காதல் – 6

ஜூஸை எடுத்து அவள் புறம் நீட்டினான். அவளுக்கும் அது அப்போது தேவையாக இருக்க அவனிடம் சண்டை போடாமல் அதைவாங்கி பாதிகுடித்து விட்டு, “போதும்…”என்று மீதியை திரும்ப கொடுத்தாள்.

“ஏன் வேணாம்?” என்று கேட்டவனின் குரலில் துளியும் மென்மை இல்லை.

“முடியல” என்றாள் ஆத்வி சோர்வாக.

சட்டென தன் ஒரு கையால் அவள் தாடையை பிடித்து மறுகையில் ஜூஸை எடுத்து அவள் வாயில் புகட்டி விட்டான். அதிர்ந்தாலும் வேறு வழியில்லாமல் மடக் மடக்கென குடித்து முடித்து, கண் கலங்க அவனுக்கு சாபமிட்டுக் கொண்டிருந்தாள். அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவள் வாயை துடைத்து விட்டவன் கீழிறங்கி வந்துவிட்டான்.

அரை மணி நேரத்தில் மீண்டும் ஒரு தட்டில் இரண்டு இட்லி, சாம்பாருடன் கொஞ்சம் வெந்நீரும் எடுத்து சென்றவனை பார்த்து, “இப்போ தானப்பா ஜூஸ் குடிச்சா! அதுக்குள்ள எப்டி சாப்பிட முடியும்?” என்று கேட்டார் பாட்டி.

“அதுக்கு தான் ரெண்டு இட்லி மட்டும் எடுத்துட்டு போறேன்” என்று சாதாரணமாக கூறியவனின் பின்னேயே சென்றார் பாட்டி.

“சாப்பிடு” என்று ஆத்வியிடம் தட்டை நீட்டினான் இந்தர்.

அவனை திரும்பி முறைத்த ஆத்வி, “கொஞ்ச நேரம் போகட்டும். இப்போ தான ஜூஸ் குடிச்சேன்” என்றாள்.

இந்தர் எதையும் காதில் வாங்குவதாய் இல்லை. அவள் வாங்கும் வரை தட்டை ஆத்வியின் புறம் நீட்டி கொண்டே நின்றான். ஒரு பெருமூச்சு விட்டவள் தட்டை அவன் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கி ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டாள்.

“போதும்…” என்று தட்டை மீண்டும் அவன் புறம் நீட்டினாள்‌. விடுவானா?

அவள் பத்து நிமிடமாக சாப்பிட்டு கொண்டிருந்த ஒற்றை இட்லியை, பத்து வினாடிக்குள் அவள் வாயில் திணித்து விட்டு தண்ணீரை கொடுத்தான். ரெண்டே வாயில் முழு இட்டலி எப்படி போகும்? தண்ணீரால் கஷ்டப்பட்டு தள்ளினாள்.

அதோடு விடாமல், காலை நேரத்திற்குரிய மாத்திரைகளையும் அவளிடம் கொடுத்து அவள் அவற்றை விழுங்கும் வரை பார்த்து கொண்டிருந்தவன், “ரெஸ்ட் எடு.” என்று கூறி விட்டு சென்றான்.

ஆத்விக்கு ஆத்திரம் தீர கத்த வேண்டும் போல இருந்தது. எல்லாவற்றையும் அடக்கி வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.

“அந்த புள்ள கிட்ட ஏன்டா இப்படி நடந்துக்கிற? கொஞ்சம் நல்ல விதமா தான் நடந்துக்கோயேன்” என்று அறையில் நடந்ததை பார்த்து விட்டு இந்தருக்கு அறிவுரை வழங்கினார் பாட்டி.

“எதுக்கு? அப்றம் இது தான் சாக்குன்னு ஓவரா அடம் பிடிப்பா பாட்டி. மோர்ரோவர் அவ கிட்ட கெஞ்சிட்டு இருக்குறது தான் என் வேலையா? இந்த கெஞ்சிறது, கொஞ்சிறது எல்லாம் நீங்க பண்ணுங்க. என்னை விட்டுருங்க.”

