காதல் – 5

முதல் அழைப்பிலேயே ஏற்ற பாலா, ஃபோனை ஸ்பீக்கரில் போட்டான்.

பணிபுரியும் மருத்துவமனைக்கு செல்ல நேரமாகி விட்டதால் காலுறை அணிந்து கொண்டே, “சொல்லு மச்சான்! என்னடா என் நியாபகம் வந்துருக்கு திடீர்னு? என்ன விஷயம்.” என்றான்.

வீட்ல ஒரு பேஷண்ட் இருக்காங்க. நீதான் ட்ரீட்மெண்ட் பாக்கணும். எமெர்ஜென்சிடா, உடனே கிளம்பி வாஎன்றான்.

பாட்டியாடா? என்னாச்சு?” என்று கேட்டான் பாலா.

நீ வா, நேர்ல சொல்றேன்என்று அவன் பதிலை எதிர்பார்க்காமல் இந்தர் அழைப்பை துண்டித்தான்.

எப்போதும் இப்படி வீட்டிற்கு வேலை நிமித்தமாக வர கூறி அழைப்பதில்லை இந்தர். யாருக்கும் தன்னால் அவர்கள் வேலையில் தொந்தரவு நேர கூடாது என்று எண்ணுபவன். ஆனால் இன்று எமெர்ஜென்சி என அழைத்திருப்பதால் அதை அலட்சியம் செய்ய முடியவில்லை பாலுவால். அவன் வேலை செய்யும் மருத்துவமனையில் ஒரு மணிநேரம் பர்மிசன் கேட்டுவிட்டு இந்தரின் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

அவன் அழைப்பை துண்டித்த பதினைந்தாவது நிமிடம் பாலுவின் கார் இந்தரின் வீட்டின் முன் நின்றது. அதிலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவன் சோர்வாக சோபாவில் அமர்ந்திருந்த இந்தரை தான் கண்டான். அவன் முகமே எதுவோ சரியில்லை என்பதை அந்த மருத்துவனுக்கு உணர்த்தியது.

டேய் என்னாச்சுடா? ஏன் இப்படி இருக்க?” என்றான் பாலு.

வா பாலா! நல்லாருக்கீயா? வீட்ல எல்லாரும் சௌக்கியமா?” என்று அவனிடம் பாட்டி நலம் விசாரித்தார்.

நல்லாருக்கேன் பாட்டிஎன்று அவன் பதில் கூறி முடிக்கும் முன்பே, இந்தர் பாலுவின் கை பிடித்து இழுத்து சென்றான் தன் அறைக்குள்.

அங்கு அதீத காய்ச்சலில் மயங்கிக் கிடந்த ஆத்விகாவை கண்ட பாலு, “என்ன மச்சான் உன் ரூம்ல பொண்ணா? யார்ரா இந்த பொண்ணு?” என்று அதிர்ச்சியில் கேட்டான்.

என் வொய்ஃப் டாஎன்றான் இந்தர் கர்வமாக.

அதில் மேலும் அதிர்ந்த பாலா, “இது எப்போ?” என்றான்.

நேத்துல இருந்து தான்என்றான் இந்தர் சாதாரணமாக.

ஐயோ! ஏதாவது தெளிவா சொல்றானா பாரு. கஞ்சபய! இதுக்கு மேல பேசுனா முத்து உதிர்ந்திரும்ன்னு பயப்படுறான் போலஎன்று வெளிப்படையாக கூறியவனை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான் இந்தர்.

நீ எதுவுமே உருப்படியா சொல்லலன்னு நான் தான்டா உன்ன முறைக்கணும்! சரி! இவங்களுக்கு என்னாச்சு? அதையாவது முழுசா தெளிவா சொல்லு.” என்றான்.

நீ தான டாக்டர்? நீ தான் கண்டு பிடிச்சு சொல்லணும்.” என்றான் இந்தர்.

இது வேறயா.” என்றவன், “சரி எவ்வளவு நேரமா இப்படியே இருக்காங்க?” என்றான் ஆத்வியின் நெற்றியில் கை வைத்து பார்த்துக் கொண்டே.

