கொலைக்காரி என் அம்மா

நம்ப முடியாத பல விஷயங்கள்..

ஆனால் அது உண்மைதான்.

இருவரின் தேடல் அவர்கள் உறவுகளை நீடிப்பதற்காக..

முதலில் இரக்கமாக இருந்தாலும் அவள் முகத்தில் பார்த்தது இழந்த அவனையே…

நான் உன்ன முதல்ல பார்த்தப்போ எனக்கு தோன்றிய விஷயம் வேற, ஆனா…

உன்னை பின்னாடி தொடர்ந்து வரும் போது எல்லாம் எனக்குள்ள இருந்த பல விஷயங்கள் என்னென்ன தெரியுமா?..

சின்ன வயசுல இருந்தே ஏதோ ஒரு தனிமை தான் எனக்குள்ள,

என்னோட சித்தி தான் என்ன ஓரளவுக்கு உயிர் கொடுத்தார்கள் என்று சொல்லலாம்.

அவங்க இல்லனா என் வாழ்க்கை எப்படி போயிருக்கும் என்று தெரியாது.

அடிக்கடி அம்மா என் சித்திய துரத்தி விட்டுடுவாங்க. என் பிள்ளையை என்கிட்ட பிரிக்கிறாய் என்று சொல்லி அவங்களை அனுப்புனதுக்கப்புறம், எங்க அம்மா இருப்பாங்க ஆனா நானும் தனிமையில் இருக்கிற மாதிரி தான் உணர்வேன்.

இப்படி என்னோட வாழ்க்கை ஒரு இருண்ட பயணமாகவே இருந்துச்சு .

ரொம்ப நாள் கழிச்சு என்னோட சித்திக்கு மறுபடியும் போன் பண்ணி நான் அழுவேன் நான் அழுதால் உடனே வந்துருவாங்க,

 ஆனா உன்னை பார்க்கும் போதெல்லாம் நான் என்னையே கண்ணாடியில் பார்க்கிற மாதிரி தெரிந்தது.

என்னோட சித்தி நான் உனக்குள்ள பார்த்தேன் என்னோட அப்பாவே நான் உனக்குள்ள பார்த்தேன். என்னை நான் உனக்குள்ள தான் தேடினேன்.

அவ்வளவு நாட்களாக நான் அங்கதான் இருக்கேன்.

ஆனா ஒரு முறை கூட நீ என்னை கவனித்ததே கிடையாது.

உன்னோட கவனத்தை என் பக்கம் திருப்புவதற்காக சில பொருட்களை கீழே போடுவேன்.

நீ திரும்பாமல் தலையை குனிஞ்சுகிட்டு பயந்துகிட்டே போயிடுவ, அந்த சத்தத்தை கேட்டதுமே உனக்கு என்ன ஆகும்னு தெரியல,

அதையெல்லாம் விடு,

இப்போ சொல்லு. என்னோட காதல் உனக்கு இரக்கமாக தெரிகிறதா?..

இந்த அன்பு உனக்கு எப்படி தெரியுது?… தயக்கத்தோடு அவன் தலையை குனிந்தபடியே அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அந்த இறுக்கத்தில் தன்னுடைய பயத்தையும் வெளிகாட்டிக் கொண்டு தன் கண்ணீரை கண்ணை விட்டு வெளிவிடாமல் இருக்க பிடித்து சங்கடத்துடன் அவன் ஒரு கேள்வி கேட்கும் போது,

அவள் வேகமாக கைகளை உருவினாள். அவள் அப்படி வேகமாக உருவிய உடனையே அவன் கண்ணீர் வந்திருச்சு..

அவனுடைய கண்ணீர் தரையில் சொட்ட ஆரம்பித்தது.

அவள் வேகமாக அவனுடைய முகத்தை பிடித்தாள். அவன் முகத்தை நிமிர்த்து இப்போது அவள் பேச ஆரம்பித்தாள்.

இல்ல…. அப்படி நினைச்சது என்னுடைய இன் செக்யூரிட்டி. நான் ஒரு முட்டாள். அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் பேசிட்டேன்.

எல்லா நேரமும் நான் நிறைய பேரால காயம் பட்டு,

 நம்மளை எல்லாம் யாருக்காவது பிடிக்குமா?… அப்படித்தான் இவ்வளவு நாளா நினைச்சுட்டு இருந்தேன் திடீர்னு உன்னோட அன்பை மொத்தமாக கொட்டும் போது நான் மூச்சு அடைச்சு போயிட்டேன் அதான் உண்மை.

