காதலாகும் 18:
வந்திருந்தவர்கள் ஒவ்வொருவறாக கலைய ஆரம்பிக்க ராஜன் மனைவியின் அருகே வந்தார்.”லதா…! பொண்ணு மாப்பிள்ளை முதல் முறையா நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க..தாம்பூலம் கொடுத்து அனுப்பு…!”,அவர் கூற,
“நானே நினைச்சிட்டு இருந்தேன்.. நீங்க சொல்லிட்டீங்க…”,உரைத்தவர் யாழ்வியிடம் திரும்பி விஸ்வேஷ்வரனை அழைத்து வர சொன்னார்.
அவனைத் தேடிச் சென்றவள் அவனைச் சுற்றி நிறைய பேர் நின்று கொண்டிருக்கவும்..எப்படி அழைப்பது என்று தெரியாமல் தயங்கியபடியே நின்றாள்.
தனியாக இருக்கும் சமயங்களில் அவள் அவனை ‘ஏ.சி.பி சார்’ என்றுதான் அழைப்பாள். இத்தனை பேருக்கு முன்னிலையில் கணவனை அப்படி அழைக்க முடியாதல்லவா…? இவ்வளவு உயரத்தில் இருப்பவனை பெயர் சொல்லி அழைக்கவும் தயக்கம்.
ஒருவாறாக மென்று விழுங்கியவள்,”எ..என்னங்க…”, என்று அழைத்திருந்தாள்.
‘என்னங்க வா…?’,அந்த அழைப்பு அவனுக்குப் புதிதாக இருந்தது.தயக்கம் மேலிட வெட்கத்துடன் அவள் அழைத்த ‘என்னங்க..’ அவனுக்கு மிகவும் பிடித்தும் போனது.
கேள்வியாய் அவன் திரும்பிப் பார்க்க, “லதா ஆன்ட்டி கூப்பிடறாங்க..!”,என்றாள்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வெற்றிலை,புடவை.. குங்குமச்சிமிழ் அடங்கிய தாம்பூலத்தட்டை ராஜனும் லதாவும் கொடுத்தனர்.ஆசிர்வாதம் பெற்று இருவரும் வாங்கிக் கொண்டனர்.
“சந்தோஷமா இருக்கணும்…!”, வாழ்த்தியவர்களின் மனதில் எந்தவொரு விகல்பமும் இல்லை.
இருவரிடமும் விடைபெற்றுக் காரில் ஏறினர்.
இரவு நேரம்…!அந்த சாலையில் கார் விரைந்து கொண்டிருந்தது. வெளியே கவிழ்ந்திருந்த ‘கும்’இருட்டைப் போலவே காருக்குள்ளும் பெரும் அமைதி.அந்த அமைதி அவளை என்னவோ செய்ய அவள் காரின் சிடி பிளேயரை ஆன் செய்தாள்.
வரும் போது பாதியில் நிறுத்திய பாடல் இப்பொழுது தொடர்ந்தது.
“இது தண்ணீர் ஊற்றியா தீரும்..
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்…!
தேகங்கள் பரிமாற.. நம் உள்ளங்கள் இடம்மாறும்…
பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்…!”,
பாடல் நீண்டு கொண்டே செல்ல வரிகள் உணர்த்திய செய்தியில் விதிர்த்துப் போனவள் பதட்டத்துடன் பாடலை நிறுத்தினாள். அவனுக்கு ஏனோ சிரிப்புதான் வந்தது. கட கடவென்று வாய் விட்டு சிரித்தான்.அவளுக்குத்தான் வெட்கம் பிடுங்கித் தின்றது.
“சிரிக்காதீங்க ஏ.சி.பி சார்…!”,சிணுங்கினாள் அவள்.
அவன் முகம் சுளித்தான்.அவனும் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறான். யாரோ போல ‘ஏ.சி.பி சார்.. ஏ.சி.பி சார்…,என்று அவள் தன்னை அழைப்பதை.ஏனோ அவன் மனம் பார்ட்டியில் அவள் அழைத்த ‘என்னங்க’வை விரும்ப,
“அது என்ன ஏ.சி.பி சார்…?வேற எப்படியாவது கூப்பிடு…!”,என்றான் அதட்டலுடன்.
