காதல் – 9

இந்தர் தட்டில் நிறைய சாதத்தை எடுத்து வைத்த ஆத்விகா, “இப்போ நான் சாப்டுட்டேன், நான் சாப்பிடுவேன்னு காலைல மாதிரி மிச்சம் வச்சிடாத. வைக்க மாட்டேன்னு நினைக்கிறேன். ஏன்னா உனக்கு தான் சாப்பாட வேஸ்ட் பண்ணுனா பிடிக்காதே” என்றாள் கிண்டலாக.

 

ஒரு பக்கமாக தலையை சாய்த்து,“பரவாயில்லையே, என் பொண்டாட்டியா கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வர்றியே, நாட் பேட்” என்றான் அவளைப் பார்த்தவாறே.

 

‘எதற்காக இப்படி கூறுகிறான்? அப்படி என்ன வித்தியாசம் தனக்குள் ஏற்பட்டு விட்டது?’ என தன்னை தானே ஒரு முறை பார்த்து கொண்டவளுக்கு எதுவும் புரியாததால், “வாட் டூ யூ மீன்?” என்றாள் குழப்பமாக.

 

“நேத்து வர என்னை திட்டி சண்டை போட்டுட்டு இருந்த! இன்னிக்கு இதோ நான் டிரஸ் சேஞ்சு பண்ணிட்டு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி புருசனுக்கு சாப்பாடு போட்டுட்டு தான் போயி ரெஸ்ட் எடுக்கணும்னு நின்னுட்டு இருக்கல்ல. அத சொன்னேன், தட்ஸ் குட். ஐ லைக் இட் ஆவி” என்றான் கிண்டல் சிரிப்புடன். 

 

“டேய் இங்க பாரு! என்ன ஆவின்னு சொல்லாதன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன் உன்கிட்ட?” என்று ஒற்றை விரல் நீட்டி கத்தினாள் ஆத்வி. 

 

சிறு வயதில் இருந்தே இந்தர் அவளை அப்படி அழைத்து தான் வெறுப்பேற்றுவான். அழகான பெயரை அசிங்கப்படுத்தினால் யார் தான் பொறுத்துக் கொள்வார்?

 

“அப்படி தான் டி கூப்பிடுவேன்! இன்னும் என்னை பக்கத்து வீட்டுகாரனா நெனச்சி டா போட்டு பேசிட்டு இருக்க. நான் உன் புருஷன், நீ என் பொண்டாட்டி. அத ஃபர்ஸ்ட் நியாபகம் வச்சிக்கோ. எனக்கு வேணுங்கிறதெல்லாம் நீதான் செய்யணும். புரியுதா ஆவி?” 

 

அதில் கடுப்பானவள், “க்கூம்! ஆச தான். என் இஷ்டப்படி தான்டா உன்னை கூப்பிடுவேன். உனக்குலாம் என்ன டா மரியாதை? நான் பழிவாங்குறதுக்காக தான் இங்க வந்து நின்னேன். நீ சாப்பிடணும்ன்னு உன் மேல உள்ள அக்கறையில ஒன்னுமில்ல. நீயே ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காத.” 

 

“அவ்வளோதானா?”

 

“பின்ன? உனக்கு நைஃபா வேணும்னா ஆவேனே தவிர ஒயிஃபால்லாம் ஆவேன்னு நெனச்சி கூட பாக்காத. இடியட்…” என்று கத்தி விட்டு சென்றவள், அறைக் கதவை அவன் செவிகள் கிழியும் அளவிற்கு சத்தத்துடன் சாத்தினாள்.

 

“ஹப்பாடா கோவத்துல கத்திட்டு போய்ட்டா. அவ மட்டும் போகாம இங்கயே நின்னு சாப்பாடு எல்லாத்தையும் உன் தட்டுல வச்சிருந்தா இந்தரேஷ்வரா உன் வயிறு வெடிச்சு செத்து இருப்படா. நல்ல வேள, தப்பிச்சோம். இவள சமாளிக்க தெரியுதோ இல்லயோ? ஆனா கோவப்பட வைக்க கத்து வச்சிருக்குறது எவ்ளோ வசதியா இருக்கு” என்று நினைத்தவன் தனக்கு தானே சிரித்து கொண்டான்.

