காதல் இதுதானா ? – காதல் 2
காதலாகும் 2 :
“சார்…!உங்களுடைய லாரியை பறிமுதல் செய்திருக்காங்க..அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க…?”,
“தடை செய்யப்பட்ட மருந்துகள் உங்களுக்கு எப்படி கிடைத்தது…?”,
“அந்த மருந்துகளையுடைய உற்பத்தியை நிறுத்தி பல மாதங்கள் இருக்குமே..அதை வைத்து நீங்க என்ன செய்யப் போறீங்க…?”,சரமாரியாய் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருந்தனர் பத்திரிக்கையாளர்கள்.
அவர்களின் முன் அமைதியாய் நின்றிருந்தார் சக்ரவர்த்தி.வெள்ளை நிற வேட்டி சட்டையில்..தங்க பிரேமிட்ட கண்ணாடி அணிந்திருந்தவருக்கு எப்படியும் வயது அறுபதாவது இருக்கும்.வில்லங்கத்தனமான அனுபவ அறிவு அவரது ,முகத்தில் சுடர் விட்டது.
அவர் ஏதோ பேச வாயெடுக்க..வேகமாக ஒருவன் ஓடிவந்து அவரது காலில் விழுந்தான்.
“அய்யா…!என்னை மன்னிச்சிடுங்க அய்யா…”,அவன் கதறிக் கொண்டிருக்க அவன் பின்னாலேயே வந்த சக்ரவர்த்தியின் ஆட்கள் அந்த ஆளைத் தூக்கி நிறுத்தினர்.
“ஏய்..என்னப்பா..நீ எதுக்கு காலில் விழற…?”,அவர் வினவ,
கூட இருந்த ஒரு நபர்,”ஐயா…!எல்லாத்துக்கும் காரணம் இவன்தான்…!நம்மளுடைய லாரியில மருந்தை ஏத்திட்டு வந்ததும் இவன்தான்…!பணத்துக்கு ஆசைப்பட்டு நமக்குத் துரோகம் பண்ணியிருக்கிறான்…!”,அவனை அடித்தபடியே கூறினார்அவர்.
“என்ன சபாபதி இது…?நீ இப்படி பண்ணுவாய்ன்னுநான் நினைக்கவே இல்லை…!நீ செய்து வைத்திருக்கிற காரியம்..என்னுடைய அரசியல் வாழ்க்கையில ஒரு கரும்புள்ளியா மாற போகுது…!”,
“பணத்துக்கு ஆசைப்பட்டு இதை செய்துட்டேன் ஐயா…என்னை மன்னிச்சிடுங்க…!எல்லாத்துக்கும் காரணம் நான்தான்…! இதுக்கும் ஐயாவுக்கு ஒரு சம்பந்தமும் இல்லை…!”,சக்ரவர்த்தியிடம் கை கூப்பி மன்னிப்பு கேட்டவன் பத்திரிக்கையாளர்களிடம் திரும்பி தன் தவறை ஒத்துக்கொண்டான்.
தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த விஸ்வேஷ்வரனின் உதடுகளில் ஒரு மெச்சுதலான புன்னகை வந்தமர்ந்தது.
“சார்…!இதெல்லாம் பண்ணினது சக்ரவர்த்திதான்னு நமக்கு நல்லாவே தெரியும்…!இருந்தாலும்..அவனுக்காக ஒருத்தன் சரண்டராகி அவன் மேல தப்பில்லாத மாதிரி பண்ணிட்டான்…!”,கபிலன் பல்லைக் கடிக்க,
“ஒரு விதத்துல இதுநான் எதிர்பார்த்ததுதான் கபிலன்…!அவன் அவ்வளவு சீக்கிரம் மாட்டக் கூடிய ஆள் இல்லை…!அவனைப் பிடிக்கணும்ன்னா..அவன் மறைமுகமா செய்யற அத்தனை வேலைகளும் நமக்குத் தெரிய வரணும்…!நம்மளுடைய டார்கெட் இதுவல்ல…!தடை செய்யப்பட்ட மருந்துகள்அவனுக்கு எதுக்கு தேவைப்படுது…?அதை வைத்து அவன் என்ன செய்யறான்…?”,ஆழ்ந்த குரலில் கூறியவனின் முகம் தீவிரமான யோசனைக்கு மாறியது.
