காதலாகும் 13:
ஆதவனின் மென் கிரணங்கள் பூமியைத் தழுவிக் கொண்டிருந்த இளங்காலைப் பொழுது அது…!ஜன்னலின் வழியே ஊடுருவிய செங்கிரணங்கள் கட்டிலின் மேல் படுத்திருந்தவர்களின் மீது விழுந்தது.அவளுக்கு ஒன்றும் உரைக்கவில்லை.ஆனால், விஸ்வேஷ்வரன் கண் விழித்து விட்டான்.
விழித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.தன் நெஞ்சின் மீது பாரமாய் அழுத்தும் உணர்வு.’என்னடா இது..ஹார்ட் அட்டாக் எதாவது வர போகுதா…?’,குழம்பியபடியே முழுதாக கண் விழித்துப் பார்த்தான்.
அவனது மனையாட்டிதான் அவன் மேல் படுத்திருந்தாள்.அவளது பாதி உடல் அவன் மேல் கிடக்க..அது போதாது என்று காலைத் தூக்கி அவன் தொடைகளின் மேல் போட்டு கட்டிப்பிடித்தபடி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு நெருக்கத்தில் ஒரு பெண்ணை இப்பொழுதுதான் பார்க்கிறான். அதை விட..அவளது உடலின் மென்மைகள் தன் மேல் பதிந்து கிடந்த விதம்..அவனுக்குள் சங்கடமான அவஸ்தையை கிளப்பி விட்டது.
அவளை விலக்கி விட்டு விட்டு எழும் எண்ணத்துடன் அவனது கைகள் உயர..முதலில் அவை பதிந்த இடமே அவளது இடையில்தான். ‘என்ன இது இவ்வளவு சாஃப்டா இருக்குது…’.நினைத்தவனின் கரங்கள் இன்னும் அழுத்தமாக அந்த இடத்தில் பதிய.. பிறகுதான் அவனுக்குப் புரிந்தது அது அவளது இடை என்று.
ஷாக் அடித்தாற் போல பட்டென்று கைகளை விலக்கிக் கொண்டான் அவன்.
‘என்ன காரியம் டா பண்ற விஷ்வா…’அவனது மனசாட்சி குரலெழுப்ப..நெற்றியை நீவிக் கொண்டான்.
அமைதியாகவும் இருக்காமல் அவனது பெண்ணவள் படுத்திருந்த வாக்கிலேயே நெளிய..அவளது இளமை அழகுகள் கண்டபடி அவன் மீது மோதி உணர்ச்சிகளை சீண்டப் பார்த்தது.
‘இவளை முதல்ல விலக்கியாகணும்….’,நினைத்துக் கொண்டவன், “யாழ்வி…!”,என்றழைக்க அவளுக்கு எங்கே அது கேட்டது.அசையாமல் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
“யாழ்வி…”அவன் சற்றுக் குரலை உயர்த்தவும் ஏதோ பலன் இருந்தது.
மெல்ல தலையுயர்த்தி அவனைப் பார்த்தவள்,”என்ன வேணும்…?”,என்றாள் தூக்க கலக்கத்தினூடே.
“நான் ரெஸ்ட் ரூம் போகணும்…!”,
“போங்க.. இதுக்கெல்லாமா பெர்மிஷன் கேட்பாங்க…”,மீண்டும் அவன் நெஞ்சத்தில் முகம் புதைத்தவள் அவனைக் கட்டிக் கொண்டு தூங்க ஆயத்தமாக,
”நீ கொஞ்சம் என்மேல இருந்து எழுந்தேன்னா நான் ரெஸ்ட்ரூம் போவேன்..!”,குரலில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது அவன் கூறி முடிக்க..அவனது மார்பில் தலை வைத்துப் படுத்திருந்தவளின் மூளை சரசரவென்று ஏதோ செய்தி அனுப்ப..பட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
இவ்வளவு நேரம் சொகுசாக அவன் மீதுதான் படுத்திருக்கிறோம் என்பது உரைக்க..குப்பென்று முகம் சிவந்து போனது.
