காதல் இதுதானா ? – காதல் 21

காதலாகும் 21:

“பீ கேர்ஃபுல் கார்த்திக்…!ஒரு பொண்ணு மிஸ் ஆனாலும் நமக்கு பல கோடி லாஸ்…!”,பால்கனியில் நின்றபடி யாருடனேயோ போனில் பேசிக் கொண்டிருந்தான் வேத வர்ஷன்.

கணவன் ஈடுபடும் மாபெரும் அராஜக செயலை பற்றி அறியாதவளாய் உள்ளே படுக்கையறையில் நிச்சலனமாய் நித்திரை கொண்டிருந்தாள் கண்மணி.

“மொத்தம் பத்து பொண்ணுங்க…!அந்த கண்டெய்னர் சேஃப்பா போய் சேரணும்…உள்ளே மெஷின்களுக்கான ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கிறதா ரிப்போர்ட் காண்பிச்சிருக்கிறேன்…!எந்த போலீசுக்கும் சந்தேகம் வராது…!நீ கூட இருந்து பார்த்துக்கோ…!”,பேசி விட்டு போனை அணைத்தவன் கண்கள் பண வெறியில் மின்னின.

வேத வர்ஷன்…பெயரளவில் மட்டும்தான் அவன் ஒழுக்க சீலன்.அவன் செய்யும் காரியங்கள் அனைத்தும் கொடூரமானவை.கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட மூன்று கன்டெய்னர்கள் அவன் இந்த மாதிரி வெளிநாட்டுக்கு அனுப்பியிருக்கிறான்.

அத்தனையும் இளம் பெண்கள். இவன் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு அவ்வளவாக குடும்ப பின்புலம் இருக்காது. ஒரு சிலர் ஆசிரமத்தில் வாழ்பவர்களாக இருப்பர்..இவ்வளவு ஏன் இவனது கல்லூரியிலிருந்தே சில பெண்களை அனுப்பி இருக்கிறான்.

அனைவரும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவர்.வெளிநாடுகளில் இதுபோல கன்னி கழியாத இளம் பெண்களுக்கு மவுசு அதிகம்.பல புரோக்கர்களின் கை மாறி.. உடல் தின்னும் பிணந்தின்னி கழுகுகளின் காம இச்சைக்கு இந்தப் பெண்கள் பலியாவர்.

ஒரு பெண் காணவில்லை என்றால்..ஏன் என்று கேட்பதற்கு நாதி இல்லாத பெண்களைத்தான் இவன் தேர்ந்தெடுப்பான்.அப்படியே யாராவது கேட்டு வந்தாலும் பணம் என்னும் அரக்கன் அவர்களை அடக்கி விடுவான்.

இதன் மூலம் இவன் ஈட்டும் வருமானம் அதிகப்படிதான். வெளிநாட்டில் இருந்தவன் தன் தந்தையின் மூலமாக தமிழ் நாட்டிலிருந்து பெண்களை வெளிநாடுகளுக்கு சப்ளை செய்து கொண்டிருந்தான்.தந்தை சிறைக்கு செல்லவும் இந்தியா வந்தவன் இங்கிருந்து கொண்டே இந்த கேடு கெட்ட செயலை செய்து கொண்டிருக்கிறான்.

“தூங்காம இங்கே என்ன பண்றீங்க…?”,முதுகுக்கு பின்னால் ஒலித்த மனைவியின் குரலில் திரும்பியவனின் முகம் காதலில் கனிந்திருந்தது.

இப்படிப்பட்ட கொடூரனுக்குள்ளும் காதல் என்னும் தேவன் ஒளிந்திருந்தான்.

“ஒரு இம்பார்டன்ட் போன் கால் பேபி…!”,

“பேசியாச்சா…?”,

“ம்..!”

“அப்போ வந்து படுங்க…! நேரம் கெட்ட நேரத்துல அப்படி என்னதான் வொர்க்கோ…”,அலுத்துக் கொண்டவளை கைகளில் அள்ளிக் கொண்டவன்..

