அத்தியாயம் -5
நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. ரோஜாவுக்கு டைவர்ஸ் கொடுக்கும் நாளும் வந்தது இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர். என்னதான் ராஜா மீது அவளுக்கு கோபம் இருந்தாலும் இருவரும் இப்போது சட்டப்படி பிரிந்து விட்டோம் என்று நினைக்கும் போது ஒரு மாதிரி வெறுமையாக தான் இருந்தது அடுத்து அவளுடைய வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறது என்று அவளுக்கே புரியவில்லை.
காரை அவளே செலுத்திக்கொண்டு கடற்கரை வரை சென்றார் அவள் வீட்டில் இருந்து கடற்கரை என்னவோ சற்று அருகில் தான் எனவே காரை தானே செலுத்திக்கொண்டு சென்றாள் காரை நிறுத்திவிட்டு மணல் பரப்பில் கால் பதிப்பு எதையோ யோசித்துக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தாள். அந்த சிலு சிலுவென காற்று தூரத்தில் தெரியும் கடல் அலைகள் எல்லாம் அவள் மனதிற்கு சற்று ஆறுதல் ஆக இருந்தது.
அப்படியே அங்கேயே அமர்ந்தாள். அவளுக்கு பக்கத்தில் ஒரு குழந்தை மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தது இன்னொரு புறம் பலூன் காரன் பலூன் விற்று கொண்டு சென்றான் ஆங்காங்கே மக்கள் தண்ணீரில் கால் பதித்து விளையாடிக் கொண்டிருந்தனர் இப்படியான காட்சிகளை பார்த்துக் கொண்டே இருக்கும் போது பின்னாடி இருந்து யாரோ அவள் தோளை தட்டியது போல் இருந்தது.
திரும்பி பார்க்க அங்கு பிரபஞ்சன் இருந்தார்.
“அப்பா என்ன நீங்க இங்க?”
“ஏன் மா வரக்கூடாதா?”
“அப்படி எல்லாம் இல்லை பா நீங்க இங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை”என்றாள். அதற்கு பிரபஞ்சன் சிரித்தவாறே “என் பொண்ணு இங்க தான் வருவான்னு எனக்கு தெரியும். கார் வேற நீ எடுத்துட்டு வந்துட்டு நான் வேற வழியில்லாமல் நடந்து வந்தேன் “என்றார்.
“அ…அப்பா சாரி நான் நடந்து வர மூட்ல இல்லை அதான் கார் எடுத்துட்டு வந்தேன் சாரி…”என்றாள்.
“பரவால்ல மா. சரி எவ்ளோ நேரம் தான் இங்கேயே இருப்ப ?வாயேன் வீட்டுக்கு போவோம்”- பிரபஞ்சன்.
“வரனும் தான் பா ஆனால் இன்னைக்கு கோர்ட் போயிட்டு வந்ததால ஒரு மாதிரி இருக்கு மனசு அதனால கொஞ்சம் நேரம் டைம் ஸ்பெண்ட் பண்ணலாம் னு இங்க வந்தேன் “ என்றாள் ரோஜா.
“சரி ரோஜா கொஞ்ச நேரம் இங்கே இருந்து பேசிட்டு போலாம் மாமா சாப்பிட ஏதாவது வேண்டுமா என்றபடி திரும்பிய பார்த்த அந்த தூரத்தில் ஒரு பஜ்ஜி கடை இருந்தது. எழுந்து அவர் அந்த பஜ்ஜி கடையை நோக்கி நடந்து ரெண்டு செட்டு பற்றி கொடுங்கள் என்று கேட்டுவிட்டு அதற்கான பணமும் கொடுத்துவிட்டு வந்தார் எடுத்துக்கோ என்று அவளிடம் பஜ்ஜியை நீட்ட அவள் சாப்பிட மறுத்தால் பின்பு என்ன தோன்றியதோ தெரியவில்லை சரி கொடுங்கப்பா என்று வாங்கிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள்.
