காதல் – 9
காதல் 9
திடீரென்று வீடு தேடி வந்து இருக்கும் கணேஷையும் இந்துவையும் பார்த்து திடுக்கிட்டாலும்.. எதற்காக வந்து இருக்கிறார்கள் என்று அறிந்துக் கொண்டாள் வசந்தா. ‘அன்று இந்துவை பெண் கேட்டு வந்த பிறகு ஒரு முறை கூட தன் அண்ணனிடம் அதன் பிறகு அதை பற்றி பேசவில்லை. அதை பற்றி தான் கேட்க. கந்து இருக்கிறார்கள்’ என நினைத்தவள் வாசலில் நின்று இருக்கும் கணேஷை உள்ளே அழைத்தாள்.
“வாங்கண்ணா வாமா இந்து எப்படி இருக்கீங்க “என்று அண்ணனும் அண்ணன் மகளையும் வரவேற்றார் வசந்தா.
கணேஷோ”எங்களுக்கு என்னம்மா நாங்க நல்லா தான் இருக்கும்” என்று சொல்லியபடியே வீட்டுக்குள் நுழைந்தார் கணேஷ்.
வசந்தாவோ கையை பிசைந்நநுக் கொண்டு “ஆமா அண்ணா, அண்ணி வரலயா” என்க.
“இல்லம்மா வரல, சுந்தரமும், மாப்பிள்ளை வீட்டில் இல்லையா” என்று கண்களை சுழல விட்ட படியே கேட்டார் கணேஷ்..
“அவரு காலேஜ் விஷயமா வெளியே போயிருக்கார் அண்ணா. ராஜா இப்பதான் ஆபிஸ் போனான். ஆமாண்ணா என்ன விஷயமா வந்திருக்கீங்க” என்று ஏதோ தெரியாதது போல் கேட்க.
தன் அத்தை இப்படி கேட்டதும் ” ஏன் அத்தை நாங்க வரக்கூடாதா?” என்று இந்து பாவமாக கேட்டாள்.
உடனே “அச்சச்சோ இது உன் வீடு மா நீ எப்ப வேணாலும் வரலாம்” என்றார் வசந்தா.
கணேஷோ ” அது ஒன்னும் இல்லம்மா வசந்தா, நம்ம இந்து உன்னையும் மாப்பிள்ளையும் பார்க்கணும்ன்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன். அப்புறம் நீயும் சுந்தரமும் வந்து பொண்ணு கேட்டுட்டு வந்து நாலு மாசம் ஆச்சு உங்க கிட்ட இருந்து எந்த பதிலும் இல்லை போன் பண்ணாலும் ஒழுங்கா பேச மாட்டிகிறீங்க அதான் நானே நேர்ல வந்து என்ன விஷயம் எதுவும் கேட்டு போலாம்னு வந்தேன். ” என்று சொன்னவரை பார்த்த,
வசந்தாவோ தன் மனதிற்குள் “நான் என்ன நினைச்சேனோ அதுக்குதான் அண்ணன் வந்து இருக்கு. இப்ப இவங்களுக்கு என்ன பதில் சொல்றது இந்துவ பொண்ணு பார்த்து பேசிட்டு வந்ததிலிருந்து இந்த நாலு மாசமா ராஜாகிட்ட கேட்காத நாளில்லை ஒரு பிடிப்பு கூட கொடுக்க மாட்டேங்கிறான் என்ன பண்ணலாம்” என்ற யோசனையில் நின்று கொண்டிருந்தார் வசந்தா.
தன் தங்கை அமைதியாக இருப்பதைப் பார்த்த கணேஷ் “என்னம்மா ஏதோ யோசனையா இருக்க போல “என கேட்க, ‘அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியலையே’ என்று தவித்தவள் தன் கையை பிசைந்தபடி,
“அது வந்து அண்ணா அவன்கிட்ட எவ்வளவோ பேசிப் பார்த்துட்டோம் அவன் ஒரு பதிலும் சொல்ல மாட்டேங்குறான் அதான் என்ன பண்றதுன்னு தெரியல. உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல அண்ணா” என்று ஒரு வழியாக உண்மையை கூறி முடித்தாள்.
