கண்கள் பேசுதே அத்தியாயம் -17

அத்தியாயம் -17

மதியழகன் முழு மனதுடன் ரோஜாவை ஏற்க தயாரானான் ரோஜாவும் எந்த குழப்பமும் இன்றி மதியழகன் தான் தனக்கான துணைவன் என்ற முடிவுடன் இருந்தாள். திருமண நாளும் வந்தது. தன்னுடைய சங்கு கழுத்தில் தாலியை ஏற்றுக் கொண்டால் ரோஜா. 

திருமணம் முடிந்து இருவர் இடையே பல சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது அதில் ஒன்றுதான் கன்னத்தில் அப்பளம் உடைப்பது இருவரும் மன மகிழ்ச்சியுடன் அதை செய்து கொண்டிருந்தனர் அந்த நேரம் தான் ராஜா மண்டபத்திற்குள் நுழைந்தான் முகத்தில் புண் சிரிப்போடு ரோஜா மணவறையில் அமர்ந்து தன் கணவனுடன் சடங்குகள் செய்து கொண்டிருப்பதை கவனித்தான். தனக்கு திருமணமான போது ரோஜாவுடன் இவ்வாறு சில சடங்குகள் நடந்ததை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பது எந்த வகையிலும் பிரயோஜனம் படாது இருந்தாலும் சட்டென்று அவன் ஞாபகத்திற்கு அந்த நினைவுகள் எல்லாம் வந்து எட்டிப் பார்த்தது. 

ராஜா வந்திருப்பதை யாரும் கவனிக்கவே இல்லை அதனால் அவன் வந்து அங்கு பார்த்துவிட்டு உடனே சென்று விட்டான். இனி தனக்கும் ரோஜாவுக்கும் ஆன தொடர்பு எதுவுமில்லை என்று முடிவுடன் வெளியே நடக்க சாலையில் எதையோ யோசித்து கொண்டே நடந்தான்.‌ சட்டென்று எதிரில் வந்த 25 மதிப்பு தக்க ஒரு பெண் மீது தற்செயலாக இடித்துக் கொண்டான். 

கூந்தலை விரித்து வைத்து காதோரம் ஒதுக்கியபடி நல்ல எழுமிச்சை நிறத்தில் பார்க்க அழகாக இருந்தாள். அவள் அழகுக்கு அழகு சேர்த்தது அவளுடைய பிங்க் சுடிதார் மற்றும் அந்த வெள்ளை துப்பட்டா. அவளுடைய மூக்கில் கடுகளவு மின்னும் வைர மூக்குத்தி. நெற்றியில் ஒரு சின்ன பொட்டு அவ்வளவே ஆனால் தேவதை போல் இருந்தாள். 

“அ….ஐயம் சாரி நான் தெரியாமல் இடிச்சிட்டேன் “என்று பதறினான் ராஜா.

“இட்ஸ் ஓகே நானும் தான் கவனிக்காம வந்தேன் சாரி “என்றாள். இருவரும் ஒருவருக்கொருவரை பார்த்துக் கொண்டு மன்னிப்பும் கேட்டுவிட்டு தங்களது வேலையை பார்க்க நடக்க துவங்கினர் ஆனால் அந்தப் பெண் ஏனோ அவனை திரும்பி திரும்பி பார்த்துவிட்டு சென்றாள். ராஜாவின் முகம் எப்போதும் வசிகரமாக இருக்கும். பாலில் ஒரு துளி சந்தனம் கலந்த நிறம் அழகிய மெல்லிய மீசை நெற்றியில் எப்போதும் சந்தன பொட்டு இவ்வாறு அவனுடைய தோற்றம். எவ்வளவு அவன் வருத்தமாக இருந்தாலும் அவன் தோற்றத்தில் எதுவும் காட்டிக் கொள்ளவே மாட்டான் தான் ஒரு மருத்துவர் என்பதால் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதில் சற்று கவனமாக தான் இருப்பான். அந்தப் பெண் அவனை பார்த்துவிட்டு சிறிது தூரம் தள்ளி ஒரு ஆட்டோவை பிடித்து கிளம்பினால் இவனும் தூரத்தில் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி பயணம் செய்தான். நேரே அவன் பணிபுரியும் மருத்துவமனைக்கு தான் சென்றான். 

