தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்

பெங்களூர் நகரம்…

மின்னி மின்னி எரியும் வண்ண விளக்குகள் உடன் கூடிய, டிஜே இசையால் அந்த பார்ட்டி ஹாலை நிரம்பி வழிந்தது…. அந்த ரூப் டாப்… கிலப்ல்..

 கூடியிருந்த,அனைத்து இளைஞர்களின் பார்வையும் டிஜே இசைக்கு ஏற்ப… நடனமாடிக் கொண்டிருந்த  ஜோடியை தான் ரசனையாக பார்த்துக் கொண்டிருந்தது 

 

விடிந்தால் இருவருக்கும் திருமணம் என்பதால்…. இறுதியாக இந்த இரவு தங்களுடைய பேச்சுலர் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று நினைத்து அந்த ஜோடி…. தங்களுடைய நண்பர்களோடு அந்த இரவை அனுபவித்து ரசித்துக் கொண்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல். 

 

இருவரும் நீரோடையில் நீந்தும் மீன்களாக வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்ததை ,மிகவும் கவனமாக ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர் சுற்றி நின்றிருந்த அவர்களது நண்பர்கள். இறுதியாக,தன் கைகளில் தோகை மயிலாக வளைந்து நெளிந்து ஆடிக்கொண்டிருந்தவளை…. அந்தரத்தில் மிதக்க வைத்து பின்பு கைகளில் ஏந்தி ஆட்டத்தை நிறைவு செய்தான் அவன். 

 

ஆரியவர்தன் ராய்…. பெங்களூரு மட்டுமல்லாது… இந்தியாவில் பறந்து விரிந்திருக்கும்  ராய் குழுமத்தின்…..பவூன்டர் விக்ரமவர்தன் ராய் இன் மகனும்,அவரின் ஒரே வாரிசும் ஆவான்.அவனது கை வளைவில் இருப்பவள் தான்…ஆரியரினின் காதலி…நாளை முதல் ,அவனது மனைவி…அனிகா செட்டி,அவளும் அவனுக்கு இனையான செல்வாக்கு மிக்க குடும்பத்தின் வாரிசு தான். இருவரும் பெங்களூரில்,மேல் தட்டு மக்கள் அதிகமாக படிக்கும், பிரபல கல்லூரியில் தான் சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்தனர். 

 

அவர்களது ஐந்து வருட காதல், நாளை கல்யாணத்தில்…. மீண்டும் ஒரு முதல் ஆரம்பமாக… மாறப்போகிறது என்ற மகிழ்ச்சியில் திழைத்து கொண்டு இருந்தனர்.

 

அனிகாவை கைகளில் தாங்கி இருந்த ஆரியனுக்கும் மிகவும் மூச்சு வாங்கியது. இருவரின் கண்களும் ஒருவரோடு ஒருவர் கலந்து… அருகில் யார் இருக்கிறார்கள் என்பதை மறந்து.. இருவரும் முத்தமிட்டு கொள்ள… அங்கிருந்த அனைவரும் கைதட்டி கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். 

 

இருவரும் மிகவும் வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வாரிசுகள் என்பதால்…. மிக விமர்சையாக அவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தது. நகரில் உள்ள அனைத்து முக்கிய தொழிலதிபர்களும், அரசியல் பிரமுகர்கள்,நடிகர்கள் என்றும் திருமணத்திற்கு வர உள்ளதால்…மிகுந்த கட்டுப்பாடுடன் திருமணம் ஏற்படுதல் நடந்து கொண்டிருக்க…

 

இவர்களும் தங்களுடைய வாழ்வின் ஒரு நொடி கூட வீனாக்காது… சுவாரசியமாக ஒரு அனுபவத்தை உருவாக்குவதற்காக இங்கு வந்திருந்தனர். திருமணம் நிச்சயிக்கபட்டு விட்டால் வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று சாங்கிய ,சம்பிரதாயங்களை எல்லாம் விளையாட்டாக நினைத்துக் கொண்டு…. பெரியவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு…. தனது நண்பர்களோடு அந்த இரவின் ஒவ்வொரு மணி துளியையும் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

 

ஆர்யனும் அனிகாவும் முத்தமிட்டு விலக… கூட்டத்திலிருந்து ஒருவன், ஒரு சிறிய நகை பெட்டியை எடுத்து வந்து… ஆர்யனின் கையில் கொடுத்தான்…. அத்துடன் அழகான பூங்கொத்தும் அவனுடைய கைகளுக்கு வந்து சேர்ந்தது.