“நேரங்கெட்ட நேரத்துலதான் இந்த வொர்க்கை செய்யணும்…!”,சரசமாக மனைவியுடன் ஒன்றியவன் அவளை படுக்கையில் கிடத்தி அவள் மேல் படர்ந்தான்.

“தூக்கம் வருதுங்க…”சிணுங்கினாலும் அவள் அவனை அள்ளி அணைக்கத் தவறவில்லை.

கணவன் கேட்டதையெல்லாம் அள்ளி அள்ளி கொடுத்தவளின் காதல் கணவன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த கொடூரன் என்று தெரிய வரும் போது அந்தக் காதல் என்ன செய்யுமோ…?

******

மெல்ல மெல்ல ஆதவன் கிழக்கு வானில் உதயமாகிக் கொண்டிருந்தான். அதிசயத்திலும் அதிசயமாக அன்று யாழ்விக்கு முதலில் விழிப்பு வந்து விட்டது.

விழித்தவளின் நாசி தனக்கு மிகவும் பழக்கமான ஆண்மையின் வாசனையை நுகர..முகமோ திம்மென்ற எதன் மீதோ புதைந்திருந்தது.கால்கள் வேறு வெகு உரிமையுடன் அவனைக் கட்டித் தழுவியிருக்க..முழுதாக தூக்கம் கலைந்து கண் விழித்தவளுக்குத் தான் அவனைக் கட்டிக் கொண்டு தூங்கியிருக்கிறோம் என்பது புரிந்தது.

‘ஓ..காட்…!’,முகம் குங்குமமாய் சிவந்து விட தலையணைகளைப் பார்த்தால் அது ஆளுக்கொரு மூலையில் சிதறியிருந்தது.

நேற்று ஒரு மாதிரியாக அவன் பார்த்த பார்வைக்கான அர்த்தம் அவளுக்குப் புரிந்தது. ‘கடவுளே…தினமும் இப்படித்தான் தூங்குவேன் போலவே…’,வெட்கம் பிடுங்கித் தின்ன எழ முயன்றவள் அவனிடம் அசைவை உணர்ந்து அப்படியே படுத்து விட்டாள்.

‘எழுந்திருச்சுட்டாரு போல… யாழ்வி…!அப்படியே தூங்கற மாதிரி மெயின்டெய்ன் பண்ணு…!’,மனதுக்குள் பேசிக் கொண்டே அவள் விழிகளை இறுக மூடி படுத்திருந்தாள்.

கண்களை விழித்தவன்,தன் மேல் சயனித்திருக்கும் மனையாளை பார்த்து புன்னகைத்துக் கொண்டான்.

“நீ ஊர்ல இருந்த நாட்கள்ல நான் இதை ரொம்பவும் மிஸ் பண்ணினேன்…!”,வாய் விட்டுக் கூறியவன் சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தான்.அவளுக்குத்தான் அவஸ்தையான உணர்வு.கிட்டத்தட்ட தன் முழு உடலும் அவன் மேல் அப்பியிருக்கிறது.இதயம் வேறு பட படவென அடித்துக் கொண்டது.

சிறிது நேரம் அப்படியே படுத்திருந்தவன் பின் நேரமாவதை உணர்ந்து.. அவளைத் தள்ளிப் படுக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இரு கைகளாலும் அவள் இடையைப் பற்ற..அவஸ்தையாய் நெளிந்ததில் அவள் அணிந்திருந்த ஷர்ட் வடிவிலான இரவு உடை சற்று மேலேறியிருந்தது.

இவனது சூடான கரங்கள் நேரிடையாய் அவளது வெற்றிடையில் பதிந்து விட,”ஆ..அம்மா…!”, துள்ளிக் குதித்து எழுந்து அமர்ந்தாள் அவள்.

அவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.பிறகுதான் புரிந்தது தூங்காமல் நடித்திருக்கிறாள் என்று.

