காதல் இதுதானா ? – காதல் 30 (final )

ஹாய் ப்ரெண்ட்ஸ்..

கதை முடிந்தது. உங்கள் கருத்துக்களை சொல்லிட்டுப் போனால் எனக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்.படிச்சவங்க கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க ப்பா.. 🌹

விரைவில் அடுத்த கதையுடன் உங்களை சந்திக்கிறேன். ❤️

காதலாகும் 30:

வேத வர்ஷன்..தன் தவறு மொத்தத்தையும் உணர்ந்து கொண்டான். சட்டத்தின் பிடியில் அவனுக்கு சிறை தண்டனை கிடைத்தது.அவன் மனைவி கொடுத்த தண்டனையை விடவா அவனுக்கு இந்த சிறை தண்டனை வலியை கொடுத்து விட போகிறது…?எனவே, மகிழ்ச்சியுடனேயே அதை வரவேற்றான்.

சிறைக்கு செல்வதற்கு முன் தன்னால் விற்கப்பட்ட மொத்த பெண்கள் பற்றிய விபரங்களையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தான்.விஸ்வேஷ்வரன் தலைமையிலான அந்தக் குழு தீவிரமாக உழைத்து மொத்த பெண்களையும் பத்திரமாக மீட்டு வந்து விட்டனர்.

மீட்டு வந்து விட்டாலும் உடலளவிலும் மனதளவிலும் அவர்கள் அடைந்த வேதனைகள் அதிகம்தான்.அந்தப் பெண்களை மீட்டு மீண்டும் பழைய வாழ்க்கையை அவர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்பதற்காக ஒரு மிகப் பெரிய இயக்கத்தையே வேத வர்ஷன் உருவாக்கினான்.

அவன் சிறை சென்று விட,தனது லாயர் மூலம் அனைத்தையும் கவனித்துக் கொண்டவன்..மேற்பார்வை பார்க்கும் பொறுப்பை தனது மனைவியிடம் ஒப்படைத்தான்.

அவள் அவனிடம் பேசுவதில்லை தான். இந்தப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்கு தாமும் ஒரு காரணம் என்பது அவள் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.எனவே அவர்களது மறு வாழ்விற்கான பொறுப்பை அவள் எடுத்துக் கொண்டாள்.

படிக்க விரும்பும் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட்டது. வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்பை பெற்றுத் தந்தது.அந்தப் பெண்களும் மெல்ல மெல்ல கடந்த கால இருளில் இருந்து மீண்டு வர ஆரம்பித்தனர்.

கணவன் சிறையில் இருப்பது அவளுக்கு மிகப் பெரும் வேதனையைத் தந்தது தான்.என்னதான் இருந்தாலும் அவனை உண்மையாய் காதலித்தவள்..காதலிப்பவள் ஆயிற்றே…?

இருவரின் காதலும் தள்ளி இருந்து ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டது.

 

ஐந்து வருடங்களுக்குப் பிறகு…

”அம்மா…!சீக்கிரம் வாங்க…அப்பா சரவெடி வைக்க போறாங்க…!”,மூன்று வயது மகன் மித்ரேஷ்வரன் கத்தினான்.

”அம்மா… நீங்க மெதுவா வாங்க.. அப்பா வெயிட் பண்ணுவாங்க…”, மித்ரேஷ்வரனின் இரட்டையான லிங்கேஷ்வரன் கத்தினான்.

விஸ்வேஷ்வரன் – யாழ்வி தம்பதியின் செல்வ புதல்வர்கள்தான் இந்த இரட்டையர்கள்.

எப்பொழுதும் விஷ்வா சொல்லிக் கொண்டே இருப்பான்.. “எனக்கு டிவின்ஸ் வேணும்…”,என்று.

யாழ்வி கூட கிண்டலடிப்பாள், “நம்ம கையில எதுவும் இல்லை ஏ.சி.பி சார்…!நாம முயற்சி மட்டும்தான் பண்ண முடியும்..பலன் அந்த கடவுள்தான் கொடுக்கணும்..”,கூறும் போதெல்லாம் அவளை அணைத்து கட்டிலறை பாடத்தை வஞ்சணையில்லாமல் நடத்தி முடிப்பவன்,

‘’கண்டிப்பா நமக்கு டிவின்ஸ்தான்..”, என்று கண்ணைச் சிமிட்டுவான்.

நாட்கள் தள்ளிப் போய் கர்ப்பத்தை வீட்டிலேயே உறுதி செய்த போது கூட அவன் உறுதியாக கூறினான் ‘டிவின்ஸ்’ என்று.