“என்னது! நான் கொஞ்சனுமா? நானா டா கட்டாய தாலி கட்டி அவள இழுத்துட்டு வந்தேன்?” என பாட்டி கேட்க பதிலேதும் கூற முடியாமல் கண்களை இறுக மூடி பெருமூச்சொன்றை இழுத்து விட்டான்.

சில வினாடிகளில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் ஆஃபிஸ் அறைக்குள் நுழைந்தான்.

சரியாக ஒருமணி நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறியவன், “அவளுக்கு சாப்பிட ஏதாவது குடுத்தீங்களா?” என்றான் பாட்டியிடம்.

“நான் ரெஸ்ட் எடுத்துக்கிறேன். நீயே உன் பொண்டாட்டிக்கு என்ன தேவையோ எடுத்துட்டு போயி கொடு” என்றார் நக்கலாக.

“அவ இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து இந்த பாட்டியும் ரொம்ப மாறிட்டாங்க” என்று நினைத்து கொண்டே இம்முறை மாதுளம் பழத்தை தோலூரிக்க சென்றான்.

மாதுளம் ஜூஸில் இனிப்பு சேர்க்காமல் தண்ணீர் மட்டும் கலந்து மிக்ஸியில் அடித்து எடுத்து சென்றான். ஆத்விகாவோ ஒரே இடத்தில் அமர முடியாமல் பால்கனிக்கு சென்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

யாரோ வருவது போல் அரவம் கேட்டு திரும்பியவள் கையில் ஜூஸுடன் இந்தர் நிற்பதை கண்டு ஜூஸை வாங்கி கொண்டாள்.

ஒரு சிப் பருகியவள், “காட்டான், வேணும்னே பழிவாங்குறான்” என்று முனகிக் கொண்டே எழுந்து செல்ல எத்தனித்தவளை தன் கையை நீட்டி வழிமறித்தான்.

“ஜூஸ்ல சக்கரை இல்ல, போட்டுட்டு வரேன்” என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள் ஆத்வி.

“இந்த ஜூஸ் இப்படி குடிச்சா தான் ஹெல்த் பெனிஃபிட்ஸ் அதிகம். அன்ட் காலைல தான் அவ்ளோ சக்கரை போட்டு ஆப்பிள் ஜூஸ் குடிச்ச. ஓவர் சுகர் ஹெல்த்க்கு நல்லது இல்ல” என்றவனை ஒன்றும் செய்ய இயலாமல் பல்லை கடித்து கொண்டு முறைத்தாள் ஆத்வி.

பாதி அருந்தி விட்டு போதும் என கூற நினைத்தவளின் கண்முன் காலையில் அவன் ஊட்டி விட்டது நினைவிற்கு வர கண்களை இறுக மூடிக் கொண்டு சிறு பிள்ளை கசாயம் குடிப்பது போல் முகத்தை சுருக்கி குடித்து கொண்டிருந்தவளின் அழகை எந்த சலனமுமின்றி ரசித்து கொண்டிருந்தான் அவளவன்.

வெறும் டம்ளரை அவனிடத்தில் நீட்டியவள் அவன் சென்ற பிறகு, “காட்டான் ஒரு ஜூஸ கஷாயம் மாதிரி குடிக்க வச்சிட்டான்! நான் நல்லாகி வந்து எல்லாத்துக்கும் சேர்த்து உன்ன கொடுமை படுத்துறேன்டா” என்று கண்களை மூடிக்கொண்டு புலம்பினாள்.

அறையிலிருந்து வெளியேறியவனிடம், “என்னப்பா என் பேத்தி முழிச்சிருக்காளா?” என்றார் பாட்டி.

“ம்ம்ம்…” என்று கூறி கொண்டே படி இறங்கினான் இந்தர்.

