காதல் இதுதானா ? – காதல் 1
இதுதான்காதலா…?
-நிலா கிருஷி
காதலாகும் 1 :
“விர்..விர்..!சர்..சர்…!”
சென்னையைநோக்கி செல்லும் அந்த நெடுஞ்சாலையில் கார்களும்..லாரிகளும் பறந்து கொண்டிருந்தன.கீழ்வானில் ஆதவன் மெல்ல மெல்லஎட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அதிகாலை வேளை அது.ஆறு பேர் அடங்கியகாவல் குழு ஒன்று சந்தேகத்திற்குஇடமான வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டிருந்தது.
அந்தசோதனை எதிலும் எடுபடாமல்..ஒற்றைக்காலை மடித்து சற்றுத் தள்ளியிருந்த ஜீப்பில் சாய்ந்தபடி..இரு கைகளையும் மார்புக்குகுறுக்காக கட்டிக் கொண்டு நின்றிருந்தவனின்கண்கள் தீவிரமாக சாலையையே ஆராய்ந்து கொண்டிருந்தன.
அவனதுகழுகு கண்கள்..இரையைத் தேடும் வேங்கையைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.பாறை போல் இறுகியிருந்த அவன்முகமும்..உதடுகள் அழுந்த மூடியிருந்தவிதத்தில் வெளிப்பட்ட அழுத்தமும்..அவன் கண்களில் குடிகொண்டிருந்த தீவிரமும்..அவன் தன் இரையைஎதிர்பார்த்துக் காத்திருக்கிறான் என்பதை பறைசாற்றின.
சட்டென்றுஅவன் கண்கள் கூர்மையாகின…!புருவங்கள்நெருங்க எதையோ யோசித்தவனின் பார்வைஎதிரில் வந்து கொண்டிருந்த லாரியின்மீது அழுத்தமாக படிந்தது.மின்னல் மின்னும் நேரத்தில்அவன் உதடுகளில் ஒரு புன்னகை உதயமாகிமறைந்தது.
“துரை…!”,
“சார்…!”,நாற்பது வயது மதிக்கத்தக்கஒரு காவலாளி அவன் முன்ஓடி வந்து நின்றார்.
“அந்த லாரியை நிறுத்துங்க…”,
“சார்..அது சக்ரவர்த்தியுடையவண்டி…”,அவர் தலையை சொரிய,
“எவனுடையதா இருந்தால் எனக்கென்ன…?அந்த லாரியை நிறுத்துங்க…!”,கட்டளையிட்ட அவனது குரலில் ஓடிச்சென்றுஅந்த லாரியை வழிமறித்து கைகாட்டினார் துரை.
“சார்…இது ஐயாவுடையவண்டி..தெரியுமில்ல…?”,தெனாவெட்டாய் கூறியபடியே அந்த ட்ரைவர் லாரியில்இருந்து குதிக்க,
“யோவ்…!சார்தான்ய்யா நிறுத்தசொன்னாரு…”,துரை மெதுவாக கூறிகொண்டிருக்க,
“காமன்…லாரியை செர்ச்பண்ணுங்க…!”,மீண்டும் அவனது குரல் கட்டளையைபிறப்பிக்க நான்கு காவலர்கள் ஓடிச்சென்றுஅந்த லாரியில் ஏறி சோதனையிட்டனர்.
“சார்…!திருப்பூர்ல இருந்து துணி லோட் ஏத்திட்டு வந்திருக்கிறோம்சார்…!”,அந்த ட்ரைவர் வேகமாய்வந்து அவனிடம் கூற,அவனைஏற இறங்க அசால்ட்டாய் பார்த்தவன்ஒன்றும் பேசாமல் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.
“சார்..வண்டியில துணிகள்தான்இருக்குது…!”,ஒரு காவலாளி கூற,
“நான்தான் சொன்னேனே சார்…!”,அந்த ட்ரைவர் கேவலமாய்பல்லை இளித்தான்.