‘அடியே யாழ்வி…கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்குதா…? இப்படியா அவனை கட்டிப்பிடிச்சிட்டு தூங்குவ…?’,அவளது மனசாட்சி வேறு அவளைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தது.
“ஸா..ஸாரி…!”,அவன் முகம் பார்க்க முடியாமல் சில்லென்று அவளது அடி வயிற்றில் பரவிய உணர்வுகள் தடுக்க.. மெல்ல முணுமுணுத்தாள்.
“இட்ஸ்..”,”இட்ஸ் ஓகே’ என்று கூற வந்தவனின் வார்த்தைகள் அவன் கண்ட காட்சியில் அப்படியே உறைந்து நின்றது.
பழக்கமில்லாத புடவையில் தூங்கி எழுந்ததுடன்..அவசர அவசரமாக எழுந்து அமர்ந்ததும் சேர்ந்து கொள்ள..அவளது உடலைத் தழுவியிருந்த புடவை முந்தானை மறைக்க வேண்டியவற்றை மறைக்காமல் கீழே சரிந்து விழுந்திருந்தது.
இப்படியொரு காட்சியை அவன் நிச்சயம் எதிர்பார்த்திருந்திருக்கவில்லை. எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவனின் பார்வை அவளது இளமை அழகுகளின் மீது தடுமாற்றத்துடன் படிந்து பரவ ஆரம்பிக்க,
‘டேய் விஷ்வா…!என்ன காரியம் டா பண்ற…?’,மனசாட்சி வேறு அவனது தலையில் ஓங்கி அடித்து பார்வையைத் திருப்பச் சொல்ல,
அதற்குள் அவனிடம் சத்தமில்லாமல் போகவும் நிமிர்ந்து அவனைப் பார்க்க முயன்றவளின் அசைவில் பட்டென்று அவன் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.
“உன்..ம்க்கும்..உன் புடவை…”திணறிய வார்த்தைகளைத் தொண்டையைக் கனைத்து சரி செய்தவன் அவளை பார்க்காமல் வேறு எங்கோ பார்வையை செலுத்தியபடி கூறிவிட்டு விருட்டென்று அங்கிருந்து அகன்றான்.
‘என் புடவைக்கு என்ன…’,புரியாமல் குனிந்து பார்த்தவள் அப்பொழுதுதான் தனது முந்தானை சரிந்திருப்பதை கவனித்தாள்.
“அச்சோ…என் மானமே போச்சு…”,பதறியபடியே அதை சரி செய்தவளுக்குள் வெட்கம் ஊற்றாய் கிளம்பியது.
‘காலையிலேயே இப்படி ஷோ காண்பிச்சிட்டு உட்கார்ந்திருக்கிறேனே.. என்னைப் பத்தி என்ன நினைப்பான்…’,மனம் வேறு தறி கெட்டு ஓட,குளியலறையில் இருந்து அவன் வெளிவரும் சத்தம் கேட்டது.
அவனை நிமிர்ந்து பார்க்காமல் உடையையும் டவலையும் எடுத்துக் கொண்டு குளிக்க ஓடி விட்டாள். இவனுக்குத்தான் இதழோரம் சிறு சிரிப்பு வந்து உட்கார்ந்து கொண்டது.
காலை உணவாக சுட சுட இட்லி..நாட்டுக்கோழி குழம்பு.. வறுவல்..முட்டை என விருந்தே தயாராகியிருந்தது.அவன் ‘போதும்.. போதும்’ என்று கதறும் அளவிற்கு அவனை கவனித்து தீர்த்து விட்டனர் பெண் வீட்டினர்.
‘இன்னைக்கு சாப்பிடத்துக்கே ரெண்டு நாள் வொர்க் அவுட் பண்ணனும் போலவே…’,உடற்பயிற்சி..அளவான உணவு என்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவனுக்கு அவனுடைய கவலை.
வெளியே முற்றத்தில் அமர்ந்து தனது மாமனாருடன் பேசிக் கொண்டிருந்தவனின் அருகே டீ அடங்கிய தட்டுடன் வந்தாள் யாழ்வி.
