திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -10
Hiiii வாசகர்களே ✨
சோர்வாக நான் உண்ண கூட இல்லாமல், வகுப்பு கவனித்து விட்டு அது முடியவும் உண்ண போய் அமர்ந்தேன்… இருந்த சோர்வு களைப்பெல்லாம் பறந்து போனது, இன்ஸ்டாகிராம் செயலியில் நான் கண்ட காட்சியை கண்டதும்…
ஆம்! ஜெஷ்வந்த் என்னை அன்பிளாக் செய்து ஃபாலோ ரெக்வெஸ்ட் கொடுத்து இருந்தான்..!!! கூடவே hii அனுப்பி இருந்தான், மெசேஜ் ரெக்வெஸ்ட்டில்.…
நான் அதை ஏற்று அவனுக்கும் ரெக்வெஸ்ட் கொடுத்து விட, அப்போது தான் அத்தனை நாளாக பேசாமல் விட்ட, பிரகதி கால் செய்து இருந்தாள்… எடுப்பதா? வேண்டாமா? என்று குழம்பி போய் நான் தவிக்க, அப்போது என் விரல் தன்னிச்சையாக அவள் அழைப்பை ஏற்று காதில் வைத்தேன்…
நான் ஹாலில் தனியாக அமர்ந்து இருந்தேன், ஆகவே கால் பேசினால் எந்த பிரச்னையும் வராது!!
காதில் வைத்த என் கண்கள் பெரிதாய் விரிந்தன, அவள் சொன்ன விஷயங்களை கேட்டு… பிரகதி அழுது கொண்டே, பேசினாள்!!
அது ஆகாஷ் இப்போது அவளை பிளாக் மெயில் செய்வதாக கூறினாள்… “அவள் அனுப்பிய ஆடையற்ற நியூட் போட்டோக்களை வைத்து அவன், இப்போ நீ ரூமுக்கு வரல நான் இதை ஆன்லைனில் போஸ்ட் பண்ணிடுவேன்!!” என்றும், அவளுக்கு இதை என்ன செய்வது என்றும் தெரியாமல் எனக்கு கால் செய்து இருந்தாள்…
இப்போது பிரகதி அக்ரிகல்ச்சர் படிக்க கோயமுத்தூர் ஒரு கல்லூரியில், ஹாஸ்டலில் சேர்ந்து இருந்தாள்…
ஆகாஷ் ஏதோ திட்டத்தோடு தான், அவனும் கோயம்புத்தூரில் ஒரு பெரிய கல்லூரியில் B.Sc பட்ட படிப்புக்கு சேர்ந்து இருந்தான்..!!
அவன் முதலில் நீட் தேர்வு எழுதி, டாக்டர் சீட் அவன் குடும்பமே வாங்கி தந்து விடும் என்று பீலா விட்டு கொண்டு இருந்தான்…
ஆகவே இப்போது அவனின் திட்டம் சேர்ந்து 20 நாளில் தெரிந்து விட்டது!!
அவள் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை… பிரகதி அழுது முடித்து, நான் சொல்லியது போல் தண்ணீர் குடித்து சமன் அடைந்து மேலும் ஒரு அதிர்ச்சி ஊட்டும் தகவலை எனக்கு சொல்ல ஆரம்பித்தாள்!!
அது என்னவெனில், ஆகாஷ் இது போல் மிரட்டுவதற்கு முதலில் பயந்து கொண்டு அவன் இடம் கெஞ்சி கூத்தாடி கூட அவன் மனம் இறங்காமல் போக, இவள் அவன் கேட்டதற்காக ஓயோ அறைக்கு சென்று இருந்தாளாம், ஒரே ஒரு கண்டிஷன் போட்டு விட்டு…
அவள் சொல்லுவதற்கு எல்லாம் தலை அசைத்த படி ஆகாஷ், அவளை அங்கு அழைத்து சென்று நானே தேனே பொன் மானே என்று கொஞ்சி கொஞ்சி சென்ற வேலையை செய்து இருக்கிறான்…
மதிய உணவு வாங்கி வந்து விட்ட பின், இருவரும் உண்ண சற்று இடைவெளி விட்டு, விட்டதை தொடர்ந்து இருக்கிறான்!!