அதற்குள்,”சார்…!துணிகளுக்கு அடியிலநிறைய மருந்துகள் இருக்குது…”,கூறியபடியே வண்டியை சோதனையிட்டுக் கொண்டிருந்தகாவலர்கள் ஒரு மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு அவனருகே ஓடி வந்தனர்.
அதைவாங்கி ஆராய்ந்தவன்,”இது தடை செய்யப்பட்டமருந்தாச்சே…”,அவனது முகம் யோசனைக்குத்தாவியது.
அவனருகேநின்றிருந்த கபிலனும் அதை பார்த்து விட்டு,”ஆமாம் சார்…!இந்தமருந்து அதிக போதையைத் தருதுன்னுஇந்தியாவுல மட்டுமல்ல..பல உலக நாடுகள்இதை தடை செய்திருச்சு..!ஆனால்,இந்த மருந்துகள் எல்லாம்சக்ரவர்த்திக்கு எதுக்கு தேவைப்படுது…?”,கேள்வியெழுப்பியவனுக்கும் குழப்பமாய் இருந்தது.
“சார்…எதுவா இருந்தாலும்எங்க ஐயாகிட்ட பேசிக்கோங்க…!”,அந்த ட்ரைவர் குறுக்கேபுக..அவனை ஓங்கி அறைந்தவன்,
“பொறுக்கி…!உங்க நொய்யாகிட்டேயும் பேசத்தான் போறேன் டா…!துரை..லாரியை ஓட்டிக்கிட்டு ஜீப்பை பாலோவ் பண்ணுங்க…!கபிலன்..நீங்க ஜீப்பைஎடுங்க…!இந்த பொறுக்கியையும் ஜீப்புலஏத்துங்க…”,சரமாரியாய் உத்தரவிட்டவன் ஜீப்பில் ஏறி அமர வண்டி கிளம்பியது.
அந்தஅதிகாலை வேளையில்..போலீஸ் ஜீப்பை பறிமுதல் செய்யப்பட்ட சக்ரவர்த்தியின் லாரி பின்தொடர்ந்தது.
சக்ரவர்த்தி..சுகாதார மற்றும் மருத்துவத்துறை அமைச்சர்.அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்.ஸ்கூல்,காலேஜ், ஹாஸ்ப்பிட்டல்,கல் குவாரி என இவர் இறங்காத தொழிலே இல்லை எனலாம்.பணம் எந்தளவிற்கு கொட்டிக் கிடக்கிறதோ..அந்த அளவிற்கு அயோக்கியத்தனமும் கொட்டிக் கிடக்கிறது.ஆனால்,இதை அனைத்தையும் மக்களுக்குத் தெரியாமல் மறைத்துக் கொள்வதில் தான் அவரது சாணக்கியத்தனமே அடங்கியிருக்கிறது.
முறைகேடாக நடக்கும் இவரது பல தொழில்களைப் பற்றிக் காவல் துறை அறிந்திருந்தாலும்..ஆளுங் கட்சியின் முக்கிய அமைச்சரை எதிர்த்து பகைமை பாராட்ட அவர்களுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது…?
ஜீப்பை பின் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது லாரி.
“கபிலன்…!இங்கே எல்லாத்தையும் பார்த்துக்கோங்க…நான் வீட்டுக்கு போய் ரெடியாகிட்டு வர்றேன்…!”,விறைப்பாக கூறியவன் ஜீப்பிலேயே அமர்ந்திருக்க ‘துரை’ என்று அழைக்கப்பட்டவன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஜீப்பை கிளப்பினார்.
பங்களாக்கள் அணிவகுத்திருந்த தெருவிற்குள் ஜீப் நுழைந்தது.
ஆடம்பரம் ஏதும் இல்லாத அழகான அளவான பங்களா அவனுடையது.டிபார்ட்மெண்ட் அளித்திருந்த குவார்ட்டர்ஸை மறுத்து விட்டு..அவன் இதில் தங்கியிருக்கிறான்.சம்பாதிக்கஆரம்பித்த பிறகு அவனது சேமிப்பில் வாங்கிய முதல் சொத்து இது…!
