காதல் இதுதானா ? – காதல் 7

காதலாகும் 7:

விஸ்வேஷ்வரனுக்கான விசாரணை கமிஷன் ஆரம்பமாகியது.

காவல் துறையில் பெரும் பதவி வகிப்பவன் என்பதால்.. அவர்களது துறையில் இருக்கும் மூன்று உயர் அதிகாரிகள் சேர்ந்து மிக ரகசியமாகத்தான் அந்த விசாரணை நடத்தப்பட்டது.

திவ்யா கொலை செய்யப்பட்ட அன்று இரவு அவன் வீட்டில் இல்லை என்று அவன் சொல்கிறான். ‘எங்கு இருந்தீர்கள்..? ’என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல மறுத்துவிட்டான்.யாழ்வியை காப்பாற்றியதைக் கூறினால் அவளுடன் ஒரே அறையில் தங்கியிருந்ததையும் கூற வேண்டி வரும்.தேவையில்லாமல் ஒரு பெண்ணின் பெயர் தன்னுடன் அடிபடுவதை அவன் விரும்பவில்லை. எனவே,அவன் அதை மறைத்து விட்டான்.

“நேத்து நைட் தூக்கம் வராம லாங் ட்ரைவ் போயிருந்தேன்..காரை ஒரு இடத்துல நிறுத்திட்டு ஜஸ்ட் வாக்கிங் போகும் போது..நாலைந்து பேர் என்னைத் தாக்க வந்தாங்க..!சண்டை போட்டு அவங்களை அடிச்சு போட்டுட்டு நான் வந்துட்டேன்… அநேகமா அங்கேதான் என் மொபைல் தொலைந்திருக்கும்…!வர்ற வழியில கார் பிரேக் டவுன்..காரை அங்கேயே விட்டுட்டு ஆட்டோ பிடிச்சுதான் வீட்டுக்கு வந்தேன்…என் கார் கூட இன்னும் அந்த ஏரியாலதான் நிற்கும்..!”,முழு உண்மையையும் கூறாமல் பாதி மட்டும் கூறினான்.

அவனுக்குத் தெரியுமல்லவா…?ஒரு பெண்ணின் பெயர் தன்னுடன் அடிபட்டால் இந்த சமூகம் அதற்கு கண் காது மூக்கு வைத்து திரித்து விடுவார்கள் என்று. ஒரே அறையில் தங்கியிருந்தோம் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று கூறினால் நம்புவதற்கு இந்த சமூகம் ஒன்றும் பரிசுத்தமானது இல்லையே…ஆனானப்பட்ட கற்புக்கரசி சீதையையே சந்தேகக் கண்ணோடு பார்த்த உலகம் இது.

ஆனால்..சண்டை போட்ட இடத்தில் தொலைந்த மொபைல் எப்படி திவ்யா இறந்து கிடந்த இடத்திற்கு வரும் என்பதுதான் சந்தேகமாக இருந்தது. அதற்கான விடை விஸ்வேஷ்வரனிடமும் இல்லை.

நேற்று தன்னிடம் சண்டை போட்டவர்களுக்கும் திவ்யாவின் மரணத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என்பது அவன் எண்ணம்.அதற்கு முதலில் தன்னுடன் சண்டை போட்டவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும்.அவர்கள் யாழ்வியை அல்லவா துரத்தியிருக்கிறார்கள்…?யாழ்விக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்…?அவன் மூளையில் பல கேள்விகள் எழுந்தன.

இதற்குள் திவ்யாவின் போஸ்மார்ட்டம் அறிக்கையும் வர கற்பழித்து கொல்லப்பட்டிருக்கிறாள் என்பது உறுதியானது. கிட்டத்தட்ட அதிகாலை மூன்று மணி அளவில் உயிர் பிரிந்திருக்கிறது. அப்பொழுது தான் யாழ்வியுடன் தான் இருந்தோம் என்பது விஸ்வேஷ்வரனுக்கு சர்வ நிச்சயம்.ஆனால்..அதை விசாரணை கமிஷன் நம்ப வேண்டுமே…?

