தித்திக்கும் தெள்ளமுதாய் நின் நேசம்

நேசம்-3

அந்த அரக்கன் மென்மையான பெண் அவளின்… தாடயை இறுக்கமாக பற்றி கொண்டிருந்தமையால்…. அவளால் ,அவன் வைத்துக் கொண்டிருக்கும் தீக்காயத்திற்கு அழுவதற்கு கூட சத்தம் எழுப்ப முடியவில்லை. 

 

அவனும் தனது கையில் இருந்த சிகரெட்டை மொத்தமாக அவள் தோள்பட்டையில் அழுத்தி, அது அணைந்த பின்பு தான்… சிகரெட்டை தனது இரு விரல்களால் சுண்டி விட்டவன். தனது கைக்குள் மாட்டிக் கொண்டிருக்கும் சிறு பெண்ணை உற்றுப் பார்த்தான் 

“இங்க பாரு…. நீ ஓடி போ…. செத்துப் போ… என்ன வேணும்னாலும் பண்ணு. ஆனா இந்த உடம்ப நான் விலை பேசி வித்துடன். அவங்க கிட்ட நான் ஒப்படைச்சிடறேன். அதுக்கப்புறம் நீ என்ன வேணாலும் பண்ணிக்கலாம்”

 

“திரும்பவும் ஓடிப்போகனும் நினைச்சாலும்…

அல்லது செத்தே போனாலும்… உன்னுடைய உடம்புல ஒட்டு துணி இல்லாம… முகத்தோட வீடியோ எடுத்து இன்டர்நெட்ல அப்லோட் பண்ணிருவேன்… அப்புறம் காலத்துக்கும் உன்னோட அழகு, இந்த இன்டர்நெட் உலகத்துல வாழ்ந்து கொண்டே இருக்கும். உனக்கு அது தான் வேணும்னா சொல்லு,இப்பவே உன்ன கொன்னுடுறேன்”

 

அவன் கூறுவதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அவளால். இனியும் இவர்களோடு போராடி தன்னுடைய மானத்தை விலையாக கொடுக்க அவள் விரும்பவில்லை. அதனால் அவனோடு அமைதியாக புறப்பட்டாள். 

 

அவள் _**தேன்கனி**_…சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் அவள். தன்னையே உயிராக எண்ணி இருந்த தாய் தந்தைக்கு உலகமாக இருந்தவள். பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படித்து முடித்துவிட்டு…மேற்ப்படிப்பிற்காக எண்ட்ரன்ஸ் எழுதுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தாள். 

 

நேற்று இரவு வரை வசந்தகாலமாக சென்று கொண்டிருந்த அவளது வாழ்க்கை… ஒரே இரவில் தலைகீழாக மாறும் என்று அவள் சற்றும் நினைக்கவில்லை. பிசினஸில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால்… மாரடைப்பு வந்து அவரது தந்தை நேற்று இரவு உயிரிழந்த விட… அவளது  அன்னையும் தனது கணவனின் மரணத்தை தாங்க இயலாது… மரணித்து விட்டார். 

 

என்ன செய்வது என்று தெரியாமல்… மருத்துவமனையில்  உயிரற்ற ஜடமாக கிடந்தவளை… சூழ்ந்து கொண்டது அவளது பெற்றோர்களின் உறவினர்கள் என்ற கூட்டம்.தனது பெற்றவர்களின் உடலை மின்சார தகண இயந்திரத்திற்கு இரையாக்கிவிட்டு கதறி அழுத தேன்கனியை  தேற்றியது…என்னவோ அவளது அன்னை வழி சொந்தமான பெண்மணி தான்.

 

உலகம் பெரிதும் அறிந்திடாத தேன்கனிக்கு அந்த  பெண்ணின் உள் மனதில் உள்ள எண்ணம் என்னவென்று கணிக்கும் அளவுக்கு முதிர்ச்சி இல்லை. மிகவும் உடைந்து போய் இருக்கும் சூழ்நிலையில் ….தனக்கு கை கொடுக்கிறார் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க. 

 

அந்தப் பெண்மணி தான் ,ஒரு பெரிய தொகையை வாங்கிக்கொண்டு… இந்தப் பெண்களை விற்கும் கும்பலுக்கு அவளை தாரை வார்த்து கொடுத்தது. 

