காதல் – 15

ஆத்விக்கு ராகவனே பந்து வீசினான். இந்தர் அவள் பின்னாக நின்று கீப்பிங் செய்து கொண்டிருந்தான். பாட்டி மூவரின் விளையாட்டையும் ரசித்து கொண்டிருந்தார். 

 

ராகவன் வீசிய பால்கள் எதையும் அடிக்காதவள், “இவனுக்கு பால் போடவே தெரியல. நீ போடு இந்தர்.” என்றாள் உரிமையாக. 

 

“ஆட தெரியாத சிலுக்கு காலுல சுளுக்குன்னு சொல்லிச்சாம் மாமா” என்றான் ராகவன் கிண்டலாக.

 

“டேய் சும்மா இரு…” என்றதும் ராகவனின் வாய் மூடிக்கொண்டது. 

 

அவனை சகஜமாக்க, “நீ போடறது எல்லாமே ஃபாஸ்ட் பால்டா. அதான் அவளால அடிக்க முடியல.”

 

“என்ன பொண்டாட்டிக்கு சப்போர்ட்டா? பண்ணுங்க, பண்ணுங்க. கடைசி உங்களுக்கே மொட்டை அடிப்பா, பார்த்திருந்துக்கோங்க…” என்றான் ராகவன்.

 

‘அல்ரெடி அடிச்சுட்டாளே!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட இந்தர், மெல்லிய சிரிப்புடன் தன்னவள் அடிப்பதற்கு ஏதுவாக ஸ்லோ பாலாக போட ஆரம்பித்தான். 

 

முதல் இரண்டு பந்துகள், அவனுக்கு சுலபமாக கேட்ச் வந்தது. அவளுக்காக அதைப் பிடிக்காமல் விட்டு விட்டான். அடுத்தடுத்து அவன் தலைக்கு நேராக பந்து பறந்து வர, அப்போதுதான் ஒரு விஷயம் புரிந்தது. அவன் முகத்திற்கு நேராக பால் குறி வைத்து அடிக்கப் படுவது!

 

தொழில் விஷயத்தில் அவள் செய்த லீலைகளை எல்லாம், ‘தன்னால் உருவான மன காயத்திற்கு மருந்து தேடுகிறாள்! நானும் அதை பெரிது படுத்தினால், அவள் மனம் எந்த வழியிலும் சமாதானமாகாமல் போய்விடும்’ என்று எண்ணித்தான், அவன் தன் கோபத்தை அவளிடம் காட்டவே இல்லை.

 

செய்வதெல்லாம் செய்துவிட்டு, இந்த நொடி கூட கிடைக்கும் வாய்ப்பை விடாமல் கொல்ல பார்க்கிறாள் ஆத்வி.

 

“அடிப்பாவி! உனக்கு பாவம் பாத்த என்னையவே பலிகொடுக்கப் பார்க்குறீயா?” என்று மனதிற்குள் புலம்பிய இந்தர், அடுத்த பாலை ஸ்டெம்பில் குறி வைத்து எறிந்தான். பிறகென்ன? அது குறி தவறாமல் அடித்து விட, அவள் ஆட்டத்தை முடித்து வைத்துவிட்டான்.

 

அடுத்து பேட் ராகவன் கைக்கு சென்றது. ஆத்வி எறிந்த அனைத்து பந்துகளையும் அடித்து தொலைவில் பறக்க விட்டான் அவள் தமையன்.

 

அதில் கடுப்பானவள், “நான் போட்ற பால் எல்லாத்தையும் அடிக்கிறான், நீயே போடு” என்று இந்தரின் கையில் திணித்தாள் பந்தை.

 

“இவனுக்கு நீ போட்டது எல்லாம் ஸ்லோ பால். அப்போ அவன் அடிக்க தான் செய்வான். நீ ஸ்ப்ரிங் பால், இல்ல ஃபாஸ்ட் பால் ட்ரை பண்ணனும் டி ஆவி” என்று கூறி அவனே பந்து போட ஆரம்பித்தான். 

