திரையிட்டு விலகாதே! -17

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -17

Hiiii வாசகர்களே ✨

இவ்வாறு நான் மீண்டும் மதுரையில் வீட்டுக்கு சென்றது தான் எனக்கு கல்லூரியில் இருந்து அட்மிஷன் அழைப்பு வந்தது… ஆதலால், அந்த பேச்சு அப்படியே மாறி போனது!! 

இப்போது நான் தூங்கி கண் விழித்தேன், இரவு நான் கொண்ட கோபமோ, அனுப்பிய காட்டமான பதிலோ எதுவுமே எனக்கு நினைவில் இல்லை.. இயல்பாக எழுந்தவுடன் சார்ஜ் போட்டு விட்டு என் வேலை, வீட்டு வேலையில் உதவி என செய்து விட்டு… 

நான் அண்ணன் அப்பா மூவருமாக சேர்ந்து அட்டை பெட்டிகளை எல்லாம் ஒவ்வொன்றாக ஓப்பன் செய்து, அதில் வீடு மாறி வந்த பொருட்களை எல்லாம் பொதுவாக அந்த அந்த இடத்தில் சென்று வைத்து விட்டு வர, அம்மா அந்த பொருட்களை எல்லாம் அதன் இடத்தில் வைத்து அடுக்கினார்…

16 அட்டை பெட்டிகள் இருந்ததால், அந்த காரியம் அவ்வளவு எளிதாக முடியவில்லை. இப்போது மதிய உணவு உண்ணும் நேரமே வந்து விட்டது, இது வரை 5 பெட்டிகள் முடித்து ஆறாவது பிரவுன் டேப் கிழித்து உள்ளே பார்த்ததும், அம்மா சாப்பிட அழைத்தார்..

“ஷ்ரேயா இங்க வா..!! தட்டு கரண்டி எல்லாம் கொண்டு போய் வெய் டைனிங் டேபிளில்லே…” 

“வரேன் மா..” என்று நான் வைத்து அடுக்க, நால்வரும் அமர்ந்து உண்டு முடித்தோம்…

அண்ணனும், அம்மா அப்பாவும் உறங்க சென்று விட்டார்கள்… நான் மட்டும் கிச்சன் பாத்திரங்கள் இருந்த பெட்டியை திறந்து, அடுக்கி கொண்டே அமர்ந்து இருந்தேன்!!

என் தாய்க்கு, அவர் தந்தை ஒரு லாரி நிறைய சீர் பொருட்கள் கொடுத்து உள்ளார்! அப்போது பாத்திரங்கள் எவ்வளவு இருக்கும்? என்பதை நீங்களே கணக்கிட்டு பார்த்து கொள்ளுங்கள்…

பாத்திரங்கள் மட்டுமே தான் 4 அட்டை பெட்டிகளில் காலி செய்யும் நேரத்தில், பேக்கிங் செய்து கொண்டு வந்து உள்ளோம்!! அதில் எல்லாமே K என்று குறியீடு போட்டு இருப்பதால், பேய் கனம் இருப்பினும் அலேக்காக தூக்கி வந்து அடுக்கி முடித்து விட்டேன்!!

அப்போது தான் எனக்கு அந்த சீன மாடல் மொபைலை மாற்றி, பழைய நோக்கியா மொபைல் கொடுத்து இருந்தார்கள்… அதை காலையில் சார்ஜ் போட்ட நியாபகம் வந்தது, உடனே போய் அதை எடுத்து பார்த்தேன்…

5:30 ஆகி இருக்க, பெற்றோர்கள் எழுந்து வந்து AC போட்டு உறங்கும் என் அண்ணனை எழுப்பி விட்டார்கள்… அப்போது நான் திறக்க, எண்ணற்ற மிஸ்டு கால்கள் வந்து குவிந்து இருந்தன.!! வாட்ஸ்ஆப் மெசேஜ் அழைப்புகள்.…

இன்ஸ்டாகிராமிலும் kooda மெசேஜ் அழைப்புகள்…

எல்லாம் ஜெஷ்வந்த் இடம் இருந்து தான்!!

“ஏன் போன?” என்று ஆரம்பித்து இருந்தான்… முதல் முறை என்னிடம் இருந்து காட்டமாக வந்த ஒரு மெசேஜ் அவனின், என்னை ஆட்டி படைக்கும் எண்ணத்தை ஆட்டம் காண வைத்து விட்டது போலும்!!

உடனே எல்லாம் எதற்கும் பதறி அடித்து கொண்டு பதில் சொல்லவில்லை நான்!! அப்படியே வைத்து விட்டு, சிறிது நேரம் என் மொபைலில் கேம் விளையாடி கொண்டே இருந்தேன்… போர் அடித்ததும் எழுந்து சென்று விட்டேன்!!

ஆம்! என் அண்ணன் 5 ஆண்டு பல் மருத்துவம் படிப்பு முடித்து விட்டான்… ஆகையால் தான் குடும்பமாக மீண்டும் நான் சென்னைக்கு திரும்பி விட்டோம்!!