இதை கேட்ட கணேஷோ கோபமாக வந்தாலும் அதை தன் தங்கை முன் காட்டிக் கொள்ளாமல் “சரி மா உனக்கு இந்த கல்யாணத்துலா சம்மதம் தானாமா. “என்றார் யோசனையோடு.
வசந்தாவோ”என்ன அண்ணா இப்படி கேட்டுத்தீங்க. சம்மதம் இல்லாம தான் உங்க வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வந்தோமா?. “என்க.
“சரிமா இனிமே நான் பார்த்துக்குறேன். அப்போ நாங்க கிளம்புறோம்மா. “என்றார் பலத்த சிந்தனையில்.
வசந்தாவோ சிறு பதற்றத்துடன் “என்ன பண்ண போறீங்க அண்ணா. “என்றவளிடம்,
“என் பெண்ணு தான் உன் வீட்டு மருமகள். அதுக்கான வேலையை தான் பார்க்க போறேன். ஆனா நீ எனக்கு முழு ஒத்துழைப்பு தரனும். “என்றார் முடிவோடு.
“கண்டிப்பா அண்ணா. “என்று வசந்தா உறுதி அளித்ததும், அவர் அவருடையா திட்டத்தை சொன்னார்..
அதை கேட்ட வசந்தா “அண்ணா எனக்கு என்னவே இது சரி பட்டு வருமான்னு தெரியலா. அவன் கோபத்தா பத்தி உங்களுக்கு தெரியும். எனக்கு கொஞ்சம் பயமாவே இருக்கு அண்ணா. “என பயத்துடனே கூற,
கணேஷோ “ராஜா கோபத்தை நினைச்சா. நம்ம காரியாம் சாதிக்க முடியாதும்மா. உனக்கு உன் புள்ளை வாழ்க்கை நல்ல இருக்கானுமா வேண்டாமா?. “என்று தங்கையின் மனதை கரைக்க ஆரம்பித்தார்.
வசந்தாவும் “எனக்கு அவன் வாழ்க்கை நல்ல இருந்த போதும்” என்றால் ஒரு மனதோடு.!
இதை கேட்ட கணேஷ் உள்ளுக்குள் ‘அவன் வாழ்க்கைக்கு இல்ல எங்க வாழ்க்கை தான் இனிமேல் அமோகமா இருக்க போகுது.’என மனதில் நினைத்து” சரிமா நான் கிளம்புறேன் இந்து இங்கயே இருக்கட்டும் இனிமேல். இந்து மா பார்த்து சூதானமா நடந்துக்கன்னும் சரியா….”என்று தன் மகளுக்கு அறிவுரை வழங்க.
“ம்ம்ம் சரிங்க பா” என்று அவரை வழி அனுப்பிவிட்டு வந்தவள். “அத்தை நீங்க எதுக்கு கவலைபடாதீங்க நான் பார்த்துக்குறேன். நான் நாளையிலா இருந்து மாமா கூட ஆபிஸ் போறேன். இதுக்கு மட்டும் மாமாகிட்ட அனுமதி வாங்கி கொடுங்க. “என்றாள் இந்து.
வசந்தாவோ பெருமூச்சோடு “சரிமா நீ மேல ரூமுலா போய் ரெஸ்ட்டு எடு. “என்று கூறி அவரும் தனதறைக்குள் சென்றுவிட்டார்.
இந்த நான்கு மாதத்தில் இன்பராஜா.. அவளை பழிவாங்கும் படலத்தை மறந்து. தன் காதலில் வேறு ஒருவர் நுழையாமல். தடுக்க முயற்சி செய்துக்கொண்டு இருந்தான்.