 

அனிகா விற்கு என்ன நடக்கப் போகிறது என்பதை நினைத்து மனம் பூரிக்க… கன்னம் சிவந்து நின்று இருந்தாள். அவள் நினைத்தபடியே ஆரியனும்…. முழங்கால் மண்டியிட்டு அமர்ந்தவன்… அந்த பூங்கொத்தையும் அவளிடம் நீட்டினான். கண்களில் நீர் ததும்ப… அந்தப் பூங்கொத்தை தனது கைகளில் வாங்கிக் கொண்டாள் அனிகா.

 

அவர்களை சுற்றி இருந்த அவர்களது நண்பர்கள் அனைவரும்…

“ஆர்யன்….ஆர்யன்….ஆர்யன்”என்று கோஷம் எழுப்பினர்…

 

ஆரியனோ தனது கையில் இருந்த சிறிய நகை பெட்டியை திறந்து… அனிகாவின் முன்பு நீட்டியவன். 

 

“நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகப்போகுது…. ஆனாலும், ஒவ்வொரு நாளும் நீ எனக்கு, என்னோட காதலியா வேணும் ‌……‌ ஏன்னா… நீ எனக்கு மனைவியா மட்டும்  இருந்தா.. நீ இங்கதான் இருக்கிற,அப்படி என்று அலட்சியம் எனக்கு வந்துரும்.. என்னோட  ஹனிய… நான் எப்பவுமே காதலிச்சுக்கிட்டே இருக்கணும். என்னைக்கும் அவளை நான் அலட்சிய படுத்துக் கூடாது. நீ எப்பவும் என்னோட காதலியா இருந்து… இப்ப மாதிரி எப்பவுமே, என்ன உன்னோட காதல்ல தினறடிச்சுக்கிட்டே இருக்கணும்…. நானும் உன்ன,என் வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரை காதலிக்கணும்..”

கூடியிருந்த அனைவரும் கரகோஷம்  எழுப்ப… ஆரியனின் அதிக அன்பில் பூரித்த அனிகா வின் கன்னங்கள் செங்குழுந்தாய் சிவந்தன. 

கண்கள் கலங்க…

“எஸ்”என்று பதில் உரைத்தாள் அவள்.

 

உடனடியாக நகை பெட்டியல் இருந்த மோதிரத்தை எடுத்து, அவளது வெண்டை பிஞ்சு போன்று மென்மையாக இருந்த விரலில் அனிவித்தவன். அந்த மோதிரத்தோடு அவளது விரல்களையும் வருடி… அனிகாவின் உள்ளங்கையில் மென்மையாக முத்தம் பதித்தான். 

 

அவனது அதிகப்படியான நேசத்தில் நெகிழ்ந்தவள் … ஆரியனை இறுக்கமாக அனைத்துக் கொண்டாள்… இப்பொழுது மீண்டும், அந்த ரம்யமான சூழ்நிலைக்கு ஏற்ப ,டிஜே இசை எழுப்ப… மற்ற மின்விளக்குகள் எல்லாம் அணைத்துவிட்டு…  மின்னி மின்னி எரியும் வண்ண விளக்குகள் மட்டும்  ஒளிர செய்தனர்..

 

இப்பொழுது மீண்டும் ஆரியன் மற்றும் அனிகாவின் இதழ்கள்…. காதலோடு ஒன்றே ஒன்று பின்னி கொண்டன. இம்முறை அந்த முத்தம் வெகு நேரம் நீடித்தது…. அவர்கள் சுற்றி இருந்த அனைவரும்… நிகழ்காலத்தில் இருக்க… ஆரியன் மற்றும் அனிகா மட்டும் வேறொரு ,உலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக தோன்றியது.