உன்னோட ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு தொடுகளும் நம்ம ரெண்டு பேரும் உணர்ந்த உணர்வுகளும் எல்லாமே…

எனக்கு ஒரு தடவை கூட யூஸ் பண்ற மாதிரி தோணல, ஏதோ ஒரு உணர்வு நம்மை இழுக்குது மட்டும் எனக்கு தெரியும் அது வயச கோளாறு என்னன்னு எனக்கு நல்லாவே புரியுது.

இந்த மானங்கெட்ட ஜென்மமாக பிறந்து நான் எக்கச்சக்கமான பாடுபட்டு திடீர்னு ஒரு விஷயம் எனக்கு நல்லா தான் நடக்கும் போது அது உண்மையா பொய்யா என்பதை நம்புவதற்கான ரொம்ப கஷ்டப்பட்டேன்.

ஆனா அது உண்மைன்னு என் மனசு முழுசா நம்புது ஆனா என்னோட மூளையில ஏற்கனவே ஏற்பட்ட நிறைய ஸ்டோரேஜ் காரணமா ரொம்ப stuck ஆகி இப்படி முட்டாள் தனமான யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்.

நான்தான் உன்கிட்ட சாரி கேக்கணும். உன்னோட மனசு நான் ரொம்ப நோகடிச்சுட்டு இருக்கேன்.

ஐ அம் சாரி… இப்படி சொல்லிக் கொண்டு அவனுடைய முகத்தை தன் இரண்டு கைகளுக்குள் பிடித்து ஒரு குழந்தை போல அவனைப் பார்க்க,

அவளை தாங்கிக் கொண்டிருந்தவன்… அவளுடைய வலிகளை தன்னோட கஷ்டமாக பார்த்த விக்ரம் உடைய ஒட்டுமொத்த  உணர்வுகளையும் உணர்ந்த முழு உருவம் போல இப்போ அவனுக்கு அவள் ஆறுதலாக நின்றாள்.

ஏனோ தெரியவில்லை…. அவள் இப்படி எல்லாம் பேசினதும் அவனுக்கு பயங்கரமாக அழுகணும்னு தோணுச்சு.

எவன் ஒருவன் தன் கர்வத்தை விட்டு தன்னளிடம் மனம் விட்டு கண்ணீர் விட்டு தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறானோ அன்றே அவன் மீண்டும் குழந்தை ஆகிறான்.

அப்போ….

நிலா மண்டியிட்டு அவன் விரல்களை இருக்க பிடித்தபடி ஐ லவ் யூ விக்ரம்.

என்ன ஆனாலும் நீ என்னை விட்டுடாம என்னை உன் கைக்குள்ள வச்சு தாங்குவியா?..

இப்படி ஒரு கேள்வி கேட்க,

அவனும் அவள் முன்னாடி மண்டியிட்டு,

கண்ணீரை துடைத்தபடி நிச்சயமா….

நீயே என்ன விட்டுட்டு போனாலும், உன் பக்கத்திலேயே நான் இருப்பேன். உன் மனசு மாத்தி முழு சம்மதத்தோடு உன்னை என் கூட கூட்டிட்டு போவேன்.

இப்படி அவன் சொல்ல,

நிலா விக்ரமை இறுக்கி அணைத்துக் கொண்டாள். 

நான் எதை வேண்டுமென்றால் இழப்பேன் உன்ன தவிர…

நீ இல்லாம மட்டும் என்னால் வாழ முடியாது. அப்படி என்ன மாயம் செய்தாய் என்று எனக்கு தெரியல….

எனக்கு உன்னை பார்க்கணும். உன் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தா போதும். அதைத் தவிர என் வாழ்க்கையில் நான் எதையுமே கேட்க போறது இல்ல,

எனக்கான முழு சந்தோஷமும் நீ தான், இப்படி சொல்லும் போது அப்போ அவள் ஒரு கேள்வி கேட்டாள்.

அதெல்லாம் இருக்கட்டும்.

நான் ஒரு விஷயம் சொன்னேன் அதை சொல்லும்போது நீங்க ஏன் அதிர்ச்சியாகவே இல்ல,

அதுக்கு காரணம் என்ன?…

இப்படி அவள் கேள்வி கேட்கும் போது அவனுக்கு ஒன்னும் புரியல நீ எதை பத்தி பேசுறன்னு எனக்கு தெரியல,

எதுக்கு நான் அதிர்ச்சியாகணும்?… நீ என் கூட இருந்தா போதுமே…

அது தவறான அதிர்ச்சி ஆகுறதுக்கு இங்க என்ன விஷயம் இருக்கு?…

இப்படி விக்ரம் கேட்கும் போது அதற்கு அவள் இல்ல விக்ரம், அது ஒரு ஆக்சிடென்ட் இல்ல கொலைன்னு சொன்னேனே…

அதை சொன்னதுக்கு அப்புறமும் நீங்க ஏன் அதிர்ச்சியாகவே இல்ல அதுதான் என்னுடைய கேள்வி.