 

நான்கைந்து பந்துகளில் ராகவன் அடித்த பாலை கேட்ச் பிடித்து அவனையும் அவுட் செய்துவிட்டான்.

 

பேட்டிங் இந்த முறை இந்தருடையது. 

 

ஆத்வி ராகவனிடம், “டேய் இவனுக்கு நீயே பால் போடு. நான் கீப்பிங் பண்றேன்” என்று கூறிவிட்டு இந்தருக்கு பின் சென்று நின்று கொண்டாள். 

 

கிரிக்கெட் விஷயத்தில் இந்தரை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது. அவன் நட்பு வட்டாரத்திலேயே, சூப்பராக விளையாடும் ஆள்ரவுண்டரே அவன் தான். எனவே ராகவன் போட்ட அனைத்து பால்களையும் தெறிக்க விட்டான் இந்தர். 

 

“போடா உனக்கு சரியாவே பால் போட தெரியல” என்றாள் ஆத்வி தன் தம்பியிடம் கடுப்பாக. 

 

“என்னங்கடா இது? இந்தம்மா அடிக்கலைன்னாலும் எனக்கு பால் போட தெரியலன்னு சொல்றாங்க‌. இவுரு அடிச்சாலும் எனக்கு தான் பால் போட தெரியலன்னு சொல்றாங்க?”

 

அதில் சிரித்துவிட்ட இந்தர், “அது தான் நாங்க! மாத்தி பேசுறது தான தப்பு. நாங்க எப்பவும் ஒரே மாதிரி தான் பேசுவோம்” என்றான் ராகவனுக்கு மட்டும் கேட்கும்படியாக. 

 

“சரி சரி பேச்ச குறைச்சிட்டு விளையாட்ட ஆரம்பிங்க” என்றாள் ஆத்வி. 

 

இந்தர் தனியாளாக நூறு ரன் அடித்தான். அதுவும் தொடர்ந்து சிக்ஸராக விளாசினான். நூறுக்கு பின்னும் அவன் அவுட் ஆகாமல் இருப்பது அவளுக்கு எரிச்சல் மூட்டியது. கீழே செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் வாட்டர் டியூபை எடுத்தாள். ராகவன் பந்து வீசவும் இந்தர் மேல் சட்டென ஆத்வி பாய்ச்சவும், அதில் இந்தர் முகத்தை திருப்பவும் சரியாக இருந்தது. அதில் பந்து ஸ்டெம்பில் பட்டு தெறித்தது. 

 

“ஹே, அவுட்! அவுட்!“என்று கத்தி துள்ளி குதித்தாள் ஆத்வி.

 

“இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா திரியனும்?” என்ற ராகவனின் மேலும் தண்ணீர் பாய்ச்சினாள். 

 

அவளின் சந்தோஷத்தை ரசித்த இந்தர், அவள் கையில் வைத்திருந்த டியூபை பிடுங்கி அவளை முழுவதும் நனைத்து விட்டான்.

 

“ஏ… பிள்ளைங்களா என்ன தண்ணில விளையாட்டு? உடம்புக்கு முடியாம போயிரும். போங்க போங்க. போயி உடனே ஈரத்துணிய மாத்துங்க” என்று அந்த மூன்று வளர்ந்த குழந்தைகளையும் செல்லமாக அதட்டிய பாட்டி வீட்டுக்குள் சென்று விட்டார்.

 

“ஆமா மாமா, அம்மா பார்த்தா என்ன திட்டுவாங்க. அவங்களுக்கு தெரியாம சுவர் ஏறி குதிச்சு நான் வீட்டுக்குள்ள போய்டுறேன்” என்று மூவரிடமும் விடைபெற்று ஓடியே விட்டான் ராகவன். 

 

“அக்காக்கும் தம்பிக்கும் இந்த சுவர் ஏறி குதிக்கிற பழக்கம் மட்டும் மாறவே மாறாது போல” என்று நினைத்துக் கொண்டான் இந்தர். 

 

பள்ளி காலங்களில் அவள் பலமுறை சுவர் ஏறி குதித்து வெளியே போக, அதை தவறாமல் வீட்டில் சொல்லி விடும் உத்தமன் ஆயிற்றே! 

