கண்கள் பேசுதே அத்தியாயம் -11

அத்தியாயம் -11

பாட்டி இவர்களை ஆச்சரியமாக பார்த்து என்னடா பசங்களா சொன்னது காதுல விழுந்ததா என்று கேட்க இவர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“இதுங்க என்ன இப்படி மூஞ்ச மூஞ்ச பாக்குது “என்று சொல்லி புலம்பி விட்டு மீண்டும் ஹாலுக்கு சென்று ஓய்வு எடுத்தார்.

“பாட்டி பேசுவதை மனசுல வச்சிக்காத அவங்க நம்ப விஷயம் தெரியாம பேசுறாங்க “என்றான் ராஜா.

“ஆங் அதெல்லாம் எனக்கும் புரியுது பரவால்ல விடுங்க மிஸ்டர் ராஜா”என்றாள்.

அவள் மிஸ்டர் ராஜா என்று மீண்டும் மீண்டும் கூற இவனுக்கோ ஒரு மாதிரி இருக்க சரி தூங்கலாம் என்றான்.

“ம்ம் தூங்கலாமே என்றவள்”

“ஆமா நீங்க ஏங்க நானும் பார்த்துட்டேன் இந்த தாம்பத்திய உறவு பற்றி பேசினாலே உங்களுக்கு ஒரு மாதிரி ஆயிடுது. இதை நான் உங்க கிட்ட நிறைய வாட்டி நோட் பண்ணேன் “என்று வினவினாள்.

அவள் கேட்டதும் அவன் மனதில் இருப்பதை சொல்லுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று அவனுக்கு தோன்றியது அதனால் ஆரம்பித்தான்.

“அது வந்து ரோஜா நான் ஒரு asexual person”என்றான். இது அவளுக்கு பெரியதாக புரிந்த மாதிரி தெரியவில்லை. 

“என்னங்க ராஜா சொல்றீங்க ”

“இது வியாதி இல்லை ஒரு இயலாமை , ஒரு குறைபாடு “என்றான்‌

“ஆங் இதனால்?”

“இதனால பெருசா ஈர்ப்பு வராது எனக்கு. உன் மேலன்னு இல்லை யார் எந்த பொண்ணா இருந்தாலும் வராது. ”

“இதை சரி பண்ண முடியாதா ”

“இது 90 சதவீதம் மனசு சம்மதம் பட்டது. இது நானே என்னை மாத்திக்கிட்டா தான் உண்டு மற்றபடி இதுக்கு மருந்து மாத்திரை எல்லாம் இல்லை ”

இவன் கூற கூற இவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன முழிக்கிற ரோஜா”

“இதை மாத்த எதாவது வழி இருக்கா”

“இருக்கு. முதல்ல எனக்குள்ள கான்பிடன்ஸ் வரனும்.அதே சமயம் கொஞ்சம் கொஞ்சமாக மனசுல ஆர்வத்தை உண்டு பண்ணனும்”என்றான் ராஜா.

“ஆனால்…. இதெல்லாம் ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை ”

“ரோஜா இதெல்லாம் உனக்கு நான் அப்போ சொல்லியிருந்தா கண்டிப்பாக புரிஞ்சிருக்காது அப்பறம் இன்னொரு விஷயம் உடல்ரீதியான நெருக்கம் இல்லைனாலும் மனரீதியாக உன்னை அவ்ளோ பிடிக்கும் எனக்கு “என்றான் ராஜா.

ராஜா சொல்வதை கேட்டு கேட்டு கண்களில் நீர் வழிந்தது. அதை துடைத்தாள். 

“இப்போ எவ்ளோ யோசிச்சாலும் டிவோர்ஸ் ஆச்சுல அப்பறம் ஏன் ஃபீலிங்க்ஸ் “என்றான் ராஜா.

“ஆனால் ராஜா இதெல்லாம் நீங்க முன்னாடியே சொல்லிருக்கனும் சொவ்லிருந்தா ஒருவேளை உங்களை ஏத்து வாழ மனசை தயார் படுத்தியிருப்பேன் “என்றாள் ரோஜா. 

“கல்யாணமே வேணாம் னு சொன்னேன் எங்க வீட்ல யாரும் கேட்கலை “என்றான் ராஜா .

“இதுக்கு மாற்றம் கண்டிப்பா உண்டு ராஜா இப்பவும் எதுவும் கெட்டு போல தாம்பத்திய உறவுக்கு உங்க மனசை தயார் படுத்தி மறுபடியும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழப்பாருங்க என்றாள் ரோஜா.

“வேணாம் ரோஜா ”

“ஏன்”

“இன்னொரு முறை நான் ஒரு பொண்ணை வருத்தப்பட வைக்க விரும்பலை அது எனக்கு வேணாவே வேணாம் “என்றான் ராஜா.

“நீங்க முதல்ல உங்க வேலை ல இருந்து ப்ரேக் எடுக்கணும் ராஜா “என்றாள் ரோஜா.

“ஏன் என் வேலைக்கும் என் பிரச்சனைக்கும் என்ன சம்மந்தம்?”என்றான் ராஜா.

“எப்ப பாரு ரத்தம் சதை ன்னு எல்லா உடல் பாகங்களையும் அலசி ஆராய்ந்து பார்க்கிற மருத்துவ துறைல இருக்கிறப்ப எப்படி உங்க மனசு ஈர்ப்பு உண்டாக்கும்?”

“அதுவும் சரி தான் “என்றான் ராஜா”

“சரி ராஜா தூங்கலாம்”என்று படுத்து கொண்டாள். மறுநாள் காலை இனிதே விடிந்தது அவன் மனதில் மாற்றம் உண்டாகுமா பார்ப்போம்.

காலை எழுந்தவுடன் பாட்டி இவர்களிடம் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வரும்படி கூற இருவரும் சரி என்று செல்ல எத்தனித்தனர். இவள் சேலை மாற்ற அறைக்குள் நுழைந்தபோது இவன் வெளியே வந்துவிட்டான். இதென்ன பொண்டாட்டி புடவை மாத்தினா இவன் வெளியே வரான். 

“டேய் என்னடா இன்னுமா உனக்கு கூச்சம் போகலை ”என்க

“பாட்டி ஆமா பாட்டி ”என்றான். அந்த காலத்துல உங்க தாத்தா இப்படி தான் என்று ஏதோ சொல்ல இவனோ ஐயோ இந்த கதையை கேட்கிறதுக்கு நம்ப உள்ளபோவோம் என்று உள்ளே சென்று விட அங்கு அரையும் குறையுமாக நின்றிருக்கும் முன்னால் மனைவியை கண்டான்.

“ஐயம் சாரி ”

“எதுக்கு சாரி ”

“இல்லை உள்ள வந்ததுக்கு ”என்று சொல்லி முடிப்பதற்குள் இவள் அவனருகே நடக்க எத்தனித்தாள்.

“என்ன ரோஜா என்ன வேணும்”

“இல்லை எனக்கு எதுவும் வேணாம்”என்று மீண்டும் அவனை நோக்கி நடந்தாள். 

“ஹே என்ன ரோஜா”

“என்னது என்ன ரோஜா”

“இந்த சாரி உனக்கு அழகா இருக்கு”என்று ஏதோ சொல்லி சமாளிக்க 

“அப்படியா புடவை மட்டுமே நல்லாருக்கா ”

“அப்படி இல்லை ஆனால்”

“ராஜா….”என்று மென்மையாக அவனை அழைத்தாள்.

தொடரும்

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page