அவளை தினமும் பார்க்கும் பாக்கியம் போதும் என்று அமைதியாக இருத்தான். கீதாவும் இப்போது எல்லாம் அருண்கிட்ட எரிந்து விழமல் நட்புடானே பழக ஆரம்பித்தாள்.
அருணுக்கும் இப்போதைக்கு இதுவே போதும் என்றாகிவிட்டது. ஆனால் அவளை பற்றி அறிந்து கொள்ள செய்த முயற்சி எல்லாம் பாழாகி தான் போனாது. ஆனால் கீதா மட்டும் தன்னவன் கிட்ட இருந்து மட்டும் தள்ளியே இருந்தாள்.
“அருண்! நீங்களும் கீதாவும் என் கேபினுக்கு வாங்க. “என்று ராஜா இன்டர்கேமில் அழைக்க.
“ஓகே சார்,” என்று சொல்லியவன் “ஏஞ்சல்” என அழைக்க. அவள் முறைத்துப்பார்த்தாள்.
அருணோ “ஏய் அப்படி பார்க்கதம்மா. நான் என்ன பண்ணட்டும் உன்ன அப்படி கூப்பிட்டே பழகிடிச்சி. சரி விடு சார் நம்மலா வர சொன்னாரு வா போலாம். “என்று எழுந்தவனிடம்,
“அதான் மார்னீங்கே எல்லாத்தையும் ரெடி பண்ணி கூடுத்துடோமே. அப்புறம் என்ன. “என்றாள் சற்று எரிச்சலுடன்.
அருணோ “ஏம்மா நம்ம அவரு ஆபிஸ்லா வேலை செய்யுறோம். அதுவும் இல்லாம நம்ம அவரு பி.ஏ. புரியுதாவா.” என கூறிவிட்டு ஏதோ யோசனையோடு ” ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ஏஞ்சல். “என்றான்.
கீதாவோ “என்ன சந்தேகம்.? “என்க.
அவனும் “இரண்டு பேற எதுக்கு அவரு பி.ஏ வா தேர்ந்தெடுக்கனும்.”என்றான் அறிவாளியாக.
கீகாவோ தலையில் அடித்துக் கொண்டு “லூசு உனக்கு இன்னுமா புரியாலா. இந்த நாலு மாசத்துலா நீ ஒரு தடவையாவது மாடலிங்கிட்ட. பேசி ஆப்ஐமேன்ட் வாங்கி இருக்கியா? “என்றாள் கேள்வியோடு.
அருணும் யோசித்து பார்த்துவிட்டு “இல்ல? மாடல் கிட்ட தான் வாங்கி இருக்கேன். “என்றான்.
“ம்ம்ம்ம். இப்ப புரியுதா. அதுவும் இல்லாம சூட்டீங்பாட்ஸ்லாம் நீயும், அவரும் தானா போய் பார்க்கிறீங்க. “
“ஆமா ஆமா இப்ப புரியுது. ஆனா ஒரு விசியம் பா. அவரு கார்லா என்னை முன்னாடி உட்கார விட மாட்டார் தெரியுமா. “என பாவமாக கூற.
கீதாவோ கேள்வியோடு “ஏன்? “என்றாள்.
அருணோ சலித்தபடி “ஏனா! அவரு மனைவி மட்டும் தான் உட்காரன்னுமாம்.”என்று கூறியதை கேட்ட கீதா
“ஓ,” என்று கூறியவள் ” சரி வா பாஸ் கேபினுக்கு போலாம். இல்லானா அவரே வந்துடா போறாரு. “என அவள் சொல்லிவிட்டு திரும்பவும் இன்பராஜா கதவை திறந்துக்கொண்டு உள்ளே வரவும்… சரியாக அவன் மேல் மோதினாள்.
மோதி பின்னால் விழ போனாவளை கைதாங்களாக பிடித்து திருத்தினான் ராஜா..
அந்த நெருக்கத்தில் இரு விழிகளும் சில வருடம் கழித்து நேருக்கு நேர் சந்தித்ததில் இருவரும் தன் நிலையை மறந்து சிலையாகி அப்படியே மெய்மறந்து இருந்தனர்.