அது யாரு என்னன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா என்ன?…

அதனால தான் நீங்க அமைதியா இருக்கீங்களா?.. இப்படி அவள் கேள்விகளாக கேட்கும் போது அதற்கு அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்.

நான் என்னோட அம்மா வந்தபோ அவங்க கிட்ட நான் சரியா முகம் கொடுத்து பேசினேனா?…

இல்லை, நீங்க உங்க அம்மா கிட்ட பேசவே இல்ல.

அது ஏன் என்று உனக்கு தெரியுமா?…

அவங்க சின்ன வயசுல இருந்து உங்களை பார்த்துக்கவில்லை என்று சொன்னீங்களே அதானே…

இல்ல,

எங்க அம்மா தான். அந்த வேலையை பார்த்தது.

என்னங்க சொல்றீங்க?..

விக்ரம் நீங்க சொல்றதெல்லாம் உண்மையா?…

அப்படி எல்லாம் இருக்காது. நீங்க ஏதோ கற்பனைல பேசுற மாதிரி தெரியுது. அவங்க மேல உங்களுக்கு கோபம் இருக்கலாம்.

ஆனா இது….

அந்த மாதிரி இருக்காதுன்னு அவள் சொல்லும் போது,

அந்த மாதிரி இருக்காது இல்ல அதுதான் உண்மை.

ஒரு பிரச்சனை நடந்துச்சு பிரச்சனை நடந்துச்சுன்னு சொன்னேன்ல..

அது வேற ஒன்னும் இல்ல,

கீழ இருக்கிற எல்லா பொருட்களுமே என்னோட சித்தி உடைய கல்யாணத்துக்காக கொடுக்கப்பட்ட சீர்.

அவங்களுடைய ஹஸ்பண்ட் இறந்துட்டாரு. அவங்களுக்கு குழந்தை இல்லை கல்யாணம் ஆன கொஞ்ச நாளையே அவங்களுடைய வாழ்க்கையில் இப்படி ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு ஒன்று நடந்துருச்சு.

கலங்கி போய் உட்கார்ந்து இருந்தப்போ நான் தான் உலகம்னு என்னை எடுத்து வளர்க்க ஆரம்பிச்சாங்க.

என்னோட அப்பா…. ரொம்ப நல்ல மனுஷன் ரொம்ப டேலண்ட் ஆனா ஒரு ஆளு.

எங்க அம்மா ஒன்னும் கோடீஸ்வரி கிடையாது சாதாரண ஆள் தான், இங்கு இருக்கிறது எல்லாமே என்னோட அப்பா வழிவந்த சொத்துக்கள். அப்பாவும் அம்மாவும் லவ் மேரேஜ்.

கல்யாணம் ஆனதிலிருந்து குழந்தை வேணா வேணாமு அம்மா சொல்லிட்டே இருந்திருக்காங்க.

அப்பாவுக்கு எதுவும் புரியல, எதுக்காக குழந்தையை போய் வேணாம்னு சொல்றேன்னு சொல்லி அவங்களுக்குள்ள அப்போ சண்டை ஆரம்பிச்சது.

அப்ப அம்மா சொன்ன விஷயம் அப்பாவுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு எனக்கு காசு பணம் சம்பாதிக்கணும் குழந்தைய பத்தி வீட்டிலேயே என்ன அடக்கி ஒடுக்கி உக்கார வைக்கணும்னு நினைக்கிறாயா?..

அது என்னால முடியாது அதனை செய்யவும் மாட்டேன் நானும் இனிமேல் உன் கூட ஆபீஸ் வர போறேன்னு சொல்லி பெரிய பிரச்சனை.

நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அதிகமா ஆச்சு. அம்மாவுடைய குறிக்கோள் எல்லாமே எப்படியாவது கம்பெனிகுள்ள நுழையணும் என்று,

அதை தவிர அவங்களுடைய எண்ணம் வேற எதுலயுமே இல்லை. அப்பா அம்மாவ கம்பெனிக்கு அக்சப்ட் பண்ணவே இல்லை. உன்னுடைய வாழ்க்கையில எனக்கான சந்தோஷம் இல்லாத அப்போ என்னுடைய பிசினஸ் குள்ள நீ எப்படி வரலாம்னு அப்பா ஸ்ட்ராங்கா நிக்க ஆரம்பிச்சுட்டாரு.

