காதல் – 7

காதல் 7
 

 

ஆபிசுக்கு வந்ததும் கீதாவை பார்க்கும் ஆவலில் லேப்டாப்  திறந்து அதில் கீதாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு, அவள் என்ன செய்கிறாள் என்று பார்க்கும் ஆசையில் சிசிடிவி கேமரா மூலம் பார்த்தவன்,

அங்கு அருணும் கீதாவும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து கோபப்பட்டான். அதன் விளைவுதான் இங்கே இப்படி கத்திக் கொண்டிருக்கிறான்.

” நீங்க வேலைக்கு சேர்ந்து இன்னிக்கு இரண்டாவது நாள் வேலை தொடங்கி விட்டீங்களா?” என்று கேட்டான் ராஜா.

“அது வந்து சார் “என அருண் இழுத்தான்.

அருணை முறைத்துவிட்டு ” என்ன அருண் இழுக்கிறீங்க. நேத்து உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஒர்க் செய்யணும் பிரியா கிட்ட சொல்ல சொன்னேன். பிரியா சொன்னாங்களா  இல்லையா” என்று கேட்டான்.

“சார் பிரியா சொல்லிட்டாங்க ஆனா நான்தான் “என்று மீண்டும் தலையை குனிந்துகொண்டு வார்த்தையை இழுத்தான்.

ராஜா தன் பொறுமை இழுத்துப் பிடித்துக்கொண்டு ” அப்படின்னா  அப்போ மறந்துட்டீங்க. அப்படித்தானே” என்று கேட்டான்.

அருண் தன் தவறை உணர்ந்து “ஆமா சார்” என்றான் மெதுவாக.

“இங்க பாருங்க உங்க ரெண்டு பேருக்கும் இங்கே வேலை கொடுத்திற்கு காரணம் சும்மா வெட்டி பேச்சு பேசிக்கிட்டோ இல்ல,  நான் உங்களுக்கு வேலை செய்ய இல்ல. நீங்க எனக்கு வேலை செய்யத்தான் புரியுதா” என்று அதிகாரத்துடன் கூறினான்‌ ராஜா.

“சார் இன்னிக்கு உங்க மீட்டிங் எந்த மாடல நீங்க மீட் பண்ணனும் எத்தனை மணிக்கு எங்கு எப்போது மீட் பண்ணனும் அவங்க கிட்ட பேசிட்டேன். அவங்க பி.ஏ கிட்ட அப்பாயின்மென்ட்ம் வாங்கியாச்சு சார்” என்று ராஜாவின் முன் ஒரு நோட்புக் நீட்டினால் கீதா.

இருவரும் அவளை வியப்பாக பார்த்தனர்.

அருணோ மனதிற்குள் ” போச்சுடா இன்னிக்கு நம்ம செத்தோம் இதிலே இவ எல்லா வேலையும் முடித்து விட்டுத்தான் கேபின்ல இருந்து இருக்கா. நம்மதான் உள்ளே வந்ததும் இவளை பார்த்தவுடன் அவுட்ட ஆகிட்டோம். இவ வீட்டுக்கு போனாளா இல்லையா ஆபீஸ்ல இருந்தாளா” என்று நினைத்தவன் கீதா காதில் மட்டும் கேட்கும்படி,

” நீ வீட்டுக்கு போனியா இல்ல நைட்டு முழுக்க இங்கேயே இருந்து வேலை பார்த்தியா” என்றான்.

கீதாவோ அருணை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்துவிட்டு ராஜாயிடம் திரும்பி ” சார் நீங்க சொன்ன வேலைய செஞ்சு முடிச்சிட்டேன். சோ என்னை எந்த குறையும் சொல்ல முடியாது” என்று கூறினாள்.

அவள் பேசும் பொழுது தான் கவனித்தான் கீதாவின் கன்னம் வீங்கிப் போய் இருப்பதையும் கண்கள் சிவந்து போய் இருப்பதையும் பார்த்து மனது படபடத்து ‘என்னாச்சு இவளுக்கு இப்படி இருக்கா’ தன்னவளின் நிலைமையை கண்டு துடித்துப் போனான் ராஜா.

தான் பழிவாங்கும் உணர்வை மறந்து மனம் தாங்காமல் அவளிடம் கேட்டான் “என்ன ஆச்சு உனக்கு, ஐமின் உங்களுக்கு “என்று.

“எனக்கு என்ன சார் வேலையை சரியா தானே பண்ணியிருக்கேன்”

“நான் அதை கேட்கல”

” பின்ன வேற என்ன சார்”

” உங்க முகம்” என்று பேச ஆரம்பித்தவனை பார்த்த அருண் ராஜா சொல்வதை புரியாமல் கீதாவை பார்த்தான்.