அருணே இதை பார்க்க முடியாமல் காதில் புகை வந்துக்கொண்டு இருந்தது. ‘கடவுளே உனக்கு இது அநியாயமா இல்ல எனக்கு நடக்க வேண்டியாதுலாம். இந்த சீடு முஞ்சி பாஸ்க்கு நடக்குது. அட இன்னுமா இவங்க இதே போஸ்லா இருக்கங்கா. என்னாலா பார்க்க முடியால.’ என்று மனதில் புலம்பிக்கொண்டு அவர்கள் இருவரையும் பிரித்து நிறுத்தினான்.
ராஜாவோ “சாரி, சாரி கீதா நீங்க கீழ விழ போனீங்க அத புடிச்சேன். “என்று பேச போக.
கீதாவோ அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே “இட்ஸ் ஓகே. சார் “என்றாள்.
இதை கேட்ட அருணோ ‘இட்ஸ் ஓகே வா. கீழ விழ போனா இவ்வளவு நேரமா புடிச்சிட்டு இருப்பாங்க. அதான் நான் பின்னாடியே வந்துட்டு இருந்தேன்லா. நான் புடிச்சி இருக்க மாட்டேனா.’ என மனதில் புலம்பிக்கொண்டே இருந்தவன்,
“சார்…நாங்க உங்க கேபினுக்கு வந்துட்டு இருந்தோமே சார். “என்று இழுத்தான்.
ராஜாவோ சிறு தடுமாற்றத்தோடு “அது வந்து அருண் ஒரு சின்ன ஒர்க் இருக்கு அத நானே நேர வந்துட்டேன். “என்று சமாளித்தான்.
எப்படி கூறுவான் தன்னவளை நேரில் பார்க்கும் ஆசையில் ஏதே வேலை இருப்பதாக வர சொன்னான். ஆனால் அவனால் காத்துக்கொண்டு இருக்க முடியாம நேரில் வந்து விட்டான் அல்லவா.
ராஜா யோசனையோடு நின்று இருப்பத்தை பார்த்து “சொல்லுங்க சார் என்ன வேலை.” என்க.
ராஜாவோ “மேலா ஆபிஸ் ஸ்டோர் ரூம்லா விளம்பரத்துக்கு தேவையான திங்க்ஸ் இருக்கு அதெல்லாம் எடுக்கனும். நாளைக்கு சூட்டீங் இருக்கு. இன்னிக்கு ரெடி பண்ணாதான். நாளைக்கு சரியா இருக்கும்.” என ஏதோ ஏதோ சொல்ல.
அருணும் கீதாவும் “ஓகே! சார் வாங்க போலாம்.”என்று கூறினர்.
பின் மூவரும் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு இருந்தனர்.
சடலென்று அலரல் சத்தம் கேட்டு திரும்பினான் அருண் “என்னாச்சி சார். ஏன் கத்தினீங்க “என கேட்க. அவன் காட்டும் திசையை பார்த்து இவனும் கத்தா ஆரம்பித்தான்.
“ஐய்யயோ யாராவது எங்களா காப்பத்துங்க. சீக்கிரம் வந்து காப்பத்துங்க காப்பத்துங்க யாராவது வாங்களே பீளீஸ்.” இவர்கள் சத்தம் கேட்டு எட்டி பார்த்தவள் குப்பென்று சிரித்து விட்டாள். கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்துக்கொண்டு இருந்தாள் கீதா.
அருணோ “ஏஞ்சல் பிளீஸ் பிளீஸ் அந்த கரப்பான்பூச்சி தூக்கிப்போடு” என்று கெஞ்சினான்.
இன்பராஜாவும் கூட சேர்ந்து கெஞ்சவும் இன்னும் இவளால் சிரிப்பு அடக்க முடியவில்லை. கரப்பான்பூச்சை தூக்கிதூரம் போட்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.
“இன்னும் எதுக்கு சிரிக்கிற” என அருண் கேட்க.