 

இப்படி எல்லாம் செய்தால் அவளுக்கு இவன் மீது எப்படி நல்ல எண்ணம் வரும்? 

 

இருவருக்குமே அந்த ஞாபகங்கள் மனதில் தோன்ற, அவன் முகத்தில் மீண்டும் தண்ணீரை பாய்ச்சி விட்டாள் அவள். இந்தருக்கு மூக்கு காது என எல்லா பக்கமும் தண்ணீர் புகுந்தது. 

 

“அடியே…” என்று திமிறிக் கொண்டு, ஓரடி முன்னால் எடுத்து வைத்தான். 

 

“ஐயயயோ!” என அலறியபடி, தப்பித்து ஓட நினைத்தாள் ஆத்வி. 

 

இதற்குள் அவன் நெருங்கி வந்திருக்க, அவள் கால் வாட்டர் டியூபில் சிக்கிக்கொண்டது. அதில் தடுமாறி விழ போனவள், தன் முன்னே நின்ற இந்தரை பேலன்ஸிற்காக பிடிக்கிறேன் என்று அவனையும் இழுத்து கொண்டு புல்தரையில் விழுந்தாள்.

 

அவன் நினைத்திருந்தால் கால்களை ஒன்றி பேலன்ஸ் செய்து நின்று இருக்கலாம்! இருந்தும் தன் அழகு ராட்சசியோடு சிறிது செல்ல சண்டை செய்ய விரும்பினான் அவனும்.

 

நீரில் உடலோடு ஒட்டிய அவள் ஆடையும், ஈரம் சொட்டும் அவள் கூந்தலும், பயத்தில் மூடி இருந்த அவள் கண்களும் இந்தருக்குள் மோக உணர்வுகளை எக்கச்சக்கமாக தூண்டி விட்டது. அவள் நெஞ்சில் கிடக்கும் தாலி வேறு, அவன் உரிமையை பறைசாற்ற அடுத்த நொடி தன்னை மீறி அவள் மென் இதழ்களை தன் வன் இதழ்களால் சிறை செய்து விட்டான்.

 

அவன் செய்த காரியத்தில் கண்களை அகலமாக விரித்த ஆத்வி வலுக்கட்டாயமாக அவனை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளி விட்டுவேகமாக வீட்டுக்குள் ஓடி விட்டாள்.

 

“ஓ ஷிட்ட்ட்… ! செய்யக்கூடாதுனு முடிவு எடுத்தாலும், ஏன்டா இந்தர் அதே தப்ப அகைன் அன்ட் அகைன் பண்ற?” என்று தனது பின்னந்தலையில் தட்டி, தன்னை தானே திட்டிக் கொண்டான். 

 

ஐந்து நிமிடம் கழித்து வெளியே வந்த பாட்டி, “நீ இன்னும் டிரஸ் மாத்தலையா?” என்று மென்மையாக கடிந்து கொள்ள, அவனும் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

பாத்ரூமிற்குள் புகுந்த ஆத்வி தன் மேலேயே கோவம் கொண்டாள். 

 

“அந்த பைத்தியத்து மேல உனக்கு லவ் வந்துருச்சாடி? அவனுக்கு இப்போல்லாம் ரொம்ப இடம் குடுக்குற. அவன பழிவாங்க நினைக்கிறீயா இல்ல ரொமான்ஸ் பண்ண நினைக்கீறியா? அவன் கூட என்ன உனக்கு விளையாட்டு? அதுவும் அவனோட பேட் டச் எல்லாம் மன்னிக்கிற அளவுக்கு எப்படி மனசு டக்குனு மாறுது? அவன் திரும்பத் திரும்ப உன்கிட்ட இப்படி நடந்துக்கிறான்னா, அதுக்கு முழு காரணமும் நீ தான். அவன் செஞ்ச தப்பெல்லாம், என்னைக்கும் மறந்துடாத” என்று பலவாறு தன்னைதிட்டி தீர்த்து விட்டு வேறொரு உடையில் வெளியில் வந்தாள். 

