஸ் பெரிய விஷயமா நினைக்காத தங்களுக்கு இது ஒரு பெரிய விஷயமே இல்லை. அதே சமயம் ரோஜா நானைச்சிருந்தா அப்பவே உங்களை மாத்திருக்கலாம் மோர் ஓவர் நீங்க ஒரு டாக்டர் நீங்களே அதற்கான தீர்வையும் கண்டு பிடிச்சிருக்கலாம். ஆனால் இப்படி இரண்டு பேரும் எந்த முயற்சியும் எடுக்காமல் அப்படியே விட்டுட்டீங்க டைவர்ஸ் வரைக்கும் வந்துட்டிங்க “என்று சொல்லி முடித்தான் மதியழகன்.

ஆனால் முடிந்து போன விஷயத்தைப் பற்றி இப்போது பேசுவதினால் எந்த பிரயோஜனமும் இல்லையே என்று ராஜா கேட்டான் அதற்கு மதி அழகனோ முடிந்து போன விஷயத்தை கூட மீண்டும் உயிர்பிக்க முடியும் அல்லவா என்றான் ராஜாவிடம். 

அப்போது அமைதியாக நின்று கொண்டிருந்த ரோஜாவிடம் “உனக்கு ராஜாவை பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லு அடுத்த வாரம் உனக்கும் எனக்கும் நடக்க இருக்கும் அதே முஹுர்த்தத்தை நிப்பாட்டி ராஜாவை உன் கழுத்துல மறுபடியும் முறைப்படி தாலி கட்ட சொல்றேன் என்றான் மதியழகன். 

என்ன பேசுறீங்க மிஸ்டர் மதியழகன் நீங்க பேசுறதெல்லாம் யோசிச்சு தான் பேசுறீங்களா உங்களுக்கோ ரோஜாக்கும் கல்யாணம் ஆகப்போகுதுன்னு உங்க ரெண்டு குடும்பமும் அவ்ளோ சந்தோஷமா இருக்காங்க அது மட்டும் இல்லாம இது உங்க வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான ஒரு தருணம் இந்த தருணத்தை போய் எனக்காக விட்டுக்கொடுக்கணும்னு நினைக்கிறீங்களே நான் யார் உங்களுக்கு சொல்லுங்க எந்த விதத்துல நீங்க எனக்காக விட்டுக்கொடுக்குறீங்க உங்க நல்ல மனசு எனக்கு புரியுது நான் இல்லைன்னு சொல்லல ஆனா உங்க வாழ்க்கைய பாருங்க மிஸ்டர் மதியழகன் என்ன பத்தி எதுவும் யோசிக்காதீங்க நான் இப்படியே இருந்துட்டு போறேன் என்றான் ராஜா.

“ராஜா இது எடுத்தோம் கவுத்தோடு முடிவு பண்ற விஷயம் இல்ல இன்னைக்கு நீங்க சொல்ற மாதிரி நான் ரோஜா காலத்துல தாலி கட்டினாலும் நீங்க சந்தோஷமா இருப்பீங்களா இல்ல இது எல்லாம் தெரிஞ்சா நான் தான் சந்தோசமா இருக்க முடியுமா இல்ல நம்ப ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்கிற ரோஜா தான் சந்தோஷமா இருக்க முடியுமா ஒருவேளை நான் இதை விட்டுக் கொடுத்துட்டு போனா நீங்க உங்க வாழ்க்கைய புதுசா ஆரம்பிக்கலாம்.‌என்றான் மதியழகன்.

“இதனால நம்ப இரண்டு குடும்பங்களும் வருத்தப்படும் “என்றாள் ரோஜா.

“உங்க அப்பா அம்மா கிட்டயும் என் அப்பா அம்மா கிட்டயும் நான் சொல்லிக்கிறேன் “என்றான் மதியழகன்.

“அதெல்லாம் சரி வராது”என்றாள் ரோஜா. அடுத்து அவன் ஏதேனும் பேசிவிடப் போகிறான் என்று நினைத்து உடனே ஓடிச் சென்று மதியழகனை கட்டிக் கொண்டாள் ரோஜா.

“மதி எதுவும் பேசாதீங்க எனக்கு நீங்க வேண்டும் “என்றாள் ரோஜா.

“ஹே ரோஜா என்ன இதெல்லாம்”

“மதி உங்களுக்கு ஏத்த ஜோடி ரோஜா. இவ்வளவு நேரம் நீங்க பேசுவதை கேட்டு எனக்கே உங்க மேல மரியாதை வந்து இருக்கேன் நான் ரோஜாக்கு வராமலேயா இருக்கும் உங்கள கட்டிட வாழ்க்கை நல்லா இருக்கும்னு அவ முன்னாடி முடிவு எடுத்தாலே இல்லையோ இப்ப அவ முடிவு எடுத்து இருக்கா என்றான் ராஜா”

சரி ஓகே இங்க பாரு ரோஜா…உனக்கு நான் தான் வேணும்னு முடிவு பண்ணிட்ட ல ? இதுல எந்த மாற்றமும் இல்லை தானே? 

“எனக்கு நீங்க தான்னு முடிவே பண்ணிட்டேன் “

இதற்கு மேல் ராஜா வந்து நிற்கவில்லை இருவரிடம் இருந்து விடை பெற்று சென்றான். வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும் ரோஜாவுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்ற திருப்தியுடன் சென்றான் ராஜா.

 

தொடரும் 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page