அத்தியாயம் -8
உறவினர் வீட்டு இறப்பு நடப்பில் எல்லா உறவுகளையும் ஒன்று சேர்த்து பார்க்க முடிந்தது. ஆனால் மதியழகனை கண்ட த்ரிப்தி தான் ரோஜாவை ஆசுவாசப்படுத்தியது. மதியழகன் அவளிடம் பேச முயற்சித்தான்.
“ரோஜா…..”
“மதி…”
“இப்படி ஒரு வாய்ப்பு சந்திக்க கிடைக்கும் னு எதிர்பார்க்கல “என்றான் மதி.
“தானே ஊருக்கு வரணும்னு நினைச்சிட்டு இருந்தேன் மதி. அதுக்கு ஏத்த மாதிரி இந்த இறப்பு செய்தி ஸோ சூழ்நிலை எதுவா இருந்தா என்ன உன்னை பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சதே போதும் எனக்கு “என்றாள் ரோஜா.
“ரோஜா நம்ப பெருசா இரண்டு பேரும் பேசிக்கிட்டதோ இல்லை அடிக்கடி சந்திச்சதோ இல்லை ஆனால் போன வாட்டி நீ வந்துட்டு போனதுல இருந்து அவ்ளோ ஹேப்பி “என்றான் மதியழகன்.
“ம்ம் எனக்கும் கிட்ட தட்ட அதே மாதிரி தோணுது. நீயும் நானும் இப்ப க்ளோஸ் ஆன மாதிரி இருக்கு “என்றாள் ரோஜா.
ரோஜாவின் கண்களில் இருக்கும் சோகம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து தற்போது மதியழகன் முன்பு நின்று பேசும்போது முகமும் சரி கண்களும் சரி பிரகாசமாக இருந்தது அந்த பிரகாசமான முகத்தை அவன் ஒரு நொடி கண்டான் பழைய விஷயத்தை அதாவது ராஜா உடன் இருந்த திருமண பந்தம் அவர்களுக்கு முடிவுக்கு வந்ததை பற்றி எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவுக்கு வந்தான் அதனால் அதைப் பற்றி அவன் எதுவும் கேட்கவே இல்லை ஆனால் அவளாகவே அதை ஆரம்பித்தாள்.
“மதி வரியா இந்த ரோட் பக்கம் அப்படியே நடந்துட்டே பேசலாம் “என்றழைக்க அவனும் அவளுடன் நடந்தான்.
“மதி இந்த அரண்மனை பாக்றப்ப அவ்ளோ நல்லாருக்கு. சிட்டி ல சின்ன சின்ன அட்டப்பெட்டி மாதிரி வீட்ல இருக்கிறாங்க மக்கள். என் வீடு கொஞ்சம் பெருசு தான் ஆனால் இந்த பழமையான வீடுங்க பார்க்கவே ரம்மியமாக இருக்கு”என்றாள் ரோஜா.
“உனக்கு அப்படி இருக்கலாம் ஆனால் சின்ன வயசுல இருந்தே நான் இங்கே இருக்கறதுனால எனக்கு பெருசா ரசிக்கிற மாதிரி எல்லாம் எதுவும் தோணல பார்த்து பழகுன விஷயம் தானே ஆனா நீ சொன்ன மாதிரி உண்மைதான் இந்த ஊர்ல இருக்கிற வரைக்கும் மனசு எவ்ளோ அமைதியா இருக்கும் ஒரு ரெண்டு நாள் வேலை விஷயமா சிட்டி பக்கம் வந்துட்டு போனாலே அவ்ளோ ஸ்ட்ரெஸ் இருக்கும் அந்த ட்ராபிக் அந்த கூட்டம் அப்புறம் அங்க இருக்கிற அந்த கொளுத்துற வெயிலு பெரிய பெரிய பில்டிங் ஏதேனும் பார்த்தாலே டென்ஷனா இருக்கும்” என்றான் மதி.
“நீங்க டைல்ஸ் கம்பெனி தானே நடத்துறீங்க “ரோஜா கேட்க.
“யெஸ் காரைக்குடி டைல்ஸ் ரொம்ப பேமஸ் ல …. நான் தான் நிறைய சிட்டி ல இருக்கிற பெரிய பெரிய வீடுங்க அலுவலகங்களுக்கு சப்ளை பண்றேன். “என்றான் மதியழகன்.