அவனது யோசனையைத் தடை செய்யும் பொருட்டு அவனது மொபைல் அலறியது.
அதை எடுத்துக் காதுக்கு கொடுத்தவன்,எதிர்முனையில் என்ன சொல்லப்டாதோ,”இல்லல்ல..வீட்டுக்கு வேண்டாம்…!காபி ஷாப்புக்கு வா…!”,என்றவன் ஒரு காபி ஷாப்பைக் குறிப்பிட்டு விட்டு வேகமாக வெளியேறினான்.
அந்த காபி ஷாப்பில் ரிசர்வ் செய்யப்பட்டிருந்த டேபிளில்அமர்ந்திருந்த விஸ்வேஷ்வரனின் முன் ஒரு இளம்பெண் உட்கார்ந்திருந்தாள்.
“என்ன விஷயம் திவ்யா…எதுக்கு என்னை உடனே பார்க்கணும்ன்னு சொன்ன…?”,
“அண்ணா…அந்தப் பத்திரிக்கை விஷயம்..”,
“ம்ப்ச்…அதைப் பத்தி நீ வொரி பண்ணிக்க வேண்டாம்…!அந்த ரிப்போர்ட்டரை நான் வார்ன் பண்ணிட்டேன்..இனி இது மாதிரி எதுவும்நடக்காது…!”,
அவன் கூறவும் அவள் மென்மையாக புன்னகைத்தாள்.சரியாக அந்த நேரம் காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள் யாழ்வி.நுழைந்தவளின் கண்களில் விஸ்வேஷ்வரனும் அவனுடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணும் வந்து விழுந்தனர்.
அவளது இதழ்கள் கேலியாய் வளைந்தன.ஏதோ ஓர்உந்துதலில் சட்டென்று நிமிர்ந்த விஷ்வாவும் யாழ்வியைப் பார்த்து விட்டான்.அவளது கேலிப் புன்னகைஅவன் கண்களிலிருந்து தப்பவில்லை.
புருவம் சுருங்க ஒரு நொடி அவளையே பார்த்தவன் பிறகு தனது பார்வையை திவ்யாவிடம் திருப்பினான்.தோளைக் குலுக்கியபடி யாழ்வியும்நடந்து சென்று இன்னொரு டேபிளில்அமர்ந்து கொண்டாள்.
“அண்ணா…உங்ககிட்ட ஒருவிஷயம் சொல்லணும்…”,
“சொல்லும்மா…!”,
“அது வந்து..எங்க காலேஜ்ல ஏதோ தப்பு நடக்கற மாதிரி தோணுது அண்ணா…!இதுவரைக்கும் இரண்டு பொண்ணுங்க காணாமபோயிருக்காங்க…!விஷயம் வெளியில் வராம காலேஜ் நிர்வாகமே மூடி மறைச்சிருச்சு…!”,
“வாட்…?ரெண்டு ஸ்டூடண்ட்ஸை காணோமே…?பட்..அவங்க பேரண்ட்சைட்ல இருந்து எந்தவொரு கம்ப்ளையண்டும் எங்க டிபார்ட்மெண்ட்டுக்கு வரல…?”,அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
“எனக்கும் அதே சந்தேகம் தான்அண்ணா…!அவங்க பேரண்ட்ஸ் ரொம்ப அமைதியா இருக்காங்க…சொல்லப் போனால் காலேஜ்க்கு வந்து ‘எங்க பொண்ணுங்களை காணோம்’ன்னு ஒரு சண்டைகூட போடல..!”,அவள் கூற கூறஅவனது முகம் யோசனைக்கு மாறியது.
“சரிம்மா..இந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன்…!நீ கிளம்பு..வேற ஏதாவது சந்தேகமா இருந்தால் உடனே எனக்கு போன் பண்ணு…!”,அவன் கூறவும் அவள் அவனிடம் விடைபெற்று விட்டு எழுந்தாள்.
வெளியே செல்லப் போனவள் சரியாக யாழ்வியின் டேபிளைத் தாண்டிச் செல்லும் போது மயக்கம் போட்டு விழுந்தாள்.
“ஏய்..கேர்ள்..என்னாச்சு…?”,பதறியபடி யாழ்வி எழவும்,கூச்சலைக்கேட்டபடி விஸ்வேஷ்வரனும் அங்கு விரைந்து விட்டான்.
