அத்தியாயம் -6
வீடு நார்மலாக மாறினாலும். அவளுடைய மனசு இன்னும் அப்படியே தான் இருந்தது. அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. இயல்பாக இருக்க முடிந்தாலும் அவளுடைய அடுத்த கட்ட வாழ்க்கை பற்றி யாராவது நண்பர்கள் உள்பட ஏதேனும் கேட்கும் போது நியாபகம் வந்துவிடும். நியாபகம் வரும்போது அழுது விடுவாள்.
இதற்கு அவள் அவனுடன் சேர்ந்தே வாழலாம் என தோன்றும் நமக்கு. ஆனால் எப்படி சாத்தியம்? தன்னுடைய உணர்வுகளை துளிகூட புரிந்து கொள்ளாத தன் கணவனிடம் சேர்ந்து வாழ்வது எல்லாம் கடினம் தான் அவருக்கு அவருடைய வேலை தான் மிகவும் முக்கியம் அதை தவிர மனைவி அவளுடைய உணர்வுகள் அவளுடைய காதல் இதெல்லாம் ராஜாவுக்கு ஒருநாளும் புரிந்ததில்லை அவன் புரிந்து கொள்ள முயற்சி செய்ததும் இல்லை பேருக்கு மனைவி என்று ரோஜாவை திருமணம் செய்து கொண்டான்.
ஆனால் குழந்தை பற்றி பேசும்போதெல்லாம் அவன் துணை கூட அதற்கு பிடி கொடுக்கவில்லை மாறாத தான் தொழிலில் எவ்வாறு முன்னேற வேண்டும். மேலும் மருத்துவ துறையில் சில கோர்ஸ் எல்லாம் படிக்க வேண்டும். அது இது என்று ஏதேதோ சொல்லி மழுப்பி விடுவான். அவன் அப்படி சொல்லி மழுப்பும் போதெல்லாம் ஒருவேளை அவனுக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இல்லையோ என்னவோ என்று அவளுக்கு தோன்றும். ஆனால் உண்மை அது இல்லை. அவனுக்கு திருமண வாழ்க்கையில் ஈடுபாடு இருந்தாலும் அவனுடைய கோட்பாடுகள் வேறு. அது துளி கூட இவளுக்கு ஒத்து வரவில்லை. அதனால் தான் இந்த பிரிவே.
அவளுடைய உணர்வுகளையும் காதலையும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு நல்ல துணை ஒரு வேலை கிடைத்திருந்தால் அவள் இந்நேரம் சந்தோஷமாக வாழ்ந்திருப்பாள் அவள் ஆசைப்படி இரண்டு மூன்று குழந்தை பெற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருப்பாள்.
சராசரி பெண்ணுக்குள்ள இருக்கும் எல்லா ஆசைகளும் எல்லா உணர்வுகளும் அவளுக்கு உண்டு அதற்கு ஏற்றார் போல் கணவன் அமையாததால் அவளுக்கு மனவிரட்டி இப்போது மன வாழ்க்கையும் முற்றிலுமாக முடிந்து விட்டது என்ற போது அதை அவளால் மறக்க முடியவில்லை. ஆனால் தற்போது உள்ள நிலையை ஏற்றுக் கொண்டு அவள் அடுத்த கட்ட வாழ்க்கை பற்றி சிந்திக்க தான் வேண்டும்.
“ரோஜா…….” என்று தமிழரசி அழைக்க இவளோ என்ன என்று தாயை பார்க்க.
“ஒன்னுமில்லை டா இப்படியே எவ்வளவு நாள் தான் இருப்ப எதாவது ஒரு விஷயத்துல கவனம் செலுத்தி உன் மனசை மாத்து”
“ம்ம் யோசிக்கிறேன் “
“ஒன்னு பண்ணு நீ யோகா க்ளாஸ் எடு. நம்ம ஏரியாவுல இருக்கிற வயதான தம்பதிகள் நிறைய பேர் இருக்காங்க அவங்க உடலை ஆரோக்கியமா வச்சுக்கவோ மனசு ஆரோக்கியமா வச்சிக்கவும் நீ எளிமையா சொல்லி தர யோகா பயனுள்ளதாக இருக்கும். ஸோ ட்ரை பண்ணு “
“சரிங்க மா முயற்சி பண்றேன் “என்று தன் தாய் சொல்லிய அறிவுரைகளை யோசித்துப் பார்த்தால் உண்மையில் அது சரிவரும் தான் ஏற்கனவே அவள் யோசித்து வைத்த ஒன்றுதான் இது அதனால் வயதானவர்களுக்கு யோகா கிளாஸ் எடுக்க முடிவுக்கு வந்தாள்.
அவ்வளவு தான் அதற்கான ஏற்பாடுகளை தன் தம்பி ரவிவர்மனை வைத்துக்கொண்டு துவங்கினால் முதலில் ஒரு போர்டை வீட்டு வாசலில் மாற்றினார் யோகா பள்ளிக்கு எடுக்கப்படும் என்று முக்கிய குறிப்பாக வயதானவர்களுக்கு என்று. இதைப் பார்த்து நிறைய பேர் அவளை விசாரிக்க வந்தனர் விசாரித்துவிட்டு அதற்கான தொகை என்ன என்பதையும் கேட்டுக் கொண்டு சென்றனர் இதுவே அவளுடைய கவனத்தை திசை திருத்த ஒரு ஊன்றுகோலாக இருந்தது.
“அம்மாடி ரோஜா எனக்கு சுகர் அதிகம் அதை சரி பண்ண எதாவது பயிற்சி இருக்கா?” என்று வயதான பெண்மணி பங்கஜம் கேட்க .
