காற்றினிலே வரும் கீதம் 4

வீட்டை விட்டு வெளியேறிய மயூரி சுற்றும் முற்றும் பார்த்தவள் வேகமாக நடந்தாள். இரண்டு தெரு தள்ளி இருந்த பப்ளிக் பூத்தை அடைந்து அங்கிருந்து தான் பையில் கொண்டு வந்திருந்த சிறிய  நோட்டை எடுத்தாள்.

அதிலிருந்து பிரியாவின் நம்பரை எடுத்து டயல் செய்தாள். அவள் ஒரு ரிங்கிலேயே எடுக்க

“  பிரியா நான் மயூரி பேசறேன்… சொல்றதை மட்டும் கேளு…”என்று படபடக்க 

“ம்ம்.. என்ன டீ புது நம்பர்ல இருந்து கால் பண்ற…ஓ.. உங்க ஆள் குடுத்ததா…. பீடிகை எல்லாம் பலமா இருக்கே… பெரிய இடத்துக்கு போக போறீங்களா மேடம்…” என்று கேலி பேசியவளை இடைமறித்த மயூரி.

“ஆமா., மண்ணாங்கட்டி…நான் சொல்றதை முதல்ல கேளு… நான் வீட்டை விட்டு வெளியே வந்துட்டேன்… இப்போ.. “ என்று கூறுவதற்கு  முன் 

“ஏய்… என்னடி சொல்ற…!” என்று கத்தினாள் பிரியா 

 “ஷ்…மெதுவா பேசு…நீயே கத்தி காட்டி கொடுத்துறாத… நான் சொல்றதை முதல்ல கேளு… இப்ப  எங்க அம்மா அங்க வருவாங்க…” என்று அவள் கூறும் முன் வாயிலில் மாலினியின் சத்தம் கேட்க

“ வந்துட்டாங்க டி…!!”என்றாள் பதட்டத்துடன்.

“ பயப்படாத நீயே பயத்தை முகத்துல காட்டி… போட்டு கொடுத்துறத… எங்க அம்மாவுக்கே பயந்தா… எங்க அப்பா அண்ணன் வருவாங்க… அதுக்குள்ள ரெடி ஆகிக்கோ…” என்று கூறிவிட்டு

“ இப்ப நான் சொல்றத அப்படியே போய் அவங்க கிட்ட சொல்லு…நான் அங்க வந்தேனானு கேட்பாங்க.. இல்லைன்னு… சொல்லு.  கால் பண்னேனானு  கேட்பாங்க… நேத்து பார்த்ததுக்கு அப்புறம் பேசவே இல்லைன்னு சொல்லு… போ.. “ என்றாள் மயூரி.

“ஏன் டி…இப்படி பண்ற… எனக்கு பயமா இருக்கு..!” என்று கூறுவதற்கும், பிரியாவின் தாய் கதவை தட்டவும் சரியாக இருந்தது 

பிரியா பதட்டத்துடன் இருந்தாலும்  அவள் தாயிடம்” ஒரு நிமிஷம் மா” என்றவள் மீண்டும் மயூரியிடம் 

“ஏய்.. மயூரி..நான் ப்ளூடூத் போட்டுகிறேன். நீ லைன்லயே இரு அவங்க கேக்குறதுக்கு நீயே சொல்லிக் கொடு. நான் அப்படியே சொல்லிடுறேன்..!” என்றாள்.

“சரி… சரி.. நீ சீக்கிரம் போ.. “என்று கூற,பிரியா ப்ளூடூத்தை மாட்டிக் கொண்டே பாட்டு கேட்பது போல வெளியே சென்றாள். 

“என்னம்மா…? “ என்றால் தன் தாயிடம் ரொம்ப சாதாரணமாக 

“ஏய் மயூரியை காணோமா.. டி அவங்க அம்மா இங்க வந்து கேக்குறாங்க… நீயே வா வந்து உனக்கு தெரிஞ்சத சொல்லு…பாவம்  பார்த்தால் பாவமா இருக்கு அழறாங்க.. “என்றார். 

“என்னம்மா சொல்ற..? “ என்று ஒன்றும் தெரியாதவள் போல முன்னறைக்கு சென்றாள் பிரியா.

