அத்தியாயம் -2
ரோஜா மறுநாள் வழக்கம் போல் யோகா முடித்துவிட்டு நண்பர்களுடன் காபி குடித்துவிட்டு அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு தயாராகி அவளும் வெளியே சென்றாள். ஸ்கூட்டியில் மின்னல் வேகத்தில் பறந்தாள்.
அந்த உயர்ரக மருத்துவமனை வாசலில் வந்து நின்றாள் . நேரே ராஜா இருக்கும் கன்சல்டேஷன் அறைக்குள் நுழைந்தாள். “ஹே டோன்ட் யூ ஹேவ் மேனர்ஸ் மனசுல என்ன பெரிய இவன்னு நினைப்பா எதுக்கு என் வீட்டு வாசல்ல வந்து கத்திட்டு போன?”என்றதற்கு அவனோ “ஹே உனக்கு மேனர்ஸ் இருக்கா டி இது பேஷண்ட் பாக்குற நேரம் இப்ப வந்து கத்திட்டு இருக்க லூசு ஒழுங்கா போய்டு “என்று அதட்டினான். ஆனால் அவன் அதட்டலுக்கு அவள் அசரவேயில்லை
“ஹே இவ்வளோ நாள் வரைக்கும் உன்னை பிரியனும்னு தான் நினைச்சேன் ஆனா நேத்து நீ நடந்துக்கிட்ட விதம் ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சு ஸோ டைவர்ஸ் கொடுத்துட்டு உன் முன்னாடி சந்தோஷமா வாழ்ந்து காட்டலை நான் ரோஜா இல்லை”
“வாட்?”
“என்ன வாட் வை ன்னு டைவர்ஸ் டா டைவர்ஸ் புரியுதா?”
“ஹே என்ன பேசுற ரோஜா?”
“பார்க்க ஹீரோ மாதிரி இருந்தா போதுமா? பொண்டாட்டி கூட அனுசரணையாக வாழ தெரியனும் புரியுதா? உன் வீட்ல உன் அப்பா அம்மா கூட டீவி பார்க்கவாடா கல்யாணம் பண்ணேன் உன்னை மூஞ்ச பாரு”என்று திட்டியவளை அறைய முற்பட்டான் ராஜா.
“டாக்டர்”என்று குரல் கொடுத்தவாறே நர்ஸ் உள்ளே நுழைய இருவரும் வாக்குவாதம் செய்வதை நிறுத்தி விட்டனர். சீஃப் டாக்டர் ரவுண்ட்ஸ் வர்றாரு ஸோ கொஞ்சம் அமைதியா பேஷண்ட் பாருங்க டாக்டர், நீங்க கத்துறது வெளியே கேட்குது. என்று உஷார் படுத்திவிட்டு வெளியே வந்தார் நர்ஸ் ,அதன் பின் ஒரு மையான அமைதி இருவருக்கும் இடையில்.
எதுவும் சொல்லிக்கொள்ளாமல் ஸ்கூட்டி எடுத்து ஸ்டார்ட் செய்து கிளம்பினாள். போகும் வழியில் நடந்த சில சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற பேச்சு வரும் போது டுயல் இன்கம் நோ கிட்ஸ் வரவேற்கிறேன் என்று ராஜா சொல்லும் போது அவள் இதயம் நொறுங்கிவிட்டது. ஸ்டுப்பிட் என்ன கோட்பாடு இதெல்லாம்? என்று மனதுக்குள் திட்டிக்கொண்டாள். அதன்பின் ஒரு நாள் அவளுடைய பிறந்தநாளை மறந்துவிட்டு ஒரு வாழ்த்து கூட கூறாமல் உறங்கியவனை நினைக்கும் போது இப்பவும் எரிச்சலே வந்தது.
அவன் எனக்கு வேணாம் வேண்டவே வேணாம் என்று சொல்லிக்கொண்டே சிக்னலில் நின்றாள். க்ரின் சிக்னல் விழுந்ததும் பறந்தாள் நேரே தன் நண்பன் ரித்விக் வீட்டிற்கு.