அவன் கூறியபடி கார் அங்குதான் நின்றது.ஆனால்,அந்த ஆதாரமும் விஸ்வேஸ்வரனுக்கு எதிராகத்தான் திரும்பியது.கொலை செய்து விட்டு காரை எடுத்துக் கொண்டு அங்கு சென்றிருக்கலாம் என்று மக்களிடம் பேச்சு அடிபட்டது.அவனது மொபைல் திவ்யாவின் உடலருகே இருந்ததுதான் மிகப்பெரிய ஆதாரமாக அவனுக்கு எதிராக உருவெடுக்க..வழக்கு நீதிமன்றத்திடம் சென்றது.

என்னதான் டிபார்ட்மெண்டில் விஸ்வேஸ்வரனின் மேல் மதிப்பும் மரியாதையும் இருந்தாலும் சட்டம் நம்புவது ஆதாரம் மற்றும் சாட்சியைத்தானே.திவ்யா அடிக்கடி விஷ்வாவின் வீட்டிற்கு வருகிறாள் என்று செய்தித்தாளில் அன்று வந்த கிசுகிசுவும் சேர்ந்து கொள்ள..அனைத்து ஆதாரமும் அவனுக்கு எதிராகத்தான் இருந்தன.

கோர்ட்டுக்கு செல்வதற்கு முன்பு கமிஷ்னர் அவனிடம் பேசினார்.

“விஷ்வா…!அன்னைக்கு நைட் நீ வெளியே இருந்ததை ப்ரூவ் பண்ண ஒரு ஆதாரம் கிடைச்சாலும் போதும்..! இந்த கேஸ்ல இருந்து நீ தப்பிச்சிடலாம்… ஏதாவது ஆதாரம் ரெடி பண்ண முடியுமா…?எனக்கு உன்மேல நம்பிக்கை இருக்குது மேன்..பட் கோர்ட்டுக்கு தேவை சாட்சி தான்…நான் உனக்கு சொல்ல வேண்டியதில்லை…”,

அவனுக்கு யாழ்வியின் முகம் மின்னி மறைந்தது.ஆனால்,அவளை கோர்ட் வரை இழுக்க அவனுக்கு மனம் வரவில்லை.அநாதரவான பெண் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டாதல் அவளுக்கு ஆதரவாக மனித உரிமை ஆணையம் சார்பாக ஒரு வக்கீல் வாதாடினார்.

அவ்வளவு சீக்கிரம் தன் மேல் சுமத்தப்பட்ட குற்றம் ஊர்ஜிதமாகாது..எப்படியாக இருந்தாலும் கேஸ் இழுத்தடிக்கும்..அந்த இடைவெளியில் குற்றவாளியை கண்டுபிடித்து விடலாம் என்ற எண்ணத்துடன்தான் அவன் நீதிமன்றத்திற்கு வந்தான்.

வழக்கும் ஆரம்பமானது.

“மிஸ்டர்.விஸ்வேஷ்வரன்… உங்களுக்கும் திவ்யாவுக்கும் என்ன உறவுன்னு தெரிஞ்சுக்கலாமா…?எதுக்காக திவ்யா அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்தாங்க…?”,வக்கீல் கேள்வியெழுப்பினார்.

“திவ்யாவை நான்தான் படிக்க வைச்சிட்டு இருக்கிறேன்…அது சம்பந்தமா பேசறதுக்கு அவ என் வீட்டுக்கு வர்றது சகஜம்தான்…!”,

“ஏன்..ஒரு பெண்ணை வீட்டுக்குத்தான் வரவழைக்கணுமா…? வெளியில எங்கேயும் மீட் பண்ண கூடாதா…?”,அந்த வக்கீல் இடக்காக கேள்வியெழுப்ப..சுள்ளென்று பெருகிய கோபத்தை பல்லைக் கடித்து அடக்கியவன்,

“அது என் இஷ்டம் மிஸ்டர்..அதோட நாங்க காபி ஷாப்பிலும் மீட் பண்ணியிருக்கோம்…! வேணும்ன்னா சிசிடிவி புட்டேஜ்ல செக் பண்ணி பாருங்க…”,சற்று கடுப்புடன் வந்தன வார்த்தைகள்.