பார்த்ததும் அவனும் துடித்து தான் போனான் “ஏஞ்சல் என்னாச்சு உனக்கு கன்னம் வீக்கமா இருக்கு அடிபட்டுடிச்சா? எப்படி, இப்படி ஆச்சு” என அவள் பக்கத்தில் சென்று கீதாவின் கன்னங்களை அவன் இரு கைகளில் ஏந்தி கேட்டான்.

தான் என்ன செய்கிறோம் எங்கிருக்கிறோம் எல்லாம் மறந்து கண்கள் முழுவதும் காதலுடன் அவளை பார்த்தான் அருண்.

சட்டென்று அருண் எப்படி செய்வான் என்று எதிர்பார்க்காத  கீதா என்ன செய்வது என்று அறியாமல் இன்பாவை பார்த்தாள்.

ராஜாவின் கண்களோ கீதாவையும் அருணையும் எரித்திவிடும் பார்வையை பார்த்துக் கொண்டிருந்தது.

” அருண்…….” என்று அந்த இடமே அதிரும் அளவுக்கு கத்தினான் ராஜா.

அப்போதுதான் தான் என்ன செய்கிறோம் என்று உணர்ந்து உடனே அவளின் கன்னங்களை பிடித்து கொண்டிருந்த கையை எடுத்துக்கொண்டு ” சாரி கீதா ஏதோ ஒரு ஞாபகத்துல இப்படி பண்ணிட்டேன்” என்று சொன்னான்.

ராஜாவோ கோபத்தில் தன் பல்லைக்கடித்துக்கொண்டு “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க அருண்” என்று கேட்டான்.

அருண் பதில் கூறுவதற்கு முன் அந்த இடத்திலிருந்து வெளியே சென்றால் கீதா.

கீதா போவதை குற்ற உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த அருண் ” சாரி சார் கீதாவை அப்படி பார்த்ததும் மனசு தாங்கல அதுதான்” என்று பேச முடியாமல் தடுமாறினான்.

ராஜாவோ தன் பொறுமை இழுத்துப் பிடித்துக் கொண்டு “அவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா உங்களால தாங்க முடியாதோ? அவங்களை எத்தனை நாளா தெரியும் உங்களுக்கு?”  என்று நக்கலாக கேட்டான்.

“இரண்டு நாளாக தான் சார் தெரியும்” என்று அருண் மெல்லமாக கூற.

அருணை சுட்டெரிக்கும் பார்வையை பார்த்தவன்”ஓ ரெண்டு நாள்ல லவ்வோ? என்றான்.

சட்டென்று அருண் “அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார். ஒரு நண்பன் என்ற முறையில் தான் சார் வருத்தப்பட்டேன்” எனக்கூற,

அவனை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு “ஓகே விடுங்க இது உங்க பர்சனல் விஷயம் என்றான் ராஜா.

” அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்” என்று மீண்டும் அருண் பேச ஆரம்பிக்க,

ராஜாவோ ” நீங்க போய் உங்க வொர்க் ஆரம்பிங்க” என்று கூறியதும் தப்பித்தால் போதும் என்று அந்த ரூமை விட்டு வெளியே வந்து பெருமூச்சுவிட்டான்.

” அப்பாடா எப்படியோ தப்பித்து விட்டோம். இப்ப எப்படி ஏஞ்சலை சமாளிக்கிறது ” என்ற யோசனையுடன் கேபினுக்குள் நுழைந்து ” ஐயம் ரியலி சாரிமா ப்ளீஸ்” என அவன் சொல்லி முடிக்கும் முன் அவன் கன்னத்தில் பளார் என்று அறை விட்டால் கீதா.

கீதா தன்னை அறைவாள் என்று சற்றும் எதிர்பார்க்காத அருண் ஸ்தம்பித்துப் போனான்.

“ஏய் இங்க பாரு இனி என் விஷயத்தில் தலையிடுவது என்கிட்ட பேச முயற்சி பண்றது என் பர்சனல் லைப்ல தலையிடுவது எல்லாம் வச்சிகாத. அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என்று தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி அருணை எச்சரித்தாள்.

அருண் தன் கன்னத்தை பிடித்து கொண்டு “ஆமா ஆமா இப்ப மட்டும் என்ன மனுஷியாக இருக்க” என முணுமுணுத்தான். பின் தன் மேல்தான் தவறு என்று உணர்ந்தவன் அமைதியாக வேலையை செய்யத் தொடங்கினான்.

அருண் போனவுடன் தன் கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் இன்பராஜா.

ஒருவேளை கீதா அருணை அடித்ததை ராஜா பார்த்து இருந்தால் அறிந்து இருப்பானோ என்னவோ தன்னவள் தனக்கு மட்டுமே இப்போதும் சொந்தம் என்று.

பின் ஒரு மணி நேரத்துக்கு மேலும் அவனால் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவனின் கோபத்திற்கு மருந்தாக அங்கு வந்து சேர்ந்தால் கீதா.