“ஓஹோ….நீ சொல்றப்பவே தெரியுது உன் வேலையை நீ எவ்ளோ நேசிக்கிறன்னு. உன்னை பாக்குறப்ப ரொம்ப ஆச்சரியமாக இருக்கு”என்றாள் ரோஜா.
என்னடா இவன் இப்படி சொல்ற என்று ஒரு கணம் யோசித்தான் பிறகு அவளிடமே கேட்டான் ஆமா ஏன் அப்படி சொல்ற என்ன பாக்கும்போது உனக்கு என்ன ஆச்சரியம்?
“ஆமா உங்கள பாக்குறப்போ ரொம்ப கூல் பர்சன் மாதிரியே தெரியுது பெருசா நீங்க வேலை பார்த்துட்டு டென்ஷனும் வந்து எடுத்துகிறது இல்ல அதே சமயம் பர்சனல் லைஃபே வந்து ஸ்மூத்தா கொண்டு போறீங்க இதுக்கு இடையில நல்லது கெட்டது எல்லாத்துக்கும் போயிட்டு வரீங்க எப்படி எல்லாத்தையும் இவ்ளோ அழகா மேனேஜ் பண்றீங்க”என்றாள் ரோஜா.
“ஹாஹா ரொம்ப சிம்பிள் ஆபீஸ் வேலையா ஆபீஸோட நிறுத்திக்கணும் வீட்டு விஷயத்தை வீட்டோட நிறுத்திக்கணும் அப்பப்போ நேரம் கிடைக்கும் போது நல்லது கெட்டது எல்லாத்துக்கும் போயிட்டு வரணும் நம்ம நேரம் ஒதுக்கிறதுல தான் இருக்கு எல்லாம் “என்று சிரித்துக்கொண்டே கூறினான் மதியழகன்.
“ரொம்ப கேஷுவலா அழகா சொல்லி இருக்கீங்க உண்மைதான் இப்படித்தான் இருக்கணும்னு சொல்லி ஆனா நிறைய பேரு வேலை அதுதான் முக்கியம்னு ஓடிக்கிட்டே இருக்காங்க எதையும் கவனிக்க கூட நேரம் இருக்க மாட்டேங்குது”என்றாள் ரோஜா.
அவள் யாரைப் பற்றி நினைத்துக் கொண்டே இதையெல்லாம் சொல்கிறான் என்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது ஆனால் அதைப் பற்றி அவன் மேலும் எதுவும் கேட்கவில்லை.
“ரோஜா மனிஷங்க இரண்டு வகை இருக்காங்க.
ஒன்னு – உலகமே என் தலைல தான் இருக்குன்னு எல்லா ஸ்ட்ரெஸ் எடுத்து தலைல போட்டுப்பாங்க. சின்ன சின்ன வேலையை கூட பரபரப்பா பண்ணுவாங்க
இரண்டு – உலகமே விழுந்தாலும், நான் நல்லாருக்கேன்ல அது போதும்னு தன்னோட விருப்பு வெறுப்புக்கு முக்கியத்துவம் தந்துட்டு போய்ட்டே இருப்பாங்க .
என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “நீங்க இரண்டாவது வகை தானே” என்க அதற்கு அவன் “ஹாஹா யெஸ். எனக்கு எப்பவுமே என் ஹேப்பினஸ் என் ஹெல்த் ரொம்ப முக்கியம் அப்பறம் தான் வேலை எல்லாம்”என்றான்.
கரெக்ட் அப்படித்தான் மதியழகன் இருக்கணும் நம்முடைய விருது போல் நமக்கு முக்கியம்னா நம்மளோட ஆரோக்கியமான நமக்கு முக்கியம்தான் எப்ப பாரு ஓடிக்கிட்டே வாழ்க்கையில இருந்தா என்ன சந்தோஷமும் கிடைக்காது என்றாள் ரோஜா.
“ரோஜா இப்ப உங்களுக்கு தேவை அது தான் நீங்க நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு புடிச்ச விஷயத்தை பண்ணுங்க அம்மா உங்களுக்கு யோகா பிடிக்கும்னு கேள்விப்பட்டேன்”
“யெஸ் உங்களுக்கு எப்படி ஸ்வாமிங்கோ அந்த மாதிரி எனக்கு யோகா”என்றாள் ரோஜா.