 அங்கே வாயை சேலையால் பொத்திக்கொண்டு கண்ணீர் விட்டபடி அமர்ந்திருந்த மாலினியை கண்டு பிரியாவிற்கு பாவமாக இருந்தது.ஆனால் தோழியின் மனஓட்டத்தை முன்பே அறிந்திருந்த மயூரி 

“எங்க அம்மா அழுகுறத பார்த்து மனசு உருகிறாத….எல்லாம் டிராமா அந்த வீட்டிலேயே… நான்தான் ரொம்ப பாவம்… அதனால நான் சொன்னதை மட்டும் செய்…” என்றாள் மயூரி அவள் ப்ளூடூத் வழியாக 

சட்டென சுதாரித்து “ஆன்ட்டி..என்ன ஆச்சு..? “என்று அவர் எதிரே சென்று நின்றாள் பிரியா.

மாலினி ஒரு பரிதாபமான பார்வையுடன் 

“மயூரியை காணோம் மா.. “ என்றார் தவிப்புடன்.

“என்ன ஆண்ட்டி..சொல்றீங்க..? “ என்றாள் தவிப்பாக

“ ஆமாமா அதான் இங்க… எதுவும் வந்தாளா..? “ என்றார் கண்ணீருடன் 

“இல்லையே  மகேன் அம்மா.. “ என்றார் பிரியாவின் தாயார்.

“ அப்போ காலேஜுக்கு போயிருப்பாளோ…! காலையிலேயே கிளம்பி வந்தாள். “என்றார் மாலினி.

“ அய்யோ ஆன்ட்டி… இன்னிக்கு லீவு அதான் நானும் வீட்ல இருக்கேன் இன்னைக்கு சாட்டர்டே…!” என்றாள் பிரியா.

“ஆமா… அப்போ இந்த பிரச்சனைல தான் எங்கேயோ போயிட்டாளா..? “ என்றார் லேசாக விம்மலுடன்.

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க…?என்ன பிரச்சனை..?என்றாள் பிரியா.

“ ஆமாம் பிரியாமா…நேத்துல இருந்து ஒரே பிரச்சனை கல்யாண விஷயத்தை சொன்னதிலிருந்தே… ஒரே கஷ்டம் தான்…”என்றார்.

“ ஏன் அவளுக்கு என்ன பிரச்சனையாம்…? “ என்றாள் பிரியா.

“ எங்கம்மா…?அவ ஒன்னுமே சொல்லல.. ஏன்…? மாப்பிள்ளை யாருன்னு கூட சொல்ல விடல எனக்கு கல்யாணமே வேண்டாம்னு ஒரே பிடிவாதம்… என் மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்காம… இப்படி உங்க இஷ்டத்துக்கு பண்றீங்கன்னு… பிரச்சனை பண்ணா…அவங்க அப்பா கோபத்தில் அடிச்சுட்டார். “என்றார் சிறு கவலையுடன்.

“இன்னைக்கு காலைலயும் பிரச்சினை தான்…அவங்க அப்பா இவள காலேஜுக்கே போகக்கூடாதுனு சொல்லிட்டாரு.மகேன் அவளை ரூம்ல போட்டு பூட்டிட்டான். இப்பதான் நான்  கதவை திறந்து இதமா பேசினதும் புரிஞ்சுகிட்டேன் நீங்க யார சொன்னாலும் எனக்கு ஓகே தான்…சொன்னா,பசிக்குதுமான்னு கேட்டா…நான் தோசை ஊத்திட்டு வர்றதுக்குள்ள.. வீட்ல இருந்து வெளியே போயிட்டா…” என்று கூறி கண்ணீர் விட்டார்.

 பிரியாவிற்கு அனைத்தும் புரிந்தது எனவே பதட்டமாக கூறுவது போல் “அய்யய்யோ ஆன்ட்டி… முதல்ல அங்கில் கிட்ட சொல்லி எங்க போனானு தேடிப் பாருங்க…!”என்றாள்..