“ஆங் சொல்றேன் பங்கஜம் பாட்டி “என்று எளிமையான முத்திரைகளை எடுத்து கூறினாள். அவன் சொல்லிக் கொடுக்கும் முத்திரைகளும் மூச்சு பயிற்சிகளும் எளிமையாக இருந்ததால் அங்கு வந்த வயதான தம்பதிகள் அனைவரும் அதை எளிமையாக செய்ய துவங்கினர் வீட்டில் ஒரு பகுதியில் செட் இருக்கும் இடத்தில் அந்த யோகா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அந்த ஷெட்இல் ஒரு புத்தர் சிலையும் இருக்கும் அதன் பக்கத்தில் நீரோட்டம் போல ஒரு ஆர்டிபிசியல் நீரோட்டமும் இருக்கும் வலது புறம் நிறைய பூந்தொட்டிகளும் இருக்கும் அந்த இடமே பார்க்க அவ்வளவு ரம்யமாக இருக்கும் அனைவருக்கும் கீழே அமர யோகா மேட் உண்டு இப்படி ஒரு யோகா பயிற்சிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் வருபவர்களுக்கு மனசு லேசாக இருந்தது.
அது மட்டும் இல்லாமல் ரோஜா ஒரு இளம் பெண் என்பதால் அவளுடைய உற்சாகமும் அவள் தரும் தன்னம்பிக்கையும் அந்த வயதானவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது இதற்கிடையில் இளம் வயதினரும் வந்திருந்தனர். படிப்பு சம்பந்தமான ஸ்ட்ரெஸ் மற்றும் மற்ற டிப்ரசனிலிருந்து வெளிவர இளம் வயதினருக்கும் அந்த யோகா பயிற்சி உதவியாக இருந்தது.
இளம் வயது பெண் பிள்ளைகளும் சரி ஆண் பிள்ளைகளும் சரி ரோஜாவை ரோஜாக்கா இது எப்படி அது எப்படி என்று அவளிடம் அன்பாக பழகினர். அவளுடைய வாழ்க்கை வாழ்க்கை என்று சொல்வதை விட அவளுடைய மனம் சற்று மாற்றம் அடைந்தது இதுவே அவளுடைய வாழ்க்கையின் தேடலாம் என்று தெரியாது ஆனால் இது ஒரு ஆரம்பம்தான் அவளுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு நல்லது செய்கிறோம் என்ற திருப்தி அவளிடம் இருந்தது.
“என்னங்க ரோஜா இப்ப கொஞ்சம் பரவால்ல ல”
“ஆமா ஆமா பரவால்ல”
“ஆனா அதுக்காக அப்படியே விட முடியாது அவளுக்கு வேற ஒரு நல்ல வரன் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும்”என்று தமிழரசி அவளுடைய கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது பிரபஞ்சன் அதை தடுத்தார்.
“ஏங்க வேண்டாம்னு சொல்றீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் அப்படிங்கிற ஆசை உங்களுக்கு இல்லையா”என்று கேட்டாள்.
“கல்யாணம் பண்ணி வைக்கிறான் ஆசை இருந்தாலும் இப்போதைக்கு அதை பத்தி நம்ப அவர்கிட்ட பேசாம இருக்கிறது நல்லது ஒரு தோல்வியிலிருந்து வெளியில் வந்த உடனே அடுத்த வெற்றிக்கான தேடலை எப்படி ஒருத்தர உடனே ஆரம்பிக்க முடியும் இப்பதான் அவளுடைய மனம் கொஞ்சம் மாற்றம் அடைந்திருக்கா அதனால நம்ம ரெண்டு பேரும் ஒரு அப்பா அம்மாவா அவளுக்கு எமோஷனல் சப்போர்ட் கொடுக்கலாமே தவிர அவளுக்கு அடுத்த வாழ்க்கையை பற்றி நம்ம யோசிக்கிறது தேவையில்லாத ஒன்று”
“எனக்கும் பேரம் பேட்டி எல்லாம் பார்க்கணும்னு ஆசை இருக்காதா நம்பளும் எவ்ளோ நாளைக்கு தான் இப்படி இருக்க முடியும்”
“அதெல்லாம் சரி தான் ஆனா அதுக்காக அவ்வளவு போட்டு நம்ம கஷ்டப்படுத்த முடியாது உனக்கு வேணும்னா ரவிவர்மனுக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்”
“அவன் இப்போதைக்கு ஒத்துக்க மாட்டானே அவனுக்கு இப்பதானே 24 வயசு ஆகுது”
“அப்போ விடு பாத்துக்கலாம் “
“என்னமோ போங்க ஆரம்பத்திலிருந்து நீங்க தான் உங்க பொண்ணுக்கு செல்லம் கொடுத்து கெடுத்துட்டீங்க இப்ப பாருங்க எங்க வந்து நின்னு இருக்கு. என்றாள் தமிழரசி.”
“என்ன நீ பொசுக்குன்னு இப்படி சொல்ற நான் என்ன பண்ண”
“வேற ஒரு நல்ல வரன் பார்க்கலாமென்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன் ஆனா நீங்க அதை காது கொடுத்து கேட்கவே இல்லை மேட்ரிமோனி சைட்ல பார்த்துட்டு உடனே அவளுக்கு புடிச்சிருக்கு அப்படிங்கிறதுனால அந்த வருட ஓகே சொல்லிட்டீங்க”என்றாள் தமிழரசி.
ராஜாவுக்கும் ரோஜாவுக்கும் நடந்த அந்த திருமணத்தை பற்றி தான் தற்போது தமிழரசி புலம்பி கொண்டிருக்கிறார் ஆனால் முடிந்து போன ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது எந்த விதத்திலும் சரி வராது என்பதால் அந்த பேச்சை அதோடு நிறுத்திக் கொண்டார் பிரபஞ்சன்.
தொடரும்