வீட்டிற்குள் நுழைந்த உடனேயே மாடியில் இருக்கும் தனது அறையில் புகுந்து கொண்டான்.வெளியே வாட்ச்மேனிடம் கூறி அவனுக்கான காலை உணவை வாங்கி வந்து வைத்தார் துரை.இது தினசரி நடப்பதுதான்.
அதற்குள் அவன் குளித்து விட்டுக் கிளம்பி கீழே வந்தான்.ஆறடிக்கும் சற்று அதிகமான உயரம்.உடற்பயிற்சியின் விளைவால்..முறுக்கேறிய புஜங்கள்..திண்மையான மார்பு.அவனது கட்டுக்கோப்பான உடலை மிகக் கச்சிதமாக தழுவியிருந்தது அவன் அணிந்திருந்த காக்கி உடை.
கம்பீரமாகபடியில் இறங்கி வந்தவனை என்றும்போல் அன்றும் பிரமிப்புடன் பார்த்தார்துரை.
‘மனுஷனுடைய கம்பீரமே தனிதான்…என்ன..சிரிக்கறதுக்குத்தான் கூலி கேட்பாரு…!’,துரையின் மனம் எண்ணிக் கொண்டது.
அவரைக் கண்டு கொள்ளாமல் உணவு மேசைக்கு விரைந்தவன் அங்கு அவர் வாங்கி வைத்திருந்த உணவை சாப்பிட்டு விட்டு,”கிளம்பலாமா…?”, என்றபடியே எழ,
“இதோ சார்…”,துரை ஓடிச் சென்று ஜீப்பைக் கிளப்பினார்.
ஜீப் சாலையில் ஊர்ந்து சென்று போக்குவரத்தில்கலந்தது.
அவன் விஸ்வேஷ்வரன்…!அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்.அவனுக்கு விவரம் தெரிந்த வயதில்இருந்து அவன் வளர்ந்தது திருநெல்வேலியில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் தான்.சிறு வயதில் இருந்தே..தனக்கென ஒரு வட்டம்போட்டு அதில் வாழ்பவன்.யாரையும்அவன் நெருங்கியதில்லை..வேறு யாரையும் அவனை நெருங்க விட்டதும் இல்லை…!சதா சர்வ காலமும்ஒரு வித அழுத்தத்துடனேயே வளையவருபவனிடம் யாரும் முன் சென்று நட்பு பாராட்டியதும் இல்லை.
வெகு சிரமங்களுக்கு மத்தியில் தனது ஐ.பி.எஸ் படிப்பை முடித்தவன்..இன்று பதவியிலும் அமர்ந்துவிட்டான்.அவனுடைய இந்த மூன்றுவருட பயணத்தில் அவன் ஆற்றிய சாகசங்கள்ஏராளம்…!எங்கு சென்றாலும் சரி..அவனுடைய ஆளுகையின்கீழ் வரும் இடங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் அவன் வல்லவன்.
இவ்வளவு நாள் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தவனை ஆறு மாதத்திற்கு முன்புதான் சென்னை மாகாணத்தின் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணியிட மாற்றம் செய்திருந்தனர்.இந்த ஆறு மாத காலத்திலேயே அவன் இங்கிருக்கும் சூழ்நிலைகளை அலசி ஆராய்ந்து விட்டான்.
அப்படி அவன் கண்டுபிடித்தது தான் சக்ரவர்த்தி எனும் பெரும் சாம்ராஜ்யம்.பல ஊழல்களுக்கு மத்தியில் அவன் செய்து வரும் தொழில்கள்..ஆனால், எதையுமே கண்டுபிடித்திடமுடியாதபடி அவன் மறைத்திருந்த திறமை.அவனது அனைத்து திருட்டுவேலைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தான் விஸ்வேஷ்வரன்.
அவனுக்குத்தெரியும்..இது புலி ஆடும்வேட்டை என்று.பதுங்கி..நிறுத்தி நிதானமாகத்தான் இரையை கவ்வ வேண்டும்என்று அவன் நன்கு அறிந்திருந்தான்.