“எனக்கு எதுவும் வேண்டாம்…!”,
“இஞ்சி..ஏலக்காய் எல்லாம் தட்டி போட்டு வைச்சிருக்குது…!குடிங்க..ஜீரணம் ஆகிடும்…!”,அவள் கூறவும் ஒன்றை எடுத்துக் கொண்டான்.
தனது தந்தைக்கும் கொடுத்தவள் தனக்கும் ஒரு டீ கப்பை எடுத்துக் கொண்டு அங்கேயே அமர்ந்தாள்.
“நாங்க இன்னைக்கு ஈவ்னிங் கிளம்பறோம் மாமா…! நாளைக்கு டியூட்டியில ஜாயின் பண்ணியாகணும்…!”,விஷ்வா ஆரம்பிக்க,
“இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டு கிளம்பலாமே மாப்பிள்ளை…”,என்றார் தயக்கத்துடன்.அவன் வகிக்கும் பதவி அவருக்கும் தெரியும் அல்லவா…அவ்வளவு சீக்கிரம் விடுமுறை எடுத்துக் கொண்டு அமர்ந்து விட முடியாது என்பதை அவரும் அறிந்துதான் இருந்தார்.
“உங்களுக்கே தெரியும்..என்னுடைய போஸ்டிங் எப்படின்னு…”,அவன் மெலிதாய் சிரிக்க,புரிந்து கொண்டவராய் தலையாட்டினார் ரகுவரன்.
*சரி..கல்யாணம் முடிந்து முதல் முறையா ஊருக்கு கிளம்பறீங்க…சாயங்காலம் நேரம் கிளம்ப வேண்டாம் மாப்பிள்ளை…! நாளைக்கு காலையில கிளம்பலாம்… நாங்களும் கூட வந்து உங்களை ஊருல விட்டுட்டு வர்றோம்…”,என்றவர் உள்ளே தனது மனைவியிடம் விஷயத்தைத் தெரிவிப்பதற்காக சென்றார்.
பின்னே.. மகள் புகுந்த வீட்டிற்கு கிளம்புகிறாள் என்றால் சும்மாவா..சீர் வரிசையில் இருந்து பலகாரம் வரை தயார் செய்து அனுப்பி வைக்க வேண்டுமே…? தலைக்கு மேல் வேலை கிடந்தது அவர்களுக்கு.
“எங்கேயாவது நடந்துட்டு வரலாம்..வர்றியா…?”,சுற்றும் முற்றும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்த மனைவியிடம் வினவினான் அவன்.
“ம்.. தோப்பு பக்கம் போய்ட்டு வரலாம் வாங்க…!”,அவளும் எழுந்து கொண்டாள்.
இருவரும் நடக்க ஆரம்பித்தனர். தோளோடு தோள் உரசும் நெருக்கம் இல்லையென்றாலும் அவ்வளவு தூரமும் இல்லை.
கொத்து கொத்தாய் காய்ச்சி தொங்கிக் கொண்டிருந்த மாந்தோப்புக்குள் நுழைந்தனர்.
“இந்த தோப்பு..பின்னாடி இருக்கிற தென்னந்தோப்பு..அதோ அந்த வயல் எல்லாமே அப்பாவுடையதுதான்…!”, ‘எங்களுடையது’ என்று கூறாமல் ‘அப்பாவுடையது’ என்று அவள் கூறிய விதம் அவனுக்குப் பிடித்திருந்தது.
காலடியில் மிதிபடும் சருகுகளின் ஒலியும்..ஆங்காங்கு மரத்தில் கூவிக் கொண்டிருக்கும் குயில்களின் ஒலியையும் தவிர வேறு எந்த சத்தமும் அங்கு இல்லை.அந்த நிசப்தத்தை அவன்தான் முதலில் கலைத்தான்.
“நாளைக்கு ஊருக்கு கிளம்பிடலாம் தானே…? உன்னைக் கேட்காம முடிவு பண்ணிட்டேன்…”,
“ஹ்ம்ம்…போகலாம்…!உங்க வேலையையும் பார்க்கணும்ல்ல…”,எளிதாக அவன் நிலையைப் புரிந்து கொண்டாள் அவள்.
