அவன் எதிர்பார்த்தபடியே அடுத்த வேலையை இந்தரின் கேபினில் ஆரம்பித்திருந்தாள் அவன் மனையாள்.
இந்தர் பிரதீப்பை அழைத்து கொண்டு தன் கேபினுக்குள் நுழைய ஃபைல்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்த ரேக் கீழே விழுந்து கிடந்தது. அதை எடுத்து நிறுத்த முடியாமல் நிறுத்தி கொண்டிருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தாள் ஆத்விகா.
அதை பார்த்த இந்தர் கண்களை மூடி தன்னை நிலைப்படுத்தி கொள்ள பெரிதும் முயன்று கொண்டு இருக்க, பிரதீப்போ தன் இரு கைகளையும் தலையில் வைத்து, “இருநூறு வருசமா ஓடிக்கிட்டு இருந்த கடிகாரத்தை இப்படி அநியாயமா போட்டு உடைச்சிடீங்களே சிஸ்டர்” என்றான் தன் சிரிப்பை அடக்கியவாறே.
“ஹப்பாடா! நான் கூட புதுசோன்னு நெனச்சி பயந்துட்டேன் ப்ரோ” என்றாள் ஆத்வி சாதாரணமாக.
‘வெஷம் வெஷம்…’ என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்ட பிரதீப், “எப்படி இப்படி ஆச்சி? உங்களுக்கு எதுவும் அடிலாம் படலைல சிஸ்டர்?” என்றான் அக்கறையாக.
“எனக்கு ஒண்ணும் ஆகல ப்ரோ. நான் சும்மா இங்க இருக்குற ஒரு ஃபைல்ல எடுக்க ட்ரை பண்ணேனா. அது கைக்கு கிடைக்கலன்னதும் அந்த பக்கம் போயி அங்க இருந்த ஃபைல் எடுக்க போனேனா. இந்த ரேக்ல உள்ள ஸ்கூரூஸ் எல்லாம் ரொம்ப வீக் போல. ஒரு ஃபைல உருவ முன்னாடி மொத்த ரேக்குமே கீழே விழுந்துட்டு பாருங்க. எந்த பேப்பர எந்த ஃபைல்ல வைக்கிறதுன்னு தெரியாத அளவுக்கு எல்லாம் சிதறி கிடக்குது” என்றாள் குழந்தை போல் முகத்தை வைத்து கொண்டு.
அந்த சூழ்நிலையிலும் இந்தருக்கு தன் மனையாளை ரசிக்கத் தான் தோன்றியது.
“கொழந்த ரூபத்துல இப்படி ஒரு குட்டி சாத்தானா?” என்று இந்தருக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான் பிரதீப்.
“உன் தங்கச்சிதான? நீயே பொறுக்கு.”
அதிர்ந்தவன் அதையும் செய்ய துணிந்தான்.
“சரி இந்த பக்கம் வாங்க சிஸ்டர். நான் எல்லாத்தையும் அரேஞ் பண்ணி வைக்கிறேன்.”
“டேய் அதலாம் அப்றம் பண்ணலாம். ஃபர்ஸ்ட் போய் சாப்பிடு. நானும் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றான் இந்தர் சாதாரணமாக.
“இப்டியே போட்டுட்டா?”
“இப்போ இந்த வேலையில நீ உட்கார்ந்தா நாளைக்கு வர எந்திரிக்க முடியாது. பரவால்லையா? இதவிட முக்கியமான வேலைலாம் நமக்கு இருக்கு. அதலாம் முடிச்சிட்டு வந்து இந்த வேலைய பார்த்துக்கலாம்.”
“ஆனாலும் ரொம்ப அசால்ட் தான்டா உனக்கு. ஒரு குட்டி சாத்தான கூடவே வச்சிட்டு சுத்துற. எதுக்கும் பத்திரமா இருடா மச்சான்” என்று இந்தருக்கு மட்டும் கேட்கும்படி கூறிய பிரதீப் இருவரிடமும் விடை பெற்று உணவருந்த சென்று விட்டான். நண்பனின் வார்த்தைகளில் மென்னகை தோன்றியது இந்தரின் இதழ்களில்.
தன்னிடம் ஏதாவது சண்டை போடுவான், டென்ஷன் ஆகி கத்துவான், அதை கண்டு ரசிக்கலாம் என்று எதிர்பார்த்த ஆத்விக்கு இந்தரின் அமைதியும், அவனது மென் சிரிப்பும் ஏமாற்றத்தையே கொடுத்தன.
அவனை எப்படியாவது கோவம் கொள்ள செய்து விட வேண்டும் என்று நினைத்தவள் பேச ஆரம்பித்தாள்.
“இந்தர் நான் இன்னிக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கேன் தெரியுமா?”
‘ஏன் இருக்க மாட்ட’ என்று நினைத்தவன் வெளியில், “அப்படியா? அப்போ நானும் ஹாப்பி தான்” என்றான் மென்மையாக.
“நான் தான் உன் கம்பெனிக்கு வந்தேன். எல்லாரையும் மீட் பண்ணேன். அதுல ஹாப்பியா இருக்கேன். ஆனா நீ எதுக்கு ஹாப்பியா இருக்க? ஆக்சுவலி நீ சோகமால்ல இருக்கணும் இப்போ?”