வேலையை வேகத்தோடு இயங்கி முடித்த போது தான், இன்ப மயக்கத்தில் இருந்த பிரகதி கண்ணை திறந்து கீழே பார்த்து அதிர்ந்து போனாள்!!
ஏன் எனில், ஆகாஷ் பாதுகாப்பு உறை ஏதும் இன்றி செய்து இருக்க, அவளுக்கோ கர்பம் ஆகி விடுவோம் என்று பயம் பிய்த்து தின்றது!!
ஆனால் அவனோ, வேலை முடிந்ததும் அவள் அழுகை எல்லாம் கண்டு கொள்ளாமல், இயல்பாக பப்பாளி பழம் வாங்கி தருவதாகவும், அதை அவள் தினம் தின்று வந்தால் கரு தங்காது என்றும் சொல்லி சட்டையை அவள் முகத்தில் வீசி எறிந்து குப்புற அடித்து உறங்கி போய் இருக்கான்!!
பிரகதி ஒரு கட்டத்தில் அழுது அழுது ஓய்ந்து போய், இருந்த உடல் சோர்வு தலை தூக்க பாரம் ஆக்க அவளும் இறங்கி போய் இருக்கிறாள்!!
ஆனால், அப்போதும் அவன் ஈன புத்தியை நிறுத்தி கொள்ளாமல், எதிர் காலத்தில் அவனை ஏமாற்றி விட கூடாது என்று எண்ணிய அந்த தந்திர நரி, இப்போது அவள் ஆடையற்ற நிலையில் அவன் அருகில் உறங்குவது போல் போட்டோ மற்றும் வீடியோ பதிவு செய்து கொண்டு இருக்கிறான்!!
அந்த சத்தம் கேட்டு முழித்தவள், வாரி சுருட்டி கொண்டு எழுந்து அமர்ந்து இருக்கிறாள்..!! “இது எதுக்கு!!!? ஏன்டா இப்படி பண்ண?!!!” என்று அவள் சண்டை போட, அவனோ சிரித்து கொண்டே “இதெல்லாம் நாம ஸ்வீட் மெமோரிஸ் பேபி!” என்று கன்னம் தட்டி, அவளை குளிக்க அனுப்பி வைத்து இருக்கிறான்…
அவன் மொபைலை அவள் கைக்கு கிடைக்காதவாறு அமிழ்த்தி மறைத்து வைத்தவன், அவளோடு சேர்ந்து குளிக்க சென்ற இடத்திலும் மீண்டும் ஒரு களி ஆட்டம் ஆடி அவளை கலைத்து போக செய்து, ரூமை காலி செய்து விட்டு அவளை அவள் ஹாஸ்டலில் இறங்கி விட்டு சென்று இருக்கிறான்!!
இப்போது பிரகதி அழுவது, அவளுக்கு மூன்று நாள் தள்ளி போயிற்று என்றும், அவள் பயந்தார் போல் கரு தான் உண்டாகிற்று என்றும் தான் செய்வது அறியாமல் எனக்கு அழைத்து இருந்தாள்!!
எனக்கு கை கால் எல்லாம் விரைத்து போய் விட்டது, இதயம் எல்லாம் பட படத்து கண்ணை இருட்டியது!! அவள் கூகிளில் ஏதோ தேடி பார்த்து எலுமிச்சம் பழம், டூத் பேஸ்ட் எல்லாம் வைத்து ஏதோ சோதனை செய்து பார்த்து உள்ளாள் என்று எனக்கு போட்டோ மேல் போட்டோ எடுத்து அனுப்பி இருந்தாள்…
கம்பேர் செய்து பார்க்க வேண்டி, என்னையும் என் வீட்டில் இருந்த படி இருந்த பொருட்கள் செய் முறை எல்லாம் செய்ய சொன்னாள்… நானும் பயத்தில், அவள் கேட்பது போல் செய்து பார்க்க, எனக்கும் அவளுக்கும் மாறுபட்ட போல் முடிவுகள் வந்தது!!