 அவரும்

“ ஆமா..எனக்கு பயமா இருக்கு அவங்க அப்பா ருத்ர தாண்டவம் ஆட போறாரு… எவ்வளவு பெரிய இடம் அவங்களுக்கு என்ன பதில் சொல்ல போறோமோ..!” என்று புலம்பியபடியே வீட்டில் இருந்து வெளியேறினார்.

 பிரியா பெருமூச்சுடன் தன் ரூமிற்கு திரும்ப அவள் தாய் அவளிடம் 

“ஏய் உனக்கு எதுவும் தெரிஞ்சா ஒழுங்கா சொல்லிரு… ஒரு பெத்தவங்க சாபத்தை வாங்காதே…” என்றார்.

“அம்மா எனக்கு தெரிஞ்சா சொல்ல மாட்டேனா….” என்று சிறு எரிச்சலுடன் கூறி தன் அறைக்குள் சென்று கதவை தாழிட்டவள் 

“ஏய் உனக்காக எல்லாம் என்ன இவ்ளோ பொய் சொல்ல வைக்கிற.. பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது.…”என்றாள் பிரியா சோகமாக

“  ஏய்..எங்க அம்மா என்னாமா நடிக்குது…! நேத்து எங்க அப்பா பொழிச்சுன்னு ஒன்னு விடும்போது வேடிக்கை பார்த்துட்டு நின்னுச்சு… இப்ப என்னாமா பீலிங்ஸ்…எப்பா..!”என்றாள் மயூரி.

“ ஏன்டி நீ வெளிய போன… இப்ப என்ன செய்ய போற..? “ என்றாள் பிரியா 

“அதை சொல்ல தான் கால் பண்ணேன்…எனக்கு தெரிஞ்சு எப்படியும் எங்க அம்மா கால் பண்ணி… எங்க அண்ணனும்… அப்பாவும்… வீட்டுக்கு வந்து… உன் வீட்டுக்கு வந்து..உன்ன என்குயர் பண்ணி…” என்று அவள் கூற 

“ஏன் டி நீ வீட்டை விட்டு போனதுக்கு அவங்க ஏன் டி.. என்ன  என்குயரி பண்ணனும்..? “ என்றாள் சிறு பதட்டத்துடன் பிரியா

“ அது அப்படிதான் டி…உலக வழக்கம் அதுதானே..எப்படியும் ஒரு அரை மணி நேரத்துல..எங்க அண்ணன் வருவான்…உன்ன பயங்கரமா மிரட்டுவான்…ஆனா நீ உளறிடாத..அடிச்சு கூட கேப்பான்.. ஆனா நீ மூச்சு கூட விட கூடாது..!”என்றாள் மயூரி

“ எதே…என்ன பார்த்தா எப்படி தெரியுது…? “என்று கதறினாள் பிரியா 

“என் செல்லக்குட்டி.. பிரண்டுக்காக இதைக்கூட செய்ய மாட்டியா…? “ என்றாள் மயூரி.

“ச்சை… செய்து தொலைக்கிறேன் ஆனால் உங்க அண்ணன் அடிச்சான்…அவன் கைய புடிச்சு கடிச்சு வச்சுருவேன்..!”என்றாள் ஆதங்கமாக 

“நீ கடி இல்லை என்னவோ பண்ணு  நான் கேட்கவே மாட்டேன்…!” என்றாள் சிரிப்புடன் மயூரி 

“சரி சரி… அதுக்கப்புறம் என்ன செய்யணும்… சொல்லி தொலை…” என்றாள் சலிப்புடன்.

“ அப்படி கேளுடி..என் சிங்கக்குட்டி..!எப்படியும் ஒரு அரை மணிக்கு அப்புறம் கூட ஒரு அரை மணி நேரம்…வச்சுக்கோ..அவங்க திரும்பி வெளியே அவசரமா கிளம்புவாங்க… அதுக்கப்புறம் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு..நம்ம ஏரியா சிவன் கோயில்ல இருக்க கிணத்துக்கு பக்கத்துல வா… அங்க வச்சு பேசிக்கலாம்…” என்றாள் மயூரி

“ சரி சரி ஆனால் என் உயிருக்கு எதுவும் ஆபத்தாகிறதே..? “என்றாள் பரிதாபமாக 

“ உன் உயிருக்கு நான் கேரண்டி.. “ என்றாள் மயூரி.