ஸ்கேன் பரிசோதனையின் முடிவில்,”கங்கிராட்ஸ்…!யூ ஆர் ப்ரெக்னென்ட் வித் டிவின்ஸ்…!”,அந்த மருத்துவர் கூற அவளுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

“எப்படி டாக்டர்…?”,அவள் வாயை பிளக்க,

”யாழ்வி…எப்படி பேபி வரும்ன்னு உங்க ஹஸ்பெண்ட்கிட்ட கேளுங்க..ஹி வில் எக்ஸ்ப்லெய்ன்…அண்ட் அவரு எக்ஸ்ப்லெய்ன் பண்ணாமலேயா  உங்களுக்கு பேபிஸ் வந்துச்சு…?” அந்த மருத்துவர் குறும்பாய் சிரிக்க அவளுக்கும் வெட்கம் பிடுங்கித் தின்றது.

மகள் இரட்டைக்கருவை சுமக்கிறாள் என்று தெரிந்தவுடன் கலாவதி இங்கேயே வந்து விட்டார். விஸ்வேஷ்வரனோ உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.

மசக்கையை படுத்தலுடன் எதிர்கொள்ளும் பெண்களுக்கு மத்தியில் இவள் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டாள். தாய்மை என்பது வரமல்லவா…வலித்தாலும் சரி.. பிள்ளை உதைத்தாலும் சரி இரண்டையுமே அவள் ஆரவாரத்துடன்தான் வரவேற்றாள்.

எப்படியோ பிள்ளைகளும் பிறந்து இன்று மூன்று வயதாகி விட்டது. மூத்தவன் மித்ரேஷ்வரன் சரியான அப்பா கோந்து. சின்னவன் லிங்கேஷ்வரன் அம்மாவின் செல்லப்பிள்ளை.

”இதோ வந்துட்டேன்…!”,என்றபடியே ஆஜரானாள் யாழ்வி.

“பார்த்து வா டி…உள்ள என் பொண்ணு இருக்கிறாள்…”,விஷ்வாவின் பார்வை காதலுடன் நிறை மாதமாய் இருந்த மனைவியைத் தழுவியது.தற்போது அவர்களின் மூன்றாவது வாரிசை சுமந்து கொண்டிருந்தாள் யாழ்வி.

இரட்டைக் குழந்தை பிறந்த உடனேயே இன்னொரு குழந்தை வேண்டாம் என்று அவள் மறுத்தாள்தான். இரண்டு குழந்தைகளே போதும் என்று அவனிடம் வாதாடி பார்த்தாள்.அவன்தான் பிடிவாதமாய் நின்று விட்டான்.

”நான் யாரும் இல்லாம தனியாகவே வளர்ந்தவன் டி…!என் வீட்டுல கல கலன்னு நிறைய குழந்தைகள் இருக்கணும்ன்னு ஆசைப்படறேன்…! உன்னால என் உணர்வுகளை புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல டி…நீ என்னுடைய உயிர்.. உனக்கும் எனக்குமான பந்தம் இந்த ஜென்மத்தோட முடிஞ்சிடப் போவதில்லை.ஆனால்.. குழந்தைகள்..என்னுடைய இரத்தத்துல உருவாகிற எனக்கே எனக்குன்னு சொந்தமா கிடைக்கப் போகிற உறவு…எனக்கு அட்லீஸ்ட் மூணு குழந்தைகளாவது வேணும்…!அதிலேயும் கண்டிப்பா ஒரு பொண்ணு வேணும்…”,நெகிழ்ச்சியுடன் கூறியவனின் பதிலில் அவள் தன் பிடிவாதத்தைத் தளர்த்தினாள்.

ஏனோ அவளுக்குமே அவன் கேட்கும் வரை குழந்தைகளைப் பெற்றுத் தந்து விட வேண்டும் என்பது போல்தான் ஆசை பெருகியது.

அதன் விளைவுதான்.. மூன்றாவதாக அவளது மணி வயிற்றில் உதித்த மாணிக்கம்.

“அது எப்படி..பொண்ணுதான்னு சொல்றீங்க…? பையனா இருந்தால் என்ன பண்ணுவீங்களாம்…?”,அவள் ஒய்யாரமாய் புருவம் உயர்த்தினாள்.

”அதெல்லாம் பொண்ணுதான்.. எனக்கு தெரியும்…! நான் சொன்ன மாதிரியே டிவின் பேபிஸ் பிறந்தாங்கல்ல.. அந்த மாதிரிதான்…”

“அப்பா…அம்மாக்கிட்ட பேசறதை நிறுத்திட்டு கொஞ்சம் சரவெடி வைக்கறீங்களா…?”,கடுப்புடன் கத்தினான் மித்ரேஷ்வரன்.

அன்று தீபாவளிப் பண்டிகை. வழக்கமாக இவர்கள் யாழ்வியின் பிறந்த வீட்டிற்கு செல்வர்.அவள் நிறை மாதம் என்பதால் பயணம் செய்ய வேண்டாம் என்பதற்காக ரகுவரனும் கலாவதியும் இந்த வருட தீபாவளியை இங்கேயே கொண்டாடுவதற்காக கிளம்பி வந்திருந்தனர்.