 

நேற்று இரவில் இருந்து இப்பொழுது வரை,அவள் வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளை நினைத்தவாறு… அந்த அரக்கக் கூட்டத்துடன் காரினில் பயணித்துக் கொண்டிருந்தாள் அவள். 

 

சிறிது நேரத்தில் அவளது முகத்தில் மீண்டும் மயக்க மருந்து தெளிக்கப்பட்டது…

அவளை சுமந்து கொண்டிருந்த அந்த காரோ…. மின்சார நகரத்தை நோக்கி பயணமானது. 

 

********************

 

ஆரியனுக்கு அந்த விபத்து நடந்து இன்றோடு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிந்து இருந்தது. இப்பொழுதுதான் சற்று திடமாக அவனால் நடக்க முடிகிறது. 

 

நடக்க ஆரம்பித்த உடனே…. அனிகாவின் கல்லறையை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாத மாக இருந்த‌ ஆர்யன்… கடந்த இரண்டு நாட்களாக உணவு உண்ணாமல் தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறான். 

 

அவனை எவ்வாறு திசை திருப்புவது என்று தெரியாமல் குழம்பி போய் இருக்கின்றனர் அவனது குடும்பம். வெளி உலகத்திற்கு எப்பொழுதும் விரைப்பாக காட்டிக் கொண்டிருக்கும் ஆரியனின்…. இன்னொரு முகம் எப்பொழுதும் குறும்புத்தனத்தை சுமந்து கொண்டிருக்கும்.

 

அவனுடைய குறும்புத்தனமும்… அன்பான சேட்டைகளும்…. விளையாட்டுகளும் அவனுடைய குடும்பத்தினருக்கு மட்டுமே உரிய  விடையம் ஆகும். ஆனால் இந்த ஆறு மாத காலமாக… குடும்பத்தினர் உடன் கூட அவன் பேசுவது கிடையாது. 

 

முழுவதுமாக இறுகிப்போயிருந்தான் ஆரியன். அவனுக்கு யார் மீதும் கோபம் எல்லாம் இல்லை. தன் மீது தான் அவருக்கு அளவு கடந்த கோபம். அவளை சாக கொடுத்துவிட்டு, தான் மட்டும் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாக… ஒரு குற்ற உணர்ச்சி அவனை உயிரோடு கொன்று கொண்டிருக்கிறது. 

 

அதுமட்டுமல்ல அது தன்னுடைய நிலைமையை எண்ணி…தன்னுடைய குடும்பம் வேதனையில் உலழ்வதை கண்கூட பார்ப்பவனால், அதை சுத்தமாக ஜீரணித்துக் கொள்ள முடிவதில்லை. 

 

இதையெல்லாம் தாண்டி…. இறுதியாக ஒரு முறை கூட தன்அவளின் முகத்தைக் கூட பார்க்க முடியாத… துர்பாக்கியவானாக 

 மாறியதன் காரணம் விளங்கவில்லை.

 

 “யாருக்கு என்ன பாவம் இழைத்தேன்?.. எதற்காக எனக்கு இத்தனை பெரிய தண்டனை வழங்க வேண்டும்.. “என்று இயற்கை இடம் சண்டை இட்டுக் கொண்டிருக்கிறான்.

 

“இறுதி மூச்சு நிற்கும் வரை…

 தான் அவளை வந்து பார்ப்பேன் என்று..

 நிச்சயம் எதிர்பார்த்து இருப்பாள்.. அவளுடைய இறுதி ஆசையை கூட நிறைவேற்றி வைக்க முடியாத பாவியாக இருப்பதன் பாரத்தை,அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை”

 

அவனுடைய நிலைமையை அங்குள்ளவர்களுக்கு புரியாமல் இல்லை… அனிகா அவனோடு இனி இருக்கப் போவதில்லை என்ற உண்மையை அறிந்த போது, அவன் மிக தீவிரமாக மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தான். 

 

அதனால் அவன் உடலில் உள்ள காயங்கள் எதுவும் ஆர மருத்தன… அதனிலும் போதாக்குறைக்கு அவன் உடலில் செலுத்தப்படும் மருந்துகள் யாவும்..