“எனக்கும் TC வாங்குகிறேன்!” என்று என் தாய் ஒற்றை காலில் நின்றார்… 

ஆனால் என் HOD விடவில்லை… 

“இது ஒன்னும் ஸ்கூல் இல்லை! லைஃப் சயின்ஸ் 🧬 கோர்ஸ் பாதியில் எல்லாம் சென்றாள் எங்கும் தொடர முடியாது… நீங்களே உங்கள் மகளின் படிப்பில் மண் அள்ளி போட்டு விட்டு விடாதீர்கள்!!” என சொல்லவும் வேறு வழி இன்றி, என்னை ஹாஸ்டலில் சேர்பித்து விட்டு அவர்கள் மட்டும் இங்கே வந்து விட்டனர்…

நாளை ரியோப்பெனிங் என்று இருந்த நிலையில், இன்று இரவு நான் வீட்டில் அத்தனை பேர் இருந்தும், தனியாக தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் வந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் ஏறி மதுரைக்கு விடியல் காலை 4:30 மணிக்கு இறங்கினேன்!!

அதுவும் எப்படி பட்ட ஹாஸ்டல் எனில், நான் கூகுள் மேப்பில் மட்டுமே பார்த்து சொல்லி மறு நாள் என் தாய் போய் கெட்ட கண்றாவியாக இருப்பினும் அதற்கு ஒரு மாதம் காசு கட்டி விட்டு வந்து விட்டார்…

என் கல்லூரிக்குள் விடுதிகள் இல்லை!

வீடு காலி செய்து வரும் போது என் அண்ணன் நான் சூட் கேசில் பேக் செய்து வைத்து இருந்த பொருட்களை, கொண்டு வந்து கொடுத்து விட்டு போய் இருந்தான்!

ஆக மொத்தம் எனக்கு ஹாஸ்டல் எங்கே இருக்கிறது என்றே தெரியாது!! 😃😃

அவனுக்கு மட்டும் ஹாஸ்டலில் சேர்பிக்கும் போது, நாங்கள் மூவரும் கடை கடையாக ஏறி இறங்கி அவன் விட்டு வந்த பொருட்களை எல்லாம் வாங்கி கொண்டு கால் நடையாக நடந்து ஹாஸ்டலில் அடுக்கியும் கொடுத்து விட்டு வந்தார் என் தாய்!!

என் இங்கிலீஷ் சார் சொல்லியது போல் தான், “என் மீது துளி அக்கறை கூட இல்லாமல் காசோடு எக்கேடு வேண்டும் ஆனாலும் கெட்டு தொலைந்து போ!!” என்று இருக்கிறார்கள்… என புரிந்து கொண்டு ஒரு கசப்பான புன்னகையோடு, குளிரில் நடுங்கிய படி பெரியார் வந்து கிரைம் பிராஞ்ச் தாண்டி, madura college பாலம் அடியில் நடந்தேன்!!

அங்கே அந்த அம்மா சமைப்பதற்காக, 4:30 மணிக்கு எழுந்து விடுவார்கள்… அம்மாவும் மகளுமாக தான் பிரைவேட் பெண்கள் விடுதி வைத்து நடத்தி வந்தனர்.. அந்த அக்காவுக்கு இப்போது தான் திருமணம் ஆகி இருந்தது!!

அவர்களுக்கு என்னை தெரிந்து இருந்தது போலும், ஆதார் கார்டு xerox வாங்கி வைத்து இருந்ததில்… என்னை கண்டதும், “வாடா!! ஷ்ரேயா தானே நீ?!!!” என்று கேட்டு உள்ளே அழைத்துச் சென்று எனக்கான கட்டிலை காண்பித்தார்…

எல்லோரும் உறங்கி கொண்டு இருந்தார்கள், ஆகையால் எழும் முன்பாகவே என் பெரிய கனமான சூட் கேசு திறந்து எனக்கான ஒரு வார துணியை எடுத்து வைத்து கொண்டு, குளிக்க சென்றேன்… மேலே ஒரு கட்டில் அதிலும் ஒரு பெண் உறங்கி கொண்டு இருந்தார்!!

முதல் முறையாக அது போல் ஒரு காமன் பாத்ரூமில் பயந்து பயந்து தான் குளித்தேன்!! ரொம்ப எல்லாம் சூப்பர் என்று சொல்ல முடியாது, என் அம்மா பீற்றி கொண்டது போல்… ஆனால் தங்க முடியா நிலையம் இல்லை!!