தெரியல! காலையில தான் பாட்டி இவள செக் பண்ணி பாத்துட்டு ஃபோன் பண்ணுனாங்க.” என்றான்.

இதற்கு மேல் அவனிடமிருந்து எதையும் அறிந்து கொள்ள முடியாது என்பதை புரிந்து கொண்ட பாலா ஆத்விகாவின் கை பிடித்து பார்த்தான்.

ஃபீவர் கொஞ்சம் ஹெவியா இருக்கு. ஒரு ட்ரிப்ஸ் போட்டு விடுறேன்டா. அதுலையே ஃபீவர் குறையிறதுக்கான மருந்தும் போட்டு விடுறேன். தர்ட்டி மினிட்ஸ் வெயிட் பண்ணி பாப்போம். ஃபீவர் எந்த அளவுக்கு குறைஞ்சிருக்கு அண்ட் கான்சியஸ் வருதான்னுஎன்றவன் ஒரு பேப்பரில் தேவையான அனைத்து மருந்துகளும் எழுதி கொடுத்து இந்தரை வாங்கி வர கூறினான்.

கலைந்த கேசத்துடன், கசங்கிய சட்டையுடன், முகம் கூட கழுவாமல் பிரிஸ்கிரிப்சனை தன்னிடமிருந்து அவசரமாக பிடிங்கிக்கொண்டு ஓடிய தன் நண்பனை, “இவன் என்ன இப்படி மாறிட்டான்என்று சத்தமாகவே வியந்து கூறிய பாலா அவன் பின்னோடே ஹாலுக்கு வந்து விட்டான்.

வாசலைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த பாலாவிடம் காஃபியை கொடுத்த பாட்டி, “என்னப்பா பாலா வாசல்லயே ரொம்ப நேரமா பாத்துட்டு இருக்க? உனக்கு நேரமாச்சா?” என்று வினவினார்.

இல்ல பாட்டி. இவன் எவ்ளோ ஹான்ட்சமா வெளில வருவான்? இந்த மாதிரி ஒரு கோலத்துல அவன் ஜாக்கிங் போறப்போ கூட நான் பாத்தது இல்ல. ஆனா இப்போ பாருங்க எப்டி ஓடுறான்? அதான் அவன ஷாக்கா பாத்துட்டு நிக்கிறேன்என்றான்.

அதான் எனக்கும் புரியல பாலா. நேத்துலருந்து அவன் செய்றது, நடந்துக்கிறது எல்லாம் வித்தியாசமா தான் இருக்கு. எங்க போய் முடிய போகுதோ தெரியல. எல்லாம் நல்ல விதமா நடந்தா சரிஎன்று புலம்பி விட்டு, “சரிப்பா, நீ நேரமே வந்துட்ட. எதுவும் சாப்ட்ருக்க மாட்ட… உனக்கும் சேர்த்தே இட்லியும், சாம்பாரும் செஞ்சிட்டேன். வந்து சாப்பிடுப்பாஎன்றார்.

இல்ல பாட்டி அவனும் வரட்டும். சேர்ந்து சாப்டுக்கிறோம்என்றவன், “எப்போ பாட்டி இவன் கல்யாணம் பண்ணிக்கிட்டான்? ஏன் பாட்டி என் கிட்ட கூட சொல்லல? சிம்பிளா தான் பண்ணுனீங்களா?” என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றான்.

பாட்டியோ அவன் கேள்விகளுக்கு என்ன பதில் கூறுவது என்று விழித்து விட்டு, “அவன் எனக்கே சொல்லல! பின்ன எப்படி உனக்கு சொல்லுவான்?” என்றார்.

வாட்! என்ன சொல்றீங்க? பாட்டி உங்க கிட்டயே சொல்லலையா?” என்று அதீத அதிர்வில் எழுந்து நின்றே விட்டான் பாலா.

ஆமா! இப்போ வருவான் நீயே ஏன்னு கேட்டு சொல்லு.”

