திரையிட்டு விலகாதே! -15

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -15

Hiiii வாசகர்களே ✨ 

அத்தனை நாள் நான் ஒட்டிய ஸ்கூட்டி எனக்கு தங்க ரதம் போல் தோன்றியது… சிட்டாக பறந்தேன், சாலையில்! 🐦🪽

நான் ஸ்கூட்டியில் காலி சாலையில் ஒட்டும் வேகமே 60 kmph ஆக இருக்கும்.. அவனோ தோட்ட உச்ச வேகம் என்பது என் வீடியோவில் நான் பதிவிட்ட படி, வெறும் 86 kmph தான் ஆகும்! ஃப்ரெண்ட் உடைய பைக் என்பதால் பயந்து பயந்து ஓட்டினான் போலும்… 

ஆனால் ஸ்பீட் பிரேக்கர் எல்லாம் முழுமையாக பிரேக் அடித்து பொறுமையாக ஏற்றினான், பின் இருக்கையில் இருக்கும் நான் தூக்கி வாரி போட்டு விழாதவாறு!!

“ஷ்ரேயா உனக்கு எது போட்டாலும் அழகா இருக்கு!” என்றார் நான் வீட்டு வாசலுக்கு வந்து கேட் திறக்கும் போது பார்த்த எதிர் வீட்டு ஆன்டி!! சாரி சாரி… ஆன்டி என்று மதுரையில் சொல்ல மாட்டார்கள்! 

காணும் அனைவரும் அக்கா தான்! 

அனைத்து ஆண்களும் அண்ணே தான்!

ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தேன்! 

மணி 3 கூட ஆகி இருக்கவில்லை… போகும் போது வெகு நேரம் சென்றார் போல் தோன்றியது, திரும்பி வரும் போது கண்ணை மூடி திறப்பதற்குள் வந்து விட்டோம்…

ஷூ கழட்டி விட்டு அறைக்குள்ளே வந்து, என் டிஷர்ட்டை தலை மேல் கழட்டும் போது தான் அவன் வாசம் என் ஆடையில் ஒட்டி இருப்பதை என் நாசி உணர்ந்தது!! 🫣😌

அதை துவைக்க போடாமல், காதல் பித்தாகி இருந்த பாவை நான் அப்படியே அதை மடித்து உள்ளே வைத்து பொத்தி பாதுகாக்க எண்ணினேன்… 

என்ன அதிசயம்?

என் ஜெக்கிங்ஸ் இலும் அவன் வாசம் தான்…

அப்படி ஒரு பரவச மன நிலையில், போஸ்ட் போட ஆரம்பித்தேன் அனைத்து போட்டோ வீடியோ பதிவுகளை வைத்து அந்த தனி பட்ட அக்கவுண்டில்…

போன முறை பிளாக் செய்யும் முன், ஜெஷ்வந்த் அதை டெலிட் செய்யும் படி என்னை கடிந்து கொண்டான்!!

ஆகையால் நான் என்ன எதிர் வினை செய்தேன் என்றால், அவனை அந்த கணக்கில் இருந்து பிளாக் செய்து விட்டு அந்த அக்கவுண்ட் உடைய யூசர் பெயரையும் மாற்றி விட்டேன்!!

ஆகவே அவனுக்கு அது டெலீட் ஆகி விட்டது போல் தான் தோன்றும், யார் மொபைல் வாங்கி செக் செய்து பார்த்தாலும்… 

மாடர்ன் ப்ராப்ளம் ரெக்வையர் மாடர்ன் சொல்யூஷன்!! 🤷

கிட்ட தட்ட அன்று மட்டுமே ஒரு 60 போஸ்ட் போட்டு விட்டேன், இருந்த குதூகலத்தை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாமல்..

மாலை எதேச்சையாக வைஷூ அழைப்பு விடுத்த போது, அவளிடம் மட்டும் பூடகமாக “நாங்கள் சந்தித்தோம்!” என்று மட்டும் சொன்னேன், முழு விவரத்தை பற்றி மூச்சு விடாமல்…

அம்மா வந்ததும், அவரிடம் TC செக் எல்லாம் கொடுத்தேன் முதன் முறையாக “தனியாக தான் போய் வாங்கி வந்தேன்!” என்ற பொய் சொல்லி… “பரவால்ல வீட்டுல தண்டமா தின்னுட்டு தூங்காம போய் உருப்படியா ஒரு வேலையை முடிச்சுட்டு வந்தியே!” என அவரும் அதை வாங்கி ஹேன்ட் பேக்குள் போட்டு கொண்டு உடை மாற்ற சென்று விட்டார்…

ஆக மொத்தம் 22.12.2022 அன்று ஷ்ரேயா ஆகிய என் வாழ்வில் மறக்க முடியாத நாளாகி போனது!!

அதற்கு மேலும் ஒரு காரணம் இருந்தது!

