காதல் – 11

இந்தர் எதையும் கண்டு கொள்ளாமல் கணினியில் தீவிரமாக டைப் செய்து கொண்டிருந்தது ஆத்விக்கு எரிச்சலூட்டியது.

 

“ஆமா நீங்கள்ளாம் ரூம்குள்ள வர்றதுக்கு முன்னாடி எக்ஸ்கியூஸ் கேட்டுட்டு வர மாட்டீங்களா?” என்றாள் பிரதீப்பிடம். அதில் முகம் சற்றே வாடி நின்றவனுக்காக இந்தரே பேசினான். 

 

“இவ்வளவு நாள் நான் மட்டும் தான இருப்பேன்னு வந்தவன் இன்னிக்கும் அப்டியே வந்துட்டான். நீ வர போறது எனக்கே தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் அவன அலெர்ட் பண்ணிருப்பேன். அவனும் இந்த பக்கமே வந்துருக்க மாட்டான். என்னடா?” என்ற இந்தரின் நக்கல் பேச்சு பிரதீப்க்கு ஆதரவையும் ஆத்விக்கு ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. 

 

“இல்ல இந்தர்! அந்த பொண்ணு என்ன இந்த ரூம்க்குள்ள வரவே விடல. இவர் மட்டும் சாதாரணமா வந்து போறாரே. அதான் கேட்டேன்.”

 

தலையில் அழுத்தமாக கை வைத்து கோவத்தை அடக்கிகொண்டு இந்தர் கூறினான். 

 

“இவன் என் பிசினஸ்ல ஒன் ஆஃப் தி பார்ட்னர். டெய்லி என் ரூமுக்கு வந்து போறவன். என் பிஏவும் கூட. அதுமட்டுமில்லாம இங்க இருக்க எல்லாருக்கும் இவன் பழக்க பட்டவன்.” 

 

“P.A வா அப்போ உன்ன சார்ன்னு கூப்பிட வேண்டி தான?” என்று இந்தரை பழிவாங்கும் நோக்கில் பிரதீப்பை ஏளனமாக பேசினாள் ஆத்வி. அது இந்தருக்கு புரிந்தாலும் கோவத்தில் பற்களை கடித்து தன்னை அமைதிப்படுத்திக் கொண்டான். 

 

நண்பனின் கோவத்தை புரிந்து கொண்ட பிரதீப், “ஐயோ சிஸ்டர்! மத்தவங்க முன்னாடி சார்ன்னு தான் கூப்பிடுவேன்! இன்னிக்கு நீங்க இருக்குறத பாக்கல! பாத்துருந்தா சார்ன்னே கூப்ட்டிருப்பேன்” என்றான். 

 

“ஏன்டா இவளை நீ மத்தவங்க மாதிரி ட்ரீட் பண்ற? ஷீ ஈஸ் மிஸஸ் இந்தரேஷ்வரன். உனக்கு தங்கச்சி தான. சோ இனி இவ முன்னாடியும் நீ எப்பவும் போலவே என்கிட்ட பேசு” என நண்பனிடம் கூறியவன் தன்னவள் புறம் திரும்பி, “சரி தான டி நான் சொல்றது?” என்று கேட்டான்.

 

ஆத்வி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே, “சரி தான் இந்தர்” என கூறினாள். 

 

“நான் அவனை வாடா போடானு பேசுவேன். நீ வேணும்னா ப்ரோல ஃபிக்ஸ் ஆகிக்க…” 

 

‘ச்ச! இவனுங்ககிட்டலாம் பேசுனா எதுவும் பண்ண முடியாது போல. ஒருத்தன மாத்தி ஒருத்தன் விட்டு கொடுக்காம பேசுறானுங்க. வேற ஏதாவது தான் பிளான் பண்ணணும்’ என்று சிந்தித்து கொண்டிருந்தவளிடம், “என்ன டி ஆவி….எதையோ தீவிரமா யோசிச்சிட்டு இருக்க போல?” என்றான்.