அங்கு அன்று பிசியோதெரபிஸ்டை தேர்ந்தெடுப்பதற்கான இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. Hr மேனேஜர் அன்று ஏனோ வரவே இல்லை அதனால் ராஜாவை இன்டர்வியூ எடுக்குமாறு சீஃப் டாக்டர் கூறியிருந்தார். அதனால் அன்று ராஜாவே இன்டர்வியூ எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தான் இன்டர்வியூவுக்கு ஒரு ஐந்து பேர் வந்திருந்தனர் அதில் மூன்று ஆண்கள் இரண்டு பெண்கள். முதலில் அந்த மூன்று ஆண்களும் இன்டர்வியூ அட்டென்ட் செய்துவிட்டு சென்றனர் பிறகு வந்தவள் தான் அந்த பெண். சாலையில் யார் மீது இடித்துக் கொண்டு வருத்தம் தெரிவித்தானோ அதே பெண்தான்.

“டேக் யுவர் சீட் ப்ளீஸ்”

“சார் நீங்க….”

“இட்ஸ் ஓகே உங்க ஃபைல் காட்டுங்க “

அவளுடைய பயலை வாங்கி பார்த்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனித்தான் பிறகு யுவர் நேம் ப்ளீஸ் என்று அவளிடம் கேட்டான். 

“ஐயம் அருந்ததி” என்றாள்.

“ஓ…மிஸ் அருந்ததி உங்க பையோ டேட்டா எவ்ரித்திங் ஃபைன் உங்களுக்கு முன் அனுபவமும் இருக்கு ஸோ கண்டிப்பா கால் பண்றோம் நல் யூ மே கோ”என்றான் அந்தப் பெண்ணும் ஒரு சின்ன புன்னகையுடன் விடைபெற்று வெளியே வந்தாள். அவள் மருத்துவமனைக்கு வரும் வரை அவனைத்தான் சந்திக்கப் போகிறோம் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை இவ்வளவு எளிமையாக இன்டர்வியூ இருக்கும் என்றும் அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. 

நீ எது எப்படியோ அவளுக்கு ஒரு வேலை கிடைக்கப் போகிறது அவளுடைய கஷ்டங்கள் எல்லாம் தீரப் போகிறது என்பதை மனதில் நினைத்துக் கொண்டு அருந்ததி நடந்தாள். அருந்ததிக்கு அம்மா மட்டும் தான். தந்தை , உடன்பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே அவளுடைய ஒரே நோக்கம் அதற்கு நல்ல உத்யோகம் வேண்டும் என்று நினைத்து வந்தாள்.

இப்படியே நாட்களும் உருண்டோடி சென்றது அங்கு மதியழகனும் நம் கதையின் முதல் கதாநாயகிய அதாவது ரோஜா இருவரும் நன்றாக வாழ்ந்து கொண்டிருந்தனர் காரைக்குடியில் அந்த பெரிய வீட்டில் சேலை கட்டிக்கொண்டு தலையில் தொங்க தொங்க மல்லி பூவுடன் சிரித்த முகத்துடன் உலா வந்து கொண்டிருந்தாள் ரோஜா. தனக்கு எப்படிப்பட்ட திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்திருந்தாலோ அவ்வாறே அந்த திருமண வாழ்க்கை அமைந்திருந்தது. 