பட்டாசு வெடித்து வெடித்தே ஓய்ந்து போய் அன்றைய நாள் முடிந்திருந்தது.

அன்று இரவே யாழ்விக்கு பிரசவ வலி உண்டானது.பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

முதல் பிரசவம் அறுவை சிகிச்சை என்பதால்.. இந்தக் குழந்தையும் அறுவை சிகிச்சை மூலமே எடுக்கப்பட்டது.

”பெண் குழந்தை…!”,மருத்துவர் நீட்ட..அந்த மென்மையான ரோஜாக் குவியலை கைகளில் வாங்கிக் கொண்டான் விஸ்வேஷ்வரன்.

மயக்கத்தில் ஓய்வுடன் கண் மூடியிருந்த மனைவியின் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.

இவள் யாரென்று தெரியவில்லை… திடீரென்று என் வாழ்வில் வந்தாள்..கூடவே அனைத்து வசந்தங்களையும் அழைத்து வந்தாள்.அது போதாது என்று என் இரத்தத்தில் துளிர்த்த மூன்று முத்துக்களை வேறு கை நிறைய வழங்கினாள்.அது மட்டுமா.. ?காதல் இல்லை என்று அழிச்சாட்டியம் செய்து எனக்குள் இருந்த காதலையும் உணர்ந்து கொள்ள செய்தாள்.

“ஐ லவ் யூ டி…”அவனது உதடுகள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டன.

”வியாஷ்னி…!”,

மூன்று மாதங்கள் முடிவுற்ற நிலையில் குழந்தைக்குப் பெயர் வைத்தனர் விஸ்வேஷ்வரன் -யாழ்வி தம்பதியினர். யாழ்வி தேர்ந்தெடுத்த பெயர்தான்.தன் பெயரையும் தன்னவன் பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து தேர்ந்தெடுத்திருந்தாள்.

அறுவை சிகிச்சை என்பதால் சற்று சிரமப்பட்டுத்தான் போனாள் யாழ்வி.அவளுக்கு பக்க பலமாய் நின்று அவளைப் பார்த்துக் கொண்டது என்னவோ விஷ்வா தான். குளிக்க வைப்பதில் ஆரம்பித்து காயத்திற்கு மருந்து வைப்பது வரை அனைத்தையும் அவன் தான் செய்தான்.

“நீங்க எதுக்கு இதைப் பண்றீங்க விஷ்வா…அம்மாவை கூப்பிடுங்க…”,அவள் மறுத்த போது கூட

“என் பொண்டாட்டிக்கு நான் பண்றேன்…!மித்ரன்..லிங்கன் பிறந்த போது கூட நான்தான் பண்ணினேன்…எல்லாத்தையும் மறந்திட்டியா…?”,அவன் வினவி வைத்ததில் அவள் அமைதியாகி விட்டாள்.

கணவனின் கவனிப்பில் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பி விட்டாள் யாழ்வி.

மூன்று குழந்தைகளை சமாளிக்க வேண்டும் என்று ரகுவரனும்..கலாவதியும் மகளுடனேயே இருந்து விட்டனர்.வற்புறுத்தி இருக்க வைத்தது என்னவோ விஷ்வா தான்.

குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்திருந்த நிலையில் அன்று குருவாயூர் கோவிலுக்கு எடுத்துச் சென்று குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விட்டு வந்தனர்.

அலைச்சல் என்பதால் குழந்தை சற்று அழுதபடியே இருக்க..மார்பில் போட்டு தட்டிக் கொடுத்தபடி உறங்க வைத்துக் கொண்டிருந்தான் விஷ்வா.

சிவப்பு வண்ண இரவு உடையில் ஒரு மார்க்கமாக கணவனை பார்த்தபடி சோபாவில் சாய்ந்திருந்தாள் யாழ்வி,

மனைவியின் மோக பார்வை அவனுக்குள் தடுமாற்றத்தை விதைக்க, “என்னடி…?”,என்றான்.

அவனது இந்தக் குரலுக்கே குழந்தை விழித்துக் கொண்டு சிணுங்க… ‘குழந்தையைப் பாருங்க…’,அவளது பார்வை குழந்தையைத் தொட்டு மீண்டது.

“ச்சோ..ச்சோ..ஒண்ணுமில்லை ம்மா…”தட்டிக் கொடுத்து உறங்க வைத்தவன் தொட்டிலில் குழந்தையை கிடத்தி விட்டு மனைவியின் அருகே வந்தான்,

“என்ன ஏ.சி.பி சார்..காத்து இந்தப் பக்கம் வீசுது…?”,ஒய்யாரமாய் அவள் புருவம் உயர்த்த,

“என்னடி ட்ரெஸ் எல்லாம் ஒரு மார்க்கமா போட்டிருக்கிற…?”,வினவியவனின் பார்வை அவள் மேனியில் மேய்ந்தது.