 

அதுவரை இந்தர் பால்கனியில் காத்திருந்தான். வெளியில் வந்தவள் அவன் முகத்தை கூட பார்க்காது கீழிறங்கி சென்றாள். 

 

“நேத்து தான் நல்லா பேச ஆரம்பிச்சிருக்கான்னு கொஞ்சம் சந்தோஷபட்டோம். இன்னிக்கு போய்ட்டா மூஞ்ச திருப்பிக்கிட்டு. உனக்கு பொறுமையே இல்ல இந்தர். வர வர ஏன் தான் நீ இப்படி சின்ன பிள்ள மாதிரி நடந்துக்கிறீயோ? நீ ஃப்ர்ஸ்ட் பண்ண வேலைக்கே அவ உன்ன மன்னிக்க எவ்வளவு வருஷம் ஆகுமோ? இதுல இந்த கிஸ் எல்லாம் தேவையா உன் மூஞ்சிக்கு?” என்று கண்ணாடியை பார்த்து தன்னை தானே துப்பிக் கொண்டான் இந்தர்.

 

இரவு உணவில் இந்தரின் முகத்தை திரும்பியும் பார்க்கவில்லை ஆத்வி. அவனுக்கு தான் முகமே விடியவில்லை. 

 

அவர்கள் நிலை தெரியாமல் இருவரையும் அழைத்து திருஷ்டி சுற்றிய பாட்டி, “என் புள்ளைங்களுக்கு என் கண்ணே பட்டுருக்கும்” என்று கூறி கொண்டே வாசலுக்கு சென்றார்.

 

உறங்கப்போகும் முன் இருவருக்கும் கசாயம் கொடுத்தார் பாட்டி. 

 

“ரொம்ப நேரம் தண்ணில ஆட்டம் போட்ருக்கீங்க. இத குடிச்சிட்டு தான் இன்னிக்கு தூங்கணும்.”

 

“நான் வேணும்னா காலையில குடிக்கட்டுமா பாட்டி?” என்று பாவமாக கேட்டாள் ஆத்வி. 

 

“அத உன் புருஷன் கிட்டயே கேட்டுக்கோ” என்று பதில் கூறி விட்டு உறங்க சென்று விட்டார் பாட்டி.

 

“எப்படியும் இவன் விட மாட்டான். இவன பத்தி புரிஞ்சிக்கிட்டே மனசாட்சியே இல்லாம இந்த காட்டான் கிட்ட கோர்த்து விட்டுட்டு போறாங்களே இந்த பாட்டி” என்று முனகியவள், அவன் கசாயத்தை முழுதாய் குடித்து விட்டு வைத்ததை பார்த்தாள்.

 

‘என்ன இவன்? இத கூட இவ்ளோ கேசுவல்லா குடிக்கிறான்?’ என்று நினைத்து கொண்டே அவளும் குடிக்க ஆரம்பித்தாள்.

 

பாதி வரை குடித்தவள் அதற்கு மேல் குடிக்க முடியாமல் அவனையே பாவமாக பார்த்து கொண்டிருந்தாள்.

 

“கல்நெஞ்சகாரன்! அசையிறானா பாரு” என்று முனுமுனுத்தாள். 

 

“ரொம்ப திட்டாத! குடிக்க முடியலன்னா வச்சிட்டு போ.” என்றான் டிவியை பார்த்து கொண்டே. 

 

“ஆஹ் எவ்ளோ நல்ல மனசு! தேங்க்ஸ் இந்தர்” என கூறிவிட்டு அறையை நோக்கி ஓடினாள். அவள் பின்னாலேயே இந்தரின் மனமும் ஓடியது. 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
250 40 0
இராவணின் வீணையவள்
47 0 0
ஆரெழில் தூரிகை
310 15 1
வேண்டினேன் நானுன்னை
543 6 0
நீ எந்தன் நிஜமா?
379 8 1
என்துணை நீயல்லவா?
464 12 0
கற்றது காதல்
221 1 0
நிழலென தொடர்கிறேன்
214 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page