Hiiii வாசகர்களே ✨
அப்பர் மிட்டில் கிளாஸ் மாணவர்கள் பயிலும் ஒரு தனியார் பள்ளி!! அதில் சீனியர் செகண்டரி பிளாக் கட்டிடத்தின், முதல் மாடியில் XI -B என்ற பதினொன்றாம் வகுப்பு….
மாணவர்களும் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் என்ற அளவுக்கு அமைதியாக வகுப்பை கவனித்தனர்…
அவ்வளவு சுவாரசியமாகவா இருந்தது அந்த வகுப்பு என்றால், அதான் இல்லை!!!
அது ஒரு புதிய ஆசிரியை, வந்து பத்து நாட்களே ஆன அவர் நடத்தும் இயற்பியல் வகுப்பு ஆகும்! எங்களை விட 3 வயது தான் மூத்தவள் அந்த மகராசி!!
ஆம்! அந்த அம்மணி வெறும் இளங்கலை பட்டம் முடித்து விட்டு, பரிந்துரை பெயரில் வந்து, நடத்த தெரியாமல் நடத்தி தக்க புக்க என்ற ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று உள்ளே அமர்ந்து இருந்த மாணவர்களின் கழுத்தை ரம்பம் இன்றி அறுத்து கொண்டு இருந்தாள்!!
முன்னால் இருந்த ஆசிரியை தனிப்பட்ட பிரச்னை காரணமாக, திடு திப்பென வேலை விட்டு நின்றதால் வந்த வினை இது… ஆகவே அந்த திங்கட் கிழமை எடுத்த உடன், காலை முதல் பீரியட் வந்து விட்டார் மிச்சம் விடுபட்ட பாடங்களை எடுத்து தள்ளுவதற்காக!!
ஆகவே ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், 42 மாணவர்களும் தூங்கி விழுந்து சாமி ஆடி கொண்டு இருந்தனர்…
எந்த அளவு என்றால், அம்மணி டெரிவேஷன் அழித்து விடுவார் என்று பேனாவை கிளாஸ் வொர்க் நோட்டில் வைத்து மை வட்டமாக ஊறும் அளவுக்கு!! 🥱
நானும் என் தோழியும் லஞ்ச் டவலில் தண்ணீர் ஊற்றி முகம் துடைத்து கொண்டு பார்க்க, எங்கள் கை எழுத்து எங்களுக்கே புரியாத நிலை… கோழி காலில் பேனா கட்டி விட்டது போல் கிறுக்கி வைத்து இருந்தோம்!!
டாம் அண்ட் ஜெர்ரி கார்டூனில் வரும் டாம் பூனை போல், பிறர் தூக்கத்தில் சொருகும் கண்களில் வத்தி குச்சி நிறுத்தி வைத்து கொள்ளாத குறை தான்!!
ஆனால், எந்த பயனும் இல்லை!!!
அப்போது தான் விடியல் பிறந்தது என்றார் போல், ஒரு விசில் சத்தம் கேட்டது!!😃
வாசலில் உடற்கல்வி ஆசிரியர் தான் வந்து இருந்தார், “எல்லாரும் லைன் ஃபார்ம் பண்ணி கிரவுண்டுக்கு போங்க…” என்று அறிவித்தாரே பாக்கணும், நாங்கள் அனைவரும், சிறை கதவை திறந்து விட்ட சிட்டாக பறந்து வெளியேறினோம் ஒரு நிமிடத்திற்குள்!!🐦
அந்த அம்மணி காதில் புகை வராத குறையாக, அவரை முறைத்து விட்டு வெளியேறினார்…
பிறகு கூட்டத்தோடு கூட்டமாக ஏழு பிரிவு மாணவர்களுடன், விளையாட்டு மைதானம் நோக்கி நடை போடும் போது தான் ஷ்ரேயா ஆகிய நான் மனதில் எழுந்த கேள்வியை, கை கோர்த்து என்னோடு நடந்து வரும் தோழி இடம் கேட்டேன்…
“வைஷூ நாம பாட்டுக்கு கிளம்புங்கன்னு உடனே வந்துட்டோம்!! எதுக்கு டி கூப்பிட்டு இருப்பாங்க…?”
“என்ன எல்லாம் பழைய ஸ்கூல் மாதிரி கலை பிடுங்க விட்டா கூட நான் செய்வேன் மச்சான்… அவ மொக்கைலந்து தப்பிச்சா போதும்!!”
“சரி தான்!!” என்று நடை போட்டு கட்டிடம் விட்டு வெளியேற, அப்போது தான் அங்கே கை தட்டி ஆரவாரம் செய்யும் சத்தம் தொலைவில் கேட்டது!! மைதானத்தை நெருங்க நெருங்க தான் அது கிரிக்கெட் மேட்ச் நடக்கிறதை இரு தோழியரும் கண்டு ஆர்வம் அடைந்தனர்…
ஏன் எனில் நாங்கள் இருவருமே அண்ணன் மார்களோடு பிறந்த, வீட்டின் கடை குட்டி செல்லங்கள்!! ஆகவே, முதல் பிள்ளை ஆகிய அண்ணனோடு சேர்ந்து சேர்ந்து கிரிக்கெட் என்றால் ஆர்வம் தான்!! நாங்கள் இருவருமே, தல டோனி ஃபேன்💛
ஆகவே வேகம் எடுத்து, நன்றாக மேட்ச் வியூ தெரியும் இடமாக பார்த்ததில் கேர்ள்ஸ் ஹாஸ்டல் வாசலில் ஒரு புளிய மரத்திற்கு அடியில் இடம் பிடித்து அமர்ந்தோம்!!