அவனுடைய காயத்தை ஆற்றுவதற்கு பதிலாக… அதை மேலும் ரணப்படுத்த தொடங்கின.

 

இதற்கெல்லாம் அவனுடைய மன அழுத்தம் தான் காரணம் என்பதை மருத்துவர் வலியுறுத்த… மிகச் சிரமப்பட்டு, அவனை அந்த ஆழ்ந்த டிப்ரஷன்ல் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு ஆறு மாத காலங்கள் ஆகிவிட்டது. 

 

இப்பொழுது மீண்டும் அவன் அனிகாவை பற்றி பேசுவது, அவள் வாழ்ந்த ஊருக்கு செல்ல வேண்டுமென்று துடிப்பது… இவர்களுக்கு சரியாக படவில்லை. மீண்டும் ஒரு மன அழுத்தத்திற்கு அவன் தள்ளப்பட்டால் நிச்சயம்… மிக தீவிரமான மன நோயால் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்தது ஞாபகம் வந்தது. 

 

“ஆர்யன்…. இப்படியே யார்கூடயும் பேசாம எத்தனை நாளைக்கு எங்களை எல்லாம் அவாய்டு பண்ண போற?…. உன்னுடைய இழப்பு இங்கே இருக்கிற யாருக்கும் புரியலன்னு நினைக்கிறியா?”என்றான் ராகுல்.

 

அவனுடைய கேள்விக்கு எந்த வித பதிலும் கூறாது… கசந்த புன்னகையை மட்டுமே பரிசாக அளித்தான் ஆர்யன்.

 

“உன்னோட அனிகா… உன்கிட்ட திரும்பி வரவே முடியாத தூரத்துக்கு போயிட்டா. அதை ஏத்துக்க முடியாம நீ தவிக்கிறது எங்களுக்கு புரியுது. ஆனா, எங்க கண்ணு முன்னாடியே இருந்தும்… எங்களை விட்டு ரொம்ப தள்ளி தூரமா போயிருக்கிற உன்ன… தொலைச்சுட்டு நாங்க எல்லாரும் தேடிட்டு இருக்கோம். அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது ஆரி”என்ற ராகுலின் கண்கள் கலங்கி குளம் கட்டின.

 

வெகு நேரம் கட்டுப்படுத்துவது வைத்திருந்த ஆரியரின் கண்களும்… இப்பொழுது கண்ணீரை சொறிந்தது. ராகுல் கூறிய வார்த்தைகளில்…

 

“அனிகா திரும்ப வரவே முடியாத தூரத்திற்கு சென்று விட்டாள் என்பது மட்டும்… காதில் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறது”

 

ஆரியனின் களங்கிய முகத்தை பார்த்த பின்பு தான்… எதை தவிர்க்க வேண்டும் என்று நினைத்தோமோ அதையே அவனுக்கு நினைவு படுத்தி விட்டோம் …என்பதை உணர்ந்த ராகுல் என்ன செய்வது என்று தவித்து போனான். 

 

சரியாக அந்த நேரம் ஆரியனின் அறைக்குள் நுழைந்தார் அவனுடைய அன்னை தீட்சண்யா.

 

“நீ சொல்றது எதுவும் அவனுக்கு புரியலன்னு நினைக்குறியா ராகுல்… அவனுக்கு எல்லாமே புரியுது. அவன பார்த்து நாம் கஷ்டபடுறது எல்லாம் அவனுக்கு தெரியுது. ஆனா, நம்ம எல்லாரையும் விட… அவனுடைய காதலி தான் அவனுக்கு பெருசா போயிட்டா”என்ற அன்னையை உணர்ச்சிகள் அற்று வெற்று பார்வை பார்த்தான் அவன்.