எல்லாம் கொட்டி கழுவி விட்டு, நான் மீண்டும் ஹாலில் வந்து பயத்தில் அமர, அங்கு நான் தட்டில் எடுத்து போட்டு இருந்த சோறு, ஐஸ் கட்டியை போல் ஜில்லிட்டு போய் இருந்தது!!
பிறகு நான் பயின்றதை வைத்து அவளுக்கு, ஒரு மாதத்தில் எல்லாம் இந்த வீட்டு பரிசோதனையில் தெரிய வராது…
இன்னும் ஒரு வாரம் பொறுத்து பார்க்கும் பதி சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தேன்!!
ஆகாஷ் வழக்கம் போல், என்னிட்ம வந்து குற்ற பத்திரிகை வாசிக்க ஆரம்பித்தான்..
அவன் வாங்கி கொடுத்த பப்பாளி பழத்தை அவள் உண்ணாமல் பெரிய பிரச்னை இழுத்து வைத்து இருக்கிறாள்!! என்றும் மேலும், இப்போது அவன் கல்லூரி தோழர்களோடு ஊட்டிக்கு உல்லாச பயணம் செல்லும் வழியில், இவள் சொன்ன செய்தியை கேட்டு அவன் ஓட்டுவதில் கவனம் தவறி ஒரு கொண்டை ஊசி வளைவின் புதருக்குள் வண்டியை சென்று விட்டு விபத்தில் சிக்கி விட்டதாகவும் சொன்னான்!!
அத்தோடு விபத்துக்கு உள்ளான அவனின் மகிழ்வுந்தின் புகை படத்தையும் சேர்த்து எனக்கு அனுப்பி வைத்து இருந்தான்…
மேலும், அவன் ஏதோ பொறுப்பாக கரிசனம் காட்டுவது போல், “நான் சொல்லிட்டேன் மூணு நாள் கழிச்சு நான் திரும்பி வந்த உடனே ஹாஸ்பிடல் போய் டெஸ்ட் பண்ணி, அப்படி ப்ரெக்னன்ட் ஆகி இருந்தான்னா அபார்ஷன் செய்ய வைக்கிறேன்!!” என்று கூறினான்…
அதை படித்த எனக்கு தலையே சுற்றியது, ஒரு பக்கம் வாட்ஸ்அப்பில் “அப்படி ஒரு வேளை ப்ரெக்னன்ட் என்றால், நான் குழந்தையை கலைக்க மாட்டேன்… வேண்டும் ஆனால் நான் என் உயிரை கூட துறப்பேன், ஆனால் கருவை கலைக்க மாட்டேன்!!” என்று அழுது அழுது சொல்லி இருக்கிறாள்…
இங்கு இவனோ இன்ஸ்டாகிராமில் என்னிடம், வந்து அவள் வாழ்க்கை பாழாய் போகாமல் தடுப்பதற்காக, பெரிய மனசு பண்ணி ஒரு சலுகை கொடுப்பதாக சொல்கிறான்!!
இன்றைய நாளில் காதல் என்பது இது தானா!!!!??
வெறும் உடல் தேவை தான் பிரதானமா!!!?
காமம் இல்லாமல், உண்மையாக நேசிக்க முடியாதா!!!!???
என்று பயந்து நான் கை நடுக்கத்துடன், மொபைலை அவன் சாட் பக்கத்தில் இருந்து வெளியேற, அப்போது தான் ஜெஷ்வந்த் பேச துவங்கி இருந்தவன் பதில் அனுப்பி இருந்தான், என் ஃபாலோ ரெக்வெஸ்ட்டை ஏற்ற பின்!!
“என்ன பண்ற!!?