அதன்முதல் படியாக..தடை செய்யப்பட்ட மருந்துகள் ஏற்றிச் சென்ற சக்ரவர்த்தியின் லாரி அவனிடம் சிக்கி கொண்டது.
ஜீப் அவனது அலுவலகம் முன்பு வந்து நின்றது.
தனது தொப்பியை அணிந்தபடி பறிமுதல் செய்யப்பட்ட லாரியைப் பார்த்தவனின் முகம் கடினத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.முகத்தில் மருந்தளவிற்கு கூட ஒரு சிறு இளக்கமில்லை.அனைவரும் வைத்த ‘சல்யூட்’டை சிறுவிரைப்புடன் கடந்த சென்றவன் தனதுஅறைக்குள் நுழைந்தான்.அவனைத் தொடர்ந்து கபிலனும்உள்ளே வந்தான்.
“சார்…சக்ரவர்த்தி வீட்டுக்கு முன்னாடி ரிப்போர்ட்டர்ஸ் வெயிட் பண்றதா நியூஸ்வந்துச்சு…!”,
“ஓ..பார்ப்போம்..என்னபதில் சொல்றான்னு…!அப்புறம் கபிலன்..அந்த காலேஜ்கேர்ள் ரேப் விஷயத்துல குற்றவாளியாருன்னு க்ளூ கிடைச்சுதா…?”,
“விசாரணை நடந்துக்கிட்டு இருக்குதுசார்..கூடிய சீக்கிரம் குற்றவாளியைநெருங்கிடலாம்…!”,
“கூடிய சீக்கிரம் இல்லை..இன்னும் இரண்டு நாட்கள்ல ரிப்போர்ட் சப்மிட் பண்ணியாகணும்…!”, விஸ்வேஷ்வரன் கூறிக்கொண்டிருக்கும் போதே கையில் செய்தித்தாளுடன் துரை உள் நுழைந்தார்.
வந்தவர் அவன் முன்பு மேசையின் மீது செய்தித்தாளை வைத்து விட்டு அவனையேபார்த்தபடி அவஸ்தையுடன் நெளிந்தார்.
அவர்வெளியேறாமல் நிற்கவும் அவரை நோக்கித் தனதுபார்வையை செலுத்தியவன்,”என்ன விஷயம் துரை…?”,என்றான் சிறு கண்டிப்பானகுரலில்.
“சார்..அது வந்து…”,அவர் இழுக்க,
“வந்து போயின்னு நீங்க இழுக்கறதைகேட்கவெல்லாம் எனக்கு டைம் இல்ல…வாட் இஸ் தி மேட்டர்…?”,முகச் சலிப்புடன் வினவினான்அவன்.
“சார்…!அந்த யாழ்வி பொண்ணு..”,அவர் அப்பொழுதும் இழுத்தாரே தவிர விஷயத்தைக் கூறவில்லை.
“யாழ்வி..ஹீ இஸ்ஷீ…?”,
“அதுதான் சார்..அந்தரிப்போர்ட்டர்…”,அவர் இப்போதைக்கு அந்த விஷயத்தை சொல்ல மாட்டார் என்றுஎண்ணிய கபிலன் செய்தித்தாளை எடுத்துஒரு குறிப்பிட்ட பக்கத்தை விரித்து விஸ்வேஷ்வரனின் முன் நீட்டினான்.
அவனுக்குத்தெரியும்..துரை எந்த விஷயத்தைக்கூறத் தயங்குகிறார் என்று.அவன்தான் காலையிலேயேஅந்த செய்தியை படித்து விட்டானே.
நியூஸ்பேப்பரை வாங்கிப் படித்தவனின்முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்தது.கடும் பாறையாய் முகம்இறுக..பல்லைக் கடித்தவனின் நெற்றி நரம்புகள்புடைத்துக் கொண்டு எழுந்தன.
