திரையிட்டு விலகாதே! – 12

திரையிட்டு விலகாதே! 
அத்தியாயம் -12

Hiiii வாசகர்களே ✨

4 பேர் கொண்ட குடும்பமாக ஒரே அறையில் இரவு தங்கி, பெரியம்மா வீட்டு திருமணத்திற்கு சென்று இருந்தோம்!!

காலை ஆள் ஆளுக்கு குளித்து கிளம்பும் தகராறு தலை ஓங்கி இருந்தது!! பெரியம்மா அம்மா இருவருக்கும் பட்டு புடவையை கட்டி விட்டு, நான் குளிக்க போகும் போதே அனைவரும் கீழே மண்டபத்திற்கு சென்று விட்டார்கள்!!

முதுகு ரவிக்கையில் பின் ஹூக் கூட குத்தி விடாமல், நகை எல்லாம் மேஜையில் போட்டு விட்டு போனவர்கள் தான், என் தந்தை 5 நிமிடத்தில் மீண்டும் மேலே வந்து காட்டு கத்து கத்தி விட்டு சென்றார்!!

நான் புடவை கட்டவே எனக்கு சரியாக இருந்தது, இதிலும் செல்ஃபி குயின் நான் புகைப்படம் எடுக்க தவறவில்லை… வரவேற்பு முடிந்து, ஹோட்டல் வந்து சேரவே இரவு 12:30 ஆகி இருந்த நிலையில், சரியாக உண்ணாமல் உறங்காமல் திட்டு வேறு வாங்கி கொண்டு நெக்லஸ் போட வராமல் அதை கையில் ஏந்தி கொண்டு சென்றேன்!!

பேன்சி ஒட்டியாணம் பல்லை இளித்து கொண்டு அறுந்து கையோடு வந்து விட்டது, அனைவரும் காலை உணவு பந்தியில் அமர்ந்து இருப்பதை கண்டு நானும் போய் அமர…

பைன் ஆப்பிள் கேசரி ஒரு நான்கு முறை வாங்கி சாப்பிட்டு, மன மகிழ்ச்சியோடு அங்கும் இங்கும் பார்த்து விட்டு பல்லால் கடித்து ஒட்டியானத்தை சரி செய்து கொண்டு, மீண்டும் மாட்டி கொண்டேன்!!

என்ன கொடுமை?
என் அம்மா கை பையில் எக்ட்ரா சேப்டி pin இல்லையாம்… குத்த எல்லாம் முடியாது, என்று பல்லை கடித்து என்னிடம் சொல்லி விட்டு அடுத்த நொடியே பல்லை காட்டி கொண்டு எங்கள் வீட்டு உறவினர்கள் இடம் பெண் வீட்டாரை பற்றி புறணி பேச ஆரம்பித்தார்..!!

அண்ணியின் அம்மா வந்து என்னை அழைத்து, மண்டபம் அருகிலேயே உள்ள கோவிலுக்கு சென்று அண்ணியின் முகூர்த்த சேலையை சீர் போல் கொண்டு வர சொன்னார் அம்மன் பாதத்தில் வைத்து கும்பிட்ட பின்…

35 பேருக்கு மத்தியில் தெரு வழியாக வயசு பெண், சேலையை ரவிக்கையில் பின் குத்தாமல், எப்போது வேண்டும் ஆனாலும் அவிழ்ந்து விழும் என்ற நிலையில் கையில் தாம்பாள தட்டுடன் நடந்து சென்ற அவலம் யாருக்குமே நடந்து இருக்காது!! 
என்னை தவிர🫠

பிறகு சாமி கும்பிடும் போது தான் கூட்டத்தில் சீர் எடுத்து செல்ல வேண்டிய நானே இறுதி மூளையில் நின்று கொண்டு இருக்க, யாரோ ஒரு உறவினர் முந்தானை ப்ளீட்டை சேர்த்து வைத்து போட்டு இருந்த பின்னை யாரும் பார்க்க நேரம், உருவி இல்லை.. இல்லை.. அப்பட்டமாக திருடி கொண்டேன்!!

வெளியில் சொன்னால் வெக்க கேடு!!