“ரோஜா பஜ்ஜி நல்லா இருக்குல்ல”
“ஆமா பா “
“ஆனாலும் அம்மா செய்ற மாதிரி இல்ல என்னப்பா”
“ஹாஹா உண்மைதான்”
“அப்பா கல்யாணம் ஆகி எத்தனை வருஷத்துல உங்களுக்கு என்னைக்காவது கல்யாண வாழ்க்கை மேல சலிப்பு வந்து இருக்காப்பா”என்று கேட்டாள்.
“கல்யாண வாழ்க்கைல சலிப்பு வராதவங்க யாரு தான் இருப்பாங்க சொல்லு கண்டிப்பா எல்லாருக்குமே வந்து கல்யாண வாழ்க்கையில கொஞ்சம் வருஷம் கழிச்சு சலிப்பு வந்துடும் ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்ல அந்த காலத்துல பெரியவங்க சும்மாவா சொன்னாங்க கல்யாண வாழ்க்கையோட சுவாரசியம் எல்லாம் முதல் மூணு மாசம் தான் அதுக்கப்புறம் எல்லாம் கண்டிப்பா எல்லாருக்கும் சளிப்பு வரும்”என்றார் பிரபஞ்சன்.
“அப்படி சலிப்பு வரும் போதெல்லாம் நீங்க என்னப்பா யோசிப்பீங்க?”
“இதென்ன வாழ்க்கை நமக்குன்னு எதுவுமே பண்ணிக்கலை எப்ப பாரு குடும்பம் குடும்பம்னு குடும்பத்துக்காகவே ஓடிட்டு இருக்குமே அப்படின்னு தோணும்”
“ஓஹோ அம்மாவுக்கு இந்த மாதிரி சலிப்பு வந்து இருக்காப்பா”
“ஆண்களுக்கே சலிப்பு வருதுன்னா வீட்டிலுக்குள்ளேயே வீட்டு வேலை செஞ்சுகிட்டு வீட்ல இருக்கவங்கள பாத்துகிட்டு இருக்கிற பெண்களுக்கு சளிப்பு வராதா என்ன?”
“அம்மாவும் பாவம் தான் என்னப்பா இப்ப பாரு நம்மள கவனிக்கிறது தான் உங்களுடைய வேலையா இருக்கு அவங்களுக்குன்னு ரிலாக்சேஷன் எதுவும் இல்லை” என்றாள் ரோஜா.
“என்னம்மா பண்ண முடியும் சலிப்பு வந்தாலும் நம்ம அடுத்த கட்ட வாழ்க்கை நோக்கி நம்ம போயிட்டே தானே இருக்கணும் கல்யாணம் குழந்தை அவங்கள வளர்க்கிறது அவங்க நல்லா வாழ்றதை பார்க்கிறது இப்படித்தான் ஒவ்வொருத்தரும் ஓடிக்கிட்டே இருக்காங்க”என்றார் பிரபஞ்சன்.
“ஆனால்…..”
“என்ன ஆனால் “
“இல்லை…..என் விஷயம் பாருங்கள் கல்யாணம் வாழ்க்கை ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே எல்லாம் முடிந்து போச்சு “
“அது….அது நீ தேர்ந்தெடுத்த வாழ்க்கை அப்படி”
“கரெக்ட் அப்போ எல்லாம் நம்ம சூஸ் பண்றதுல தான் இருக்கு ரைட்”என்று புருவம் உயர்த்தி கேட்டாள்.
“ஆமாம்மா இந்த உலகத்துல மனுஷனுக்கு ரெண்டு விஷயத்துல தான் தானே முடிவு எடுக்கிற வாய்ப்பு இருக்கு ஒன்னு நம்ம படிப்பு இன்னொன்னு நம்மளுடைய கல்யாண இத தவிர வேற எதுவும் நமக்கு நாமே தேர்ந்தெடுக்கிற உரிமை கிடையாது உதாரணத்துக்கு நமக்கு இவங்கதான் குழந்தையா பொறக்கணும் இதுதான் வேணும்னா நம்ம யோசிக்க முடியாது இல்ல ஆனா பாரு கல்யாண விஷயத்துல இவங்க தான் நம்ப மனைவியா வரணும் கணவனா வரணும்னு யோசிக்கிறோம்.”என்று அவளுக்கு புரியும்படி விளக்கினார்.