வெளியில் வரும் போது, சில வயசான ஆண்டிகள் எழுந்து வேளைக்கு கிளம்ப சேலைகள் எடுத்து வைத்து கொண்டு, நான் வெளியேறுவதற்காக காத்து கொண்டு இருந்தனர்… 

8 மணிக்கு உணவு கொண்டு வந்த உடன், அதை உண்டு, மதிய உணவை டப்பாவில் பேக் செய்து கொண்டு அடித்து பிடித்து என் கல்லூரிக்கு புறப்பட்டேன்!! உணவு ஒரு அளவுக்கு நன்றாகவே இருந்தது…

12 நிமிடம் ஆகி இருந்த நிலையில், வந்து அடைந்தேன்… 

நான் கல்லூரி விட்டு திரும்பி வரும் போது, அந்த அம்மாவே என் கட்டிலில் படுத்து கிட்னி இருந்தார்… பல்லி கரப்பான் பூச்சிக்கு கூட பயம் இல்லை எனக்கு, ஆனால் நான் இரவு உணவு உண்டு கொண்டு அமரும் போது, என் கட்டில் அடியில் ஒரு கருப்பு எலி ஓடியது… எனக்கு கிலி பிடித்து விட்டது, அதைக் கண்டதும்.!!

வீட்டில் செய்வது போல், நான் பாட்டுக்கு துணிகளை மாற்றி மாற்றி ஒரு முறை போட்டு ஒரு பக்கெட் நிறைய குவிந்து விட்டது!! நான் மட்டும் தான், 2:30 மணிக்கு காலேஜ் முடிந்து முதல் ஆளாக திரும்பி வந்தேன்… “ஆன்டி வாஷிங் மிஷின் எங்க?”

“ஹான் ரெண்டாவது மாடியில முதல் ரூம்ல இருக்கு டா…”

“ஓகே” என்று போனேன், அதை போட்டு விட்டு மாடிக்கு முதல் முறை செல்ல காற்று நன்றாக வீசியது… மொத்த ஹாஸ்டலிலும் நான் ஒருவள் மட்டும் தான் இருந்தேன்! ஆகையால் இரண்டாம் மடியில் ஒரு தனி அறையில், இரண்டு கட்டிலில் ஒன்று காலியாக இருப்பதை கண்டு நான் உடனடியாக சொல்லி கொண்டு மாறி வந்து விட்டேன்!!

கிரவுண்ட் ஃப்ளோரில் இருந்து அப்போது தான், மூச்சு திணற திணற தனி ஆளாக மெத்தையை குண்டு கட்டாக கட்டி பாகுபலி போல் தூக்கி வந்தேன்!! அது மாதிரி போனான் வாடை வந்ததால், மாடியில் உச்சி வெயிலில் காய வைக்க எண்ணி, மேலும் ஒரு மாடி தூக்கி கொண்டு போய் போட்டு வந்தேன்!!

அறைக்கு வந்து நீர் பருகி திரும்ப, அப்போது தான் எனக்கு ஒரு புது நம்பரில் இருந்து கால் வந்தது… அம்மா எல்லாம் எனக்கு அவர்களாகவே அழைக்க மாட்டார் “அப்போ இது யாரு?” என்று யோசனையோடு நான் அதை சேர்க்கவே இல்லை!!

வாஷிங் மிஷின் முடிந்து மணி அடிக்கவும், பக்கெட்டில் எடுத்து கொண்டு சென்று மாடிக்கு சென்று, துணி காய வைத்து விட்டு திரும்பி வந்து பார்க்க, விடாமல் அழைப்பு வந்த வண்ணம் இருந்தது!!

அதை ஏற்று காதில் வைக்க, அந்த முனையில் கேட்ட குரலை வைத்தே யார் என தெரிந்து கொண்டு அதிர்ந்தேன்!!

ஆம்! ஜெஷ்வந்த் தான் அழைத்து இருந்தான்… ஏற்கப்பட்டதும் அவன் முதலில், ஹலோ கூட சொல்லவில்லை, நேரடியா

“எங்க இருக்க???”

“ஹாஸ்டலில்! ஏன் கேக்குறீங்க?”

“எங்க? ஏன் வீடு என்ன ஆச்சு???”

“அது என்ன வேணா ஆகட்டும் உங்களுக்கு என்ன அதை பத்தி கவலை!!!!?” என்று குளிர்ந்த குரலில் கேட்டேன்…

“ஹேய்… கேட்டா கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு.!! நீ முன்னாடி சென்னையில இருக்கான்னு சொன்ன… இப்போ ஏதோ ஹோஸ்டெல்னு சொல்ற… 

என்ன தான் நடக்குது?!!!”

“அதான் நானும் கேக்குறேன்!!? என்ன நடந்தா உங்களுக்கு என்ன அதுல பிரச்னை???”

“தெரிஞ்சுக்க தான்!!”

“தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?!!!”

“ஏன் ஏதோ மாறி பேசுற??”

“ஒரு மாறியும் பேசல… நீங்க தான் சம்மந்தமே இல்லாம, ஏதோ நம்பரில் இருந்து கால் பண்ணி கத்திட்டு இருக்கீங்க?”

“நான் ஒன்னும் கத்தல…” என்றவனின் கட்டை குரல் அப்படியே மெலிதாய் ஒலித்தது மறு நொடி…

“சரி சொல்லு…” என்றான் அடுத்த படியாக…

கதையே இப்போது தான் ஆரம்பிக்கிறது மக்களே!! 😃🫠

என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

 

❤️ Loading reactions...
6 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page