நான் என் கணக்கில், ஒரு பிடித்த பாடலுக்கு அழகான ஒரு வீடியோ கிடைத்ததால் அதை எடுத்து ஸ்டோரியாக பகிர்ந்து இருந்தேன்…

அதில் தவறுதலாக, அந்த ஹீரோ நிவின் பாளி மற்றும் நஸ்ரியா ஆகிய இருவரும் பைக்கில் செல்வது போல் ஒரு காட்சி வந்து விட்டதாம்!! அதை கண்ட உடன் ஜெஷ்வந்த், பிடி பிடி என்று சண்டைக்கு வரிந்து கட்டி கொண்டு வந்து விட்டான்!!

 

“உன் மனசுல நீ என்ன நினைச்சுட்டு இருக்க?!!!!!

நான் ஒன்னும் உன்னய லவ் பண்றத்துக்காக பைக்குல கூட்டிட்டு போகல…

நீ பாட்டுக்கு உன் இஷ்டத்துக்கு எது நடந்தாலும் அதை வேற மாதிரி தான் எடுத்துப்பியா??

உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாத!!?

நீ இப்படி தான் தொட்டதுக்கெல்லாம் லவ்ன்னு சொல்லுவன்னா நான் போறேன்!!”

என்று மீண்டும் பிளாக் செய்து, அதிசயமாக அன்றைய நாளின் என் நீடித்து நிலைத்து இருந்த சந்தோஷத்துக்கும் முட்டு கட்டை போட்டு விட்டு ஒரே அடியாக போய் விட்டான் ஜெஷ்வந்த்!!

அவன் மிஸ்ஸண்டர்ச்டான்ட் செய்து கொண்டு போனால், இதில் என் தவறு என்ன இருக்கிறது? என்று அழுகை வந்தும் நான் அழாமல் இயல்பாக இருப்பது போல் என்னை நானே நடித்து ஏமாற்றி கொண்டு இருந்தேன்…

அதிலும் அவன் செல்லும் போது, ஏற்கனவே ஒரு முறை என்னை வார்த்தையால் ரணம் செய்து விட்டான்…

ஆனால் கிட்ட தட்ட நான் இரண்டாம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து, என் தாயே இதை சொல்லி கொண்டே இருப்பதால் எனக்கு அது வெகு சாதாரண ஒன்றாக தான் தோன்றியது!

ஆனால், தாய் சொல்வதற்கும் ஒரு ஆண் சொல்வதற்கும் மிக மிக வித்தியாசம் உள்ளது என்பதை உல்லி ஆகிய என் உள்ளம் புரிந்திடா அளவுக்கு நான் மடந்தை அல்லவே!!

“நீ ஒல்லியா இருந்தன்னா இன்னும் எவ்வளோ அழகா இருப்ப தெரியுமா?!!” என்பது தான் அது…

இது மாநிற அழகுடைய பெண்களை சிலர், 

“நீ மட்டும் வெள்ளையா பொறந்து இருந்த அவ்வளோ அழகா இருப்ப!!”

(அல்லது)

“நீ கருப்பா இருந்தாலும் கலையா இருக்க!”

என்று சொல்லும் வஞ்ச புகழ்ச்சி போல தான் சற்று எடை கூட இருக்கும் பெண்களுக்கு அந்த வார்த்தைகள்…

பெற்ற தாயே அதே சொல்லி சொல்லி வளர்த்து இருந்ததால், எனக்கு அது ஆரம்பத்தில் ஒன்றும் பெரிதாய் தோன்றவில்லை!! ஆனால், அவன் பள்ளி வாசலில் பேசிய 5 நிமிடம் முழுக்க இதை பற்றிதான்…

ஜெஷ்வந்த் விடாமல், “எக்சர்சைஸ் பண்ணி வெயிட் லாஸ் பண்ணு… எனக்கு அப்போ தான் பிடிக்கும் உன்னய!!” என்றதும் தான் நான் பொறுக்க முடியாமல் பொறுமை இழந்து அறைந்து விடுவேனோ? என்ற பயத்தில் தனியாக நடந்து பள்ளிக்குள் சென்று விட்டேன்!!

எனக்கு இப்போ என்ன அதன் பக்க தாக்கம் என்றால்?

அவனுக்கு பிடித்தார் போல் நான் என் உடல் தோற்றம் எல்லாம் மாற்ற வேண்டுமாம், ஆனால் அவன் என்னை காதலிக்க வில்லையாம்!!

அது தான்!!

கையில் கிடைத்தால், கைமா செய்து கொத்து பரோட்டா போட்டு இருப்பேன் அந்த வெக்கம் கெட்ட வெங்காயத்தை அன்றே…🤬😡

இதை நான் வைஷூ இடம் பகிரும் போது அவளும் வண்ட வண்டையாக தான் வார்த்தைகள் கொண்டு அவனை கழுவி ஊற்றினாள்… 

அது போக கல்லூரியில் அந்த திங்கள் கிழமை ஒரு பஞ்சாயத்து ஆகி போய் விட்டது!! யாரோ இரு காதலிக்கும் ஜோடிகள் தொக்காக Hod (துறை தலைவர்) சார் இடம் சிக்கி விட்டனர்…