“நீ தூங்கலையா…?”,கண்டு கொண்டாளோ என்ற சிறு அதிர்ச்சியுடன் அவன் வினவ,

‘இல்லை’தலையாட்டினாள் அவள்.

அவனும் எழுந்து அமர்ந்தான்.

“உன்னைத் தள்ளி படுக்க வைக்கலாமேன்னு தான் தொட்டேன்…!”,விளக்கம் கூறியவனின் பார்வை அவனையும் அறியாமல் அவளது இடையில் பதிந்தது.

விதிர்த்துப் போய் எழுந்து அமர்ந்ததில் அவளது சட்டை இன்னும் மேலேறித்தான் இருந்தது.பாலை கண்ட பூனையாய் அவனது பார்வை வேறு அவளது இடையையே மொய்க்க.. அதை கண்டு கொண்டவள் சட்டையை இழுத்து விட்டு மூடி மறைத்தாள்.

அவள் மூடி மறைத்தத்தில் சட்டென்று அவள் முகம் நோக்கியவன், “ரொம்பவும்தான்”, என்று உதட்டை சுளிக்க,

“அங்கே இங்கேன்னு பார்த்தீங்க..கண்ணை நோண்டிடுவேன்…!”,அவள் கூறியது வேறு அவனை உசுப்பேற்றி விட்டது.

“ஓ…”,தாடையைத் தடவியபடியே அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்..அவள் எதிர்பார்க்காத நேரத்தில் இரு கைகளாலும் அவள் இடையைப் பற்றித் தூக்கி கீழே இறக்கி விட்டான்.

“ஏய்..என்ன பண்றீங்க…?”,கூச்சலிட்டவளின் வெற்றிடையை அழுத்தமாகப் பற்றித் தன்னை நோக்கி இழுத்தவன்,

“அப்படித்தான் பார்ப்பேன்.. உன்னால என்ன பண்ண முடியுமோ..பண்ணிக்கோ… போடி…!”,கண்களை பார்த்தபடியே கூறியவனின் கரங்கள் அவளது இடையை அழுத்தமாக கிள்ளி விட்டுத்தான் அங்கிருந்து அகன்றது.

சன்ன சிரிப்புடன் அவன் குளியலறைக்குள் புகுந்து விட ‘ங்கே’ என விழிக்கத்தான் முடிந்தது அவளால்.

அன்று முழுவதும் அலுவலகத்தில் மந்திரித்து விட்ட கோழி போல்தான் சுற்றிக் கொண்டிருந்தாள் யாழ்வி.

இதில் அவளது தோழி ப்ரியாவின் தொல்லை வேறு.

“என்னடி…ஒரு மார்க்கமா திரியற…?ஏ.சி.பி சார் கிஸ் அடிச்சிட்டாரா என்ன…?”,கண் சிமிட்டியபடி அவள் வினவ,

“அய்ய..ச்சீய்…!”,வெட்கத்தில் முகத்தை சுளித்தாளா..இல்லை..கோபத்தில் சுளித்தாளா என்பது அவள் மட்டுமே அறிந்த ரகசியம்.

“ச்சீய்யா…?கிஸ் அடிக்கிறது உனக்கு ச்சீய்யா…?அது ஒரு ஹெவன் ஃபீல் தெரியுமா…?”,கண்கள் செருக அரை மயக்க நிலையில் இருப்பவளை போல அவள் கூற,

யாழ்விக்கு ஏனோ மனம் குறுகுறுத்தது.

“உண்மையாலுமா…?”,என்று தன்னை மீறி வேறு கேட்டு விட்டாள்.

“ம்..ஆமாம் டி…!உனக்குத் தெரியாதா…? உனக்குத்தான் கல்யாணமே முடிஞ்சிடுச்சே..இந்நேரம் பல வேலைகளை பார்த்திருப்பீங்க…”,

“ச்சீய்…அதெல்லாம் ஒண்ணும் இல்லை டி…!”,யாழ்வியின் முகம் செங்கொழுந்தாய் சிவந்து போனது.