12th இல் எவ்வளோ மார்க்??
எந்த காலேஜில் அட்மிஷன் போட்டு இருக்க?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு இருந்தான்…
போன வாரம் தான், வைஷூ கம்மிட் ஆகி இருப்பதை கூறினாள்… அவள் அண்ணன் கூட, வெளி நாட்டிற்கு MBBS பட்ட படிப்பிற்கு சேர்ந்து செல்ல வந்த அவன் தோழன் ஆன பிரகாஷ் என்ற பையனோடு காதல் ஏற்பட்டது ஒரே வாரத்தில்…
அவனோ கோவிலுக்கு அழைத்து சென்று, ஒரு ஓரத்தில் நிறுத்தி கட்டி அனைத்து கன்னத்தில் முத்தம் இட்டு ரோஜா பூ கொடுத்து காதல் சொல்லி, அவளை அவன் வீட்டிற்கு அழைத்து சென்று தனது தந்தை இடம் அறிமுகம் செய்து வைத்ததாக சொன்னாள்…
அப்போது காதல் வெறும் பார்வை மட்டும் கொண்டது இல்லையா…?!!
இதை போல் உடல் தேவைக்கு பயன் படுத்தாமல் இன்றைய இளைய தலைமுறை இளைஞர்களுக்கு காதலை நிரூபிக்க தெரியாதா!!?
என்று பயந்து கொண்டு, ஜெஷ்வந்த் அனுப்பிய குறுஞ் செய்தியை படித்தும் பதில் அளிக்காமல் வெளியேறினேன்…
அப்போது தான் நோட்டிஃபிகேஷன் காட்டியது, ஜெஷ்வந்த் நான் சேலை கட்டி பார்த்து போட்டு இருந்த புகை படத்திற்கு லைக் செய்து இருப்பதாக..!!
“நானே வலையில் வான்டட் ஆக வந்து சிக்குண்டு இருக்கிறேனே!!” என்ற பயத்தில் நான் என் மொபைலை சுவிட்ச் OFF செய்து விட்டு, உணவை வேஸ்ட் செய்யாமல் உண்டு உறங்கி போனேன்…
உறங்கி 3:30 மணிக்கு அலாரம் வைத்து இருக்க, அதுக்காக என் மொபைல் தானாக ON ஆகி அலாரம் அடிக்க, நான் லிங்கை தொட்டு, இறுதி வகுப்பில் இணைந்தேன்!!
எனக்கு இன்னும் அந்த பட படப்பு குறைந்த பாடு இல்லை!! லேப்டாப்பை இறுக பற்றி கொண்டு, மொபைலை தூர வைத்து விட்டு வகுப்பு எடுக்கும் பேர் ஆசிரியர் சொல்வதை உன்னிப்பாக கவனித்து, என் மனதை திசை திருப்பினேன்…
ஆயினும், அது 40 நிமிடத்திற்கு மேல் தொடராமல், வருகை பதிவேட்டை குறித்து கொண்டு முடித்து வகுப்பை விட்டார் அவர்… அதன் பின் நான், என் மொபைலை எடுத்து தானே ஆக வேண்டும்!!
ஜெஷ்வந்த் எதுவும் பேசி இருக்கவில்லை…
ஆனால் ஆகாஷ், பிரகதி தான் விடாமல் பத்திற்கும் மேற் பட்ட குறுஞ் செய்திகள் அனுப்பி இருந்தனர்…
பிரகதி ஒரு வழியாக பீரியட்ஸ் வந்து விட்டது!! என்று அனுப்பி இருந்தாள்…
ஆனால், ஆகாஷ் அனுப்பிய குறுஞ் செய்தி ஒன்றை கூட திறந்து பார்க்காமல், அவன் கணக்கை அப்படியே பிளாக் செய்து விட்டேன்!!
ஜெஷ்வந்த் எதற்காக இப்போது ஷ்ரேயா இடம் மீண்டும் பேசுகிறான்!!?
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