“எக்ஸ்கியூஸ் மீ சார் உங்க மீட்டிங்கு டைமாச்சு, மாடல் வந்துட்டு இருக்காங்க. நான் எல்லா ஏற்பாடும் தயார் பண்ணிட்டேன் சார். நீங்க வந்தா போதும் “என சொல்லிவிட்டு திரும்பிவளின் கை பிடித்து நிற்க வைத்தான் ராஜா.

சட்டென ராஜா தன் கையை பிடிப்பான் என்று எதிர்பார்க்காதவள் அவன் முகத்தை நேரிட்டாள். ” என் கையை விடுங்க சார். எனக்கு ரொம்ப வலிக்குது “என்று கூறினாள்.

“வலிகட்டும் டி  நல்லா வலிக்கட்டும். எனக்கு வலித்த வலியை விட இது ஒன்னும் பெருசு இல்ல” என்று மேலும் அவள் கையை இருக்கிப் பிடித்தான்.

ஏற்கனவே நைட்டு தினேஷ் அவளது கையை அழுத்தியதில் சிவந்திருந்த இடங்கள் அவளுக்கு இன்னும் வலியைத் தந்தது அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வழிந்த கண்ணீரை கண்டு அவள் கையை விடுவித்தான் ராஜா.

இருந்தும் தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் “உனக்கு ஏதாவது ஆச்சுன்னா அவன் ஏண்டி துடிக்கிறான். அப்படி என்ன உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நடக்குது “என்று கேட்டான்.

கீதாவும் கொஞ்சமும் அசராமல் “அதை ஏன் நீங்க கேட்கிறீங்க சார்”  என்றாள்.

“அப்படியே ஒன்னுவிட்டனா பாரு.” என்று அவளை அடிக்க தூக்கிய கையை மூடிக் கொண்டு “நான் கேட்காம வேற யாரு கேப்பா” என்றான் எரிச்சலுடன்.

கீதாவோ சட்டென கோபத்துடன் “உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என்கிட்ட இப்படி எல்லாம் நடந்துக்கிறீங்க “என்று அவள் கேட்டதும் தன் கோபத்தின் எல்லையை மீறியவன்,

“என்ன உரிமை இருக்கா? என் உரிமையை காட்டவா” என்று அவளை தன் பக்கம் இழுத்து அவள் இதழில் தன் இதழை பதித்தான். இதைச் சற்றும் எதிர்பார்க்காததால் திகைத்தாள் கீதா. எவ்வளவு போராடியும் அவனை அசைக்கக்கூட முடியவில்லை கீதாவால். தன் கட்டுப்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வந்தவன் அவள் கண்ணீர் அவனின் இதழில் பட்டதும் தான் தன் சுயநினைவுக்கு வந்து அவளை சட்டென்று தள்ளி நிறுத்தினான் ராஜா.

இரவு முழுதும் தூங்காமல் சரியாக சாப்பிடாமல் இப்போது சட்டென்று தன்னவன் தனக்கு கொடுத்த அதிர்ச்சியையும் திடீரென்ற தள்ளியதும் மயங்கிக் கீழே விழப்போனாள் கீதா. அவளை விழாமல் தாங்கிப் பிடித்துக் கொண்டான் ராஜா.

கீதா திடீரென்று மயங்கி விழுவாள் என்று எதிர்பார்க்காத ராஜா, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினான்.

அப்போது சரியாக அருண் மீட்டிங்கு நேரமாவது கூற உள்ள ராஜாவின் அறைக்குள் வந்தவன் பதறினான்.

“சார் என்னாச்சு கீதாவுக்கு” என்று அவள் அருகில் வந்தான்.

அருண் அங்கே பார்த்ததும் அவனைத் தண்ணீர் எடுத்து வர சொல்ல, தண்ணி எடுத்து வந்ததும்
அவள் முகத்தில் தெளித்தான். அப்படியிருந்தும் கீதாவிடமிருந்து ஒரு அசைவும் இல்லாமல் போக, பதற்றத்துடன் டாக்டரை அழைத்தான். அங்கே இருந்த சோபாவில் உட்கார்ந்து அவளை தன் மடியில் படுக்க வைத்து மெதுவாக கீதாவின் தலையை வருடினான்.

தன்னால்தான் இவள் மயக்கம் போட்டு விழுந்தாள் என தன்னைத் தானே நொந்து கொண்டிருந்தான் ராஜா.

அதற்குள் டாக்டர் வரவும் கீதாவை பரிசோதித்தவர் ராஜாவிடம் ” இவங்க சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருந்ததுனால மயக்கம் போட்டு விழுந்து இருக்காங்க. ஊசி போட்டு இருக்கேன். ஒரு அரை மணி நேரத்துக்குள்ள எழுந்துக்குவாங்க. எழுந்ததும் சாப்பிட ஏதாவது கொடுங்க “என்று கூறினார்.