 

“தேங்க் காட், சாப்பாட்டுல உப்ப கொட்டுறது, மிளகாய் தூள கொட்டுறதுன்னு அப்படி ஏதும் பழி வாங்க தோணல இவளுக்கு. பழி வாங்குறதுல கூட நான் நிறைய இவள சாப்பிட வச்சிட்டேனாம். என்னையும் அதே மாதிரி சாப்பிட வைக்கணுமாம். இந்த ஈ அடிச்சான் காப்பி புத்தி மட்டும் இப்போ வரைக்கும் மாறவே இல்லையே இவளுக்கு. அதுவும் ஒழுங்கா தெரியுதா? இதோ பாதிலையே கோவம் வந்து போய்ட்டா. இவ இன்னும் சின்ன புள்ள தனமாவே இருக்குறதும் நமக்கு எல்லா விதத்துலயும் சேஃப் தான்” என்று பல கோணத்தில் தன் மனையாளின் செயல்களை நினைவு கூர்ந்து கொண்டே சாப்பிட்டு முடித்தான் இந்தர்.

 

அதீத கோபத்தில் கதவை அறைந்து சாத்தி விட்டு கட்டிலில் படுத்தவள் அப்படியே தூங்கி போனாள். திடீரென கதவு தட்டும் ஓசை கேட்டு விழித்தவள் தூக்க கலக்கத்தில் கதவை திறந்தாள்.

 

‘நிம்மதியா தூங்க கூட விட மாட்டான் போல இந்த காட்டான்…’

 

கதவு தொடர்ந்து பலமாக தட்டப்பட்டு கொண்டே இருந்தது.

 

தன் கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே கோபமாய் வந்தவள், “உனக்கெல்லாம் அறிவே இல்லயா? நிம்மதியா தூங்க கூட விட மாட்டியா என்ன? டோர் பிரேக் ஆகுற அளவுக்கா தட்டுறது?” என்று கத்தினாள்.

 

“என்ன பஜாரி? வந்த உடனே அவர் ரூம்ல இருந்து அவரையே துரத்திட்டியா? பாவம், அந்த மனுஷன சோஃபாவுல படுக்க வச்சிட்டு, அவரையே திட்டிட்டு இருக்க. நான் கூட உன்னை என்னவோன்னு நினச்சேன். ஆனாலும் ரொம்ப தைரியம் தான் உனக்கு” என்றான் அங்கே நின்ற ராகவன். 

 

தன் உறக்க கலக்கத்தில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்த‌ ஆத்வி, சகோதரனை கண்டதில் சற்றே மன ஆறுதல் கொண்டாள்.

 

“வாடா நல்லவனே! இப்போ தான் தோணுச்சா நான் இருக்கேனா இல்ல செத்துட்டேனான்னு பாக்க?” என்று வார்த்தைகளை நெருப்பாய் வீசினாள் அவன் மீது. 

 

“ஐ யாம் வெரி சாரி சிஸ்டர். இப்போவும் எனக்கா தோணல. மாமா தான் காலைல ஜாகிங் போறப்போ உன்னை வந்து பாத்துட்டு போக சொன்னாரு. அதான் அவர் பேச்சுக்கு மரியாதை குடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என்றவாறே அந்த அறையில் இருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தான் ராகவன். 

 

“என்னை பாக்கணும்னா கூட அவன் சொன்னா தான் வருவீல்ல? அந்த அளவுக்கு உங்க எல்லாரையும் மயக்கி வச்சிருக்கானா அவன்?” என்று விரக்தியாய் கேட்டாள் ஆத்வி.

 

“அஃப்கோர்ஸ் கா! பொண்ணு கொடுத்த வீட்டுக்கு அடிக்கடி நாங்க வந்துட்டுப் போனா மரியாதை இருக்காது பாரு” என்று அவன் விளையாட்டாக கூறியது ஏனோ அவளுக்குள் முதல் கட்ட தீண்டாமை உணர்வினை தொடங்கி வைத்தது.