“ஏய்.. நடிக்காதே டி.! ஏ.சி.பி சார் இன்னுமா அமைதியா இருக்கிறாரு…?” அவளது தோழி நம்ப மறுத்தாள்.

“ம்ப்ச்…!உண்மையாலும் தான் டி..! நான்தான் வேண்டாம்ன்னு மறுத்திட்டேன்…!”,ஏதோ உளறிக் கொட்டி விட்டோம் இனி சமாளிப்போம் என்ற நிலையில் அவளும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள்.

“அறிவு கெட்டவளே…!எதுக்கு வேண்டாம்ன்னு சொல்ற…நல்லாத்தான் இருக்கும்…”,என்று ஆரம்பித்தவள் அவளுக்கு ஒரு A பிலிமை ஓட்டிவிட்டுத்தான் ஓய்ந்தாள்.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவாறு தோழி கூறுவதையே வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள் யாழ்வி.

“அடுத்த டைம் உன் புருஷன் கேட்டால்.. ஓகே சொல்லிடு…!வீட்டு சாப்பாடு கிடைக்கலைன்னா ஆம்பிளைங்க ஹோட்டல் சாப்பாடு சாப்பிட போயிடுவாங்க…!”,என்ற அறிவுரை வேறு.

‘ம்க்கும்..என் புருஷன் வீட்டு சாப்பாடே கேட்கறது இல்ல..இதுல ஹோட்டல் சாப்பாடு வேற..’,மனம் நொடித்துக் கொள்ள,

‘ஓ..கேட்டா கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பியா…?’,இன்னொரு மனம் வேறு வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தது.

வீட்டிலேயும் அப்படியே திரிந்தவளைக் கண்டு அவன் விசாரித்தான்.

“என்னாச்சு யாழ்வி…? உடம்பு சரியில்லையா…?”,

“ஒ..ஒண்ணுமில்ல…!”, சமாளித்தவள் எப்படியோ சமைத்து முடித்தாள்.

இரவு பாத்திரங்களைத் துலக்குவது விஷ்வாவின் வேலை.இவள் அடுப்பு மேடையை சுத்தம் செய்து விட்டு ஹாலுக்கு வந்தாள்,

‘அவர் வர்ற வரைக்கும் டிவியாச்சும் பார்ப்போம்…’,எண்ணியபடி தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க..அதில் ஆங்கிலப் பாடல் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.

கதாநாயகன் கதாநாயகியை முத்தமிட்டுக் கொண்டிருக்க..இவள் ‘ஆ’வென்று வாயைப் பிளந்தபடி அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேலையை முடித்து வெளியே வந்தவன் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் பாடலையும்..அதை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியையும் பார்த்து விட்டான்.

தொலைக்காட்சியில் வேறு முத்தக்காட்சி தொடர்ந்து கொண்டிருந்தது.விட்டால் அவள் இதழ்களுக்குள்ளேயே சென்று விடுவான் போல அந்தளவிற்கு அவன் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்..

“உனக்கும் வேணுமா…?”,கிசு கிசுப்பாகத் தன் காதருகே ஒலித்த குரலில் தூக்கி வாரிப் போட நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“எ..என்ன…?”,அவள் திக்கித் தடுமாற,

“உனக்கும் வேணுமான்னு கேட்டேன்…?”,அவனது பார்வை விஷமத்துடன் அவளையே மொய்த்தது.

“வே..வேண்டாம்…!”,இதயம் படபடக்க தலையாட்டியவள் பிறகுதான் கவனித்தாள் அவன் கையிலிருந்த சாக்லேட்டை.