 

நீண்ட நேரம் முத்தமிட்டு விலகிய இருவரும் நெற்றி முட்டிக் கொண்டனர். இருவருக்கும் பலமாக மூச்சு வாங்கியது. சிறிது நேரம் கழித்து மீண்டும்….. இறுக்கமான அனைப்பு.

அந்த இரவில் நடந்த ஒவ்வொரு தருணமும், அவர்கள் இருவரின் உடைய மனபெட்டகத்தில்…பொக்கிஷங்களாக சேமிக்கப்பட்டன. அவர்களின் ஒவ்வொரு தருணமும் அவர்களுக்கு தெரியாமல்… கேண்டிட் புகைப்படங்களாக மாற்றம் அடைந்து கொண்டு இருந்தன. 

 

வெகு நேரம் தங்களது இனிய நண்பர்களோடு ஆடிப்பாடி கொண்டாடி கழைத்தவர்கள்….. தற்பொழுது கிளம்பினால் தான் திருமணத்திற்கு சரியாக தயாராக முடியும் என்பதை… உணர்ந்த பின்பு ,அனைவரும் மண்டபத்தை நோக்கி கிளம்ப தயாராகினர். 

 

ஆரியன்,அனிகா இருவரும்…. ஆரியனின் bmw பைக்கில் புறப்பட்டனர். அவர்கள் காதலித்த தருணங்களில்…. சுற்றித்திரிந்த இடங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக…. தேடிச்சென்று… அங்கு புதிய நினைவை உருவாக்கிக் கொண்டன. இந்த இரவு நீண்டு கொண்டே போக வேண்டும் என்று இருவருக்குள்ளும் தோன்றிக் கொண்டே இருந்தது. 

 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால்… எப்பொழுது  திருமண நாள் வரும் என்று…. நாட்களை நெட்டி தள்ளி கொண்டு இருந்தவர்கள் இருவரும்.ஆனால் இன்று,இந்த இரவு தீரவே கூடாது என்று தோன்றியது.

 

இருவரும் இறுதியாக வந்து அமர்ந்தது ….அவர்களின் காதலின் ஆழத்தை உணர்ந்துக் கொண்ட இடத்தில் தான். UB city-cafe noir….விடியர் காலை மணி இரண்டு.மூடி இருந்த கஃபேவின் முன்  இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரது நினைவும் அன்றைய நாளை நோக்கி சென்றது. 

 

கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டாலும் கூட… அதை இருவரும் வெளிப்படையாக கூறிக் கொள்ளவில்லை. 

 

கல்லூரி முடிந்து அடுத்த வாரத்திலேயே…. அமெரிக்காவில் தொடங்கவிருக்கும் ராய் குழுமத்தின்…. புதிய தொழிற்சாலை ஒன்றை கட்டமைப்பதற்காக…அங்கு சென்று விட்டான் ஆர்யன். அவன் இருந்த பரபரப்பில் அனிகாவிடம் கூறிவிட்டு செல்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.

 

வேலைகள் அவனை முழுவதுமாக ஆட்கொண்டு விட… கிட்டத்தட்ட எட்டு மாத காலம் இருவருக்குள்ளும் பெரியதாக பேச்சுவார்த்தை என்று எதுவும் இல்லை… ஒன்று இரண்டு குறுஞ்செய்திகளை தவிர. 

 

கிட்டத்தட்ட ஒரு வருடம் முடிந்து தான் ஆரியனால் மீண்டும் இந்தியாவிற்கு வர முடிந்தது. அவன் வந்த நாள் வெள்ளிக்கிழமை.. எப்பொழுதும் வெள்ளிக்கிழமைகளில் இந்த காப்பே ஷாப்பில் தான் ,இருவரும் வெகு நேரம் நேரத்தை செலவழிப்பார். 

 

இந்தியாவில் வந்து இறங்கியவன்…. வீட்டிற்கு கூட செல்லாது, இந்த காபி ஷாப்பிற்கு தான் வந்தான்… அவன் எதிர்பார்த்தது போல, அவர்கள் இருவருக்கும் மிகப் பிடித்தமான இடத்தில் கொடுக்கப்பட்டிருந்த மேஜையில் அமர்ந்திருந்தாள் அனிகா.