ஆனால் என்ன கொடுமை!!?
யார் இந்த இரண்டு விளையாடும் அணி என்றே தெரியாமல், சிக்ஸ் அடித்தாலும் கை தட்டினோம், விக்கெட் பரி போனாலும் கை தட்டினோம்.!!😁
யார் எந்த அணி என்று கூட தெரியவில்லை! அனைவருமே வெள்ளை நிற ஜெர்சி சீர் உடை தான் அணிந்து இருந்தனர்… ஆனால் அது ஆண்கள் அணி!
20 – 25 நிமிடம் கடந்த நிலையில் தான், எங்கள் பெரிய தனியார் பள்ளியின் இரு கிளையின் மாணவர்கள் தான் பல பரீட்சை நடத்தி ஆண்டு விளையாட்டு விழாவின் கோப்பை கை பற்ற போட்டி இடுவதாக காற்று வாக்கில் செய்தி வந்தது…
நான் ஒரு இன்ட்ரோவர்ட், ஆகவே நான் பேசவில்லை… வைஷூ தான் பேச்சு கொடுத்து, தகவல் அறிந்து சொன்னாள்…
ஆனால், அதிலுமே எந்த அணி எங்கள் பள்ளி என்று தெரியாமல் அதே போல் தான் கை தட்டி ஆரவாரம் செய்த படி, ரந்த லாக்கா என்று வடிவேலு காமெடி போல் கிரவுண்டை தோண்டி கொண்டு இருந்தோம், கையில் கிடைத்த விறகு குச்சி வைத்து…
ஒரு கட்டத்திற்கு மேல், விளாசி கொண்டு இருந்த மட்டையாட்டம் செய்த அணி சோர்ந்து போக ஆரம்பித்து விட்டது! முதல் தட்டு பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்த பின்…
அது மட்டும் இல்லை, சூனியம் வைத்தார் போல், அடுத்து அடுத்து விக்கெட் விழுந்த வண்ணம் இருந்தது!! மேலும் வெயில் உச்சிக்கு ஏறி, மண்டையை பிளக்க ஆரம்பித்து அனல் காற்று வீசி தொண்டை எல்லாம் வறண்டு போனது…
நாங்கள் தான் ஏன் எதற்கு என்று கேட்காமல், விட்டால் போதும் டா சாமி என்று ஓடி வந்ததில் தண்ணீர் பொத்தல்களையும் எடுத்து வரவில்லையே!
உணவுக்கும் விடவில்லை… மணி 1:30 ஆகி விட்டது, காலை 10:20 மணிக்கு வந்து அமர்ந்தது… இன்னும் சற்று தோண்டினால், தண்ணீரே ஊற்று எடுத்து விடும் என்ற நிலையில் நானும் என் தோழியும், பசியிலும் சோர்விலும் மீண்டும் தூங்கி வழிய ஆரம்பித்தோம்!!
சூடு பிடித்து, கலை கட்டி அனல் முட்டிய ஆட்டம் கொஞ்சமும் மாறாமல், அப்படியே தான் இருந்தது!! 6 ஆவது விக்கெட்டும் விழுந்து, இப்போது வரிசையில் இருந்த அடுத்த பேட்ஸ்மேன் வந்தான்…
அவன் களம் இறங்க, ஈ ஆடி கொண்டு அமைதியாக இருந்த கிரவுண்ட் கை தட்டி ஆர்ப்பரித்து, கத்தி கூச்சல் இட்டு விசில் எல்லாம் கூட அடித்தார்கள் எதிர் புறம் அமர்ந்து இருந்த மாணவர்கள்…
மாணவிகள் எங்களுக்கு என்ன நடந்தது, ஏன் சும்மா கை தட்டி கத்துகிறார்கள் பைத்தியம் பிடித்தார் போல்? என்று புரியாமல் வந்த தூக்கம் எல்லாம் களைந்து முழித்து கொண்டு இருந்தோம்!!
கை விட்டு போகும் நிலையில் இருந்த ஆட்டம், காட்டு தீ போல் கொழுந்து விட்டு பற்றி எரிந்தது…. அவன் ஒருவனால்!!
“ஹேய் மச்சான்!! செம்மையா அடிக்கிறான் லே?? அநேகமா இவன் ஒருத்தனே நின்று ஆட்டத்தை முடிச்சு கொடுத்துட்டு போவான் பாரேன்…” என்றால் என் கையை பிடித்த படி, வைஷூ…
அவள் பேசியது எங்கே என் காதில் விழுந்தது!!? நான் வாயை பிளந்து கொண்டு அவன் நங் நங் பொளேர் பொளேர் என விளாசி அடிக்கும் அழகில் மெய் மறந்து போய் அமர்ந்து இருந்தேன்!!