“வேற எப்படி கூப்பிடறதாம்…?”,
“கூப்பிடுவதற்கு பெயரா இல்லை… வேற எப்படியாவது கூப்பிடு…!பார்ட்டியில கூப்பிட்டாயே..அது மாதிரி கூட கூப்பிடு…!”,மறைமுகமாய் அவன் தன் ஆசையை வெளிப்படுத்தி விட..அவளுக்கு எங்கே அது உரைத்தது.
“எப்படி…என்னங்க..ஏங்க.. வாங்க..போங்கன்னா…?”,அவள் அபிநயத்துடன் அழைத்துக் காண்பிக்க அவன் மயங்கித்தான் போனான்.
“ம்ம்…!”
“அப்படியெல்லாம் என்னால கூப்பிட முடியாது ஏ.சி.பி சார்…!”, அவள் ராகம் இழுத்தபடி மறுத்தாள்.
“சரி..அது வேண்டாம்…!உங்க ஊர்ல ஹஸ்பெண்டை எப்படி கூப்பிடுவாங்கன்னு உங்க அம்மாக்கிட்ட கேட்டு கூப்பிடு…”அவன் இலகுவாக இன்னொரு வழி கூற,
“அதை எதுக்கு என் அம்மாக்கிட்ட கேட்கணும்.. எனக்கே தெரியும்…!”,என்றாள்.
“எப்படி கூப்பிடுவாங்க…?”,அவன் வினவ..கூற வாயெடுத்தவளுக்கு சட்டென்று வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
ஊரில் மனைவிமார்கள் தத்தம் கணவனை அழைக்கும் முறை அவள் மனதில் ஓட..ஏனோ அவனை பார்த்து அப்படி அழைக்க அவளுக்குள் பெரும் தயக்கம்.
“ம்ஹீம்…!”,தலையாட்டினாள் அவள்.
அவள் மறுக்கவும் அவனுக்கு ஆர்வமாகி விட்டது.”ஏய்.. ஒழுங்கா சொல்லு…!எப்படி கூப்பிடுவாங்க…?”,
“அதெல்லாம் சொல்ல முடியாது ஏ.சி.பி சார்…! நீங்க முதல்ல ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டுங்க…!”,
“இப்போ நீ மட்டும் சொல்லல..நான் வண்டியை நிறுத்திடுவேன்…!”,அவன் காரை நிறுத்துவது போல் சைகை செய்ய,
“அய்யோ..வேண்டாம்…!நீங்க போங்க…!”,அவள் கத்தினாள்.
“அப்படின்னா..நீ சொல்லு…!”,
“மாமா..மச்சான் ன்னு கூப்பிடுவாங்க…போதுமா…?”, ஏனோ அவனைப் பார்த்து அவளால் இதைக் கூற முடியவில்லை.இனம் புரியா வெட்கம் வந்து அவளை ஆட்கொண்டது.
“வாவ்..நைஸ்…!இது ‘என்னங்க’வை விட கிக்கா இருக்குதே…”,அவன் வாய்க்குள் முணக அவளுக்கு சரியாக கேட்கவில்லை.
“என்ன சொன்னீங்க…?”,
“அப்போ..அப்படியே கூப்பிடலாமேன்னு சொன்னேன்…!”,
“என்னால அப்படி கூப்பிட முடியாது ஏ.சி.பி சார்…!”,அவள் மீண்டும்;ஏ.சி.பி சார்’ போட அவனுக்கு கடுப்பாகி விட்டது. ஏனோ அந்த அழைப்பு அவனை விட்டு அவளைத் தள்ளி நிறுத்துவதைப் போல் உணர்ந்தான்.
கடுப்புடன் வாயை மூடிக் கொண்டான்.அதற்குள் வீடு வந்து விட..அவள் இறங்கி உள்ளே சென்றாள்.கதவைப் பூட்டி விட்டு அவளைப் பின்தொடர்ந்து மாடியேறினான் அவன்.