 

“அதெல்லாம் இருக்கட்டும். நீதான் அப்பாவுக்கே மரியாதை கொடுக்க மாட்டியே, என்ன இவன புதுசா மாமான்னு சொல்ற?” என்றாள் தன் கோபத்தை அடக்கி கொண்டு. 

 

இந்த உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே அறை வாசலுக்கு வந்துவிட்ட இந்தர் தன் மச்சினன் ராகவன் தன் மனையாளின் பதிலுக்கு, என்ன பதில் கூற போகிறான்? என்பதை வெளியில் இருந்தே கவனித்தான்.

 

“அக்கா வீட்டுக்காரர மாமான்னு தான கூப்பிடுவாங்க? அத்தைனா கூப்பிடுவாங்க? இது தான தமிழ் பண்பாடு? இதுதானய்யா நம்ம கலாச்சாரம்? இது கூட தெரியாம கல்யாணம் பண்ணிட்ட, ப்ளடி ஃபூல்…” 

 

“டேய், சமாளிக்காம ஒழுங்கா உண்மைய சொல்லுடா.”

 

“அவரு என்னை அப்பாவ விட ரொம்ப கேர் பண்ணிப்பாரு. அதான் மரியாதை தானா வருது.”

 

“ஆனா விக்ரம்கூட உன்கிட்ட அன்பா தானே பழகினான்? அவனை நீ ஒரு தடவ கூட இப்படி கூப்பிட்டு பாக்கலையே?” என்றாள் சந்தேகமாக. 

 

“மறுபடியும் என்‌ சிஸ்டருக்கு வேப்பிலை அடிக்கணும் போலயே. அவனுக்கு உன் மேலயே அக்கறை இல்ல, ஆக்ட் பண்றான்னு பல தடவை சொல்லிருக்கேன். கல்யாணத்துல கூட பச்சையா அவன் கேரக்டர் வெளிய தெரிஞ்சது. நீ ஏன்தான் இன்னும் அவனை நல்லவனா நம்புறியோ தெரியல. இதுக்கு மேல அவன் கதைய பேசாத, கடுப்பாகுது” என்று ராகவன் கூறியதில் நக்கலாக சிரித்து கொண்டு உள்ளே வந்தான் இந்தர். 

 

அதில் முகம் கருவியவள், ‘என் விக்ரம இந்த பொடியன் கேவலமா பேசுற அளவுக்கு ட்ரைனிங் குடுத்து வச்சிருக்கியா? இனி உனக்கு நிம்மதியே இல்லாம பண்றேன்டா’ என குரூர எண்ணங்களை தன் மனதில் விதைத்தாள் ஆத்விகா.

 

“டேய், உங்கக்கா உன்னை விட்டுட்டு என்னை முறைக்கிறாடா…” என்றான் இந்தர்.

 

“சாரி மாமா, ரொம்ப நாளா உங்ககிட்ட இந்த உண்மைய மறைச்சுட்டோம் நாங்க. அவளுக்கு பார்வை கொஞ்சம் கோளாறு. யாரையுமே நேரா பார்க்க வராது, மூளை கூட லைட்டா…” எனும் முன் அவன் முதுகிலேயே விழுந்தது இரண்டு தோசை.

 

“பேசாம போறியா? இல்ல, உன்ன உறிச்சு உப்பு கண்டம் போடவாடா?” என்று அவன் தலையில் இரண்டு கொட்டு வைத்தாள் ஆத்வி.

 

“விடு ஆவி, செத்துற போறான்…” என்று இந்தர்தான் சிரமப்பட்டு அவனை தன் மனையாளிடம் இருந்து காப்பாற்றினான்.

 

‘உன் கூட்டாளிதான? நீ சொல்லித் தராமலா அவன் இவ்வளவு பேசுறான்?’ என்று அவன் மேலொரு அனல் பார்வையை வீசிவிட்டு பால்கனி பக்கம் போனாள்.

 

அதே நேரம், “இந்தாங்க புள்ளைங்களா, டீ போட்டு எடுத்துட்டு வந்துருக்கேன். குடிச்சிட்டே பேசுங்க” என்று எடுத்து வந்து கொடுத்தார் பாட்டி. 