க்கூம்! உடனே பதில் சொல்லிருவான் போங்க பாட்டி.”

அந்த நேரம் வேகமாக மருந்துகளை வாங்கி கொண்டு வீட்டுக்குள் நுழைந்த இந்தர் அவற்றை பாலாவின் கையில் திணித்தான்.

எல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோ.” என்று கூறி விட்டு தன் அறைக்குள் அவனுக்கு முன் சென்று கொண்டிருந்தான்.

மருந்து என் கிட்ட இருக்கு; நான் தான் வைத்தியம் பாக்க போறேன், எனக்கு முன்னாடி நீ போய் என்னடா பண்ண போற?” என்று இந்தரின் கை பிடித்து நிறுத்திய பாலுவை முறைத்து கொண்டு அவனுக்கு வழி விட்டான் இந்தர்.

இருவரும் இப்போது அறைக்குள் நுழைந்தனர்‌. ஆத்வியின் தலை பக்கம் நின்று கொண்டு பாலா அவளுக்கு அளிக்கும் சிகிச்சையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் இந்தர்.

போய் ஃபிரெஷ்ஷப் ஆகிட்டு வாடா! அப்றம் உன்னோட பாக்ட்ரியாஸ்ஸும் சேர்ந்து சிஸ்டர தாக்கிட போகுது! எப்படி இருக்க பாரு நீ.” என்று கூறி சிரித்தான் பாலா.

அப்போது தான் தன் நிலையை கண்ணாடியில் பார்த்தான் இந்தர்‌.

ஷிட்ட்… இப்டியேவா வெளில போனேன்?” என நினைத்து கொண்டு, “எல்லாம் என் நேரம்டா.” என்று வெளியே சத்தமாக கூறியவன் பாலாவின் முதுகில் ஒரு அடியை வைத்து விட்டுகுளிக்க சென்றான்.

குளித்து முடித்து ஃபிரெஷ்ஷாகி வந்தவன், கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு கண்கள் திறக்காமல் படுத்திருந்த ஆத்வியை காண மனமில்லாது வெளியில் சென்றான்.

கீழே சோஃபாவில் அமர்ந்து பாட்டியிடம் கதை பேசிக் கொண்டிருந்த பாலாவை பார்த்து, “இப்போ அவ எப்டி இருக்காடா”? என்றான்.

ஷீ இஸ் ஃபைன்டா. ஃபீவர் கண்ட்ரோல் ஆகிட்டு இருக்கு. தென் நேத்தேல்லாம் சரியா சாப்பிடாம இருந்துருக்காங்க, அப்றம் நைட்ல தூக்கம் இல்லாம ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்துருக்காங்கன்னு நினைக்கிறேன். அதுனால தான் இந்த ஃபீவர் அண்ட் மயக்கம். எனர்ஜியே இல்லாம இருக்காங்க. கண் முழிச்ச பிறகு நிறைய ஜூஸ் குடுடா. நல்ல சாப்பிட வை. அவங்களுக்கு இப்போ நிறைய ரெஸ்ட் தேவை. நல்ல ரெஸ்ட் எடுக்கட்டும். கொஞ்சம் கேர் பண்ணி பாத்துக்கோ மச்சான். அண்ட் நீயும் கொஞ்சம் மனசு விட்டு அவங்க கூட பேசி பழகு. அவங்களையும் பேச விடு.”

‘அவள பேச விட்டதால தான்டா இந்த நிலைமை’ என மனதிற்குள் நினைத்து கொண்டான் இந்தர்.

சரிடா நான் சீக்கிரம் கிளம்பனும். இன்னொரு தடவ சிஸ்டர செக் பண்ணிட்டு ட்ரிப்ஸ் இறங்கிருச்சுன்னா இன்ஜெக்சன ரிமூவ் பண்ணிட்டு கிளம்புறேன்.”

இருவரும் சேர்ந்தே இந்தரின் அறைக்கு சென்றனர். அவளின் பிறை நெற்றியில் பட்டும் படாமலும் மென்மையாய் கை வைத்து பார்த்தான் இந்தர். அது ஜில்லிட்டு இருந்தது.