முன்னால் அவள் சென்று கொண்டிருக்க இரண்டு படிகள் தள்ளி அவன் வந்து கொண்டிருந்தான். விரிந்திருந்த கூந்தலை முன்பக்கம் விட்டிருந்ததினால் அவளது வெண் பளிங்கு முதுகு அவன் கண்களுக்கு விருந்தாகியது.கீழே இறக்கம் தாராளமாக வைக்கப்பட்டு தைக்கப்பட்டிருந்த ஜாக்கெட் கன கச்சிதமாக அதன் வேலையை காட்ட.சற்று முன் அவளால் அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகள் மீண்டும் அவனுக்குள் தலைதூக்க பார்த்தன.
வெள்ளை வெளேரென்று இருந்த முதுகில் ஆங்காங்கு இருந்த ஒன்றிரண்டு சிவப்பு நிற சிறிய கொப்புளங்களும் அவனுக்குள் மோகத்தீயை மூட்டி விட..அவன் எச்சில் விழுங்கிக் கொண்டான்.
‘என்னடா இது…மறுபடியும் ஒரு சோதனை…’,தவிப்புடன் அவன் நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. மேலே ஏறிக் கொண்டிருந்தவள் இவனிடம் ஏதோ கேட்பதற்காக பட்டென்று திரும்ப..அதை எதிர்பார்க்காமல் மேலேறி வந்து கொண்டிருந்தவன் நச்சென்று இடித்துக் கொண்டது என்னவோ அவள் மார்பில் தான்.
இவள் மேலே..அவன் கீழே நிற்க..சட்டென்று திரும்பியவளின் நெஞ்சுக்குழிக்கு மத்தியில் இவனது உதடுகள் சென்று மோதிக் கொண்டன.திடீரென்று நடந்த தாக்குதலில் அதிர்ச்சி அடைந்தவளாய் தடுமாறி கீழே விழப் போனவள்..அவனது பின்னந்தலை முடியைப் பற்றி சமாளித்தாள்.
அவள் பற்றி இழுத்தத்தில் அவன் உதடுகள் இன்னும் அழுத்தமாய் அவளது மார்புக்கு மத்தியில் புதைய. தடுமாறியவளை காக்கும் பொருட்டு அவன் கரம் உயர்ந்து அவளது வெற்றிடையை பற்றியிருந்தது.
இருவருமே இப்படியொரு சூழ்நிலையை எதிர்பார்த்திருந்திருக்கவில்லை. ஏற்கனவே உணர்வுகளின் தாக்கத்தில் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு இந்த சம்பவம் இன்னும் கிளர்ச்சியூட்ட..அவனது இளமை உணர்வுகள் தாறுமாறாய் ஆட்டம் போட்டன.அதன் விளைவு.. அவனது கரங்கள் அவனையும் அறியாமல் அவளது வெற்றிடையில் அழுந்தப் பதிந்து அவளை மேலும் தன்னை நோக்கி இழுத்தது.
பெண்ணவளின் நிலையோ சொல்லவே வேண்டியதில்லை.முதன் முதலாக உணர்ந்த ஆண்மகனின் ஸ்பரிஸம்..அதுவும் இருமுனைத் தாக்குதல்களை போல நெஞ்சுக்குழியிலும்..இடையிலும் உணர்ந்த அவனது தொடுகைகள்..அவளுக்குள் புது வித அவஸ்தையை ஏற்படுத்தின.இதயம் ‘டம் டம்’மென்று அடித்துக் கொள்ள.. எச்சிலைக் கூட்டி விழுங்கியவள் அவனைத்தான் பார்த்தாள்.
ஏதோ மோன நிலையில் இருப்பவனைப் போல கண்களை மூடி அவளது மார்புக்கு மத்தியில் புதைந்திருந்தவனின் முகத்தில் அப்படியொரு வேட்கை.இப்படியொரு உணர்வுகளோடு அவள் இதுவரை அவனைக் கண்டதில்லை.இவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனது உதடுகள் நகர்ந்து தனது ஜாகையை மாற்ற..அவள்தான் வியர்த்து விறுவிறுத்துப் போனாள்.
‘கடவுளே’,மனம் அரற்ற ஆரம்பிக்க. உடலோ.. புதிதாக உணரும் தொடுகையில் கூசி சிலிர்த்தது.