அதற்கு சம்மந்தமே இல்லாமல், “ஷ்ரேயா தான் போட்டு கொடுத்து இருப்பாள்…” என்று சொல்லி மொத்த வகுப்பும் என்னை ஒதுக்கி வைத்து விட்டது!! முதல் பெஞ்சில் முதல் ஆளாக நான் மட்டும் தன்னந் தனியாக அமர்ந்து இருந்தேன்…

அப்போது தான் இரு மாணவர்கள் மட்டும் வந்து, “ஏன் பா இதை நீயா செஞ்ச?!” என்று நம்ப முடியாமல் கேட்டனர்… அனைவருக்கும் கேட்கும் படி குரலை உயர்த்தி, “நான் வேணும்னா கோவில்ல சூடம் ஏத்தி சத்தியம் பண்ணவா? அதை நான் ஒன்னும் சொல்லல… அச்சுவல்லா என்ன நடந்துச்சுன்னு கூட எனக்கு தெரியாது!” என்று உண்மையை சொன்னேன்…

அதையும் யாரும் நம்ப தயாராக இல்லை!

ஆனால் நான் சொல்லும் போதே அழுது விட்டேன், என்பதால் வகுப்பை விட்டு வெளியேறினேன்… அன்று தான் எனக்கு இரு தோழர்கள் கிடைத்தார்கள்!!

உண்மையான காதல் கிடைத்தாலும் கூட, இந்த காலத்தில் உண்மையான நட்பு என்பது காண கிடைக்காத பொக்கிஷம் ஆனால் அது எனக்கு கிடைத்தது!! 💛💛

பக்கத்து வகுப்பில் டஸ்டர் வாங்க கூட துணையோடு செல்லும் பெண்களுக்கு மத்தியில், கல்லூரியில் நான் மட்டுமே தனியாக எங்குனாலும் சென்று வருவதை கண்டு சீனியர் கூட வியந்தனர்… 

சிலர் வந்து என்னிடம் கேட்டே சென்றனர், மேலும் வகுப்பு மாணவர்கள் ஒரு கட்டத்தில் நம்பி, சிலர் அவளிடம் பேசுங்கள் என்று பரிந்துரை செய்யினும் அதை எந்த மாணவியும் ஏற்கவில்லை!!

அதை விட என் மன தைரியம் அது ஏறி போனதை நானே உணர்ந்த தருணம்… பின்னால் இருக்கும் 20 பேரும் என்னை என் காது படவே கரித்து கொட்டினாலும், அனைத்தையும் ஒற்றை ஆளாக சமாளித்து முன் இருக்கையில் அமர்வதற்கும் தில் வேண்டும் தானே! 

அதையும் தாண்டி நான் கலந்து கொண்ட ஓவியப் போட்டியில் எனக்கு பரிசு கிடைத்தது!! அதிலும் ட்விஸ்ட் இருக்கிறது… என்னவெனில்? 

ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது தான், இந்த போட்டியும் ஆன்லைனில் நடந்தது!! ஆனால் அதன் முடிவுகள் ஆன்லைனில் வெளியிட திட்டம் இட்டு இருந்த அவன் படிக்கும் கல்லூரி நிர்வாகம் அதை திடீரென, நேரடி பரிசு வழங்கும் விழாவாக நடத்தியது!!

அதற்கு என்னை தனியாக தான் அனுப்பி வைத்தார்கள்… அனைத்து கல்லூரியும் குழுவாக அவரவர் பேர் ஆசிரியர் கூட கலந்து கொண்டு இருந்த நிலையில், நான் மட்டும் என் கல்லூரியில் இருந்து தனியாக சென்று இருந்தேன்!!

அன்று வியாழ கிழமை, விரதம் வேறு… 

முட்டை பிரியாணி மதிய உணவு வழங்கப்படவே நான் போகவில்லை.. பசி ஒரு பக்கம், ஒரு மாதிரி தூக்கம் அழுத்தியது!!

அப்போது தான் என் பெயரை மேடையில் அறிவித்தனர்… முதலில், தூங்கி வழிந்து கொண்டு அமர்ந்து இருந்த நான் அதை கேட்டும் நம்ப முடியாமல் அமர்ந்து இருந்தேன்!! அதன் பிறகு தான், மீண்டும் ஒரு முறை பெயர், வகுப்பு, துறை, கல்லூரி பெயர் சொல்லி அறிவித்தார்கள்…

நான் எழுதிய கவிதையும் கூட, மூன்றாம் பரிசு வென்று இருந்தது!! எனக்கு அது தெரியாது, ஓவிய போட்டி பரிசு மட்டும் தான் அறிந்து கொண்டு வந்தேன்… ஆனால் இது “கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா!!?” என்பது போல் இரட்டிப்பு மகிழ்ச்சி கொண்டது என் மனம்..

இன்ப அதிர்ச்சி தாளாமல், நான் கொடுத்து ஒரு ஜாங்கிரியை கொறித்த படி இயல்பாக நடக்க, அதுவோ சுற்றி சுற்றி என்னை ஒரு இடத்தில் தான் கொண்டு விட்டது!!

அவன் கண்ணில் பட்டு விடுவாளா ஷ்ரேயா?

இப்போது எவ்வாறு வெளியேறுவாள்!!?

என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

 

❤️ Loading reactions...
5 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page