“ஜூஸ் குடிச்சாளா? என்று பாட்டி கேட்க அதற்கும், “ம்ம்ம்…” என்று பதில் தான் வந்தது அவனிடம் இருந்து.

“இப்போ என்ன பண்ணிட்டு இருக்கா டா?” -பாட்டி

“பால்கனில உக்காந்து இருக்கா.”

“உங்கிட்ட நல்லா பேசுறாளா டா?”

“என் பொண்டாட்டி ஒன்னும் ஊமை இல்ல” என்று கடுப்பாக கூறினான் இந்தர்.

“என் பேத்திய என் பேத்தின்னு சொன்னா இந்த பயலுக்கு ஏன் இவ்வளவு கோவம் வருது?” என்று அவனின் நடத்தையை கண்டு சிரித்து கொண்டார் காமாட்சி பாட்டி.

சோபாவில் அமர்ந்து எதையோ யோசித்து கொண்டிருந்தவன் முதல் நாள் இரவு முழுவதும் உறங்காமல் விழித்திருந்ததில் அமர்ந்தவாரே உறங்கி போனான்.

“என்னமா ஆத்வி ஜூஸ் குடிச்சியா…? உன் புருஷனே அவன் கையால ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்தான். நல்லாருந்ததா?” என வெகுளியாய் அவளிடம் வினவினார் பாட்டி.

“அது ஜூஸ் இல்ல பாட்டி, கசாயம். அவன் என்னை நல்லா பாத்துக்குறான்னு நீங்கல்லாம் நம்பனும்ன்னு அவன் இப்படி என்மேல அக்கறை காட்டுற மாதிரி நடிக்கிறான். உண்மைலையே அவன் என்ன பழி வாங்கிட்டு இருக்கான். நீங்க தான் பாத்தீங்கள்ள காலைல எப்டி சாப்பாடு ஊட்டினான்னு” என்று பொறிந்து தள்ளினாள் ஆத்வி.

“அவன் கொஞ்சம் முரடன், உனக்கு தெரியாததா அவனப்பத்தி? அவன் அப்படி தான் நடந்துப்பான்‌. அவன் ஊட்டுன சாப்பாட நீ சாப்பிட தான செஞ்ச? உனக்கு வாந்தியோ, குமட்டலோ எதுவும் வரலல்ல? அப்போ உன் வயித்துல இடம் இருந்தும் நீ வேண்டாம்ன்னு மறுத்து இருக்க. அதான உண்மை.”

“நிறைய சாப்டா வெயிட் போட்ருவேன் பாட்டி. அதான் வேண்டாம்ன்னு சொல்றேன். அத கூட புரிஞ்சிக்க மாட்டுறான்.” என்றாள் ஆத்வி பாட்டியிடம் சிணுங்கிக் கொண்டே.

“உடம்பு நல்லானதுக்கு அப்றம் அளவா சாப்பிடு. இப்போ அவன் கொடுக்குறத சாப்பிடு. இல்லனா விட மாட்டான் அந்த பய…” என்று பொறுமையாக பாட்டி கூற சரி என்று தலையசைத்துக் கொண்டாள் ஆத்வி.

பகல் முழுவதும் உணவையும், மருந்துகளையும், ஜூஸையும் மாறி மாறி இந்தரே எடுத்து வந்து கொடுத்துக் கொண்டிருந்தான். இரவு உணவையும் அவன் கையால் முடித்த பின் வானத்தை நோக்கி இரு கரங்களையும் கூப்பி சீரியஸாக வேண்டி கொண்டிருந்தாள்.

“ஆண்டவா இந்த காட்டான கொல்ல எனக்கு உதவி செய்” என்றவளின் செய்கையை ரசித்து இதுவரை சிரித்து பழக்கமில்லாத இந்தரின் உதடுகள் மெலிதாக வளைந்தது.