பின் கொடுத்தும் குத்தி விடவில்லை என் தாய்!! மீண்டும் நான் தட்டு எடுத்து போய் அண்ணியின் அம்மா இடம் கொடுக்க, அவரோ “மேக்கப் பொட்டுக்குரியா மா!!” என சாதாரணமாக தான் கேட்டார்…

என் தாய் வெடுக்கென என் கையை பிடித்து பின்னால் இழுத்து கொண்டு, “இல்ல அதெல்லாம் வேண்டாம்!!” என்று அவரிடம் சொல்லி விட்டு, ஒரு நூறு பேர் முன்னிலையில் என் பிளவுசை இழுத்து திறந்து பின் குத்தி விட்டார்…

ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் 40 நிமிடம் உக்கார்ந்து இருந்தேன், வந்து இருக்கும் அனைத்து உறவினர்களும் 
“அடுத்து உனக்கு தான்!! உனக்கு தான்!!”
என்று தாங்களாகவே சொல்லி, ஏதோ காமெடி ஆஃப் தி இயர் பட்டம் பெற்றது போல் விழுந்து விழுந்து சிரித்து கொண்டனர்…

அது தான் கிழம் கட்டை என்று பார்த்தால், கல்யாண மேடைக்கு அணியை அழைத்து சென்று விட வந்த என்னிடம் மாப்பிள்ளையாக அமர்ந்து இருந்த என் அண்ணனும் கூட, இதே கடி ஜோக் சொல்லி தான் பல்லை காண்பித்தான்!! 🙃🫩

கல்யாணம் என்னமோ, 10 நிமிடத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் சம்மதம் சொல்லி, தாலி செயின் கழுத்தில் போட்டதும் முடிந்து விட்டது!!

அண்ணி வீட்டு வழக்க படி நடந்ததால்…
இல்லை எனில் மூன்று மணி நேரம் நான் இந்த பூமர் மொக்கை இடம் வருபட்டு காது தீய்ந்து போய் இருக்கும்!! அக்னியை வலம் வருவதற்கு என் கையையும் அண்ணி கோர்த்து கொண்டார்கள், 7 சுற்று சுற்றி விட்டு வந்து அமர… என் தாய் “என்னைய கேட்காம எதுக்கு மேடைக்கு போன!!!!!?”
என்று ஒரு கடி கடித்தார், அவருக்கு அடுத்த படியாக அமர்ந்து இருந்த என் தந்தை என்னை தீயாக முறைக்க…

“இதுல என்ன தப்பு இருக்கு!!!?
இருக்க ஒரு நாத்தனார் நான் தான்…” என்று மனதில் நினைத்து கொண்டேன், வெளியில் பதில் பேச முடியாமல்…

அடுத்த 10 நிமிடத்தில், மீண்டும் அழைக்க பட்டேன் நான்… பாலும் பழமும் கொடுத்து ஏதோ விளையாட்டு போல் மாறி மாறி வாயில் கொடுக்க சொன்னார் அண்ணியின் அம்மா…

எனக்கே ஜாலியாக இருந்தது!
அதற்கு மாறாக அண்ணி எனக்கு ஒரு தூக்கு சட்டி நிறைய லட்டுகள் சீர் கொடுத்தார்… சோ ஸ்வீட்🥰
எனக்கு அவரை நொடியில் பார்த்த உடனேயே பிடித்து விட்டது, நேற்று வரவேற்பிற்கு வந்த உடன்…

இதற்கு இடையில் அவன் வேறு, 
“சாரி கட்டுன போட்டோஸ் அனுப்பு!!”
என மீண்டும் அதையே கேட்டான்…

“ஏன்??”

“சும்மா பார்க்க தான்!!”

எடுக்கவில்லை என்று சொல்லி சமாளிக்க முடியாது!! காலையில் எடுத்த செல்ஃபி தான் நான் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஆக பதிவிட்டு இருக்கிறேனே!!

“ரெண்டு தான் எடுத்தேன்!”
என்று வழக்கம் போல் உண்மையை சொல்லி, இருந்த இரண்டையும் அனுப்பி வைத்தேன்!!