“ஓ..இதைத்தான் கேட்டீங்களா…?”,அவள் பார்வை அவன் கடித்த சாக்லேட்டில் பதிய,

“ம்..ஆமாம்..! நீ எதை நினைச்ச…?”,குறும்பாய் சாக்லெட்டை சப்புக் கொட்டியவன் அவளிடம் ஒரு துண்டை நீட்ட,

“ஒ..ஒண்ணும் நினைக்கல…!”,தடுமாற்றத்துடன் கூறியவள் அவன் கொடுத்த சாக்லெட்டை ருசித்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவனது பார்வை அவளது இதழ்களில் நிலைத்தது.அவனுக்கு வெகு நாட்களாகவே அந்த ஆப்பிள் உதடுகளின் மீது ஒரு கண்தான். இயற்கையாகவே சிவந்திருந்த அவளது இதழ்களின் மென்மையை சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது போல் தாபம் எழுந்தது.

எழுந்தவன் அவளருகே குனிந்து, “நான் வேணுமான்னு கேட்டப்போ நீ எதை நினைச்சாயோ..அதை கொடுக்கவும் நான் தயார்தான்…!”,கிசுகிசுப்பாக கூறியவன் இரண்டு இரண்டு படிகளாகத் தாவி மேலே சென்று விட்டான்.

விழிகள் தெறித்து விடுவதைப் போல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் அவள்.

‘ஆத்தி…’,மனம் வேறு பட படவென்று அடித்துக் கொண்டது.

எப்படியோ இருவரும் மெல்ல மெல்ல நெருங்க ஆரம்பித்திருந்தனர்.

*****

அன்று ஞாயிற்றுக்கிழமை.விஷ்வா தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க..யாழ்வி சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏ.சி.பி சார்…!”,சமையல் அறையிலிருந்தே அவள் குரல் கொடுக்க, தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கடுப்பானது.

அவனும் எத்தனையோ முறை சொல்லி விட்டான் தான்..இப்படி அழைக்காதே என்று…!கேட்க மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தாள் அவள்.

ஏனோ அந்த அழைப்பு அவனுக்கும் அவளுக்கும் இடையே இடைவெளியை உண்டாக்குவது போல் அவன் உணர்ந்தான்.அது மட்டும் காரணம் இல்லை..அவன் அடி மனது அவளிடமிருந்து தனக்கே தனக்கான பிரத்யேக அழைப்பை எதிர்பார்த்தது.

“ஏ.சி.பி சார்…!”,அவள் மீண்டும் ஏலம் போட,

‘இவளை…’,பல்லைக் கடித்தவன் ரிமோட்டைத் தூக்கி எறிந்து விட்டு சமையலறைக்குள் நுழைந்தான்.

அவள் கிரைண்டரில் மாவு ஆட்டிக் கொண்டிருந்தாள். நுழைந்த வேகத்தில் கிரைண்டரை நிறுத்தியவன் அவளை இழுத்து இதழ்களைக் கவ்விக் கொண்டான்.

“ஏ.சி.பி சா…”,அவளது வார்த்தைகள் அவனது உதடுகளுக்குள் மறைந்து போனது.

இரு கைகளாலும் அவள் இடையைப் பற்றி அலேக்காகத் தூக்கி அருகிலிருந்த சமையல் திட்டில் அமர வைத்தவன்..முத்தமிடுதலை மட்டும் நிறுத்தவே இல்லை.

உச்சக்கட்ட அதிர்ச்சியில் கரு விழிகள் வெளியே வந்து விழுந்து விடும் எனும் அளவிற்கு அவள் விழிகள் விரிந்தன. இதயம் துடிக்கும் சத்தம் அவள் காதில் கேட்டது.