 

“என்னடா பாக்குற?… உண்மைய சொன்னா உனக்கு கோபம் வருதோ… அனிகா இப்போ இல்லாதது எங்களுக்கும் கஷ்டமா தான் இருக்கு. நாங்களும் அவளோட இழப்புல வருத்தப்பட்டு தான் இருக்கோம். எங்க எல்லாரையும் விட உனக்கு அவளுடைய இழப்பு ரொம்ப பெருசுன்னு எனக்கு தெரியும்”

 

“ஆனா…ஆனா… சில வருஷங்களுக்கு முன்னாடி உன்னுடைய வாழ்க்கையில் வந்த உன்னுடைய காதலி இல்லைன்னு தெரிஞ்சி, இவ்ளோ வருத்தப்படுறீயே… பத்து மாசம் சுமந்து ,பெத்து..  எத்தனை வருஷம் உன்னை வளர்த்த…உன் அம்மா நான்… உடம்பு முழுக்க ரத்தத்தோட… உயிருக்கு போராடிட்டு இருந்த உன்னை.. ஹாஸ்பிடல்ல பார்த்த போது எனக்கு எப்படி இருந்திருக்கும்”என்ற தீட்சண்யாவின் குரல் தழுதழுத்து ஒலித்தது.

 

“நீ…நீ… உயிர் பிழைச்சு வரதுக்குள்ள இங்க நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லோரோட உயிரும் போயிட்டு தான் வந்துச்சு…உயிர் பிழைச்சு வந்த ,என் பையனை பார்த்து சந்தோஷ பட கூட முடியல’என்றவருக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.

 

தன்னுடைய அன்னையின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த ஆரியரின் மனம் வெகுவாக காயம் பட்டது. தன்னுடைய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த… தனது குடும்பத்தினரை புறக்கணித்துவிட்டு. என்னை பற்றியு,ம் என்னுடைய வலியை பற்றி மட்டுமே சிந்தித்து உள்ளேன் என்று நினைத்து உள்ளுக்குள் மருகினான். 

 

“அன்னைக்கு நீ ஹாஸ்பிடல்ல அழுதியே…ஒரு அழுகை..அப்பவே என் உயிர் போயிருக்கும் பா… சின்ன வயசுல இருந்து ஒரு துரம்ப படாம பார்த்து பார்த்து வளர்ந்த என் பையன் ,கதறி அழுறத பார்த்துட்டு எதுவும் செய்யாம இருந்த நான் தான் பாவி”என்று அவர் கதற ..

 

பாய்ந்து தன்னுடைய அன்னையை அனைத்துக் கொண்டவன்…”இல்ல மா…இல்ல…”என்றான் விம்மலாக. ராகுல் அன்னைக்கும் மகனுக்கும் தனிமை கொடுத்துவிட்டு விலகி சென்று விட்டான். 

 

“இல்ல கண்ணா… உன் வலி,வேதனை எல்லாமே எனக்கு புரியுது… ஆனா,நடந்ததை நினைத்து ,நீ இப்படி இருக்கறத பார்த்தா.. எங்களுக்கு பயமா இருக்கு.. நீ உன்னுடைய அனிகாவ நேசிக்கிற மாதிரி தான், நாங்களும் உன்னை நேசிக்கிறோம்”

 

“தவம் இருந்து பெத்த ஒரே மகன்தான் நீ… நீ இப்படி உடைந்து போய் இருக்கிறது பார்த்து பார்த்து நானும் உங்க அப்பாவும் எவ்வளவு வேதனை படுகிறோம் தெரியுமா. வயசான காலத்துல உன்னோட தாத்தா பாட்டியோ எப்போதும் உன்னை பற்றி தான் … நினைச்சு வேதனை படுறாங்க”என்ற அன்னையின் வலி நிறைந்த வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் சம்பட்டியால் அடித்தது போல வலித்தது.

 

 

இப்போ என்னை என்ன தான் செய்ய சொல்றீங்க..என்றான் இயலாமை உடன்.

 

கல்யாணம் பண்ணிக்ககோ ஆர்யன்… மனசு ஏதோ படப்படன்னு இருக்கு… எங்க உன்னை இப்படியே தனியா விட்டு போயிடுவனோன்னு தோணுது. உனக்குன்னு ஒரு துணை வந்துட்டா… எல்லாமே சரியாயிடும். காலம் எல்லாத்தையும் மாத்தும் ஆர்யன்.

 

தொடரும்…

 

நேசம்❣️

 

 

 

 

 

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
முந்தைய பதிவு
இந்த எழுத்தாளரின் மற்ற கதைகள்
தித்திக்கும் தெள்ளமுதாய் உன் நேசம்
136 0 5
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page