‘அராஜகக்காரர்களை ஒழித்து நகரத்தை சுத்தமாகவைத்திருக்கும் ஏ.சி.பியின் உள்ளம் இவ்வளவு அழுக்கானதா…?அடிக்கடிஅவரது வீட்டைத் தேடி வரும் கல்லூரிஇளம் பெண்கள்..எதற்காக…?போலீஸ் குவார்ட்டர்ஸை மறுத்துசொந்த வீட்டில் தங்கியிருப்பது இது போன்ற லீலைகளை நடத்துவதற்காகத்தானா…?அந்த வீட்டிற்குள் நடக்கும்மர்மம்தான் என்ன…?’,இந்த செய்தியுடன் விஸ்வேஷ்வரன்ஒரு இளம் பெண்ணிற்காகத் தன் வீட்டுக் கதவைத்திறந்து விடுவது போன்ற புகைப்படம் வெளியாகியிருந்தது.
ரிப்போர்ட்டர்யாழ்வி…!
அந்த செய்திக்கு கீழே இருந்த பெயரைபடித்தவன்,”இடியட்…”, என பல்லைக் கடித்தான்.
“டேம் இட்…!யார்இந்த யாழ்வி…?அன்னைக்கும் இப்படித்தான் என்னைப் பத்தி தெரியாமகசகசன்னு ஏதோ எழுதினாள்…!இப்போ..போட்டோ வேற..இந்தவிஸ்வேஷ்வரன் யாருன்னு அவளுக்குப் பாடம் சொல்லித் தராமல்நான் ஓய மாட்டேன்…!”, செய்தித்தாளை கசக்கி கோபத்தில் விட்டெறிந்தவன்,
“துரை…அவள் வீட்டுக்குவண்டியை விடுங்க…!”,கோபத்தில் தாடை இறுக விடுவிடுவென்றுவெளியேறியவனைப் பார்த்த துரையும் கபிலனும்ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
ஜீப்அந்த அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றது.
“B ப்ளாக்..செகெண்ட ப்ளோர்ல அப்பார்ட்மெண்ட் B – 4 “,துரை கூற லிப்டில் ஏறிஇரண்டாம் தளத்திற்குள் நுழைந்தான் விஷ்வா.
காலிங்பெல்லை அழுத்தி விட்டுக் காத்திருந்த நேரத்திலும் கோபம் ஜெட் வேகத்தில்எகிறியது.
‘என்ன தைரியம்…இருக்கட்டும்..இன்னைக்கு இவளுக்கு நான் யாருன்னு காட்டறேன்…’,
ஒருஅழகான இளம் யுவதி கதவைத்திறந்தாள்.திறந்தவள் தன் முன் நின்றிருந்தவனைவிழிகள் சுருங்க ஆராய்ச்சியாய் நோக்கினாள்.அவளது விழிகள் ‘விஸ்வேஷ்வரன் I P S ‘ என்ற அவனது நேம் பேட்ஜில்நிலைத்து நின்றது.
“யாழ்வி…?”,அவன் கேள்வியாய் நிறுத்த,அவனை ஜாக்கிரதையாய் பார்த்தபடியே தலையாட்டினாள் அவள்.
“இடியட்…!உன் மனசுல நீஎன்ன நினைச்சுக்கிட்டு இருக்கிற…?ரிப்போர்ட்டர்ன்னா என்ன வேணும்ன்னாலும் எழுதுவியா…?டோன்ட் யூ ஹேவ்சென்ஸ்…?”,கத்தியபடியே அவன் அவளது வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.
“வாட்…?முதல்ல உங்களுக்குசென்ஸ் இருக்குதா…?இப்படித்தான் ஒரு பொண்ணு தனியாஇருக்கற வீட்டுக்குள்ள..ஏதோ நுழைஞ்ச மாதிரிநுழைவீங்களா…?”, வந்த உடனேயே அவளைகத்தியது..அதை விட ஷீ காலோடு தனது வீட்டுக்குள் நுழைந்தது இந்த இரண்டுமே அவளது கோபத்தைக் கிளறுவதற்கு போதுமானதாக இருந்தது.