“யெஸ் உங்களுக்கு எப்படியோ தமிழரசி நல்லா மனைவியா வந்துட்டாங்க”என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.
“அது என்னமோ சரிதான் ஆமா நீ என்ன இப்பவே உன் வாழ்க்கை முடிஞ்சிட்ட மாதிரி பேசுற நீ ஏன் அடுத்து இன்னொரு கல்யாணத்தை பத்தி யோசிக்க கூடாது”என்று பிரபஞ்சன் கேட்டார்” அவர் கேட்டுவிட்டு பிறகு தான் கேட்டது சரியா தப்பா என்று ஒருமுறையை யோசித்தால் ஏனென்றால் இன்று தான் அவளுக்கு டிவோர்ஸ் கிடைத்துள்ளது அதற்குள் இன்னொரு கல்யாணம் பற்றி கேட்டது ஒரு வகையில் தவறோ என்று அவருக்கு தோன்றியது இருந்தாலும் நம் மகள் தானே அவள் தவறாக எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டு அவள் பதிலுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
“அப்பா நீங்க என்ன சொல்றீங்க? நான் இன்னொரு கல்யாணம் பற்றி யோசிக்கணுமா “
“ம்ம் “
“ஆனால் அது சரியா வருமா பா”
“முதல்ல நடந்த தப்பை சரி பண்ணிக்கிட்டு அடுத்து நீ தேர்ந்தெடுக்கிற வாழ்க்கை நல்லதா அமையும் படி பார்த்துக்க மற்ற படி இதுல பயப்பட எதுவும் இல்லை. அது மட்டுமல்லாமல் நீ சின்ன பொண்ணு தானே? இப்படியே இருக்க முடியாது ல”
“ஏன் மா அதான் என்ன பார்த்துக்க நீங்க இருக்கீங்க அம்மா இருக்காங்க தம்பி ரவி இருக்கான் அப்படி இருக்கும்போது எனக்கு என்னப்பா கவலை”
“நான் அம்மா எங்க காலம் வரைக்கும் உன் கூட இருப்போம். தம்பி அவனுக்கு கல்யாணம் ஆகுற வரை உன்னை பார்த்துப்பான் அதுக்கு அப்பறம்?”என்று கேள்வியை அவள் முன்னே வைத்தார்.
அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த விட்டு பிறகு “என்னை நானே பார்த்துக்குறேன் பா”என்றாள்.
“அதெப்படி மா? இங்க பாரு பணம் காசு இருந்தாலே போதுமா? அட்லீஸ்ட் பேச்சு துணைக்கு ஒரு ஆளு வேணாமா? சரி அதுக்கு கூட ப்ரண்ட்ஸ் இருக்காங்கன்னு வச்சிப்போம் ஆனால் கடைசி காலம் ஆறுதலுக்கு யார் வருவா? எங்க கடைசி காலம் வரை நீயும் ரவியும் இருக்கிற மாதிரி உனக்கு?”என்று நிறுத்தினார்.
“இப்போ நான் என்ன செய்யனும்”
“எதுவும் செய்ய வேணாம் டைம் எடுத்து யோசி நல்ல முடிவாக பொறுமையா எடு ஓகேவா”என்று பிரபஞ்சன் கூறிவிட்டு உடையில் இருக்கும் மண்ணை தட்டி விட்டு நடக்க துவங்கியது அவள் பின்னால் நடந்தாள். இருவரும் காரில் ஒன்றாக வந்தனர். வீட்டு வாசலில் கார் நின்றதும் அவனுக்கு உள்ளே வர ஏனோ தயக்கம் உள்ளே வந்தால் அம்மா இதை பற்றி ஏதாவது பேசுவாரு என்னவோ என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
“சரி சரி டைம் ஆகுது வாங்க சாப்பிடலாம் உங்களுக்காக பிரியாணி செஞ்சி வச்சிருக்கேன்”என்று அம்மா வழக்கத்தை விடவும் உற்சாகமாக அழைப்பதை கண்டாள் நம் ரோஜா.