ஒரு நொடி சூழ்நிலையை ஆராய்ந்தவன்..சட்டென்று குனிந்து திவ்யாவைத் தூக்கி கொண்டு வெளியேற,யாழ்வியும் அவனைப் பின் தொடர்ந்தாள்.ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் திவ்யாவை அமர வைத்தவன் தன் பின்னால் நின்றிருந்த யாழ்வியை நோக்கி,
“இவளை ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போ…!நான் பைக்ல உங்களை பாலோ பண்றேன்..!”,கூறியபடியே அவன் தனது பைக்கை ஸ்டார்ட் செய்ய,
“ஹலோ சார்…!உங்க காதலியை நீங்க ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டுப் போங்க…!என்னை எதுக்காக இதுல இழுத்து விடறீங்க…?ஐ ஹேவ் மை பெர்சனல் வொர்க்…!”,அவள் அப்படித்தான் நினைத்திருந்தாள் திவ்யாவை அவனுடைய காதலி என்று.
“ஏய்ய்..இடியட்…!அவள் ஒண்ணும் என்னுடைய லவ்வர் இல்லை…!ஒரு பொண்ணு மயக்கம் போட்டு விழுந்திருக்கிறாள்..இன்னொரு பொண்ணா அவளுக்கு ஒரு ஹெல்ப் கூட பண்ணமாட்டியா…?”,அவன் கூறவும் அவள் திரும்பி திவ்யாவை பார்த்தாள்.
மயக்கத்துடன்ஆட்டோவில் படுத்திருந்தவளைப் பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது.எதுவும் பேசாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.ஆட்டோ டிரைவரிடம் ஒரு மருத்துவமனையைக் குறிப்பிட்டுஅங்கே போகச் சொன்னவன்..பைக்கில்அவர்களைப் பின்தொடர்ந்தான்.
மருத்துவமனையில் திவ்யாவை பரிசோதித்த மருத்துவர்,”சாதாரண மயக்கமாகத்தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்…!ஆனால்,திடீர்ன்னு ஏன் மயக்கம் போட்டு விழுந்தாங்க…?எதுக்கும்ஒரு ப்ளெட் டெஸ்ட் பண்ணிக்கலாம்…!”,என்றவர் அங்கிருந்த நர்ஸைஅழைத்து சில பரிசோதனைகளை செய்யுமாறு கூறிவிட்டு வெளியேறினார்.
அவளுக்கு என்னவானது என்று தெரியாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்வதற்கு யாழ்விக்கு மனம் வரவில்லை.எனவே,அவளும் காத்திருந்தாள்.
சில மணி நேரங்களுக்குப் பிறகு மருத்துவ அறிக்கையுடன்உள்ளே நுழைந்தார் அந்த மருத்துவர்.திவ்யாவும் அப்பொழுதுதான் கண் விழித்திருந்தாள்.
“ஆர் யூ ஆல்ரைட்…?”,அந்த மருத்துவர் வினவ,
“யெஸ் டாக்டர்…!இப்போ கொஞ்சம் பரவாயில்லை…”,என்றவள் விஷ்வாவை பார்த்து,
“ஸாரி அண்ணா…!என்னால உங்களுக்குத்தான் சிரமம்…”,என்றாள் குரலில் எட்டிப்பார்த்த குற்ற உணர்வுடன்.
‘அண்ணாவா…?’,சிறு அதிர்ச்சியுடன் யாழ்வி திரும்பி விஷ்வாவைப் பார்க்க..ஒரு நொடி அவள் மீது அழுத்தமாகத் தனது பார்வையை படிய வைத்தவன் பிறகு மருத்துவரை நோக்கி,
“நாங்க கிளம்பலாமா…?”,என்று வினவினான்.
“ஒரு நிமிஷம் மிஸ்டர்.விஷ்வா…!திவ்யாவோட ப்ளெட் டெஸ்ட்ல அவங்களுடைய இரத்தத்துல போதை மருந்து கலந்திருக்கிறதா மெடிக்கல் ரிப்போர்ட் வந்திருக்கிறது…!”,அவர் கூறவும் அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
“வாட்…போதை மருந்தா…?டாக்டர்..எனக்கு அந்தப் பழக்கம் எல்லாம் இல்லை…!”,திவ்யா பதறினாள்.