சமையல் திட்டில் அமர வைக்கவும் பிடிமானத்திற்காக துளாவியவளின் கரங்கள் பற்றுக்கோலாய் அவனது முடியை இறுகப் பற்றிக்

கொண்டன.அவளது இடை கன்றிச் சிவக்கும் அளவிற்கு இறுக்கிப் பிடித்திருந்தவன் வன்மையாய் அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

அவனது முத்தத்தின் வேகத்தைத் தாங்காமல் அவள் பின்னால் சரிய..அவன் விடுவதாக இல்லை.ஒரு கரம் உயர்ந்து அவளது பின்னந்தலை முடியை பற்றித் தன் இதழ்களுக்குள் அவளைப் புதைத்தது.இன்னொரு கரமோ அவள் அணிந்திருந்த ஷர்ட்டை விலக்கி வெற்றிடையில் அழுந்தப் பதிந்து தன்னை நோக்கி இழுத்தது.

பெண்ணவளின் நிலையோ சொல்ல முடியாத தவிப்பில் இருந்தது. முதல் இதழ் முத்தம்…! அவளது உயிரை உருக்கி அடி வயிற்றில் சூடான உணர்வுகளைத் தோற்றுவித்தது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை அந்த உணர்வுகள் வேக வேகமாகப் பாய்ந்து காரிகையவளின் உணர்வுகளைத் தூண்டி விட..அவளது கால்கள் அவளையும் அறியாமல் அவனை கிடுக்குப் பிடி போட்டு தன்னோடு இறுக்கியது.

மனையாளின் இந்த மாற்றத்தில் அவனது வேகம் முரட்டுத்தனமாக மாறியது.வெற்றிடையில் ஊர்ந்த அவனது கரங்கள் சற்று மேலேறி தனது பயணத்தைத் தொடர ஆரம்பிக்க..அவள் வியர்த்து விறுவிறுத்துப் போனாள்.

‘ஹம்மா…’,மனம் வேறு அரற்ற அவனை விலக்கித் தள்ளவும் கைகள் வரவில்லை.அவனோடு ஒன்றவும் நாணம் விடவில்லை.

அவஸ்தையாய் நெளிந்தவளின் கரம் பட்டு அருகிலிருந்த பாத்திரம் கீழே விழ..இருவருமே பட்டென்று நினைவுக்கு வந்தனர்.

அவளை விட்டு விலகியவன் தன் சிகையை அழுந்தக் கோதிக் கொண்டான்.அவளோ உணர்ச்சிகளின் பிடியில் இதழ்களை கடித்து அப்படியே அமர்ந்திருந்தாள்.

அவளது அமைதியில் அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.இவனது கரங்களின் கைங்கரியத்தில் அவளது சட்டை கசங்கிப் போய் கிடந்தது. ஏற்கனவே சிவந்திருக்கும் இதழ்கள் இவனது முரட்டுத்தனத்தில் படாத பாடு பட்டு இரத்த நிறம் கொண்டிருந்தது.

அவனது உணர்வுகள் அவனது பேச்சை மீறி தறிக்கெட்டு பாய்ந்தன.

“இனி ஏ.சி.பி சார்ன்னு கூப்பிடுவ…?”,மிரட்டலாய் வினவியவனின் விரல்கள் அவளது இதழ்களைப் பிடித்து சுண்டி விட்டது.

“ஷ்..ஆ…!”,வலியில் முனகியவளின் தோற்றம் கூட சிருங்காரமாய் இருக்க,

“இனி மேலும் அமைதியா இருக்க முடியும்ன்னு எனக்குத் தோணல டி…!”அவளது காதருகே குனிந்து கிசுகிசுப்பாக கூறியவன் வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றான்.

அவனது டீ ஷர்ட்டிலும் தலையிலும் இவள் கையிலிருந்த மாவு இடம் பெயர்ந்திருந்தது.

அன்று மதியம் இருவருமே உண்ணவில்லை. உணர்ச்சிகளின் பிடியில் மூழ்கி இருந்தவர்களுக்கு உணவு தேவைப்படவில்லை.அவள் படுக்கையறையில் தஞ்சம் புகுந்து விட..இவன் ஹால் சோபாவில் கவிழ்ந்து உறங்கி விட்டான்.

தொடரும்…

❤️ Loading reactions...
3 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page