இதெல்லாம் பார்த்ததுமே, அப்புறம் தான் அம்மா ஒரு கண்டிஷன் போட்டாங்க சரி நான் குழந்தை பெற்று தருகிறேன் ஆனால் குழந்தை நீ தான் பாத்துக்கணும். நான் ஆபீஸ்க்கு வந்து வேலை பார்ப்பேன் நீ வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக்க உன்னால முடியுமா?…

முடியாது என்றால் சொல்லிடு, நான் இங்க இருந்து கிளம்புறேன்னு அப்பாவை மெரட்ட ஆரம்பிச்சாங்க அப்பா அப்பாவும் சரி குழந்தை பிறந்தால் எப்படி இவளால விட்டுட்டு போக முடியும் என்று அம்மா சொன்ன எல்லாத்துக்குமே தலையசைத்தார்.

ஆனா அது தான் மிகப்பெரிய தப்புன்னு அவருக்கு புரியாம போயிடுச்சு.

அவரோட வாழ்க்கையோட முற்றுப்புள்ளி அங்கு வைக்கப்படுதுன்னு அவரு உணரவில்லை.

எப்போ இந்த பாரத்தை இறக்கி வைப்போம் அம்மா என்னை வேண்டா வெறுப்பாக தான் பெற்றார்கள்.

பொறந்ததுக்கப்புறம் பத்து நாள் மட்டும் தான் உங்க வீட்ல இருந்தாங்க அதுக்கப்புறம் ஆபீஸ்க்கு போனவங்க தான். எங்க யாரையும் கவனிக்காம ஆபீஸ்லயே அவர்களுடைய வாழ்க்கையை நகர்த்த ஆரம்பித்தார்கள்.

அப்பா இங்கே தனிமையில் என்ன வச்சு என்ன செய்யணும்னு தெரியாம இருந்தப்போ, என்னுடைய அம்மாச்சி இந்த விஷயம் கேள்விப்பட்டு, பொண்ணு கூட சண்டையா இருந்தாலும் பரவாயில்லைன்னு இங்க வந்தாங்க.

அப்போ சித்தியையும் கூட்டிட்டு வந்தாங்க. சித்தியோட கையை நான் இருக்க பிடிச்சிக்கிட்டு விடவே இல்லை.

அப்போதான் சித்தி என்ன விட்டுட்டு போக கூடாதுன்னு முடிவு எடுத்தாங்க அதே நேரத்துல அவங்க வாழ்க்கையும் அந்த மாதிரி அழிஞ்சு போயிடுச்சு அவங்களுக்கு இன்னொரு கல்யாணத்துல விருப்பம் இல்லை.

அம்மாச்சி சித்தி எங்கே விட்டுட்டு போயிட்டாங்க. இந்த குழந்தை உன்னுடைய பொறுப்புன்னு சொல்லிட்டு விட்டுட்டு போயிட்டாங்க.

அப்போ இருந்து என்னை அவங்க தான் வளர்க்க ஆரம்பிச்சாங்க. அப்பா எவ்வளவு அம்மாவ கூப்பிட்டு பார்த்தாலும் அவங்க சொன்னது நீதான சொன்ன குழந்தை நான் பாத்துக்குறேன் பெத்துக்கொடு என்று சொல்லி அதனால பெத்து குடுத்துட்டு வந்துட்டேன் நான்தான் டீல் போட்டுட்டு தான் பேசணும்னு சொல்லி அவங்க அந்த மாதிரி எல்லாத்தையும் கொண்டு போக ஆரம்பிச்சுட்டாங்க.

 

ஒருவேளை தப்பான affair ஏதும் இருக்குமோ அப்படி எல்லாம் பார்த்தா, அதுவும் இல்ல,

அவங்களுடைய குறிக்கோள் முழுவதுமே காசு மட்டும் தான்.

காசு இருந்தா போதும் பணம் பேரு புகழ் இந்த மயக்கத்திலே தான் இருக்காங்க இப்படி எல்லாம் சொல்லும் போது தான் அவனுடைய சின்ன வயசுல அவன் எப்படிப்பட்ட ஒரு விஷயத்தை இழந்திருக்கிறான் என்று நிலாவிற்கு புரிந்தது.

ஏன் அம்மாவை வெறுக்கிறான் என்று…

❤️ Loading reactions...
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page