“என்னடி சொன்ன…?ஏதோநுழைஞ்ச மாதிரி நுழைந்திட்டேனா…?மைண்ட்யுவர் வோர்ட்ஸ் மிஸ்.யாழ்வி…!”,அவன் சுட்டு விரலை உயர்த்தி எச்சரிக்க,
“பர்ஸ்ட் மைண்ட் யுவர்பிசினெஸ் மிஸ்டர்.விஸ்வேஷ்வரன்…!”, அவனுக்கு சற்றும்குறையாத கோபத்தோடு அவனுடன் சண்டைக்கு நின்றாள்அவள்.
இருவரும்எதிரும் புதிருமாய் முறைத்துக் கொண்டு நின்றனர்.அவனதுகழுகுக் கண்கள் அவளை மேலிருந்துகீழாக ஆராய்ச்சியாய் அளவிட்டது.ஜீன்ஸ் பேண்ட்..குர்தா அணிந்திருந்தாள்.முகம் சுளிக்க வைக்காத கண்ணியமான உடைதான். நடு முதுகுவரை நீண்டிருந்த கூந்தலை இன்றைய நாகரீகத்திற்கு தகுந்தவாறு விரிய விட்டிருந்தாள்.நெற்றியில் கண்ணுக்கேத் தெரியாத ஒரு சிறுபொட்டு.
உதட்டுச்சாயத்தையோ..மேக்கப் சாதனங்களையோ அள்ளிப்பூசவில்லை.இயற்கையாகவே சிவந்திருந்த நிறம்.. கரு வண்டையொத்தகருவிழிக் கண்கள்..கூர்மையான நாசி..ஆரஞ்சு சுளை போல்செழித்த உதடுகள்..கொடியிடையைப் போல் இல்லாமல் சற்றுசெழித்து வளர்ந்த காட்டுப் பூபோன்ற தேகம்…!
அழகிதான்…அவனது உதடுகள் கேலியாய்வளைந்தன.
“லுக் யாழ்வி…!என்னைப்பற்றி என்ன தெரியும்ன்னு கண்டபடிஎழுதியிருக்கிற…?இதுல போட்டோ வேற..நீயும்ஒரு பொண்ணுதானே…?அந்தப் பொண்ணோட பியூச்சர் பாதிக்குமேங்கிற அறிவு இல்ல…?என்னஎழுதியிருந்த..பூட்டின வீட்டுக்குள்ளநடக்கும் மர்மம் என்ன..?ஹ்ம்ம்…”,இரு கைகளையும் பேண்ட்பாக்கெட்டில் விட்டபடி வீட்டைச் சுற்றி பார்வையை சுழற்றியவன்,
“தனியாகத்தான் இருப்பாய் போலிருக்கு…!வெல்..பூட்டின வீட்டுக்குள்ளஎன்ன நடக்குதுன்னு இங்கே நடத்திக் காண்பிக்கட்டுமா…?”,அவனது குரல் இலகுவாக வந்தாலும் அவனது கண்கள் அழுத்தமாகஅவள் மீதுதான் படிந்திருந்தது.
“ச்சே…”,அவள் வெறுப்புடன் முகத்தைத்திருப்பிக் கொள்ள,
“நீதானே ம்மா ஆசைப்பட்ட…இப்போ முகத்தை திருப்பற…?சரி கவலைப்படாதே..உன்கிட்ட நிரூபிக்கிற அளவுக்கு இந்த விஷ்வா ஒண்ணும்தரை தாழ்ந்து போயிடலை…!”,அவனது உதாசீனத்தில் அவளுக்குசுள்ளென்று கோபம் வந்தது.
“ஒரு ரிப்போர்ட்டரை இப்படி வீடு தேடி வந்து மிரட்டறதுகிரிமினல் அஃபென்ஸ்..தெரியுமா மிஸ்டர்…?”,
“அதே மாதிரி..ஒரு தனி மனிதனுடையசுதந்திரத்துக்குள்ள தலையிடறதும் குற்றம்தான்..தெரியுமா…?”,
“நாங்க ரிப்போர்ட்டர்ஸ் சார்…!நீங்க சொஸைட்டியில முக்கியபதவியில இருக்கிறவரு…!உங்க வீட்டுக்கு வந்துபோகிற பொண்ணுங்களைப் பத்திக் கேள்வி கேட்கிறஉரிமை இந்த சொஸைட்டிக்கு இல்லைன்னுநினைக்காதீங்க…!”,அவள் சூடாக அவனிடம்வாதிட்டாள்.