 

“உன் கம்பெனிய நான் சுத்தி பாக்கலாமா?”

 

“ஓஹ்…எஸ்..! நானே அழச்சிட்டு போறேன்” என்று தனது நாற்காலியில் இருந்து எழுந்தான் இந்தர். 

 

“இல்ல நான் தனியாவே பாத்துட்டு வரேன்.” 

 

“இல்ல நீ இன்னிக்கு தான முதல் தடவையா இங்க வந்துருக்க? சோ நானே உன்ன அழைச்சிட்டு போய் சுத்திக் காட்றேன். இங்க உள்ளவங்களுக்கு அப்படியே உன்ன இன்ட்ரோ கொடுத்த மாதிரியும் இருக்கும்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான். 

 

தன் தொழிலாளர்களை அழைத்து, “ஹாய் கைஸ், உங்க எல்லாருக்கும் ஒரு குட் நியூஸ். ஷீ ஈஸ் மை ஒயிஃப் ஆத்விகா. சாரி உங்க யாரையும் என்னால கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண முடியல. சோ உங்க எல்லாரையும் பாக்கணும்ன்னு தான் மேடம் இன்னிக்கு இங்க வந்துருக்காங்க” என்றான் சிறிய சிநேகப் புன்னகையுடன். 

 

அங்கு வேலை செய்யும் அனைவரும் இந்தருக்கும் ஆத்விக்கும் வாழ்த்து கூற, ஆத்விகா அதை விரும்பவில்லை என்பது அவளின் முக சுழிப்பிலே அங்கு உள்ளவர்களுக்கு புரிந்தது. 

 

அதை கண்டு கொள்ளாத இந்தர் அவளுக்கும் சேர்த்து தன் தொழிலாளர்களுக்கு மனமார நன்றி தெரிவித்தான். பிறகு ஆத்வியை தன் நிறுவனத்தில் ஒவ்வொரு பொருட்கள் வைத்திருக்கும் இடமாக அழைத்து சென்று காண்பித்தான். கடைசியாக பொருட்களை பேக் செய்து வெளி ஊருக்கு ஏற்றுமதி செய்யும் இடத்தையும் காட்டினான். அனைத்தையும் பார்த்து மூளைக்குள் பதிவு செய்து கொண்டவள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தாள்.

இந்தர் அவளை குடோனுக்கு கூட்டி சென்றான். அங்கே அனைவரும் பேக்கிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு தொழில் ரீதியாக ஒரு முக்கிய அழைப்பு வந்தது. 

 

“ஆத்வி நான் என் ரூமுக்கு போறேன். நீ வேணும்னா இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்து பாத்துட்டு வா” என்று கூறிவிட்டு ஃபோனில் பேசிக்கொண்டே சென்று விட்டான்.

 

அவன் சென்று விட்டதை உறுதிப்படுத்திக் கொண்டவள், மூட்டை மூட்டையாக பிரிக்க பட்டு சில்லறை விநியோகத்திற்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்த தானியங்கள் அருகில் சென்றாள். ஹேண்ட் பேக்கில் இருந்து பேனாவை வெளியே எடுத்தாள். தானியங்கள் இருந்த சாக்கின் கீழ் மூட்டையில் பேனாவினால் குத்தி ஓட்டை போட்டு கிழித்து விட்டாள். 

 

தானியங்கள் ஓட்டை வழியே தரையில் விழுந்து சிதறியது. அந்த குடோனில் கிழக்கு முனையில் இருந்து மேற்கு முனைவரை அடுக்கப்பட்டு இருந்த அத்தனை மூட்டைகளையும் பேனாவால் கிழித்து விட்டாள் ஆத்வி.