கையில்லாத உடலுடன் ஒட்டிய இரவு உடை..கழுத்தின் இறக்கத்தில் புதைந்து கொள்ள தோன்றியது அவனுக்கு.

நினைத்ததை நடத்தாமல் இருந்தால் அது விஸ்வேஷ்வரன் இல்லையே…மனைவியை சோபாவில் சரித்து நெஞ்சுக்குழிக்குள் முகம் புதைத்துக் கொண்டான்.

“எல்லாம் ஓகே வா…? ஒண்ணும் பிரச்சனை இல்லையே…?”,மேனியெங்கும் படர்ந்த கரங்கள் எல்லை மீறிக் கொண்டிருந்த நிலையிலும் அவள் உடல் நிலையை கேட்டுக் கொண்டான்.

“அதுதான் ஆறு மாசம் ஆகிடுச்சே…இனி எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை…”,கூறி முடித்தவளின் இதழ்கள் அவள் வசம் இருக்கவில்லை.எப்பொழுதோ முரட்டுத்தனமாகக் கவ்வியிருந்தான்.

எல்லைகள் கடந்து ஆடைகள் விடைபெற்ற சமயம்…”இங்கேயா…?”,அவளது விழிகள் சோபாவை சுட்டிக் காட்ட,

“ஏன்..இதுக்கென்ன…?”, கூச்சமில்லாமல் வினவியவன் மேலும் அவள் காதோரம் சரிந்து ரகசியமாய் எதையோ முணுமுணுக்க,

“ச்சீய்…”,முகம் சிவக்க நாணியது என்னவோ அவள்தான்.

“பசங்க ரெண்டு பேரும் அம்மா அப்பா கூட படுத்துக்கிட்டது உங்களுக்கு வசதியா போச்சு…”,

“ம்…நாளைக்கு இந்த ரூமை ஒட்டி இருக்கிற பக்கத்து ரூமை ரெடி பண்ணி வைச்சிடறேன்…!நமக்கு இனி அங்கேதான் வசதி…”, வாய் பாட்டிற்கு பேசிக் கொண்டிருந்தாலும் கரங்கள் தன் பாட்டிற்கு அவளை சிவக்க வைக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.

எத்தனை நாள் விரதமல்லவா…முடிவுக்கு வரும் போது வெகு நேரமாகி விட்டது.

சோபாவில் ஆரம்பித்த கூடல் தரையில் முடிவுக்கு வர..இருவருமே களைத்து கலைந்து போய் தரையில் சரிந்தனர்.

“இவ்வளவு வருஷமாச்சு… இருந்தாலும் ஏ.சி.பிக்கு இந்த முரட்டுத்தனம் மட்டும் போக மாட்டேங்குது…”,கோபம் போல் சலித்துக் கொண்டவளின் விரல்கள் என்னவோ அவனது படிக்கட்டு தேகத்தைத்தான் வருடிக் கொண்டிருந்தது.

“அது அவ்வளவு சீக்கிரம் போகாது…! மறுபடியும் என்னை டெம்ப்ட் பண்ணாதே டி..அப்புறம் நீதான் டயர்டாகி போவ…”,அவன் பேச்சை அவள் எங்கே கேட்டாள்.

கரங்கள் சகட்டு மேனிக்கு எந்த வித தடையுமின்றி அவன் மேனியில் ஊர்வலம் போக.. அவனுக்குள் மீண்டும் உணர்வுகளின் உச்சம்.

“நீ சொன்னால் கேட்க மாட்ட…அனுபவி…”அவளை அள்ளிக் கொண்டு சென்று கட்டிலில் கிடத்தியவன் மீண்டும் தன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தான்.

சுக ரீங்காரங்களும்.. செல்ல சிணுங்கல்களும் அந்த அறையை நிறைத்தன.

இதுதான் காதலா…? அதுதான் காதலா..?என்று குழம்பித் தவிப்பதை விட்டு விட்டு எதுதான் காதல் என்று தேடி உணருங்கள்.எதுதான் காதல்…? எதுவும் காதல் தான்…!நெற்றிப்பொட்டில் பதிக்கும் இதமான முத்தமும் காதல்தான். மூச்சுக்குத் தவிக்க இதழ்களை கவ்விக் கொள்வதும் காதல் தான்…!எதுவும் வேண்டாம் என்று கை மட்டும் கோர்த்து கொள்ளும் சுகமும் காதல்தான்…நீ மொத்தமாய் வேண்டும் என்று புயலாய் வேட்டையாடுவதும் காதல் தான்…!

எப்படி இருந்தால்தான் என்ன…? ஆக மொத்தம் காதல் காதல்தான்…!

 

முற்றும்…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page