“ சரி சரி உன்னை நம்பி தான் இதுல இறங்குகிறேன்.எந்த சேதாரம் என்றாலும் நீதான் பொறுப்பு.. “ என்றபடி ஃபோனை கட் செய்தாள் பிரியா.

மயூரி ஃபோன் பூத்தில் இருந்து வெளியே வந்தவள் சுற்றும் மற்றும் பார்த்துவிட்டு நேராக அருகில் இருந்த சிவன் கோயிலுக்குள் சென்றாள்.

 அந்த கோயில் இரு வாசல்களை கொண்டது. அனைவரும் முன் வாசல் வழியாகவே வருவர். அவள் பின் வாசலின் சிறிய வழியாக நேராக நந்தவனத்திற்குள் நுழைந்து அங்கு இருந்த கிணற்றடியில் அமர்ந்தாள்.

கிணற்றின் அருகே ஒரு வேப்பமரம் ஓங்கி தன் கிளைகளை விரித்து அந்த வெயிலிலும் குளுமை பரப்பியது. மயூரிக்கு இந்த கோவில் மனதிற்கு மிகவும் அமைதியான மனநிலையும், தெளிவையும் கொடுக்கும் இடம்.

 அவள் எப்பொழுதும் அமைதியாக படிக்க வேண்டும் என்றால் கூட இங்கே தான் வருவாள். ஆனால் அவள் வீட்டில் யாருக்கும் தெரியாது. அவளுக்கு இப்படி ஒரு புகலிடம் இருப்பது.

அந்த கோவில் கொஞ்சம் பெரிதாக இரு பெரிய சாலைகளை இணைத்தபடி முன்வாசலும் பின்வாசலுமாக இருக்கும். பின் வாசலில் சிறிய கம்பி நுழைவாயில் மட்டுமே அது ஏதோ ஒரு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது என்று கேள்விப்பட்டிருக்கிறாள்.

 ஓங்கி விரிந்த கருங்கல் சுற்றுச்சுவர். பின்புறம் ‘ப’வடிவில் நந்தவனம், முன்புறத்தில் உப தெய்வங்களும் கோயில் பரிவாரங்களும் அமைந்திருக்கும்.

 காலையில் சில வேதம் படிக்கும் பிள்ளைகள் மட்டுமே நந்தவனத்தை ஒட்டிய கோவில் மண்டபத்தில் இருப்பார்கள். அதிலும் இந்த நேரத்தில் யாரும் பின்னே வருவதில்லை மணியை கைக்கடிகாரத்தில் பார்த்தால் அது பன்னிரெண்டு என்று காட்டியது.

 எப்படியும் உச்சி கால பூஜை வரை பிரச்சனை இல்லை என்று எண்ணி பெருமூச்சு விட்டவளுக்கு லேசாக பசிப்பது போல தோன்ற வெளியில் சென்றால் மாட்டிக் கொள்வோம் என்று தோன்றியது.

 ஒரு மணி நேரம் பொறுத்தால் கோயிலில் பிரசாதம் தருவார்கள்  இரு வேலைக்கான உணவை முடித்து விடலாம் என்று திட்டமிட்டாள்.

 முடிவெடுத்த பின் அடுத்து என்ன  செய்வது என்று யோசிக்க முயற்சி செய்து கிணற்றின் மீது சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினாள் மனதினுள் போராட்டங்கள். தன் கனவை கூட புரிந்து கொள்ள,ஏன்? கேட்க கூட முடியாத பெற்றோர் என்று எண்ணுகையில் லேசாக மனதில் வலி தோன்ற கண்ணீர் வர பார்த்தது. 

கண்ணீர் விட்டால் சிந்திக்க இயலாது என்று எண்ணினாள்.சட்டென நிமிர்ந்து அமர்ந்து அவள் பேப்பரில் இருக்கும் மகளிர் விடுதிகளை பற்றி ஆராய எண்ணி செய்தித்தாளை பையினுள் இருந்து எடுத்தாள். அதை விரித்து தான் குறித்து வைத்திருந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த முகவரியை தன் சிறு கையேட்டில் குறித்தாள். 