 

ஒவ்வொரு மூட்டையிலும் ஒவ்வொரு தானியங்கள் இருந்தன. நெல், கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, அவரை, குரக்கன், பாசிப்பயறு போன்றவை தனி தனியாக வைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல் அந்த மூட்டைகள் எல்லாம் முதல் ரகம், இரண்டாம் ரகம் மற்றும் மூன்றாம் ரகம் என தனி தனி விலை பட்டியல் கொண்டு வெவ்வேறாக அடுக்கப் பட்டிருந்தது. ஒன்றாக கலந்து கிடந்ததை தனியாக பிரிப்பது கடினமான வேலை.

 

‘இதெல்லாம் இனி வேஸ்ட். நோ யூஸ்! டேய் ஜந்து… இப்போ தெரியும்டா இந்த ஆத்விய பத்தி” என நினைத்து கொண்டு ஒன்றும் தெரியாத பச்சைபிள்ளைப் போல் இந்தரின் கேபினிற்குள் நுழைந்தாள்.

 

“இவ மூஞ்சே சரி இல்லயே! என்னவா இருக்கும்?” என்று யோசித்து கொண்டே அவளை அமர செய்தான். 

 

அடுத்த கொள்முதல் எங்கே செய்ய வேண்டும்? யாரிடம் செய்ய வேண்டும் என்றும், தன்னிடம் இருப்பவற்றை எங்கு? எந்த நேரத்திற்குள் ஏற்றுமதி செய்ய வேண்டும்? என்பதையும் குறித்து கொண்டிருந்தான் இந்தர்.

 

பேக்கிங் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் அந்த பக்கம் இருக்கும் பொருட்களை பேக்கிங் செய்ய எடுக்க சென்ற போது அந்த இடம் முழுவதும் தானியம் இறைந்து கிடந்ததை கண்டுஅதிர்ந்து போனார்.

 

உடனே பிரதீப்பை அழைத்து விஷயத்தை கூறிவர், “யாரு தம்பி இந்த வேலையை பாத்துருப்பா? நீங்க உடனே கேமரால பாத்து அவனுக்கு சரியான தண்டனைய கொடுங்க. மொத்தமா வேலையை விட்டே தூக்கிடுவோம்” என்று அங்கலாய்த்தார். 

 

அவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவராதலால் தானியம் இப்படி இறைந்து கிடப்பதை அவரால் துளியும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

 

அதிர்ந்து நின்ற பிரதீப்போ, “இதோ பார்க்குறேன்” என, அங்கிருந்த கேமராவுடன் பொருந்தி இருந்த தன் ஃபோனில் அங்கு சற்று முன் நடந்ததை ரீவைண்ட் செய்து பார்த்தான். 

 

நடந்து இருக்கும் அசம்பாவிதத்துக்கு ஒரே காரணம் ஆத்வி தான் என்பதை அறிந்து கொண்டவன் எதுவும் பேசாமல் இப்போது பேரதிர்ச்சியில் நின்றான்.

 

“அண்ணா கேமரா ஒர்க் ஆகல. நீங்க இத யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். இது கஸ்டமர்ஸ் நிறைய பேர் வந்து போற இடம். இப்படியே போட்டு வச்சா நல்லா இருக்காது. யார் பண்ணுனா என்ன ஏதுன்னு இப்படி பேசிட்டு நிக்கிறத விட நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து இந்த இடத்த ஃப்ர்ஸ்ட் க்ளீன் பண்ணிடுவோம்.” 

 

“நீங்க சொல்றதும் சரி தான் தம்பி. ஆனா இவ்ளோ கொட்டி கிடக்குதே. என்ன பண்றது தனி தனியா பிரிக்கவும் முடியாதே.” 

 

“இப்போதைக்கு எல்லாத்தையும் ஒண்ணா போடுவோம் அண்ணா. அப்புறம் யோசிப்போம் என்ன செய்யலாம்ன்னு” என்று பிரதீப் கூற இருவரும் சேர்ந்து ஒரு பெரிய ட்ரம்மில் அங்கு கீழே கிடந்த அத்தனையையும் அள்ளி நிறைத்தனர்.