“ரொம்ப தேங்க்யூ சார் கூப்பிட்டவுடன் வந்ததற்கு” என்று ராஜா கூற,

‘இட்ஸ் ஓகே ராஜா நான் பக்கத்துல இருந்தினால சீக்கிரமா வர முடிஞ்சது. ஓகே அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் நான் வரேன்.”  என டாக்டர் சென்றதும் கீதாவின் பக்கத்தில் அமர்ந்தான் ராஜா.

அருண் ராஜா செய்வது எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கீதா கண் விழித்தால் போதும் என்று இருந்தது அவனுக்கு.

அருண் அங்கே நின்று கொண்டிருப்பதை பார்த்த ராஜா கோபப்பட்டான். ” உன்னால் தாண்டா, என் கீத்து கிட்ட இப்படி நடந்து கொள்ளவேண்டியதா போச்சு”  என்று மனதில் திட்டி கொண்டிருந்தவன்,

அருணை பார்த்து “மீட்டிங் கேன்சல் பண்ணுங்க இன்னிக்கு எந்த மீட்டிங் வேண்டாம் ” எனக் கூறினான்.

ராஜா கூறியதைக் கேட்டு அதிர்ச்சியான அருண் ” சார் மீட்டிங்கை கேன்சல் பண்ண முடியாது சார். மாடல் ஏற்கனவே வந்துட்டாங்க சார். அதை சொல்லத்தான் இங்கே வந்தேன்.  வந்ததும் கீதாவை இப்படி பார்த்ததும் சொல்ல மறந்துட்டேன். சாரி சார் நீங்க மீட்டிங் முடிச்சிட்டு வாங்க சார். அதுவரை நான் கீதா பக்கத்துல இருக்கேன். ” என்று கூறினான்.

அருணுக்கோ கீதாவின் பக்கத்தில் தான் இருக்க மாட்டோம் என்று ஏங்கியது அவன் மனம்.

ராஜாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது “என் கீத்து பக்கத்துல நீ இருக்கியா “என்று நினைத்தான். ஆனால் அவனுக்கும் வேறு வழி இல்லையே இதில் பல லட்சம் இன்வர்ஸ் பண்ணியிருக்கான். மனமே இன்றி தன்னவளை அங்கே கிடத்தி விட்டு மீட்டிங்கு சென்றான்.

ராஜா சென்றதும் கீதா அருகில் அமர்ந்து தலையை வருடி கொடுத்து அவள் கையை தன் உள்ளங்கையில் வைத்து கொண்டான் அருண்.

சிறிது நேரம் கழித்து மெதுவாக கண் விழித்தவள் ‘என்ன ஆச்சு என்பது போல் யோசனை செய்து கண்களை சுழல விட்டாள். 
தான் இன்பாவை பார்க்க வந்து, இன்பா தன்னிடம் நடந்து கொண்டது அனைத்தும் கண்முன் வந்து மறைந்தன கீதாவிற்கு.  இப்பகூட இன்பா தன் அருகில் இல்லை என வேதனைப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

” ஏய் ஏஞ்சல் எங்க போற இரு கொஞ்சம் ஜூஸ் குடிச்சிட்டு போ” என அருண் கத்தியது எல்லாம் காற்றோடு காற்றாக வீணாகி போனது.

அப்போது சரியாக மீட்டிங்கை முடித்து விட்டு வெளியே வந்த ராஜா, கீதா ஆபீஸ் விட்டு வெளியேறுவதை பார்த்தவன், அவள் பின்னாடி சென்று அவளை வற்புறுத்தி காரில் ஏற்றிச் சென்றான்.

அருணும் கீதா வெளியே போனதும் அவள் பின்னாடியே வந்து பார்க்க அதற்குள் அவள் காணாமல் போய்விட்டதை அறிந்து ” எங்க போய்ட்டா” என்று யோசனையோடு கீதாவுக்கு போன் பண்ணி பார்த்தான் அவள் எடுக்கவே இல்லை.

அங்கே காரில் கீதா போனில் அடித்த பாடலை கேட்டதும் அதிர்ந்து போனாவன் அப்படியே சடன் பிரேக் போட்டான்  இன்பராஜா.

இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம் நன்றி. 
 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
என் தீராத காதல் என்றும் உனக்காக
0 0 0
நின் காதல் சுடுவதேனோ
0 0 0
ரணமாய் கொல்லுதடி காதல்
0 0 0
என் அன்பே! எந்தன் ஆருயிரே!
259 3 5
அரக்கனின் காதலி
447 0 0
காதல் வேரில் பூத்த துரோகப்பூக்கள்
1,271 17 0
உருகி தகிக்க உனதாக வருவேன்
307 3 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page