“ஹே வாட் எ சர்ப்ரைஸ் உள்ள வா”-ரித்விக்.
“ரித்விக் நான் உங்க அக்காவை மீட் பண்ணனும்”
“ஏன் “
“டைவர்ஸ் விஷயமா பேச”
“யாரு என் அக்காவ நம்பி டைவர்ஸா? அடியேய் வர டைவர்ஸ் கேஸ் மொத்தமும் இவளே அட்வைஸ் பண்ணி சேர்த்து வச்சிருவா கண்டிப்பா டைவர்ஸ் வாங்கி தரவே மாட்டா அக்கா”
“ஆங் என்ன? ஒரு லாயர் பண்ற வொர்கா இது”
“ஹலோ அக்காவுக்கு மணி மோட்டிவ் கிடையாது”
“ஓஹோ”
“இங்க பாரு டி கொஞ்சம் பொறுமையா இரு. இந்தா முதல்ல இந்த ஜூஸ் குடி”
அவனிடமிருந்து ஜூஸ் வாங்கி குடித்தாள் ரோஜா. சரி டா நான் கிளம்புறேன் பை. என்று கிளம்பினாள்.வீட்டிற்குள் நுழைந்ததும் பிரபஞ்சன் அவளை பார்த்து “என்ன மேடம் பேசி முடிச்சிட்டிங்களா உங்க கோபம் உற்சவம் பார்த்தேன்”என்றார்.
அதில் அதிர்ந்தவள் அட நீங்க எப்படி? என்று கேட்க “ப்ச்ச் ஆஸ்பிடல் போனியா இல்லையா? ராஜா கிட்ட பேசுனதே கவனிச்சேன்”
“ஆமா ராஜா பெரிய மகா ராஜா . அப்பா ப்ளீஸ் அந்த டாபிக் வேணாம்”
“சரி வேணாம் ஆமா நீ ரித்விக் வீட்டிற்கு ஏன் போன”என்று தந்தை கேட்டதற்கு
“அதுவா எல்லாம் டைவர்ஸ் விஷயமா தான்”
“ஓஹோ என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்கலை ல நீ”என்றார் கோபமாக.
“நான் என்ன உங்களுக்கு அம்மா கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கவா பேச போனேன் உங்க கிட்ட பர்மிஷன் கேட்க இங்க பார் பா இது என் லைஃப்”
“ஹாஹா எல்லா பொண்ணுங்களும் டேட் லிட்டில் பிரின்ஸ் னு சொல்லிக்கிறீங்க ஆனால் பர்சனல் விஷயம்னு வரப்ப நீங்க மட்டுமே முடிவு எடுக்கிற உரிமை எடுத்துக்குறீங்க “
விவாதம் இப்படியே போய்க் கொண்டே இருக்கும் என்பதால் அப்படியே பேசுவதை நிறுத்திவிட்டு நம் கதாநாயகி ரோஜா எழுந்து தன்னரைக்குள் புகுந்து கொண்டாள் அவளுக்கு அதற்கு மேல் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை ஆனால் உன் டாக்டர் ராஜாவுடன் சேர்ந்து வாழ துளி அளவும் விருப்பமில்லை.
இரண்டு நாட்கள் கழிந்தது.
ஒருவழியாக ரித்விக் அக்காவை மீட் பண்ணி டைவர்ஸ் பத்தி பேசினாள்.