“உங்களுக்கு இந்த மயக்கம் அடிக்கடி வருதா மிஸ்.திவ்யா…?”,அவர் வினவவும் அவள் சற்று யோசித்தாள்.
“ஆமா டாக்டர்…!இப்பவெல்லாம் அடிக்கடி மயக்கம் வருது…!ஆனால்..எனக்கு போதை மருந்து பழக்கமெல்லாம் இல்லை…!”,
“பட்..உங்களுடைய மெடிக்கல் ரிப்போர்ட் வேற மாதிரி சொல்லுதே…?”,மருத்துவர் கூறிக் கொண்டிருக்கும் போதே யாழ்வி இடை புகுந்தாள்.
“டாக்டர்…!இதே மாதிரிதான் என்னுடைய பிரெண்டோட தங்கச்சிக்கும் அடிக்கடி மயக்கம் வந்து..செக்பண்ணி பார்த்ததுல அவளுடைய இரத்தத்திலும் போதை மருந்து கலந்திருக்கிறதா ரிப்போர்ட்வந்துச்சு…!”,அவள் கூறவும் அனைவரதுமுகங்களிலும் யோசனை.
சிறிது நேரம் கழித்து மருத்துவரே தொடர்ந்தார்.
“சில சமயங்கள்ல குறிப்பிட்ட உணவுப் பொருட்களை நாம தொடர்ந்து எடுத்துக்கும்போது இந்த விளைவுகள் ஏற்படலாம்…!அந்த உணவுப் பொருட்களைத் தயாரிக்கிற பிராண்ட் இந்த மாதிரி போதைமருந்தை அந்த உணவுகள்ல கலக்கலாம்…!இதுதான்னு நான் சொல்ல வரல..மே பீ நடக்கலாம்…!”,என்றவர் திவ்யாவிடம் திரும்பி,
“நீங்க என்ன சாப்படறீங்க அப்படிங்கறதுல கொஞ்சம் கவனமா இருங்க…!எந்த பிராண்ட் உணவுப் பொருட்களை அடிக்கடிஎடுத்துக்கறீங்க அப்படிங்கறதை நோட் பண்ணுங்க…!மறுபடியும் மயக்கம் வந்தால் வாங்க..பார்த்துக்கலாம்…!”,என்றபடி வெளியேறி விட்டார்.
திவ்யாவை ஆட்டோவை பிடித்து அனுப்பி வைத்து விட்டு..யோசனையுடன் தனது பைக்கை கிளப்பிய விஸ்வேஷ்வரனிடம் வந்து நின்றாள் யாழ்வி.
“சார்…!ஐ ஆம்ஸாரி…”,அவளது குரலில் தவறுசெய்து விட்டோம் என்ற குற்றவுணர்வு அப்பட்டமாய் வெளிப்பட்டது.
யாழ்வி…!தனது பத்திரிக்கைத் தொழிலை மிகவும் நேசிக்கும் பெண்.உண்மை என்றால் யாரை எதிர்க்கவும் தயங்க மாட்டாள்.அவள்ஆராய்ந்து மக்களுக்கு கொண்டு சென்ற பல உண்மைகள்..அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்திருக்கின்றன.
இன்று முதல் முறையாக ஒரு தவறான செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்த்து விட்டோம் என்பது அவளுக்கு மிகப் பெரும் வருத்தத்தைஅளித்தது.
அவள் மன்னிப்பு கேட்கவும் அவள் முகத்தைப் பார்த்தவன்ஒன்றும் பேசாமல் வண்டியைக் கிளப்பினான்.
“நீ சொன்ன பெண்ணையும் கவனமா இருக்க சொல்லு…!அவங்க சாப்பிடற உணவுப் பொருட்களை நோட் பண்ண சொல்லு..அண்ட்..உனக்குஏதாவது சந்தேகமா இருந்தால் கால் மீ…!நீ பாட்டுக்கு அவசரப்பட்டு பத்திரிக்கைக்கு கொண்டு போயிடாதே..அண்டர்ஸ்டான்ட்…?”,உரைத்தவன் தனது வண்டியைக் கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.
அவன் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு மனதில் சிறு வியப்பு தோன்றியது.அவனது கம்பீரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள்..ஆனால்,இன்றுதான் நேரில்பார்க்கிறாள்.அவனது ஆளுமையும் கம்பீரமும் அவளைக் கவர்ந்தது என்னவோ உண்மைதான்.
தொடரும்…