“வெரி வைஸ்….”சரி சரி வாங்க நம்ம கெளம்பு நம்ம ஏற்கனவே ரொம்ப நேரம் ஆயிடுச்சு எல்லாரும் நம்மள தேடிட்டு இருப்பாங்க. என்றான் மதியழகன். அதற்கு ஏற்ற மாதிரி அவர்கள் திரும்பி அந்த இறப்பு வீட்டிற்கு போகும் போது இறுதி சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது இருவரும் அதில் கலந்து கொண்டு சாவு எடுத்து முடிந்தது சாப்பாடு எல்லாம் போடப்பட்டது எல்லாம் முடிந்ததும் சரி இன்னைக்கு சொல்ல வேண்டாம் என்று தமிழரசி மற்றும் பிரபஞ்சன் முடிவெடுக்கும் போது இல்ல இல்ல நம்ம இன்னைக்கு ஒரு நாள் இருக்கலாம் என்றாள் ரோஜா.
“இன்னிக்கு நைட் டைம் நான் காரிய வரைக்கும் நம்ம இங்கதான் இருக்கணும். வேண்டாம் என்றால் தமிழரசி.
“அம்மா நம்ப நம்ம பாட்டி வீட்ல தானம்மா பண்ண போறோம் அப்புறம் என்னமா இன்றைக்கு என்று நான் ரோஜா. இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை கவனித்த கோப்பியிருந்தேன் அருகில் சென்று”என்ன ஏதோ பேச்சு ஓடிட்டு இருக்கு போல இருக்கு இன்னிக்கு நைட் என்ன தங்கலாமா வேண்டாமா யோசிக்கிறீங்களா பேசாம நீங்க மூணு பேரும் என் வீட்ல வந்து தந்துக்கோங்க என் வீட்டில் வந்து நான் எந்த கணக்கும் கிடையாது என்றார் கோப்பெருந்தேவி.
“அது….அதில்ல அண்ணி “என்று ஏதோ சொல்ல இல்லை தமிழரசி நான் முடிவு பண்ணிட்டேன் நீ என் வீட்டில் தங்கியே ஆகணும்”என்றார் கோப்பெருந்தேவி.
கோப்பெருந்தேவி நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு அழைப்பு தந்ததால் மறுக்க முடியாமல் அங்கேயே இருந்துவிட . அன்று நம் ரோஜா குடும்பத்தினர் தங்க தனி அறை கொடுக்கப்பட்டது. அந்த அறையில் ஒரு மேஜை இருந்தது. அந்த மேஜையில் ஒரு நோட்டு பேனா இருந்தது. அதை கவனித்த நம் ரோஜா அந்த மேஜைக்கு எதிரில் போடப்பட்டிருந்த நாட்களில் அமர்ந்தால் ரோஜா சட்டென்று என்னை எழுதுவது என்று தெரியவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் யோசித்த பிறகு வரிகள் தானாக வந்தது.
“அவனே ஒருவன்….
அவன் யாரோ
என்னருகில் எனக்காக
ஆனால் இன்னும் என்னவன் ஆகவில்லை “ என்று ஏதோ கிறுக்கிவைத்துக் கொண்டு இருந்தாள். அவள் கிறுக்கியதில் ஏதோ ஒரு திருப்தி அவளுக்கு இருந்தது. ஆனால் ஏனோ எழுத்திலும் சரி மனதிலும் சரி தெளிவில்லாமல் இருக்கிறது. அதை சரி செய்ய இயலவில்லை அப்படியே மூடி வைத்துவிட்டு உறங்கி போனாள். மறு நாள் காலை விடிந்ததும் வாசலில் நீர் தெளித்து கோலம் போடும் சத்தம் கேட்க நம் கதாநாயகி எழுந்து வெளியே வர அங்கு கோப்பெருந்தேவி கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்.
“அத்தை நான் போடவா “
“கோலமா ? அட கோலம் எல்லாம் போட தெரியுமா”
“ம்ம்”
“சரி போடு பாக்கலாம்”
அத்தை சரி என்று சொன்னதும் உடனே கோலமாவை கையில் பிடித்து ரங்கோலி போட்டு முடித்தாள்.
“அத்தை கலர் இருக்கா”
“இல்லைத்தா சந்தைக்கு போனா தான் வாங்கனும்”
“சரி மஞ்சள் தூள் அப்பறம் கேசரி தூள் இருந்தா கொண்டு வாங்க”என்று அத்தையிடம் கேட்டு வாங்கிக்கொண்டு அதை கோலமாவில் கலந்து வண்ணம் கொடுத்தாள். கோப்பெருந்தேவி அசந்து தான் போனார்.