அதில் சற்றே மகிழ்ச்சியானவன், “தேங்க்ஸ் மச்சான்” என்றான் பாலாவிடம்.

அவங்க கொஞ்ச நேரம் தூங்கட்டும். தொந்தரவு பண்ண வேண்டாம். வா, கிளம்பலாம்” என்று அவளின் கையில் போடப்பட்டிருந்த இன்ஜெக்சனை ரிமூவ் செய்து விட்டு, “டேப்லெட்ஸ் கரெக்ட்டா டைம்க்கு குடுத்துருடா” என பேசிக்கொண்டே இந்தரையும் அங்கிருந்து அழைத்து சென்றான் பாலு.

டைம் ஆகிடுச்சுடா… ஹாஸ்பிட்டல்ல ஒன் ஹவர்க்கு தான் பெர்மிஸன் கேட்டுருந்தேன். சீக்கிரம் போகணும் கிளம்புறேன்” என்று அவசரமாக கிளம்பியவனை அமர சொல்லி சாப்பிட வைத்து தான் வழியனுப்பினர் பாட்டியும், இந்தரும்.

பாலு சென்றவுடன் நேராக கிட்சனிற்க்குள் நுழைந்தவன் குளிர் சாதனப் பெட்டியில் இருந்த ஆப்பிளை கழுவி சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி தேவைக்கேற்ப சர்க்கரையும், பாலும் ஊற்றி மிக்ஸியில் அடித்து ஒரு டம்ளரில் ஊற்றி எடுத்து சென்றான் தன் மனையாளுக்கு.

என் கிட்ட சொல்லிருந்தா நான் செஞ்சிருப்பேனேப்பாஎன்றார் பாட்டி.

இருக்கட்டும் பாட்டி! நீங்க ரெஸ்ட் எடுங்க” என்றவன் படி ஏறி தன்னறைக்கு செல்ல அவனையே பார்த்துக் கொண்டு நின்ற பாட்டிக்கு தன் பேரனின் போக்கு சுத்தமாக புரியவில்லை.

அவன் அறைக்குள் நுழையும் போது, நடக்க சிரமப்பட்டு தள்ளாடி கீழே விழ சென்ற ஆத்வியை தான் விழிகள் கண்டது. உடனே ஜூஸை மேஜையில் மீது வைத்தவன் ஓடிச் சென்று அவளை தாங்கினான்.

அடுத்த நொடியே தீச்சுட்டாற் போல அவனிலிருந்து விலகினாள்.

தரையில் விழப் போன ஆத்வியை இழுத்து தன் மார் மேல் போட்டுக் கொண்ட இந்தர், “என்னடி நினைச்சிட்டு இருக்க கூப்பிட்டா வர மாட்டோமோ? கீழ விழுந்து அடிப்பட்டு கிடந்தா யாருடி பாக்குறது? இப்போவே இந்த வீட்டை விட்டு போகணுமா? அப்படி என்ன அவசரம் உனக்கு?” என்று கத்தினான்.

தொண்டை வறண்டு போய் இருந்ததால் பதில் பேச முடியாமல் பாத்ரூமை நோக்கி கை காட்டினாள் ஆத்வி.

ச்ச இத மறந்துட்டேனே…” என நினைத்து கொண்டு அவளை கைத்தாங்கலாக பாத்ரூம் வரை அழைத்து சென்றான். உள்ளே சென்றதும் திரும்பி முறைத்தாள் ஆத்விகா.

அவள் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட இந்தர், “உள்ள வரலம்மா தாயே! இங்கயே நிக்கிறேன். நீ போய்ட்டு வா” என்று கூறி வாசலிலே நின்றான்.

ஆத்வி வெளியே வந்ததும் மீண்டும் அவள் கட்டிலுக்கு செல்ல முனைந்தாள். அவளை நடக்கவிடாது தூக்கி கொண்டு சென்று கட்டிலில் உட்கார வைத்தான்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
231 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
306 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
214 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page