பின் அந்த தாளை மடித்து வைத்துவிட்டு தான் குறித்து வைத்திருந்த குறிப்புகளை சரி பார்க்க துவங்கினாள். மனம் சற்று அமைதி அடைய அனைத்தையும் மூடி வைத்துவிட்டு அமைதியாக மீண்டும் சாய்ந்து கண்களை மூடினாள்.

 அவள் மனம் அப்பொழுதுதான் சிந்தித்தது…யார் இந்த திடீர் மாப்பிள்ளை…!அவனைப் பற்றி தெரிந்து கொள்ளாமலேயே வந்து விட்டோமே…

 பெயர் கூட அறிந்து கொள்ளாமல் என்று லேசாக இடித்துரைத்தது மனம். ஆனால் நிறைவேறாத ஒன்று..காணவே போகாத ஒருவன்..அவனை பற்றி தெரிந்து என்ன பயன்…

 மனம் அப்பொழுதும் லேசாக கேள்வி கேட்டது ஒருவேளை அவனிடம் பேசிப் பார்த்திருந்தாள்.ஒருவேளை அவன் இவள் கனவுகளை புரிந்து கொள்பவனாக இருந்தால்..என்று சிந்தித்தவுடன் விவாதிக்கும் மனம் விழித்துக் கொண்டது. 

அப்படி அவன் இருந்தால் தன்னை காணாமல்,தன் விருப்பம் அறியாமல் இப்படி திருமணத்திற்கு சம்மதித்திருப்பானா..? அதிலும்  இத்தனை காலம் உடன் வளர்ந்த தமையனும், தன்னை பெற்றோருக்குமே அவள் மனதைப் பற்றியும்.. அவள் விருப்பம் பற்றியும் அக்கறை இல்லாதபோது…

 முகம் கூட தெரியாதவன் என்ன நியாயம் செய்து விடுவான் அவளுக்கு..எனவே இதெல்லாம் பகல் கனவு என்று ஒதுக்கினாள்

 மேலும் அவனைப் பற்றி தனக்கு என்ன கவலை தான் அவனை மணக்கப் போவதில்லை,ஏன் சந்திக்க கூட போவதில்லை, பின் என்ன..

 மூடி இருக்கும் கதவின் பின் சிங்கம் இருந்தால், என்ன சுண்டெலி இருந்தால் என்ன..! என்று எண்ணி அவனைப் பற்றிய சிந்தனையை ஒதுக்கினாள் மயூரி.

 ஆனால் அந்த சிங்கம் இப்பொழுது தன்னை  வேட்டையாட தன் முழு ரௌத்திரத்துடன் காத்திருப்பதை அறிந்திருந்தால் மயூரியால் அவ்வளவு நிம்மதியாக அமர்ந்திருக்க முடிந்திருக்குமோ என்னவோ…!

 

 ஆம்!அவன்… அந்த ரஞ்சன்..! 

திருமணத்தை விரும்பாமல் தாயின் வற்புருத்தளுக்காக சம்மதித்த அவன்..

 இப்பொழுது மணந்தால் அவளை மட்டுமே மணக்க  வேண்டும் என்ற வெறியோடு காத்திருந்தான். தன் ஆட்களை மயூரியை கண்டுபிடிக்க அனுப்பி இருந்தான் ரஞ்சன்..

எவ்வளவு முயன்றும் அவனின் கோபம் தீரவில்லை. அவள் தன்னை வேண்டாம் என்று விட்டாள்..பிடிக்கவில்லை என்று வீட்டிலிருந்து ஓடி விட்டாள்… என்று அறிந்தபோது அவனின் ரௌத்திரம் பொங்கியது.

 அவனின் கோபம் முதலில் முத்து மயூரியின் தந்தை மீதே பாய்ந்தது. அவருக்கு அலைபேசியில் அழைத்து 

“மிஸ்டர் முத்து உங்க பொண்ணு இன்னும் நான்கு மணி நேரத்துல கிடைச்சிடுவா… ரெண்டு மாசம் கழிச்சு இல்ல…இன்னும் ரெண்டு நாள்ல நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும்.. அதற்கான ஏற்பாட மட்டும் நீங்க பாருங்க…!”என்றான் ரஞ்சன்.

 

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page