“ஐயோ என் கண்ணே படும் “என்று நெட்டி முறித்து அவளை உள்ளே அழைத்துச் சென்று அவளுக்கு காபி கலந்து கொடுத்தார்.
“அத்தை காபி சூப்பர்”
“அதை விட உன் கோலம் சூப்பர்”
“ஹாஹா” இதை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டு சிரித்தார் தமிழரசி.
“தமிழு வா உள்ள”
“வரேன் அண்ணி”
“அண்ணி உங்க இரண்டு பேரையும் இப்படி பார்க்க அவ்வளவு சந்தோஷமாக இருக்கு”என்றார் தமிழரசி.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்ள ஆரம்பித்ததால் ரோஜா கிச்சனை விட்டு வெளியே வந்தாள்.
“தமிழரசி எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா நம்ப இரண்டு பேரும் இப்படி பேசி சிரிச்சு. “
“என்ன பண்றது நம்ப உறவு அப்படி ஆயிடுச்சு”என்றார் தமிழரசி. அந்த காலத்தில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அந்த ஊருக்கு உறவுக்கும் இடையே விரிசல் வந்தது. அதனால் தான் இவ்வளவு நாள் உறவாடாமல் இருந்தனர். ஆனால் காலங்கள் ஓடிவிட்டது. எல்லாம் தற்போது மறந்தும் போனது. கோப்பெருந்தேவி அன்று டிபனுக்கு வகை வகையாக செய்ய ஆரம்பித்தார். அவர் வீட்டில் வேலையாட்கள் உண்டு.
“இட்லி காரச்சட்னி அப்பறம் பூரி குருமா “என்று பட்டியல் போட .
“ஐயோ அண்ணி எதுக்கு இவ்வளோ “
“ஏன் சாப்பிட கஷ்டமோ ஒழுங்கா சாப்பிடனும் புரிஞ்சிதா”என்று செல்லமாக கடித்தார் கோப்பெருந்தேவி.
காலை உணவு முடிந்ததும் என்ன செய்வது அறியாமல் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள் ரோஜா. அங்கு அப்படியே அந்த நோட் பென் இருந்தது. எதாவது கிறுக்கலாம் என்றால் எதுவும் ஞாபகம் வரவில்லை எனவே வேற வழியில்லாமல் எழுதினதையே மீண்டும் வாசித்து பார்த்தாள். ஆனால் அவள் கண்ணுக்கு பிழை இருப்பதாக தெரியவில்லை.
“இப்படியே எவ்ளோ நேரம் ரூம் ல இருப்ப நீச்சல் கத்துக்கலாம் வா”என்றான் மதி.
“ஆங் ஓகே “என்று அவனுடன் சென்றாள் அவளுக்கு கேன் கட்டி விட்டு குதிக்க சொன்னான் பிறகு கை கால் உதைக்க அவள் பழகினாள்.
“சூப்பர். இதே தான் கேன் இல்லாமல் பண்ணனும்”என்றான் மதியழகன்.
“அதுக்கென்ன பண்ணிட்டா போச்சு”என்று சிரித்தாள். இப்படியே மணி கணக்கில் கிணற்றில் நீச்சல் பழகியவளுக்கு சளி பிடித்தது தான் மிச்சம்.
“ஏன் டா என் அண்ணன் பொண்ணை நீச்சல் கத்து தரேன்னு பாடா படுத்துற “
“இல்லை மா அவங்க தான் கத்துக்க ஆசைப்பட்டாங்க”
“கிணத்து தண்ணி சளி பிடிக்கும் டா தெரியாதா உனக்கு”என்றார் கோப்பெருந்தேவி.
“அதெல்லாம் சரியாகிடும் மா இருங்க மஞ்சள் சுட்டு வரேன்”என்று கொம்பு மஞ்சள் சூடு செய்து கொண்டு வந்து முகர்ந்து பார்க்க சொன்னான். அவளும் அவ்வாறே செய்தாள்.
“இப்ப கொஞ்சம் ரிலிப் இருக்குதுல”அவன் கேட்டான்.
“யெஸ் மதி “
“குட்”
தமிழரசியும் பிரபஞ்சனும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு கண்களால் பேசினர்.
“நல்ல ஜோடியா தெரியுது ல “என்று.
ஆனால் இருவருக்கும் இடையில் பரஸ்பர காதல் ஒன்றும் உதயமாகவில்லை ஆனால் பெற்றோர்களுக்கு சரியான பொருத்தம் போல தோன்றுகிறது இவர்கள் ஒன்று சேர்வார்களா ?
தொடரும்