அப்படியே விழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ரோஜாவை பார்த்து உன்னடி அன்புமிக்க உள்ள வா ஆமாம் அப்பா எங்க உன்னை தேடி தான் வந்தாரு. என்று கேட்டுக்கொள்ளும் என்பதை பின்னாடி இருக்கும் கணவன் பிரபஞ்சனை கவனித்தாள். சரி சரி வாங்க என்று இதுவரை அமர வைத்தார். ரவியும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த அவனும் உணவு சாப்பிட வந்தான் டைனிங் டேபிளில் நான் வருமாறு அமர்ந்து பிரியாணியை ரசித்து சாப்பிட்டனர்.
ரொம்ப நாள் கழித்து ஒரு சுதந்திர காற்றை வாசிப்பது போல் அவள் உணர்ந்தாள். மற்ற தாய்மார்கள் போல் இல்லாமல் நம் தாய் எதையும் கேள்வி கேட்காமல் எப்போதும் போல நமக்கு உணவு பரிமாறுவதை நினைத்து வியப்பாக பார்த்தாள்.
இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி வேலையெல்லாம் முடித்துவிட்டு டைனிங் டேபிளில் உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருப்பதை கவனித்தார்.
“அம்மா என்னம்மா இன்னைக்கு உங்க பொண்ணுக்கு டைமர் இருக்குன்னு சொன்னீங்க ஆனா பார்த்தா அதை பத்தின கவலை எதுவும் இல்லாம பிரியாணி எல்லாம் செஞ்சு வச்சு இருக்கீங்க”என்றாள்.
“ஏன் டைவர்ஸ் ஆனால் பிரியாணி சாப்பிட கூடாதுன்னு எதாவது இருக்கா டி”என்றார் தமிழரசி.
“அதுக்கில்லை மா”
“உனக்கு வேணும்னா சொல்லு தட்டுல கொஞ்சம் போட்டு தரேன்”என்று தமிழரசி சொன்னதும் இல்லை வேண்டாம் மா…
“சரி சரி நீ கிளம்பு. “என்றார் தமிழரசி
யம்மா அந்த அக்கா கேட்ட மாதிரி நீ எப்படிம்மா எத பத்தியும் கவலை இல்லாமல் பிரியாணி எல்லாம் இன்னிக்கு எனக்கு செய்ய தோணுச்சு பாக்குறவங்க அப்படி தான நான் கேட்பாங்க என்றான் ரவி வர்மன்.
“நீ வேற டா அவன் புருஷன் டெய்லி குடிச்சிட்டு வந்து தகராறு பண்ணுவான் சில நேரங்களில் அடிப்பான் ஆனால் இவ வீட்டு வேலை செஞ்சு புள்ளையை காப்பாத்துறா. நான் தெரியாம தான் கேட்கிறேன் இந்த குடிகார பயலோட வாழ்ந்தா என்ன வாழலைனா என்ன? நியாயப்படி பார்த்தா இவ எப்பவோ அவனை விட்டு கிளம்பியிருக்கனும்.பொறுத்து போறது தான் பொம்பிளைக்கு அழகுன்னு நினைச்சிட்டு தன்னை தானே வருத்திக்கிறாங்க ஆனால் என் பொண்ணு அப்படி இல்லை…. அவளுக்கு வேணாம்னு நினைச்ச வாழ்க்கை விட்டு வெளியே வந்துட்டா இதுல ஃபீல் பண்ண என்ன இருக்கு “என்றதும் ரொம்ப நார்மலான சூழ்நிலையாக மாறியது வீடு.