“இங்க பாரு ரோஜா டாக்டர் வக்கில் இந்த மாதிரி வேலை அப்படி தான் இருக்கும். நீ அவருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாறுனா தான் என்ன? மாற கூட வேணாம் ஜஸ்ட் அவரை அவரு போக்குல விட்டால்தான் என்ன? நீ படிச்ச பொண்ணு தானே ஏன் உனக்கு கனவு லட்சியம்னு எதுவும் இல்லையா?”என்று கேட்க
“மேடம் எல்லாரும் அவங்க அவங்க கனவில் லட்சியம் பின்னாடி ஓடுறதுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணனும் மேடம்?, லட்சியத்தை அடைவதற்கு கல்யாணம் பண்ணனும்னு அவசியமே இல்லையே நீங்க சொல்ற மாதிரி எனக்கு கனவு இருக்குனு வச்சுக்கோங்க. ஆனால் அதுக்காக எல்லாம் லைஃப் ல சின்ன சின்ன சந்தோஷத்தை இழக்க முடியாது”என்றாள் ரோஜா.
சரிம்மா அதெல்லாம் இருக்கட்டும் நீ அப்படி என்னதான் எதிர்பார்க்கிற?
“சின்ன சின்ன சீண்டல் சின்ன சின்ன பகிருதல் சின்ன சின்ன கொண்டாட்டங்கள் இப்படி சராசரியான கணவன் மனைவிக்குள்ள நடக்கிற விஷயமே ஏக்கமா இருக்குங்கிற பட்சத்துல வேற என்ன சொல்றது மேடம்.”என்று அதோடு நிறுத்திக்கொண்டாள்.
மியூச்சுவல் டிவோர்ஸ் என்கிற போது டைவர்ஸ் கிடைப்பது ரொம்ப ஈஸி தான் இல்லைனா கன்டஸ்டட் டைவர்ஸ் அதாவது கணவர் மேல் இருக்கும் குற்றச்சாட்டு முன் வச்சு நியாயம் கேட்டு வாங்கனும். ம்ம் ஓகே லெட் சீ என்று வக்கீல் கூறியதும் சரியென்று எழுந்து வெளியே வந்தாள். ஏதோ பாரத்தை இறக்கி வைத்தது போல் இருந்தது. ஆனாலும் இதையெல்லாம் யாரிடமாவது சொல்லி புலம்ப வேண்டும் என்பது போல் இருக்க. உடனே தன் தோழி கவி வீட்டிற்கு சென்றாள்.
கவி முதலில் தேநீர் பரிமாறி விட்டு ரோஜா சொல்வதை எல்லாம் காது கொடுத்து கேட்டாள். உனக்கு நான் இருக்கேன் என்று அணைத்தாள் அந்த அணைப்பில் உள்ள தவறு ரோஜாவுக்கு புரிய உடனே விலகி அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தாள்.
“என்ன? பண்ற”
“ஹே ரோஜா ரிலாக்ஸ் ஆக்சுவலி எனக்கு உன் மேல”என்று ஆரம்பிக்க அந்த இயற்கைக்கு மாறானா அந்த காதலை காதுகொடுத்து கூட கேட்க விருப்பம் இல்லாமல் வெளியே விறுவிறுவென வந்தாள். அழுதுக்கொண்டே ஸ்கூட்டியை ஓட்டி வந்தாள்.
எது நடந்தாலும் தன் வீடு தன் அறைக்குள் நுழைந்ததும் ஒருவித பாதுகாப்பு உணர்வு அவளுக்கு. உள்ளே வந்து அவளே ஒரு காபியை கலந்தாள். “ஹே எங்க போய்ட்டு வர”என்று பிரபஞ்சன் கேட்க. தந்தையிடம் எதுவும் கூறாமல் ஒன்னுமில்லை பா என்று சொல்லி அறையினுள் போய் உறங்கினாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. எப்பவும் போல கடமைகள் முடித்துவிட்டு ஹாலில் வந்து அமர்ந்தாள்.
“அப்பா நம்ப ஊருக்கு போய் அம்மா தம்பியை பார்த்துட்டு வருவோமா முடிஞ்சா அழைச்சிட்டு வந்திடுவோம்”என்றாள்.