“திவ்யா கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்காங்க.. நீங்கதான் கொலை செய்ததா சந்தேகம் இருக்குது..அதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க…?”,

“கொலை நடந்த அன்னைக்கு நைட் நான் என் வீட்டுலேயே இல்லை…சிட்டிக்கு அவுட்சைட் லாங் ட்ரைவ் போயிருந்தேன்…!”,

“அப்போ..உங்க மொபைல் எப்படி திவ்யா உடலருகே வரும்…?”,

“ப்ச்..எல்லாம் விசாரணையில் சொன்னதுதான் மிஸ்டர்…!என்னைத் தாக்க வந்தவங்கள அடிச்சுப் போட்டுட்டு நான் வந்துட்டேன்.. அங்கேதான் என் மொபைல் மிஸ் ஆகியிருக்கணும்…!”,

அப்போ..நீங்க சொல்றதை வைத்துப் பார்த்தால்..அந்த இடத்திலிருந்து உங்க மொபைலை யாரோ எடுத்துட்டு வந்து திவ்யா கொலை செய்து கிடந்த இடத்துல போட்டு இருக்கணும்ன்னு சொல்ல வர்றீங்க…ஆம் ஐ ….?”,

அவன் ‘ஆம்’ என்பதாய் தலையசைத்தான்.

“அது மட்டும் இல்ல.. என்னைத் தாக்க வந்தவங்களுக்கு திவ்யாவோட கொலைக்கும் சம்மந்தம் இருக்குமோங்கிறது என் எண்ணம்…!அதைப் பத்தி விசாரிக்க நீங்க எனக்கு டைம் கொடுக்கணும் யுவர் ஹானர்…!”, இதை அவன் நீதிபதியைப் பார்த்து கூறினான்.

இம்முறை கேள்வி நீதிபதியிடம் இருந்து வந்தது.

“ஓகே மிஸ்டர்.விஸ்வேஸ்வரன்…!உங்க கோரிக்கை கண்டிப்பா நீதிமன்றத்தால் ஏற்கப்படும்…ஆனால்,அதுக்கு முன்னாடி ஒரு கேள்வி…!உங்களைத் தாக்க வந்தவங்களை அடிச்சுப் போட்டுட்டு நீங்க திரும்பி வரும் போது கார் பிரேக் டவுன் ஆகிட்டதா விசாரணையில நீங்க சொல்லியிருக்கீங்க…ஆனால், நீங்க வீட்டுக்கு வந்தது காலையில 8.30 மணிக்குத்தான்…!இந்த இடைப்பட்ட நேரத்துல நீங்க எங்கே இருந்தீங்க…? ஒருவேளை, இதுக்கான விடை கிடைத்தால் உண்மைகள் வெளிவரவும் வாய்ப்பு இருக்குது…!”,நீதிபதி வினவ,

அவன் ஏதோ கூற வாயெடுப்பதற்கு முன்பாகவே,”என் கூடத்தான் இருந்தார்…!”,என்ற குரல் அறை வாயிலில் இருந்து வந்தது.

அனைவரின் கவனமும் குரல் வந்த திசையில் பாய்ந்தது.யாழ்விதான் நின்றிருந்தாள்.

“எதுவா இருந்தாலும் இங்கே வந்து பேசுங்க… நீங்க யாரு…?”,நீதிபதி வினவ,யாரையும் பார்க்காது நடந்து வந்து கூண்டில் நின்றவள் விஸ்வேஷ்வரனை மட்டும் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள்.

கண்கள் இடுங்க அவன் அவளைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான். ‘எதையும் சொல்லாதே’ அவனது கண்கள் அவளிடம் கட்டளையிட்டது.