அன்று டைல்ஸ் கம்பெனி போய்ட்டு வந்து அறைக்குள் நுழைந்தான் மதி. அவள் அங்கு அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருப்பதை கவனித்தான் மதியழகன். தன் மேல் சட்டையை கழட்டி தொங்க விட்டு பிறகு அவளருகே வந்து அமர்ந்தான் அவன் நெருங்குவதை கவனித்து புத்தகத்தை மூடி வைத்தாள். மேலே ஏற இறங்க அவளையே கவனித்தான். அவள் காதோரம் இருக்கும் முடியை ஒதுக்கிவிட்டு வகுட்டில் இருக்கும் குங்குமத்தை கவனித்தான். குங்குமத்தில் இருக்கும் வாசம் அவனுக்கு பிடித்திருந்தது. நெற்றியில் முத்தமிட அவள் கண்களை இருக மூடினாள். மேலும் முன்னேறிச் செல்ல என்னவோ ஆசை தான் ஆனால் மதியம் சாப்பாடு முடிந்து மீண்டும் டைல்ஸ் ஷோரூம் போக வேண்டும் என்பதால் விலகியவன்.  

“ஆங் ரோஜா சாயந்தரம் நம்ம இரண்டு பேரும் ஹோட்டல் போலாம் ரெடியா இரு இன்னியோடு நம்ம மேரேஜ் ஆகி 30 டேஸ் ஆகுது அதை கொண்டாட தான்”என்றான். 

“ரியலி….ஹே இதெல்லாம் கூட நியாபகம் இருக்கா உங்களுக்கு “என்றாள்.

“ஹாஹா பின்ன? என்ன பார்த்த எப்படி தெரியுது . இவ்வளவு நாளு இந்த மாதிரியெல்லாம் கொண்டாடுவது கோவில சர்ப்ரைஸ் கொடுக்கிறதுக்கும் யாரும் என் வாழ்க்கைல இல்ல ஆனா இப்பதான் என் ரோஜா வந்துட்டா ல ஸோ இனி மாம்ஸ் ஜாலியா இருக்க போறேன் “என்றான். இதெல்லாம் அவன் சொல்லுவதை கேட்கும் போது ரோஜாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. 

சாயந்திரம் எப்போது பொழுது சாயும் என்று ஏங்கிக் கொண்டிருந்தால் நம் கதாநாயகி ரோஜா அவனும் தன்னுடைய வேலை எல்லாம் சீக்கிரமே முடித்துக் கொண்டு ஆறு மணி அளவில் வந்துவிட்டான் தற்போது அவள் தயாராகிக் கொண்டிருக்க. அவளுக்கென்று வாங்கி வந்த அந்த மாடர்ன் டிரஸ்ஸை எடுத்து நீட்டினான். 

“இந்த டிரஸ் அழகா இருக்கும் போட்டுக்க “என்றான். 

“ஐயோ இதெல்லாம் எனக்கு வேணாம்”

“நல்லாருக்கு போட்டுக்க “

“இதெல்லாம் போட்டா முட்டி தெரியும் அசிங்கமா கால் தெரியும்”

“ஸோ வாட் போடு. புடவை கட்டினால் மட்டும் இடுப்பு தெரிது  இல்லையா அப்பறம் என்ன?”

“ஐயோ அதுக்கில்லங்க நான் வேற கால்ல வேக்ஸின் எல்லாம் பண்ணல அதனால நல்லாருக்காது “என்று சிரித்தாள்.

“அவ்வளவு தானே இதை நீ முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல. வேக்சிங் பண்ண கூட்டிட்டு போய் இருப்பேன்ல “என்றான்.

“சென்னையில நான் எனக்கு தெரிஞ்சா பார்லர் இருக்கும் போய் பண்ணிட்டு வந்துருவேன் இங்க காரைக்குடியில் எனக்கு பழக்கம் இல்ல அதனால எங்க போறதுன்னு தெரியாம அப்படியே விட்டுட்டேன்”என்றாள் ரோஜா.

“ஹாஹா என் கிட்ட சொல்லியிருக்கலாம் தானே? வெயிட் பண்ணு “என்று ஒரு நம்பருக்கு கால் செய்தான்.