அதற்குள் அவனது மொபைல் அலற..அதை காதுக்கு கொடுத்தபடி சற்றுத் தள்ளி நின்று பேச ஆரம்பித்தான் அவன். ஒரு மரத்தின் மீது சாய்ந்து நின்றிருந்தவளை நோக்கி இவளது தோழிகள் குழு வந்தது.
“என்னடி புது பொண்ணு…!அப்புறம்.. நேத்து நைட் எப்படி…?”,ஒருத்தி கண் சிமிட்ட அனைவரும் பொங்கி சிரித்தனர்.
“அதெல்லாம்.. விடிய விடிய தீபாவளி கொண்டாடி இருப்பாங்க போல…!கண்ணெல்லாம் பாரு எப்படி சிவந்து கிடக்குதுன்னு…”,இன்னொருத்தி கலாய்த்தாள்.
சற்றுத் தள்ளி நின்று போனில் பேசிக் கொண்டிருந்தவனை மரம் மறைக்க அவன் அங்கு நின்று கொண்டிருப்பது அந்த தோழிகள் யாருக்கும் தெரியவில்லை.எனவே,கண்டபடி கலாய்த்து தள்ளிக் கொண்டிருந்தனர். யாழ்விக்குத்தான் ‘பக் பக்’கென்று இருந்தது.
“ஐயோ..வாயை மூடுங்க டி பிசாசுகளா…”,அவளது எச்சரிக்கையை எங்கே அவர்கள் கவனித்தார்கள்.
“அப்புறம்..விடிய விடிய தூங்காம என்னடி பண்ணுனீங்க…?எங்களுக்கும் சொன்னால் உபயோகமா இருக்குமல்ல…”,ஒருத்தி வினவ,
“ம்..விடிய விடியத் தூங்காம ஒருத்தர் மாற்றி ஒருத்தர் விளக்குக்கு காவல் இருந்தோம்…”,குரல் வேறு பக்கம் இருந்து வர அனைவரும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தனர்.
விஸ்வேஷ்வரன்தான் நின்றிருந்தான்.
“அடியாத்தி..மாப்பிள்ளை டி…! ஒடுங்க..ஓடுங்க…!”,பெண்கள் குழு விட்டால் போதுமென்று ஆளுக்கொரு திசையில் ஓட ஆரம்பித்தது.
“அவங்க என்னமோ பேசிட்டு போறாங்க.. நீங்க எதுக்கு பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்கீங்க…?”,
“பதிலுக்கு பதில் பேசினால்தான் அவங்க அமைதியா போவாங்க…!இல்லைன்னா உன்னைக் கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க…!”,அவன் கூறுவதும் சரிதான் என்பதால் அவள் அமைதியாகி விட்டாள்.
கூறியதைப் போலவே அடுத்த நாள் காலை விஸ்வேஷ்வரன் -யாழ்வி தம்பதியினர் கிளம்பி விட்டனர்.அவர்களை விட்டு விட்டு வருவதற்காக அவர்களது குடும்பமும் தனியாக இரண்டு கார்களில் கிளம்பி விட்டது.அவர்களுக்குப் பின்னால் சீர் வரிசையை சுமந்தபடி லாரி வந்து கொண்டிருந்தது.
“எதுக்கு மாமா இவ்வளவு திங்க்ஸ்…?இதெல்லாம் நம்ம வீட்டுலேயே இருக்குது…”வரிசை கட்டிக் கொண்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களையும் வீட்டு உபயோக பொருட்களையும் பார்த்தபடி கூறினான் விஷ்வா.
“இருக்கட்டும் மாப்பிள்ளை…!இதெல்லாம் என் பொண்ணுக்கு நாங்க செய்ய வேண்டிய கடமை…!” கூறியபடியே ஒரு பத்திரத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார் ரகுவரன்.
“இது நம்ம தென்னந்தோப்பு மாப்பிள்ளை…!என் பொண்ணு பேர்ல எழுதி வைச்சிருக்கிறேன்…!அது போக..பத்து ஏக்கர் வயல்வெளி..எல்லாம் உங்க கல்யாணத்துக்கு நாங்க கொடுக்கிற சீர்வரிசை…!”,அவர் அடுக்கிக் கொண்டே போக,
அவன் திரும்பி யாழ்வியை முறைத்தான். “வாட் இஸ் திஸ் யாழ்வி…?”,அவனது பார்வை அவளைக் கடுமையாய் கேள்வி கேட்டது.