“ம்ம் போலாம்…..மதியமே கிளம்பலாம் சரியா? நான் கொஞ்சம் ஸ்டோர் வரைக்கும் போயிட்டு வரேன். “என்று கிளம்பினார்.
என்னமோ ஊருக்கு போக வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு தான் மனம் லேசாக ஆசுவாசப்படுத்திக் கொண்டது இந்த நேரத்தில் தன் தாயின் அரவணைப்பு மிகவும் முக்கியம் என்று தோன்றியது. அதனால் உடனே கிளம்பி தாயை பார்க்க வேண்டும் தம்பியிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. எவ்வளவு நாள் தான் தந்தையும் அவர்களை விட்டு பிரிந்து இருப்பார். அதனால் ஊருக்கு சென்று அம்மாவை சமாதானம் படுத்தி இங்கே அழைத்துக் கொண்டு வந்து விடலாம் என்று யோசித்தாள்.
ஒரு சூட்கே செல் தனக்கு தேவையான துணிமணிகள் மற்றும் பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து மடித்துக் கொண்டாள். தந்தையின் சர்ட் பேண்ட்டையும் ஒரு கிட்பேக்கில் வைத்துக்கொண்டாள். எல்லாம் தயாரான நிலையில் இருந்தாள். ஒரு தந்தையும் ஸ்டோரிலிருந்து வந்து விட்டார். காரை எடுத்துக்கொண்டு இருவரும் காரைக்குடி புறப்பட்டனர்.
கொஞ்ச நாளைக்கு இந்த மொபைல் லேப்டாப் எல்லாம் தூக்கி தூரம் வச்சிட்டு நிம்மதியா இருக்கனும் என்று நினைத்துக் கொண்டதாள் ஃபோன் லேப்டாப் இரண்டையும் ஊரிலேயே வைத்துவிட்டு வந்தாள். அதுவே ஒரு விதமான அமைதியை கொடுத்தது அவளுக்கு. சில நேரங்களில் மன அமைதியை தருகிறது என்று நமக்கு நாமே நினைத்துக் கொண்டு தொழில்நுட்பத்தின் மூழ்கி விடுகிறோம் ஆனால் அதுவே நம்முடைய பெரும்பாலான மன நிம்மதியை கெடுக்கும் விஷயமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே காலமாகிறது.
காரில் பயணம் செய்யும்போது தன் தந்தையிடம் பழைய நினைவுகளை எல்லாம் அசை போட்டபடி வந்தாள். சின்ன வயதில் அடிக்கடி காரைக்குடி வந்த ஞாபகம் ஆனால் அவள் கொஞ்சம் வளர்ந்து ஆளான பின்பு அங்க போனது மிக மிக குறைவு தான். தந்தையும் தன்னுடைய பழைய நினைவுகளை எல்லாம் பேசிக் கொண்டே வந்தார்.
போகும் வழியில் மதுரையில் இருக்கும் தன்னுடைய நண்பனை சந்தித்து விட்டு போகலாம் என்று பிரபஞ்சன் கூறி இருந்தார். அதன்படி இருவரும் முதலில் மதுரையில் இருக்கும் தந்தையின் நண்பனை சந்தித்து விட்டு மீண்டும் காரைக்குடி புறப்பட்டனர். மதுரையில் இருந்து காரைக்குடி கொஞ்சமே தூரம் தான். போகும் வழி எங்கும் இயற்கையும் அதன் அழகும் ரசித்தபடி நம் கதாநாயகி ரோஜா சென்றாள்.
“ரோஜா இளநீர் சாப்பிடுறியா”என்று கேட்டவுடன் சரி என்று தலையை ஆற்றினாள். உடனே இறங்கி இளநீர் கடைக்காரரிடம் இரண்டு இளநீர் வாங்கிக் கொண்டு காரில் ஏறினார். பக்கத்து சீட்டில் ரோஜா இல்லை.
ரோஜா எங்கே போனா இவ? என்ற யோசனையுடன் இருந்தார்.
தொடரும்