இதற்கிடையில் அவனது கரங்கள் அவளது இடையை மேலும் அழுத்திப் பிடிக்க..அவளுக்கு வலித்தது.இருந்தாலும் அந்த வலியை அவளது மேனி வரவேற்றதுதான் விந்தையிலும் விந்தை.
அவனது பின்னந்தலை முடியைப் பற்றியிருந்த அவளது கரங்கள் மேலும் அவனது சிகைக்குள் நுழைந்து நெறிக்க..பெண்ணவளின் இந்த ஒத்துழைப்பு அவனுக்குள் கள்ளூறும் போதையை கிளப்பி விட்டது. அவனது உதடுகள் மொத்தமாக தனது ஜாகையை கையை மாற்றி வேறு ஒரு இடத்தில் முழுதாக பதிய…அவள் பட்டென்று நினைவுக்கு வந்தாள்.
புதிதாக அவனால் அறிமுகப்படுத்த உணர்வுகளில் அவளது மேனி தட தடவென நடுங்க.. நடுங்கும் கரங்களால் அவனது முகத்தைத் தள்ளி விட்டவள் அங்கிருந்து ஓடி விட்டாள்.
அவனுக்கும் அப்பொழுதுதான் உணர்வே வந்தது.சுகந்தமான இடத்திலிருந்து பட்டென்று மீண்டு வந்தது அவனுக்குள்ளும் சிறு ஏமாற்றத்தை அளித்தது.
‘என்ன ஃபீலிங் டா இது சாமி…!’,சிகையை கோதி தன்னுணர்வுக்கு மீண்டவனால் உணர்வுகளை மட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை.இருக்கும்
மன நிலையில் அவளைத் தொடர்ந்து படுக்கையறைக்குள் செல்ல முடியாது என்பதை உணர்ந்தவன் மாடி பால்கனியில் தஞ்சமடைந்தான்.
இப்படியான உணர்வுகளை அவன் இதுநாள் வரை ! அனுபவித்ததில்லை. ‘இப்பொழுதே அவள் வேண்டும்…’,முதல் முறையாக அவனது உடல் அவனிடம் பிடிவாதம் பிடித்தது.அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடியவனின் விழிகளுக்குள் சற்று முன் அவன் புதைந்திருந்த இடங்களே வந்து போக..மூச்சை இழுத்து சுவாசித்தான்.அவன் உணர்ந்த அவளது வாசனைகள் அவனை மேலும் பித்தனாக்கியது.கரங்களோ.. இடையில் உணர்ந்த மென்மையை நினைவுபடுத்த..தலையை உலுக்கி எழுந்தவன்..தோட்டத்தில் நடை பயில சென்று விட்டான்.
அவனுக்குத் தெரியும்.. இந்த உணர்வுகள் அவனைத் தூங்க விடாது என்று…!அவளிடம் சென்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறவும் அவனுள் தயக்கம்..அவள் பயப்படுவாளோ என்ற தயக்கம்…!எனவே,தன் உணர்வுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கினான்.
எவ்வளவு காலம்தான் அவனால் கட்டுப்படுத்த முடியும்…? அவை வெடித்து சிதறுவதற்கான காலத்தை எதிர்நோக்கி காதல் காத்திருந்தது.
உடையைக் கூட மாற்றாமல் மெத்தையில் விழுந்தவளின் இதயம் பந்தயக் குதிரையை விட வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. அவனது உதடுகள் பட்ட இடம் தீயாய் தகிப்பதை போல் அவளுக்கு ஒரு உணர்வு.
உணர்வுகளை அறிமுகப்படுத்தியவன் அவன் என்றால்..அந்த உணர்வுகளைப் பெற்றுக் கொண்டவள் அவள் அல்லவா…?எப்பொழுதுமே கொடுப்பவனை விட வாங்குபவளுக்குத்தான் உணர்வுகளின் தாக்கம் அதிகம் இருக்கும். மெல்லிய தேகமுடையாளால் அந்த உணர்வுகளைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
‘என்ன மாதிரியான உணர்வுகள் இது…?’ அவள் மனம் தவிக்க ஆரம்பித்தது.
எப்படியோ முட்டி மோதி போராடி அவள் தூங்க ஆரம்பித்த போது விடிந்திருந்தது.
தொடரும்…