“செம்மையா இருக்கு” 
என்று பதில் வந்தது… அதை தொடர்த்து அவன் வழக்கம் போல் ஜெஷ்வந்த் என்னிடம், என் குடும்ப பின்னணியை தோண்ட ஆரம்பித்தான்..

“யாருக்கு கல்யாணம்?”
“உனக்கு அவர் எந்த உறவு?” 
என்று எல்லாம் பற்றி..

எப்படியோ பூமர் பேச்சுகளில் இருந்து தப்பித்தால் போதும் என்பதற்காக மொபைலில் தலையை விட்டு கொண்டு இருந்த நான், இவன் விடாமல் பேசவும், நானும் பதில் அளித்து கொண்டு இருந்தேன்!

மதிய விருந்து உணவு உண்டு, மண்டபத்தில் இருந்து கிளம்பி பெரியம்மா வீட்டுக்கு சென்று அண்ணி விளக்கேற்றி கிரக பிரவேசம் செய்தார்… அமர்ந்து அனைவருமாக பேசி விட்டு, மாலை ஆனதும், என் அண்ணனை அவர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்…

அதன் பிறகு நாங்கள் எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், அதாவது சென்னையில் இருக்கும் எங்கள் சொந்த வீட்டிற்கு…
பிறகு அடுத்த நாள் காலை, ட்ரெயின் ஏறி மதுரை வந்து அடைந்தோம்!!

அப்போது தான் இன்னும் இரண்டு நாளில் அவனுக்கு மீண்டும் பிறந்த நாள் என்று தேதியை பார்க்கும் போது நான் உணர்ந்தேன்!!

“மச்சா ஊருக்கு வந்துட்டியா!!?” என்றாள் வைஷூ… ஏன் எனில் இப்போது ஊர் அடங்கு எல்லாம் நீக்க பட்டு இருந்த நிலையில், தனிப்பட்ட முறையில் பேர்வெல் பார்டி ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்து இருந்தனர்..!!

அப்படியே என்னை என் வீட்டில் அனுப்பி விட்டு தான் மறு வேலை பார்ப்பார்கள்!! 😮‍💨
என்று எனக்கு போக வேண்டும், என்று இருந்த ஆசையையும் குழி தோண்டி புதைத்து விட்டேன்…

எதற்கும் இருக்கட்டும் என ஒரு பேச்சு வார்த்தைக்கு நான் அதை பற்றி குடும்பத்தில் இரவு உணவு உண்ணும் போது சொல்ல, ஆள் ஆளுக்கு முழுதாய் நான் சொல்லி முடிக்கும் முன்னரே என்னை அனுப்பாமல் இருக்க அனைத்து காரணத்தையும் வரிசையாக பட்டியல் இட ஆரம்பித்தனர்!!

எனக்கு சிரிப்பதா? அழுதுவதா? என்று கூட தெரியவில்லை…

அவர்கள் பேச மட்டும் பேசி முடித்த பின், 
பொறுமையாக “நான் வரலைன்னு சொல்லிட்டேன்!!” என்று முழுதாய் சொல்லி முடித்தேன்!!

அவர்களுக்கே அசிங்கமாக ஆகி போனது, ஆயினும் வெளிக் காட்டி கொள்ளாமல் மழுப்பி சமாளித்தார்கள்… குடும்பத்தோடு வாழ்ந்தும், நான் மட்டும் தனித்து விட பட்ட அனாதை போல் ஓர் உணர்வு என்னை ஆட் கொள்ள, அதற்கு எல்லாம் விடிவு போல் என்னோடு பேசிய ஜெஷ்வந் மட்டுமே எனக்கு அந்நேரத்தில் ஒரே ஆறுதல் ஆகி போனான்…

அதனால் என்னமோ நான் அறியேன்!!
எனக்கு அவனை இன்னும் பிடித்து போனது!! மென் மேலும் நேசிக்க துவங்கினேன்…

ஒரு கட்டத்தில் அக்டோபர் மாதம் வரவே எனக்கு நேரடி வகுப்புகள் தொடங்கினார்கள் என கல்லூரியில்!!

முதல் நாளே, வந்த அனைத்து பேர் ஆசிரியர்களும் என்னை பார்த்து ஒரே கேள்வியை தான் ஒன்று பார்த்தார் போல் கேட்டார்கள்!!