ஒரு பெருமூச்சுடன் திரும்பி நீதிபதியை நோக்கியவள்,”நான் யாழ்வி…!உதயம் பத்திரிக்கையினுடைய ரிப்போர்ட்டர்…!திவ்யா கொலை நடந்த அன்னைக்கு நைட் இவரு என் கூடத்தான் இருந்தார்.!சிட்டிக்கு அவுட்சைட் இருக்கிற ஒரு ஹோட்டல்ல நாங்க ரூம் எடுத்து தங்கியிருந்தோம்… இதோ..அதுக்கான பில்…!”,அவள் நீட்டிய காகிதம் நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

“உங்களுக்கு இன்னும் ஆதாரம் வேணும்ன்னா நாங்க தங்கியிருந்த ஹோட்டல் ஓனர் இங்கேதான் இருக்கிறார்..அவரையும் விசாரிக்கலாம்…!”,அவள் கை காட்டிய திசையில் அந்த நபர் நின்றிருந்தார்.

“ஆமா..இந்தப் பொண்ணு சொல்றது உண்மைதான்…!அன்னைக்கு நைட் இவங்க ரெண்டு பேரும் எங்க ஹோட்டல்லதான் ரூம் எடுத்து தங்கியிருந்தாங்க…!”,அவரும் அதை ஆமோதித்தார்.

யாழ்வியின் முகம் இறுகிப் போய் கிடந்தது. உண்மையை மறைக்க கூடாது.. செய்யாத குற்றத்திலிருந்து அவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தைரியமாக வந்து இதை சொல்லி விட்டாள்தான். ஆனால், இதற்குப் பிறகு தனது மானம் கேள்விக்குறியாக்கி பேசப்படும் என்ற நினைவே அவளை இறுகச் செய்தது.

“மிஸ்டர்.விஸ்வேஷ்வரன்…!விசாரணையில ஒரு மாதிரி சொல்லியிருக்கீங்க…இப்போ இந்த ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் நீங்க அன்னைக்கு நைட் இந்த பொண்ணு கூடத்தான் இருந்தீங்க அப்படிங்கறது உறுதியாகுது…!என்னதான் நடந்தது.. உண்மையை சொல்லுங்க…?”,நீதிபதி வினவினார்.

இனி மறைத்து எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை உணர்ந்தவனாய் ஒரு பெருமூச்சுடன் நடந்த அனைத்தையும் கூறினான்.

“தேவையில்லாமல் யாழ்வியுடைய பெயர் இதுல அடிபடறதை நான் விரும்பலை…அதனாலதான் உண்மையைக் கொஞ்சம் மறைச்சுக் கூறினேன்…!”,

“எல்லாம் சரிதான் மிஸ்டர்…!இந்தப் பொண்ணை காப்பாத்துனீங்க சரி.. ரெண்டு பேருக்கும் வீட்டுக்கு வர ஒரு வண்டி கூடவா கிடைக்கல.. எதுக்காக லாட்ஜ்ல ரூம் போட்டு தங்குனீங்க…? உங்களைப் பற்றி வந்த கிசுகிசு எல்லாம் உண்மைதான் போல…”, எதிர் தரப்பு வக்கீல் சற்றுக் கிண்டலுடன் மொழிய,

முகம் இறுகிப் போனது விஸ்வேஷ்வரனுக்கு. கை முஷ்டியை இறுக மூடி பல்லைக் கடித்தவன்,”அது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம் மிஸ்டர்…!நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு யாழ்வி…!நாங்க ரெண்டு பேரும் லாட்ஜ்ல ரூம் எடுத்து தங்கறோம்.. இல்ல..வீட்டுல தங்கறோம்…!அது எங்களுடைய பெர்சனல்.. நீங்க தலையிட உங்களுக்கு உரிமையில்லை…!”,கணீரென்ற குரலில் வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.

அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவனை நோக்கினாள் யாழ்வி. என்ன..கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணா…?அவளது விழிகள் உச்சகட்ட அதிர்ச்சியில் விரிந்தன.அவனும் அவளைத்தான் உறுத்து விழித்துக் கொண்டிருந்தான். ‘இதெல்லாம் வேண்டாம்ன்னு தானே உண்மையை மறைத்தேன்…,அவனது விழிகள் அவளைக் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

நீதிபதி குறுக்கிட்டார்,

“மிஸ்டர்.விஸ்வேஷ்வரன் சொல்றதும் உண்மைதான்…!தனி மனிதருடைய சொந்த வாழ்க்கையில இந்த நீதிமன்றம் தலையிடக் கூடாது…!கொலை நடந்த அன்று இரவு விஸ்வேஷ்வரன் யாழ்வியுடன் லாட்ஜில் தங்கியிருந்தது உறுதியாகிறது.எனவே, இந்தக் கொலைக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதியாகிறது.இந்த வழக்கில் இருந்து மிஸ்டர்.விஸ்வேஷ்வரனை விடுவிப்பதுடன்..இந்த கேஸை விசாரிக்கும் பொறுப்பையும் அவரிடமே இந்த நீதிமன்றம் ஒப்படைக்கிறது…!”,தீர்ப்பு வழங்கி விட்டு நீதிபதி எழுந்து சென்று விட்டார்.

“விஷ்வா…!நீ கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணா…இந்த விஷயம் வெளியில வரக் கூடாதுன்னுதான் உண்மையை மறைத்தாயாக்கும்…!நீ நல்ல காரியம் பண்ணினாய் ம்மா…! தைரியமா முன்வந்து உண்மையை போட்டு உடைச்சிட்ட…ஏ.சி.பிக்கு ஏத்த பொண்டாட்டிதான் நீ…!எனிவே வாழ்த்துக்கள்…!”,கமிஷ்னர் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி விட்டு சென்று விட..துரையும் கபிலனும் அவர்கள் அருகில் வந்தனர்.

“வாழ்த்துக்கள் சார்…!”,அவர்கள் பங்கிற்கு வாழ்த்து கூற..அதிர்ந்து விழித்துக் கொண்டிருந்தது யாழ்விதான். அவனோ முகத்தில் எந்தவொரு உணர்ச்சியையும் காட்டாது, “ம்ம்…”,என்று தலையாட்டி விட்டு நகர்ந்தான்.

எப்படியோ வெளியே வந்தவர்களை பத்திரிக்கை குழு சுற்றிக் கொண்டது.

“சார்…!உங்களைப் பத்தி கிசுகிசு எழுதினதே யாழ்விதான்…எப்படி மோதல்ல ஆரம்பிச்சு காதல்ல முடிஞ்சிடுச்சா…?”,யாழ்வி வேலை செய்யும் பத்திரிக்கையிலிருந்து வந்த பெண் ஒருத்தி குறும்புடன் வினவ,

அந்தப் பெண்ணை அழுத்துத்துடன் ஏறிட்டவன் ‘ஆம்’ என்று மட்டும் தலையசைத்தான்.

“சார்…குற்றவாளியை எப்படி கண்டுபிடிக்க போறீங்க…?”, இன்னொரு நிருபர் கேள்வியெழுப்ப,

“இப்போ நான் எதுவும் சொல்ல விரும்பல… குற்றவாளியை கண்டுபிடிச்சிட்டு உங்களுக்கு பேட்டி தர்றேன்…!”,கம்பீரமாக உரைத்தவன் அங்கிருந்து அகல போக,பத்திரிக்கையாளர்கள் யாழ்வியை சுற்றிக் கொள்ள பார்ப்பது தெரிந்தது.

தனியாக விட்டால் உளறிக் கொட்டி விடுவாள் என்பது உரைக்க..பாதுகாப்பாக அவளையும் கை வளைவில் இருத்தியபடியே அழைத்துச் சென்று விட்டான் அவன்.பல கேமராக்கள் அவர்களை படம் பிடித்துக் கொண்டன.

தொடரும்…

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
காதல் இதுதானா?
613 62 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page