 

மதிய இடைவேளைக்கு பிறகு மற்ற பணியாளர்கள் அங்கு வரவும், இவர்கள் சுத்தம் செய்து முடிக்கவும் சரியாக இருந்தது.

 

“அரை மணி நேரத்தில் வரேன்னு சொல்லிட்டு இவ்வளவு நேரமா இங்க என்ன பண்ணுற?” என்றபடியே வந்த இந்தர் தனியங்கள் குவிந்த ட்ரம்மை கவனித்து விட்டு, “என்னாச்சு?” என அந்த ஊழியரிடம் வினவினான். அவரும் விசயத்தை கூற நெற்றியை டென்ஷனாக தேய்த்தான் இந்தர்.

 

“சரி. இனிமே நான் பாத்துக்குறேன், நீங்க போங்க” என அவரிடம் கூறி அனுப்பிய பிரதீப் தன் நண்பனை பார்த்தான்.

 

“என்னடா சிஸ்டர் உன்ன அளவுக்கு அதிகமா லவ் பன்றாங்க போல” என்றான் கண் அடித்து கேலியாக. 

 

அதிலேயே விசயத்தை புரிந்து கொண்டான் இந்தர்.

 

“இந்த நல்ல காரியத்த பண்ணது அவதானா?”

 

“ஹே எப்புட்ரா…..” 

 

“அவ இன்னிக்கு திடீர்னு ஆஃபிஸ்க்கு வந்தப்போவே தெரியும்டா. ஏதோ ஏழரைய இழுத்து விடப்போறான்னு” என்று கூறி சிரித்தான் இந்தர்.

 

“கொஞ்சம் பெரிய ஏழரைய தான் சிஸ்டர் இழுத்து வச்சி இருக்காங்கடா. நெல், கம்பு, கேழ்வரகு, கோதுமைன்னு எல்லாமே ஒண்ணா கலந்து கிடக்கு” என்றான் பிரதீப் சோகமாக.

 

சில நிமிடங்கள் யோசித்த இந்தர், “எது எந்த அளவுல கலந்திருக்குன்னு உன்னால தெளிவா சொல்ல முடியுமா?” என்று தன் நண்பனிடம் கேட்டான்.

 

பிரதீப் உறுதியாக, “முடியும்!” என்று சொல்லவும்,

 

“அப்போ என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு!”

 

“என்னடா?”

 

“ஹெல்த் மிக்ஸ், ஹெல்த் ட்ரிங்க்ஸ் அது இதுன்னு இப்போ இது எல்லாம் ஒண்ணா கலந்து தானடா செய்றாங்க?அந்த கம்பெனி எதுலையாவது ஆர்டர் கேட்டு பாரு. வேண்டாம்ன்னு சொன்னா நம்ம கம்பெனி நேம் போட்டு நம்மளே புதுசா அந்த ப்ராக்டக்ட்ட லான்ச் பண்ணுவோம்” என்றான் சாதாரணமாக.

 

பிரச்சனை தீர்ந்த சந்தோஷத்தில், “உன் கிட்ட பிடிச்சதே இதான்டா. ஒரு ப்ராப்ளம்னா அப்படியே டயர்டாகி உட்காராம உடனே அதுக்கான சொலுயூஷன யோசிக்கிற பாத்தியா. நீ கிரேட்டா மச்சான்” என்றான் பிரதீப் .

 

“ரொம்ப புகழாதடா, என் கேபின்ல உன் சிஸ்டர் தனியா இருக்கா. அடுத்து அங்க அவ ஏதாவது கிறுக்கு வேலைய பண்ணி வைக்குறதுக்குள்ள நம்ம போவோம்” என்று கூறியவாறே பிரதீப்பை அழைத்துக்கொண்டு சென்றான் இந்தர். 

 

அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த வேலையை இந்தரின் கேபினில் ஆரம்பித்திருந்தாள் அவன் மனையாள்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page