“CBSE பள்ளியில் படித்து விட்டு இங்க ஏன் மா வந்த!!!?” என்று தான்…

நான் எவ்வாறு, “என் தாய் இங்கு தான் பீஸ் காசு கட்டினார் அதனால் தான் வந்தேன்!” என்று உண்மையை சொல்ல முடியும்??

அதே போல் அதிர்ச்சி யாதெனில் வந்து இருந்த 20 மாணவர்களும் “வீட்டு பக்கத்தில் உள்ள காலேஜ் என்பதால் தான் இங்கு சேர்ந்தோம்!” என்று சொல்ல…
20 மாணவிகளும், “ஹான்!!! இந்த ஒரு டிகிரி முடிச்சா கல்யாணம் பண்ற வயசு வந்துரும்… பத்திரிகையில் பெயர் பக்கத்துல பட்டம் பெயர் போட்டுக்கலாம்!!”
என்று சொல்ல எனக்கு தலை கிரு கிருத்தது…

(அரசாங்க கட்டளை சட்டம் படி பெண்ணின் திருமண வயது 21 ஆக உயர்ந்து விட்டது அல்லவா!! அதனால்…)

“அப்போது இவர்களுக்கு எல்லாம், படித்து வேளைக்கு போய் சம்பாரித்து சுயமாக உழைத்து முன்னேறி வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லையா!!!?” என்று தான் என் மனம் ஜீரணிக்க முடியாமல் வியப்பில் ஆழ்ந்து இருந்தது!!

ஒரு மாணவன் நீட் தேர்வு எழுதி போய் விட்டான், 41 ஆவது ஒற்றை மாணவியாக நான் மட்டும் தனித்து மாட்டிக் கொண்டேன், ஒரு கருப்பு ஆடு போல்!

ஆம்! எனக்கு முதலில் பைலட் விமானி ஆக வேண்டும் என்று தான் லட்சியம்…
கொரோனாவில் சேமிப்பு காசு அனைத்தும் செலவாகி போய் குடும்ப கஷ்டத்தை பார்த்து தான் நான் ஒரு சாதாரண பட்ட படிப்பே படிப்போம் என முடிவுக்கு வந்தேன்!

அது போக எனக்கு, திருமணம் மிதி லாம் அவ்வளவு நாட்டம் இல்லை!! அது தான் இருந்த ஒரு காதலும் புதைந்து போய் விட்டதே…

ஆதலால் மும்முரமாக படித்து வேலைக்கு சென்று வாழ்வில் பெரிதாய் சாதிக்க வேண்டும், சுய சம்பாத்தியத்தில் முன்னேறி என்பது தான் என் வாழ்நாள் லட்சியம் ஆகி போனது!!

ஆனால் என்ன?
எனக்கு அங்கு இருந்த அனைத்து பேர் ஆசிரியர்களையும் பிடித்து போனது!! 
அவர்கள் உயிரை கொடுத்து பாடம் நடத்தும் விதம் பார்த்து, நானும் ஆர்வமாக கற்க ஆரம்பித்தேன்…

கல்லூரி தொடங்கி ஒரு நாட்களில் என் பிறந்த நாள் வந்தது!! ஆனால் யார் இடம் இருந்தும் வாழ்த்து தான் வரவில்லை…
ஜெஷ்வந்த் இரவு 10 மணிக்கு, நான் வைத்த பர்த்டே கேக் புகைப்படத்தை கண்டு
“யாருக்கு பர்த்டே??” 
என்று மட்டும் கேட்டு இருந்தான்…

ஆனால் அவனுக்கோ, வீட்டிலும் கேக் வெட்டி கொண்டாடி, கல்லூரியில் நண்பர்களாக கூடி கேக் வாங்கி வெட்ட வைத்து சர்ப்ரைஸ் செய்து இருந்தனர் அவனுக்கு…

இரு வேறு பாதையில் இருக்கும் இவர்கள் வாழ்க்கை ஒன்று இணையுமா??

Thanks for reading மக்களே 🩷 
 

 

❤️ Loading reactions...
6 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page