“அடி… டி…. ஷ்ரேயா…. உன்ன தான்!!!”
“ஹே!! ஆமா டி….” என மண்டை ஆட்டினேன், அவள் பேசியதை கவனிக்கா விடினும் ஆமா சாமி போடுவதற்காக…
பிறரின் பிளேயர் சீருடை எல்லாம் வெளிர் காகிதம் நிறத்தில் இருக்க, அவன் ஒருவனின் வெள்ளை சீருடை மட்டும் சற்று பால் வெள்ளை நிறத்தில் இருந்தது!! அது போக, முழுதாய் வெள்ளை நிறம் இன்றி, காலர் கிளி பச்சை நிறத்தில் இருந்தது…
மின்னல் வேகத்தில் சீறி பாயும் ஜல்லிக்கட்டு காளை போல் இருந்தது அவன் ஓட்டம்! ரன் எடுத்து வந்து, எதிர் புறம் நின்றான்!!
அப்போது தான், அவன் முதுகில் 20 என்ற ஜெர்சி எண் மட்டும் என் கண்ணுக்கு புழுதியை தாண்டி தெரிந்தது!! அதற்கு கீழே எழுதி இருந்த அவனின் பெயர் படிக்க முடியவில்லை, சிறிய எழுத்துக்கள் காரணமாக…
மீண்டும் எதிர் புறம் ஓடி விட்டான்!! இப்போது அவன் அணிந்து இருந்த பச்சை நிற தொப்பையின் கீழ் தெரியும் அவன் முகத்தை காண, கண்களை சுருக்கி கூர்ந்து கவனித்தேன்…
ஹ்ம்ம்!! பிங்க் நிற தடித்த உதடு மட்டும் தெரிந்தது… அவ்வளவு தான்!!
வெள்ளை நிறம், சராசரி உயரம், மிதமான உடல் வாகு, கையில் ப்ளூ நிற SS பேட் பிடித்து, அவன் பார்வை கூராக பந்து வீச்சாளரின் மேல் பதிந்து இருந்தது!!
அவன் விளாசி அடித்த பவுண்டரி, ஒரு முறை என் பக்கம் வந்தது!! ஆனால், எதிர் அணி நான் எடுக்கும் முன் வந்து கை பற்றி விட்டான்… 4 என அம்பயர் ஆக நின்ற ஆசிரியர், கையை காற்றில் அலை போல் அசைத்து காட்டினார்..!!
அப்போது தான் ஒன்றை நான் உணர்ந்தேன்… அவனுக்கு சரியாக நான் அமர்ந்து இருக்கும் பக்கம் விளாசி அடிப்பது தான் அவனின் பலம்!!!
மீண்டும் வேக பந்து வீச பட, தணீர் என்று அவன் விளாசி அடித்த சிக்ஸ், நேராக நாங்கள் அமர்ந்து இருந்த புலிய மரத்தில் மாட்டி நின்றது பந்து!!!
அப்போது தான் விசில் சத்தம் கேட்டது!!
பந்து மாட்டி இருக்கும் இடைவேளையில், மாணவர்களை எழுப்பி வகுப்புக்கு அனுப்பி வைத்து விட்டனர்… வைஷூ புலம்பி கொண்டே வந்தாள், “ஐயோ இப்போ தான் ஷ்ரேயா ஆட்டம் நல்லா போக ஆர்மிச்சு இருக்கு!! லூசு பசங்க கிளாசுக்கு அனுப்பி விட்டாங்க….”
“ஆமா… யாரு ஜெயிக்கிறான்னு பாக்கணும் எனக்கு!!” என்றேன் நான் வருத்தத்துடன்…
வருத்தம் வகுப்புக்கு செல்வதால் இல்லை, அவனை விட்டு செல்வதால் வந்தது என்று இளம் கன்னியான நான் அன்று அந்த தருணம் உணர்ந்து இருக்கவில்லை!!
ஆம்! அந்த கள்வன் இளையவளின் இதயத்தை கொள்ளைக் கொண்டு விட்டான்❣️
15 ஆண்டுகளாய், செலிபிரிடி கிரஷ் கூட இருந்து இருக்காத ஷ்ரேயா அந்த பச்சை கலர் வைத்த வெள்ளை ஜெர்சி அணிந்த கிரிக்கெட் வீரனை அதன் பின் சந்தித்தாளா???
அவன் எதிர் வினை என்னவாக இருக்கும்?
மெய் காதலா!! இல்லை வயசு கோளாறு கொண்ட ஹார்மோன் மாற்ற வலையா?
வழி பிறந்து கை கூடுமா?
இல்லை வலி தான் மிஞ்சுமா?
என்பதே இந்த கதை!!
வாருங்கள் 16 வயதான ஷ்ரேயா ஓடு, அவள் வாழ்க்கையின் முதல் காதல் பயணத்தை இந்த கதையில் காண்போம்!!
Thanks for reading மக்களே 🩷