அவள் சிரித்துக்கொண்டே “நீங்க கரப்பான்பூச்சி பார்த்து பயந்ததுக்கு கூட எனக்கு சிரிப்பு வரல. நீங்க இரண்டு பேரும் நிக்குற போஷிசன் பார்க்கும் போது தான் சிரிப்ப அடக்க முடியால.”என்று சொல்லி மீண்டும் சிரித்தாள்.
அவள் சொன்னாவுடன் தான்….அவர்களை அவர்களே கவனித்தார்கள். ஜன்னல் மேல் ஏறி நின்று ஒருவர் கால் மேல் ஒருவர் காலை வளைத்து இருவர் கண்ணங்களும் ஒட்டிக் கொண்டு… ஒருவரை ஒருவர் கட்டி பிடித்துக் கொண்டு நின்ற கோணத்தை அவர்களுக்கே பார்க்க சகிக்கவில்லை. சட்டென்று விலகி. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அசடுவழிந்துக்கொண்டு. கீதாவின் முன் வந்து நின்றார்கள்.
“இரண்டு பேரும் பாய்ஸ் தானா.” என கேட்டு விட்டு மறுபடியும் சிரித்துக்கொண்டு.” நீங்க இன்னமும் மாறவே இல்ல இப்பவும் கரப்பான்பூச்சிக்கு பயப்புறீங்க. “என அவள் கேட்க. இருவரும் அவளை பார்த்தார்கள்.
“நான் கரப்பான்பூச்சிக்கு பயப்புடுவேனு உனக்கு ஏற்கனவே தெரியுமா?” என அருண் கேட்க.
அருண் அப்படி கேட்டதும் சட்டென சிரிப்பை நிருத்திவிட்டு முழிக்க ஆரம்பித்து விட்டாள் கீதா. என்ன செய்வது என்று தெரியாமல் இன்பராஜாவை பார்த்தாள். அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும் இவள் யாரைக் கேட்க்கிறாள் என்று.
பின் இன்பராஜா இடையில் புகுந்து பேச்சை மாற்றினான். “திங்க்ஸ் எடுத்தாச்சில கீழ போலாம் வாங்கா. “என அவளை பார்த்துக்கொண்டே தன் கேபினுக்கு சென்றான் ராஜா..
இருவருமே தங்கள் இருப்பிடத்தில் அமர.. அவர்களே அறியாமல் மீண்டும் பழைய நினைவுகள் அவர்களை ஆட்க் கொண்டது.
———————————————————
” என்ன மச்சி உன் ஆளு இன்னும் வரலியா? ” என்று தன் நண்பனிடம் கேட்டான் சூரியா.
ராஜாவும் “வந்துட்டா சூரியா அவ கிளாஸ் ரூம்லா இருக்கா “என்று கூற.
அருகிலிருந்த பரத் ஆவலுடன் ” டேய் முடிவு சொல்லிடாலா” என கேட்க.
ராஜாவோ இருப்பகம் தலையாட்டி “இன்னும் இல்ல டா.” என்றான்.
அதை பார்த்தவன் ” ஏன்! டா நீ போய் அவ கிட்ட கேக்கலாம்லா. “என்க.
“கேட்டேன்டா. ஆனா அவ நேத்து எந்த டைம்க்கு எந்த இடத்துலா நான் சொன்னனோ. அப்ப தான் அதே இடத்துலா தான் சொல்லுவேன்னு போய்ட்டா டா.! “என்றான் பாவமாக.
“அதனாலா தான் ஐய்யா முகம் வாடிப்போய் இருக்கு.” என சூரியா கிண்டல் செய்தான்.
பரத்தோ ” இதுல இருந்தே உனக்கு புரியில்லையா ராஜா அவளுக்கு உன்னை பிடிக்கல.” என்று தன் நண்பனின் காதலை வெட்டிமுறிக்கவே முயன்றுக் கொண்டு இருந்தான்.