இரவு உணவை முடித்து விட்டு அன்றைய அலுவலக பணி எல்லாம் சரியாக நடந்தேறியதா என தனது உதவியாளருக்கு அழைப்பு விடுத்து தெரிந்து கொண்டான் இந்தர். மறுநாள் செய்ய வேண்டிய பணிகளை கூறி முடித்து விட்டு, மடி கணினியில் எதையோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் கொஞ்சமேனும் உறங்க சொல்லி கெஞ்சியது.

நேற்று நடந்ததை நினைவு படுத்தியவன் தனதறைக்கு செல்ல தயங்கிதான் ஆஃபிஸ் அறையில் உள்ள சோஃபாவில் படுத்து உறங்கி விட்டான்.

அது தெரியாத ஆத்விகாவோ இந்தரோடு ஒரே அறையில் இருப்பதை விரும்பாமல், “பாட்டி எனக்கு உடம்பு சரியாகுற வர நான் உங்க கூட படுத்துக்கட்டுமா?” என கேட்டு நின்றாள் அவர் அறை வாசலில்.

“இதுக்கு ஏன் கண்ணு தயங்குற? உள்ளே வா…” என அழைத்து கொண்டார்.

“மாத்திரை எல்லாம் சாப்டியாமா?”என கேட்ட பாட்டியிடம்,

“சாப்பிடலைன்னா விட்ருவானா பாட்டி அந்த காட்டான்?” என கூற வந்தவள், அப்டியே அந்த கடைசி வார்த்தையை விழுங்கி விட்டு, “உங்க பேரன்…” என கூறி சமாளித்து வைத்தாள்.

“அவன் கொஞ்சம் முரடன் தான்மா, ஆனா பாசக்காரன்” என கூறிய பாட்டியிடம் எதுவும் கூற முடியாமல் ஒரு பெருமூச்சு விட்டு விட்டு அப்படியே உறங்க ஆரம்பித்தாள்.

ஆனால் கண்ணை மூடினாலே முதல் நாள் இரவு தனக்கு இந்தரால் நேர்ந்த இன்னல் தான் நினைவுக்கு வந்தது அவளுக்கு. கண்கள் கலங்கியது. அப்படியே அதை மறைத்துக் கொண்டு இந்தரை பழி வாங்க வேண்டும் என்று மட்டும் உறுதி கொண்டாள். மருந்தின் வீரியத்தில் உறக்கம் விழிகளை தழுவ அப்படியே உறங்கி போனாள் ஆத்வி.

தினமும் அதிகாலையில் ஐந்து மணிக்கே எழுந்து பழக்கப்பட்ட இந்தருக்கு எப்போதும் போல அன்றும் ஐந்து மணிக்கே தூக்கம் கலைந்தது.

உறக்கம் கலைந்தும் எழுந்து தன்னறைக்குச் செல்லாமல், “இப்போ அவ எந்திரிச்சிருப்பாளா? ரூம்டோர உள்ள லாக் பண்ணி இருப்பாளோ? போனா கத்துவாளா? காலைலையே அவள டென்ஷன் ஆக்கணுமா?” என பல்வேறு சிந்தனைகளில் உழன்று கொண்டிருந்தான்.

அதற்குமேல் அங்கு நிலை கொள்ள முடியாமல் தன்னறைக்கு சென்றான். கதவு திறந்தே இருந்தது.

‘நல்ல வேளை கதவை பூட்டவில்லை!’ என்று நினைத்தவன், கட்டிலில் அவளை காணாமல், “இவ்ளோ சீக்கிரம் வேக் அப் ஆகுற ஜீவராசி கிடையாதே இவ…” என நினைத்து பால்கனி பக்கம் எட்டிப்பார்த்தான்.

அங்கும் அவள் இல்லாததை கண்டு பாத்ரூமிலும் அவள் இல்லாததை உறுதிப்படுத்திக் கொண்டு அவளை காணாது திகைத்தான்.

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
231 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
305 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
213 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page