அத்தியாயம் -9
கோப்பெருந்தேவி வீட்டிலிருந்து கிளம்ப ஆயுத்தமானார்கள் ரோஜாவும் அவள் பெற்றோரும் .காரில் ஏறி புறப்படும் போது மதியழகனை திரும்பி திரும்பி பார்த்தாள் நம் ரோஜா .
“ரோஜா வா ஏறு “என்று பிரபஞ்சன் கூறியதும் அவளும் எதுவும் பேசாமல் ஏறிக்கொண்டு பின் இருக்கையில் இருந்தபடி அவனை பார்த்து கையசைத்தாள். அவனுடன் இங்கேயே இருந்துவிடலாம் என்பது போல் தோன்றியது ஆனால் வேறு வழியில்லை கிளம்பி தான் ஆகவேண்டும். எந்த முறை வைத்துக் கொண்டு அவள் இங்கே இருக்க முடியும்? அவன் என்னதான் முறைப்பையன் என்றாலும் இருவருக்கும் என்ன திருமணமா ஆகியிருக்கிறது? எனவே அவள் பிரியாவிடை தந்து சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் அவனும் ஒருமாதிரி ஆகிவிட்டான். அமைதியாக ஒரு மூலையில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
“என்னடா கம்பெனி எதுவும் போகலையா?”என்று கோப்பெருந்தேவி கேட்க அதற்கு அவன் “இல்லம்மா பெருசா வேலை எதுவும் இல்லை”என்றான்.
சரி இதற்கு மேல் எதற்கு தேவையற்ற கேள்வி எழுப்ப வேண்டும் என்று அப்படியே விட்டுவிட்டு கோப்பெருந்தேவி தனக்கான வேலையை பார்க்க ஆரம்பித்தார்.
“நெல் மூட்டை எல்லாம் மில்லு ல கொடுத்தனுப்பனும்”என்று வேலையாட்களிடம் கொடுத்தனுப்பி விட அப்போதும் எதுவும் சொல்லாமல் நம் மதியழகன் அமர்ந்திருந்தான்.
“ஏன் டா நம்ப நிலம் ஒன்று விக்கணும் ஆளப்பாரு சொன்னேன்ல “என்ன ஆச்சு என்று மதியின் தந்தை கேட்க.
“இதோ இனிமேல் தான் பார்க்கணும்”என்றான் இப்படியே அன்றைய நாள் போய்விட்டது. ரோஜா வரும் வழியில் அவனை பற்றி சிந்திக்க அவளுக்கோ அவனை பார்க்கணும் போல் இருந்தது. ஆனால் பார்க்க முடியாது ஆனால் போனில் பேசலாம் தானே என்று போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. சற்று நேரத்தில் அவனும் கிளம்பி மில்லுக்கு போய்விட்டான். ரோஜாவும் சென்னையை நெருங்கினாள் சற்று தூரத்தில் வீடும் வந்தது.
கதவை திறந்து இறங்கி வீட்டினுள் நுழைய ரவி வர்மன் அவர்களுக்காக சாப்பாடு வாங்கி வைத்திருந்தான். நால்வரும் கை கால் கழுவிக்கொண்டு சாப்பிட்டனர். சரி அறையில் வந்து ஓய்வெடுக்கலாம் என்று ரோஜா வந்து பார்த்தப் போது மணி ஐந்து. சரி தூக்கம் எப்படியேனும் வராது ஆனால் கொஞ்சம் சாயலாம் என்று படுத்தாள். அதற்கு ஏற்றது போல் அவள் கைப்பேசி மணி அடித்தது. யார் என்று அவள் பார்த்தப் போது அது ராஜாவின் அழைப்பு. அந்த அழைப்பை முதலில் எடுத்து பேசலாம் வேண்டாமா என்று அவளுக்குள் பட்டிமன்றம் நடத்தி பிறகு சரி எடுத்து தான் பேசுவோம் என்று காதில் வைத்தாள்.
“நான் ராஜா பேசுறேன்”
“தெரியும்”
“உன் கிட்ட பேசணும் “
“ம்ம் பேசுங்க மிஸ்டர் ராஜா”
“போன்ல இல்லை நேர்ல “
முதலில் மிகவும் தயங்கிய ரோஜா பிறகு பேச ஆரம்பித்தாள் “ஆமா உங்களுக்கும் எனக்கும் தான் ஒன்னும் இல்லைன்னு ஆச்சு ல அப்பறம் ஏன் மீட் பண்ணி பேசணும்?