“இல்லைங்க..எனக்கு எதுவும் தெரியாது…”அவனது கோபத்தைக் கண்டவளுக்கு வார்த்தைகள் தந்தியடித்தன.
“அவளுக்கு எதுவும் தெரியாது மாப்பிள்ளை…எல்லாம் என் ஏற்பாடுதான்…!பெண் பிள்ளைங்களுக்கு செய்ய வேண்டியது பெத்தவங்களோட கடமைதானே…”,
“மாமா…! நீங்க என்னை நம்பி உங்க பொண்ணை கொடுத்தீங்களா..இல்லை..இந்த சொத்தை நம்பியா…?”,அவனது குரலில் இருந்த இறுக்கத்தைப் போலவே அவனது முகமும் கடினத்தைத் தத்தெடுத்திருந்தது.
மாப்பிள்ளையின் முக மாறுதல் அங்கிருந்த அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தியது.
“என்னங்க மாப்பிள்ளை…இப்படியெல்லாம் பேசறீங்க…!உங்களை மட்டும்தான் நம்பி நான் என் பொண்ணை கொடுத்தேன்…!”,அவசரமாக பதில் கூறினார் ரகுவரன்.
“அப்படின்னா..இது எதுவும் எனக்கு வேண்டாம்…!என் பொண்டாட்டியை சந்தோஷமா வைச்சுக்கிற அளவுக்கு என் சம்பாத்தியம் இருக்குது…! நீங்க கவலைப்பட வேண்டாம்…!”,இப்படி கூறுபவனிடம் எப்படி வற்புறுத்தி பத்திரத்தை திணிப்பது. அவர் யோசனையுடன் தனது மனைவியை பார்த்தார். ‘வேண்டாம்’ என்பது போல் அவர் தலையசைக்க..
“சரிங்க மாப்பிள்ளை… சொத்து பத்திரம் வேண்டாம்…!சீர் வரிசைப் பொருட்களை மட்டும் தயவு செய்து ஏத்துக்கோங்க…!”,அவர் கண்களில் தெரிந்த கெஞ்சல் அவனை மறுக்க விடவில்லை.
‘சரி’ என தலையசைக்க அனைத்துப் பொருட்களும் லாரியில் ஏற்றப்பட்டது.
கபிலனும்.. துரையும் கல்யாணம் முடிந்த கையோடு ஊருக்கு கிளம்பியிருந்தனர். சிறியவர்களுக்குத் தனிமை அளித்து பெரியவர்கள் அனைவரும் மற்ற காரில் ஏறினர். பயணம் ஆரம்பமானது.
கார் சென்னையை அடைந்தது. மணமக்கள் ஆரத்தி சுற்றி வீட்டுக்குள் அழைக்கப்பட்டனர். விஸ்வேஷ்வரனின் வீட்டில் பூஜையறை இருந்தது.ஆனால்,சாமி படங்கள் எதுவும் இல்லை.வாங்கி வந்திருந்த சாமி படங்களை வைத்து பூ போட்டு அலங்கரித்து தீபம் ஏற்றி வைத்தாள் யாழ்வி.
ஒரு ஆண்மகன் மட்டும் தனியாக வசிக்கும் வீடு. மிக மோசமாக இல்லாவிட்டாலும் சற்று அலங்கோலமாகத்தான் இருந்தது.என்னதான் இருந்தாலும் பெண்கள் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தி ஆண்களுக்கு வராது இல்லையா…?முடிந்தளவிற்கு யாழ்வியின் அம்மாவும் சித்தியும் உடன் இருந்து வீட்டை சற்று ஒழுங்குபடுத்தி விட்டுத்தான் சென்றனர்.
ஒருநாள் தங்கியிருந்து விட்டு அனைவரும் கிளம்பி விட..விஸ்வேஷ்வரனுக்கும் யாழ்விக்குமான திருமண வாழ்க்கை ஆரம்பமானது.
தொடரும்…