“நான் ஏன் சோகமா இருக்கணும்?” என்று கேட்டபடியே அவளருகே வந்தான் இந்தர்.
“ஏன்னா உன் ரேக்ல உள்ள இம்பார்ட்டண்ட் ஃபைல்ஸ், பேப்பர்ஸ் எல்லாம் குப்பையா உன் ரூம் ஃபுல்லா கிடக்கு. எல்லாத்தையும் ரீ அரேஞ்ச் பண்ணனுமேன்ற வருத்தம் இல்லையா?”
“நீ இப்படி ஒரே நாளுல மனசு மாறி என் கிட்ட சகஜமா பேசுறல்ல. என்ன பொறுத்த வர இந்த சந்தோஷத்த விட மத்ததெல்லாம் ஒரு மேட்டரே இல்ல டி ஆவி”
அந்த ‘ஆவி’ன்னு சொன்ன இடத்தில் அவன் குரல் சற்று மென்மையானது. சொன்ன இடத்துல அவன் குரல் சற்று மென்மையானது.
ஆத்வி அதைக் கவனிக்கவில்லை.
அவன் தன்னை அறியாமலே இன்னும் நெருங்கி நிற்பதை மட்டும் தான் கவனித்தாள். அந்த நெருக்கம் அவளுக்கு அசௌகரியமா இருந்தது. உடனே அவன் நெஞ்சில் கை வைத்து அவனை விலக்கித் தள்ளினாள்.
“என்ன ஆவின்னு கூப்பிடாதா டா.”
அவன் சற்று பின்னால் நகர்ந்தாலும், அவன் முகத்தில் இருந்த புன்னகை மறையவில்லை.
“அப்படி தான் டி கூப்பிடுவேன்!”
அந்த பதில் அவளுக்குக் கோபத்தைத் தூண்டியது. அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டு அங்கிருந்து போக முயன்றாள். ஆனால் அவன் அவள் கையை மெதுவாகப் பிடித்தான். அவள் தடுக்க நினைத்த வார்த்தைகள், அவள் உதட்டிலேயே நின்றுபோனது.
அவன் முகம் அவளுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. அவள் கண்களில் குழப்பமும் கோபமும் கலந்து இருந்தது. இந்தரும் அவளை வலுக்கட்டாயமாக பிடிக்கவில்லை. காயப்படுத்தாத அளவுக்கு மட்டும் அவளை நெருங்கினான்.
’அலுவலகத்தில் நிச்சயம் எல்லை மீற மாட்டான்!’ என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க, அதை உடைக்கும்படியாக, செண்டிமீட்டர் அளவுக்கு நெருங்கி நின்றான். அவள் மனது குழம்பி இருந்தது.
அதை புரிந்து கொண்ட இந்தர் மென்மையாய் அவள் இதழில் ஒரு முத்தமிட்டான்.
ஆத்வி ஒரு நொடி உறைந்து போனாள். அவள் பதிலுக்கு எதுவும் சொல்லவில்லை. அவனை தன்னை விட்டு தள்ளவும் இல்லை. அவளுக்குள்ளே ஆயிரம் எண்ணங்கள் ஓடினாலும், உடல் அசைய மறுத்தது.
சில விநாடிகள் கழித்து தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. அவள் அவனை மெதுவாகத் தள்ளினாள். அவள் முகத்தில் கோபம் இருந்தது. ஆனா அந்த கோபம் முழுமையான வெறுப்பாக இல்லை. அவனிடம் எப்போதும் அவள் காட்டும் பொய் கோபம்!
இந்தர் மெல்ல இதழ் பிரித்து சிரித்தான். பட்டென்று அவன் கன்னத்தில் அறைந்தாள். அப்போதும் அவன் சிரிப்பின் அளவு குறையவே இல்லை.
அவள் அவனை இன்னும் கொடூரமாக முறைக்க, ”ரொம்ப சிரமப்படாத! வா வீட்டுக்கு போய் மிச்சத்தை வச்சுக்கலாம்” என அவளை சிறு குழந்தை போல இழுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டான்.
காரில் செல்லும் போதே ஆத்வியின் மூளை தன்னவன் சந்தோஷத்தை கெடுக்க அடுத்தடுத்த திட்டங்களை தீட்டிக் கொண்டு இருந்தது. ஒன்று இரண்டு நல்ல யோசனைகளும் கிடைத்துவிட்டது.
‘உன் சந்தோஷத்துக்கு வைக்கிறேன்டா ஆப்பு’ என தனக்குள்ளே நினைத்து கொண்டு, “நான் இங்க வந்ததால, நீ ரொம்ப சந்தோஷமா இருக்க போல. உனக்கு இவ்ளோ ஹாப்பியா இருக்குன்னா அப்போ நான் டெய்லியும் உன் ஆபீஸ்க்கு வரவா?” என்று கேட்டாள்.
“இதுக்கு சொல்றா பதில…” என மனதிற்குள் நினைத்தவள் எதிர்பார்த்ததோ அவன் மறுப்பு கூறுவான் என்று தான்.