ராஜாவோ “இல்லடா பரத் அவ கண்ணுல என் காதலா பார்த்தேன்டா. அவ கண்டிப்ப வருவா. நீங்க போங்கா. ” என ஆசையோடு கூறிய ராஜாவை பார்த்து
“இல்லடா மச்சி நாங்களும் இங்கயே இருக்கோம்டா. கீதா வந்ததும் நாங்க போறோம். ” என்றான் பரத்.
ராஜாவோ படப்படப்புடன் காத்துக்கொண்டு இருந்தான். வெகுநேரம் ஆகியும் அவள் வரவில்லை. “டேய் இப்பவே நேத்து நீ சொன்னா டைமா முடிஞ்சி ஒருமணி நேரத்துக்கு மேல ஆகுது. அவ வர மாதிரி தெரியுலா வா கிளம்பு. நம்மலே உன் ஆள போய் பார்க்கலாம்”. என பரத் சொன்னான்.
அதை கேட்டவன் “இல்ல டா நம்ம அந்த பக்கம் போனதும் கீதா இங்க வந்த என்ன பண்றது.” என்றான் கவலையோடு.
” சரிடா இன்னும் கொஞ்ச நேரம் வைட் பண்ணி பார்க்கலாம். ” என சூரியா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே. “டேய் ரம்யா வாரடா. என்னடா அவ மட்டும் தனியா வார உன் ஆள வரல.” என சூரியா சொல்லிக் கொண்டே,
“ரம்யா இங்க வா கீதா வரலயா” என்று கேட்டான்..
ரம்யாவோ “அவ மூன்னு மணிக்கே முக்கியமான வேலை இருக்குன்னு கிளம்பிட்டா சூரியா. ” என்று சொல்லிவிட்டு ரம்யா போக.
அவள் சென்றதும் தன் நண்பனின் முகத்தை பார்த்தவன் கலங்கிவிட்டான் சூரியா.
‘உன்னை நாங்க இப்படி அமைதியா இருந்து பார்த்ததே இல்லடா. உன் நல்ல மனசுக்கு கண்டிப்பா அவ உன்னை தேடி வருவா. ‘என மனதுக்குள் நினைத்துக்கொண்டு சிறிது நேரம் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். பரத்துக்கும் கொஞ்சம் பாவமாக தான் தேன்றியது.
“டேய் மச்சி எனக்கு என்னவே இது எதுவும் சரியா படலாடா வீட்டுக்கு கிளம்பு நாளைக்கு அவ கிட்ட பேசிக்கலாம். ” என ராம் சொல்ல.
ராஜாவோ “நீங்க போங்க நான் இன்னும் கெஞ்ச நேரம் வைட் பண்ணி பார்க்குறேன்.” என்றான்.
சூரியாவோ “ராஜா இப்பவே டைம் நைட் எட்டு ஆச்சிடா.. உங்க அம்மா நீ போனை எடுக்கலானு எனக்கு நாலு வாட்டி போன் பண்ணிட்டாங்கடா. கிளம்பு போலாம்” என்று தன் நண்பனை அழைக்க. அவனோ,
“நீங்க போங்கடானு சொல்றேன்லா. நான் கிளம்பிக்கிறேன்” என்று கத்தினான்.
வேறு, வழி இல்லாமல் சூரியா பரத்தையும் ராமையும் அனுப்பிவைத்து விட்டு. அவன் மட்டும் தன் நண்பனோடு அமர்ந்தான்.
அதை பார்த்த ராஜா வலியோடு “ஏன்டா நீ போலியா.” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்ட நண்பனிடம்.
“என் நண்பன் கஷ்டத்துலா இருக்கும் போது நான் எப்படிடா. தனியா விட்டு போக முடியும்.” என்று கூறிய சூரியாவை கட்டி அணைத்து இரு துளி கண்ணீர் சிந்தினான்..