 

ராகவன், “தேங்க்ஸ் பாட்டி, நீங்க ஏன் வயசான காலத்துல எல்லா வேலையும் பண்றீங்க? புதுசா ஒரு அடிமை வந்துருச்சுல்ல? அவளுக்கு ஆர்டர் போட்டுட்டு காலாட்டிட்டு இருக்க வேண்டியதுதானே?” என்றவன் காலில் நங்கென்று மிதித்தாள் ஆத்வி. 

 

“சும்மா இருடா, அவளும் உன்னைப்போல குழந்தைதான்.”

 

ராகவன், “இந்த வீட்ல மட்டும் தான் குரங்கெல்லாம் குழந்தைகள் லிஸ்டில் வருது…” என்று சொல்லிட, 

 

“அடங்க மாட்டியா டா நீ?” என்று அவன் தலை முடியை பிடித்து ஆய்ந்துவிட்டாள் ஆத்வி.

 

தப்பிக்க அவள் கையை பிடித்து கடித்துவிட்டான் ராகவன். 

 

லேசாக கடித்ததற்கே, “ஐயோ, விஷ ஜந்து என் மேல விஷத்தை பாய்ச்சிருச்சே!” என்று பத்து ஊருக்கு கேட்கும்படி கத்தி கதறினாள் ஆத்விகா.

 

அவர்கள் இருவரும் அடித்த டூட்டியில் இந்தருக்கு கூட கொஞ்சம் இதழ் மலர்ந்து விட்டது.

 

மூவரையும் தன் விழியால் வருடிய பாட்டி, ‘எவ்வளவு வருஷத்துக்கு அப்றம் இந்த வீடு இவ்வளவு கல கலன்னு இருக்கு இந்த சந்தோஷம் இப்படியே நிலைக்கட்டும் ஆண்டவா’ என்று உடனடியாக கடவுளிடம் பிரார்த்தனை வைத்தார் அந்த பெரிய மனுஷி.

 

பிறகு சிறிது நேரம் இந்தருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த ராகவன், “நேரமாச்சு கிளம்புறேன் மாமா” என்றிட, அவனை வாசல் வரை சென்று வழியனுப்பினான்.

 

“மாமா இந்த தோட்டமே பெரிய கிரவுண்ட் மாதிரி இருக்கே! நம்ம ஏன் இதுல கிரிக்கெட் விளையாட கூடாது?” என்றான் அந்த வீட்டு தோட்டத்தை பார்த்துக் கொண்டே. 

 

“ரெண்டு பேர் சேர்ந்து விளையாண்டா அது கிரிக்கெட்டாடா?”

 

தலையை சொறிந்தபடியே, “மெயின்டனன்ஸ்க்குலாம் ஆள் வர்றாங்களா மாமா?”

 

“இல்லடா! ஆல் இன் ஆல் நான் தான் பாத்துக்கிறேன்.”

 

“சரியான கஞ்ஜூஸ் மாமா நீங்க.”

 

“டேய் வாலு! உங்க அக்காக்கு நீ ஒன்னும் சளச்சவன் இல்லடா. என்னா பேச்சு பேசுற.” 

 

“அவளோட வளர்ப்பு மாமா, கொஞ்சம் அப்படி தான் இருப்பேன்” என்றான் ராகவன் நக்கலாக. 

 

“ஏற்கனவே கடுப்புல இருக்கா. இதுவும் காதுல விழுந்தா உன்ன கொன்னுட போறா. அமைதியா கிளம்பிடு…” 

 

“நான் அவகிட்ட வாங்காத அடியா?” என்று காலரை தூக்கி விட்டு பெருமை பீற்றிக் கொண்டே அங்கிருந்து சென்றான் ராகவன். 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
🌙 நிலவின் கனவு! ✨​
231 40 0
இராவணின் வீணையவள்
45 0 0
ஆரெழில் தூரிகை
306 15 1
வேண்டினேன் நானுன்னை
537 6 0
நீ எந்தன் நிஜமா?
374 8 1
என்துணை நீயல்லவா?
455 12 0
கற்றது காதல்
215 1 0
நிழலென தொடர்கிறேன்
210 2 0
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page