ஆனால் அவனோ, “ஓஹ்… எஸ் தாராளமா வரலாம் ஆத்வி” என்றான்.
“என்ன இன்னிக்குன்னு இந்த காட்டான் இவ்ளோ பொறுமையா இருக்கான்? ஐ வாண்ட் சண்டை டா லூசு பயலே” என்று மனதிற்குள் பலவாறு அவனை திட்டிக் கொண்டே வந்தாள்.
வீட்டு காம்பவுண்ட்க்குள் இந்தரின் கார் நுழைந்தது. வாசலில் அவளை இறங்க கூறியவன் காரை பார்க் செய்து விட்டு வருவதாக கூறி சென்றான்.
அவளோ வீட்டுக்குள் நுழைந்த வேகத்துக்கு, “பாட்டி” என்று தாவி அவரை அணைத்து கொண்டாள்.
“என்ன கண்ணு? முகமே பளபளக்குதே.”
“ஏன்னா இன்னிக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.”
“எப்பவும் இப்படியே சிரிச்ச முகமா சந்தோஷமா இருடா தங்கம்.”
“நாளைக்கும் ஆபீஸ் போறேனே.”
“போய்ட்டு வா கண்ணு சந்தோசமா. அது நம்ம கம்பேனிதான. உனக்கு எப்ப புடிச்சாலும் போய்ட்டு வா.”
“கண்டிப்பா! சரி பாட்டி எனக்கு ரொம்ப பசிக்குது. நான் டிரஸ் சேஞ் பண்ணிட்டு வந்துடறேன் சாப்பிடலாம்” என்று கூறி விட்டு அவள் துள்ளி குதித்து மேலே ஓட கிட்சனுக்குள் நுழைந்தார் பாட்டி.
காரை பார்க் செய்த இந்தர் வெளியே நின்று கொண்டே பிரதீப்பிற்கு அழைப்பு விடுத்தான்.
“சொல்லுங்க பாஸ்.”
“வாழ்த்துக்கள் மச்சான், உன் சிஸ்டர் நாளைக்கும் ஆபீஸ் வராளாம்” என்றான் சிரிப்புடன்.
“தேங்க்ஸ் பாஸ்… உங்க இன்ஃபர்மேஷன்க்கு. இப்படியே டெய்லி இன்ஃபார்ம் பண்ணிருங்க.”
“ஏன் உஷாரா இருக்க போறீயா?”
“நோ பாஸ்! நான் முன்னாடியே லீவ் போட வசதியா இருக்கும்ல” என்றான் பிரதீப் சிரித்து கொண்டே.
“அடிங்…! கொன்னுருவேன்.”
“சிஸ்டருக்கு உன் மேல இருக்க பாசத்துக்கு… உன்னையவே அவங்க கொன்னுடுவாங்க போல. இதுல நீ என்ன கொல்லப் போறீயா?”
“நீ வேற ஏன் டா? உனக்கு தான் எல்லாம் தெரியும்ல? அவ இப்படி நடந்துக்கலன்னா தான் ஆச்சர்யம்.”
“விட்றா மச்சான், பார்த்துக்கலாம். சிஸ்டர் சீக்கிரமா உன்ன புரிஞ்சுப்பாங்க. அதுவரைக்கும் நம்ம கொஞ்சம் ஜாக்கிரதையாவே நம்மளையும் நம்ம கம்பெனியையும் பார்த்துப்போம்” என்று கூற இந்தர் சிரித்துக் கொண்டான் தன்னவளை நினைத்து.
“டேய் என் ரூம்ல விழுந்து கிடக்குற அந்த ஃபைல்ஸ்ஸோட…. ” என்று இந்தர் ஆரம்பிக்கும் போதே,
“மன்னிக்கவும்! சிறு திருத்தம் உங்க மனைவி தள்ளி விட்ட…. அப்படின்னு சொல்லுங்க பாஸ்” என்றான் பிரதீப்.
“சரிடா அப்டியே வச்சிக்கோ.”
“பார்ரா! வச்சிக்கிறதாம்ல வச்சிக்கிறது.”
“வாய மூடிட்டு நான் சொல்றத கேளு டா வெண்ண. அந்த ஃபைல்ஸோட காப்பிஸ் எல்லாம் என் லேப்டாப்ல சேவ் பண்ணித்தான் வச்சிருக்கேன். அதனால அதெல்லாம் பெருசா அரெஞ் பண்ண வேண்டாம்.”
“தெய்வமே தெய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே” என்று பாடலின் மூலமாக பிரதீப் நன்றி சொன்னான் இந்தருக்கு.
“நன்றி சொல்றது இருக்கட்டும்! இன்னும் நம்ம ஆஃபிஸ்ல எங்கெல்லாம் முக்கியமான டாக்குமெண்ட்ஸ் இருக்கோ, அது எல்லாத்தையும் இன்னிக்கே எடுத்து சேஃப்டி லாக்கர்ல வச்சிடு.”
“பண்ணுறேன், அந்த சேஃப்டி லாக்கரை எங்க தூக்கி வைக்கிறது?”