“ஏய்ய்…பொண்ணாச்சேன்னு நானும்பொறுமையா பேசிக்கிட்டு இருக்கிறேன்…ரொம்பவும்தான் துள்ளற…?என் வீட்டுக்கு யாருவர்றாங்க.. போறாங்கங்கிறது எல்லாம் என்னுடைய தனிப்பட்டவிஷயம்…!இதுல தலையிட எவனுக்கும்உரிமையில்லை.. அண்டர்ஸ்டான்ட்…?அதையும் மீறி என்வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கணும்ன்னு துடிச்சேன்னா..நோ ப்ராப்ளம்..இன்னைக்கு நைட்டே கூட நீஎன் வீட்டுக்கு வரலாம்..என்ன வர்றியா…?”,புருவம் உயர்த்தி கேலியுடன்அவன் வினவ,அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.
“ச்சீ…அதுக்கு வேறஆளைப் பாருங்க…!”,கோபத்தில் அவள் முகம் சிவந்துபோனது.
அவன்சென்று வெகுநேரம் ஆகியும் வராததால் ‘என்னாயிற்றோ..?’, என்ற பதட்டத்துடன் துரை வீட்டுக்குள் வந்தார்.
“இங்கே பாரு…!ரிப்போர்ட்டர்ஸ்கையில இருக்கிறது கூர்மையான ஆயுதம்..அதைசரியான விதத்துல பயன்படுத்தினால்..நாட்டோட தலையெழுத்தையே மாற்றிஎழுத முடியும்…!உன் கையில இருக்கிறபொறுப்பை உணர்ந்து செயல்படுவாய்ன்னு நான் நம்பறேன்…!இனியொருமுறை.. இப்படியொரு நியூஸ் வந்துச்சுன்னா..இப்படி பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்..புரியும்ன்னு நினைக்கிறன்…!”,தன்னையே பார்த்தபடி அழுத்தத்துடன்அவன் உச்சரித்த வார்த்தைகள் அவளது முதுகுத்தண்டை ஜில்லிடச்செய்தன.
அவ்வளவுநேரம் இருந்த தைரியம் அகன்றவளாய்அவள் அவனை சிறு பயத்துடன்ஏறிட்டாள்.ஒரு நொடி நின்றுஅவளைப் பார்த்தவன்..பிறகு புயலாய் வெளியேறிவிட்டான்.
ஸ்தம்பித்துப்போய் நின்றிருந்தவளின் அருகே வந்த துரை,”நீங்க எழுதினது மாதிரியெல்லாம் சார் இல்லைம்மா…!தொழிலேயும் சரி..தனிப்பட்ட வாழ்கையிலேயும் சரி..அவரு மாதிரி நேர்மையானவரை பார்க்க முடியாது…!”,அவசரமாக உரைத்து விட்டுசென்று விட்டார்.
முதல்முறையாக யாழ்வியின் மனதிற்குள் குற்ற உணர்ச்சி எழுந்தது.’உண்மையை ஆராயாமல் தவறானசெய்தியை போட்டு விட்டோமோ…?’,அவளதுமனம் குழம்பியது.
‘ஆனால்..அந்த போட்டோஅது பொய்யில்லையே…?இவரு வீட்டைத் தேடிவர்ற பொண்ணுங்களும் பொய்யில்லையே..?எது எப்படியானாலும் சரி..இந்த விஷயத்தை கண்டுபிடிக்காமல்ஓய மாட்டேன்…!’,மனதிற்குள் முடிவெடுத்துக் கொண்டவள் தெளிவான மனநிலையோடு அலுவலகத்திற்கு கிளம்பினாள்.
தொடரும்…