“அக்கா பார்லர்லயா இருக்கீங்க ? வைப்க்கு வேக்சிங் பண்ணனும் வீட்டுக்கே வந்து பண்ண முடியுமா?”என்றான் அதற்கு எதிர்முனையில் மதி தம்பி இதோ உடனே வரேன். என்று ஹனி வேக்ஸ் உடன் அந்த பார்லர் அக்கா வீட்டுக்கே வந்தார். இதோ கொஞ்சம் நேரம் என்று அவள் காலில் உள்ள ரோமங்கள் எல்லாம் வேக்ஸ் செய்து கொடுத்து விட்டு விடைப் பெற்றார். 

“ஹலோ ரோஜா மேடம் இப்போ இந்த ட்ரஸ் போடலாமே “என்றான் மதியழகன்.

இவளும் சிரித்துக் கொண்டே அந்த ஆடையை வாங்கி அணிந்துக்கொண்டு கண்ணாடி முன் சரி பார்க்க அம்சமாக இருந்தது. இருவரும் ஹோட்டல் சென்றனர் ஜோடியாக. அங்கு அவளுக்கு பிடித்த எல்லாம் ஆர்டர் செய்து அவளுக்கு அவனே பரிமாறி சாப்பிட வைத்தான். பிறகு கொண்டாடும் விதமாக ஒரு கேக்கை ஆர்டர் செய்து அங்கேயே இருவரும் கேக் வெட்டி போட்டோ எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். ஊர் கண்ணே அவர்கள் மேல் படும் என்பது போல் அனைவரும் திரும்பி திரும்பி இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

அந்த புகைப்படங்கள் அனைத்தையும் அவள் ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொண்டாள். அந்த ஸ்டேட்டஸ் எல்லாம் தமிழரசையும் பிரபஞ்சமும் பார்த்து மகிழ்ந்தனர் தன் மகள் எப்படிப்பட்ட அழகான வாழ்க்கையை வாழ நினைத்தாலோ அந்த வாழ்க்கையும் மதியழகன் மூலமாக அவளுக்கு கிடைத்தது என்பதை நினைத்து மகிழ்ந்தனர். தங்களுடைய கடமை முடிந்து விட்டது அடுத்து ரவிவர்மனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தனர். 

“டேய் உனக்கு பொண்ணு பார்க்கவா”என்றார் பிரபஞ்சன்.

“வேணாம் பா”என்க .

“ஏன் என்றார்”தான் ரேவத்தையே காதலிக்கும் விஷயத்தை அப்போதுதான் போட்டு உடைத்தான் அவர்கள் இருவரும் அதிர்ச்சியாகினர்.

மகளின் வாழ்க்கையை சரி பண்ணி அவள் நன்றாக வாழ்கிறார் என்ற திருப்தி அடைவதற்குள் இவன் காதல் விவகாரத்தை சொல்லி தலையில் இடி இறக்கியதை அவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

“யாரு அந்த பொண்ணு”

“ரேவதி”

“தெரியுது ஆனா எங்க பார்த்த அந்த பொண்ண “

“யோகா கான்பரன்ஸ் அப்பறம் எனக்கு வேலை ஏற்பாடு பண்ணிக் கொடுத்ததே அந்த பொண்ணு தான்”என்றான்.

“அவங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்க தானே”

“ம்ம் நீங்க ஓகே சொல்ல தான் வெயிட் பண்றேன்”என்றான்.

யோசித்து சொல்கிறோம் என்று பெற்றோர் கூறியதில் இருந்து அவனுக்கு என்னடா இது என்பது போல் இருந்தது. லீவுக்கு சென்னை வந்திருந்தான் ரவிவர்மன் அதனால் பெங்களூர் மறுபடியும் போவதற்குள் நல்ல செய்தி உடன் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். 

தொடரும். 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page