“ஏன் உன் முன்னால் கணவனா ஒரு கர்டஸி காக கூட பேச மாட்டியோ “ முதலில் பதில் சொல்ல வந்தவள் பிறகு சரி நேர்ல தானே வரேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். சற்று நேரம் கழித்து அவளுக்கு பிடித்த நீல நிற புடவையில் சிம்பிள் மேக்கப்புடன் கிளம்பினாள்.
ராஜா கூறிய லொகேஷன் சென்றடைந்தாள் கடற்கரை ஒட்டிய ஒரு சின்ன சேட் ஷாப் அது. யாரும் அவ்வளவு வர மாட்டார்கள். பேச ஏற்ற இடம் போல் இருந்தது.
“என்ன ராஜா ஏன் வரச்சொன்னிங்க “
“முதல்ல உக்காரு”
இதுவரை அவளை அவன் ரசித்ததே இல்லை. அவன் ரசிக்க நேரம் ஒதுக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும்.
“இந்த சாரியில் அழகா இருக்க “
“ஓஹோ இதை சொல்ல தான் வரச்சொன்னிங்களா “என்றாள் ரோஜா.
“இல்லை இது வரைக்கும் நான்…….”என்று ஆரம்பிக்க வந்த விஷயத்தை சொல்லுங்க என்றாள். அதற்கு தகுந்தாற்போல் வேகமாக அலை ஒன்று ஒலி எழுப்பி வந்தது. அந்த சத்தத்தில் இருவரும் அமைதியாக.
“ரோஜா ஊர்ல எங்க பாட்டி முடியாம இருக்காங்க அவங்களுக்கு நம்ப பிரிஞ்சி போன விஷயம் எதுவும் தெரியாது.உன்னை பார்க்கணும் னு சொல்றாங்க நம்ப போய்ட்டு வரலாம் வரியா?”
“வாட்?”
“ப்ச்ச் எனக்காக இல்லை என் பாட்டி காக நீ ஒருவாட்டி நீலம்பட்டி வந்து போ “
“எத்தனையோ நாட்கள் அந்த பாட்டி நீலம்பட்டி வா வா னு கல்யாணம் ஆன புதுசுல அழைச்சிட்டு இருந்தாங்க ஒரு வாட்டி கூட போக தோணலை ல உங்களுக்கு இப்போ அவங்க முடியாம இருக்காங்கன்னு நம்ப போய் அங்க புருஷன் பொண்டாட்டியா நடிக்கணுமா?”என்று வெறுப்பாக கூறினாள்.
“ப்ளீஸ் எனக்காக சாரி அவங்களுக்காக”என்றான் . இவளுக்கும் அந்த பாட்டியை பார்க்க தோன்றவே சரி என்று கிளம்பினாள். வீட்டில் தமிழரசி முதலில் ஒத்துக்கவே இல்லை இருந்தாலும் பிரபஞ்சன் கூறவே அவளை ராஜாவுடன் அனுப்பி வைத்தார்.
“ரோஜா கார் ல போலாம் “என்று அவன் கூற அதற்கு அவள் பஸ்லயே போலாம் என்றாள். அவனுடன் காரில் தனியே பயணிக்க அவளுக்கோ துளி அளவும் பிடிக்கவில்லை. எனவே பஸ்ஸில் இருவரும் ஏறி அமர்ந்தனர். ஆங்காங்கே குழந்தை குட்டியுடன் கணவன் மனைவிகள் ஜோடி ஜோடியாக இருப்பதை கவனித்தான் ராஜா.
மனசு என்னவோ சொல்லியது. திரும்பி அவளை பார்த்தான் அவ்ளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ‘இந்த வாழ்க்கை தானே ஆசைப்பட்ட இதை கூட உனக்கு தர முடியாத பாவி ஆயிட்டேன் ல கடைசில நீ என்னை விட்டு பிரிஞ்சி போய்ட்ட ல “என்று வெதும்பினான் சில உண்மைகளை அவளிடம் கூற இயலாமல் தவித்தான். ஒரு மருத்துவராக அதை சொல்வது மிகவும் எளிதானது ஆனால் ஒரு கணவனாக அவளிடம் அவன் எப்படி கூறுவான். அதனால் அவளிடம் கூறாமல் இருந்தான். விரைவில் அவளிடம் கூறுவானா ? அப்படியே கூறினாலும் மீண்டும் சேர தான் முடியுமா என்ன? ஆனால் காலம் தான் பதில் கூறும். மதியிடம் மதிமயங்கி இருப்பவளோ மீண்டும் ராஜா மீது அன்பை விதைப்பாளா என்ன? பார்ப்போம்.
தொடரும்