சூரியோவோ “ஏய் பாய்ஸ் அழுவங்களடா பார்க்குறவங்க என்ன நினைப்பார்கள். ” என்று அவனை சமாதானம் செய்ய. ராஜாவோ,
“இல்ல மச்சி, காலையில் வழக்கம் போலா அவள பார்க்க போனேன்டா. அவளும் துள்ளிக்குதிச்சி சந்தோஷமா தான் வந்தா. அப்போ அவகிட்ட,
“என்ன கீதா. இவ்வளவு சந்தோஷம். உங்க வீட்ல ஓகே சொல்லிட்டாங்களா. ” என ஆவலோடு ராஜா கேட்ப்பதை பார்த்த கீதா சட்டென முகத்தை சோகத்துடன் வைத்துக்கொண்டு,
“நான் இப்ப சொல்ல மாட்டேன். நீ என் கிட்ட எங்க வச்சி எந்த. டைம்லா சொன்னியே அப்ப சொல்றேன். ” என்று கூறியவள் முன்னேறி போக.
ராஜாவோ “ஏய் என்னால அவ்வளவு நேரம்லா வைட் பண்ண முடியாது.” என்றான் உரத்த குரலில்.
கீதாவோ திரும்பி பார்த்த நடந்துக் கொண்டே “எனக்காக என் பதிலுக்காக உன்னால வைட் பண்ண முடியாதா?”. என்றாள் காதலுடன்.
அவள் கண்களை பார்த்தவனோ அவள் கண்கள் காதலுடன் பார்ப்தை அறிந்து. “உனக்காக இன்னிக்கு மட்டும் இல்ல டீ. எத்தனை ஜென்மம் ஆனாலும் வைட் பண்ணுவேன். சரி நீ.. போ ” என்று அனுப்ப,
“ம்ம்ம்” என திரும்பி நடந்தவள் ஏதே யோசனையில் மீண்டும் ராஜாவை பார்த்தூ திரும்பியவளை.
“என்ன” என்பது போல் பார்த்தான்.
கீதாவோ “ஆமா உன் பெயர் என்ன?. ” என்று கேட்க.
“அடிபாவி என் பெயர் கூட தெரியாதா. ” என்றான் ஆச்சிரியமாக.
அவளோ பாவமாக ” ம்” என மட்டும் கூற.
அவள் கண் அசைத்து சொல்லும் அழகை பார்த்தவன் “நீ என் கிட்ட மதியம் உன் முடிவ சொல்லுவால அப்ப சொல்றேன். என் பெயரை ” என்று அவளை அனுப்பி வைத்தான்.
காலையில் நடந்த அனைத்தும் தன் நண்பனிடம் கூறிக்கொண்டே நிமிர்ந்து பார்த்தான் ராஜா..
“டேய் மச்சி நீ ஏன் டா அழுகுறா. ” என சூரியா அழுவதை பார்த்த ராஜா பதற்றத்துடன் கேட்க.
சூரியாவோ “நீ அழுததும் என்னாலா தாங்க முடிலாடா.” என சொல்லி இருவரும் கட்டியணைத்தனர்.
பின் சூரியா “டேய் ராஜா அவளுக்கு உன் பெயர் கூட தெரியாது?” என்றான் சந்தேகமாக.
ராஜாவும் உதட்டை பிதுக்கி “தெரியாது மச்சி. “என்றான்.
சூரியா எழுந்து நின்றவன் “வாடா அவ வீட்டுக்கு போகலாம். ” என ராஜாவை அழைக்க.
அவனோ அதிர்ந்து ” என்னடா சொல்ற சூரியா இப்பவா. டைம் நடு ராத்திரிடா. ” என்றான்.
சூரியாவோ ” உன்ன அழ வச்சிட்டு, அங்க அவ மட்டும் நிம்மதியா தூங்குவால. வாடா இன்னிக்கு இரண்டுலா ஒன்னு பார்க்காலாம். “என்று ராஜா அழைக்க.
அவனும் தன் நண்பன் சொல்வதை கேட்டு இருவரும் கீதாவின் வீட்டை நோக்கி சென்றனர்.
இனி அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