 

அவளைப் பார்த்ததும் மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஆட்கொள்ள… அவள் முன்பு சென்று…மேஜைக்கு மறுபுறம் இருந்த நாற்காலியில் சென்று, அமைதியாக அமர்ந்து கொண்டான் அவன். சிறிது நேரம் அவன் வந்து அமர்ந்து இருப்பது கனவு என்று நினைத்தவள்.. அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது… அனிகாவின் உயிரில் ஊடுருவ..

 

நெஞ்சம் படபடக்க ஆரியனின் கன்னத்தில் தனது  தளிர்க்கரங்களை பதித்தாள். அவனது கன்னத்தின் கதகதப்பு, அனிகாவின் கைகளில் ஊடுறுவ… அடுத்த கணம்… மேஜைக்கு மறுபுறம் இருந்தவனை…. எம்பி அணைத்துக் கொண்டாள் அவள்.

 

அவளது அனைப்பில் சற்று திடுக்கிட்ட ஆர்யன்…. எழுந்து நின்று அவளை… மூச்சு முட்டும் அளவுக்கு இறுகி அணைத்துக் கொண்டான். இத்தனை நாள் பிரிவின்… தவிப்பு..ஏக்கம், வலி என்று அனைத்துமே அந்த அனைப்பில் இருவரும் பரிமாறிக் கொண்டனர்.

 

அவர்களுக்குள் “ஐ லவ் யூ”என்ற வார்த்தை தேவைப்படவில்லை… இந்த எட்டு மாத பிரிவு… அவர்களுள் இருந்த காதலை மிகவும் வலுப்படுத்தி இருந்தது. 

 

இப்பொழுது அந்த அனைப்பை நினைத்தாலும் கூட, இருவருக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவுவதை தடுக்க முடிவதில்லை.

 

அந்த கஃபே வின் முன்பு, இருந்த நீள் இருக்கையில், இருவரும் கைகோர்த்தபடி அமர்ந்திருந்தனர். இருவருக்குள்ளும் நீண்ட மௌனம் நிலைத்தது. எதையும் பேசி இந்த அழகிய தருணத்தை பாழாக்கி விடக்கூடாது என்று நினைத்துக் கொண்டனர்.

 

பின் இருவரும்… ஆரியனின் பைக்கில் ஏறி… திருமணம் நடக்க போகும் இடத்திற்கு பயணமாகினர். ஆரியனை முதுகோடு இறுக அனைத்துக் கொண்டாள் அனிகா. அவள் ஆசைப்பட்ட அனைத்தும் மிக விரைவாகவே நடந்து கொண்டிருப்பதை … நினைத்து நினைத்து சந்தோஷித்து கொண்டிருந்தாள் அவள். என்னதான் செல்வ சீமாட்டியாக வளர்ந்து இருந்தாலும் கூட.. ராய் குடும்பத்தின்  மருமகள் ஆவது அத்தனை சுலபமல்ல. ஆனால் இன்று அவள் ஆசைப்பட்டவனையும் மணந்து… அதற்காக மிகப்பெரிய கௌரவம் அவளுக்கு கிடைக்கப் போகிறது. 

 

ஆரியனுக்கும் அத்தனை சந்தோஷம்தான்…. இனி தன்னவளை, தன் கைவளைக்குள்ளேயே வைத்துக் கொள்ளலாம். இனி அவளை கொஞ்சுவதற்கு, எந்த ஒரு தடையும் இருக்கப் போவதில்லை… இனி அவள் என்னுடைய ராணியாக, என் வீட்டில் , என்னோடு வாழ போகிறாள் என்பதை நினைக்கும் போது… அவனது உள்ளமும், உடலும் ஒரு சேர பூரித்து போனது.

அவர்களில் இருவரும் அறியவில்லை… இந்த பயணம், அவர்களின் வாழ்க்கையின் திசையை முற்றிலுமாக மாற்றப் போகிறது என்று..

தொடரும்….

 

தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
அடுத்த பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
தித்திக்கும் தெள்ளமுதாய் உன் நேசம்
135 0 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page