திரையிட்டு விலகாதே! -18

திரையிட்டு விலகாதே! 
அத்தியாயம் -18

Hiiii வாசகர்களே ✨
 
“நீங்க இப்படி, என்ன ஏன் எதுக்குன்னு கேக்க போறீங்கன்னா நா கால கட் பண்றேன்!” என பேசி கொண்டே வந்த நான் மாடி படி ஏறுகையில் நிஜமாகவே ஹெட் போன் ஒயர் மாடி படிகள் கை பிடியில் மாட்டி இழுத்து, மொபைல் கீழே விழுந்து கால் கட் ஆகி விட்டது!!

ஜெஷ்வந்த் இம்முறை என்னை பிளாக் செய்யாமல் இருந்தான்! அதற்கு காரணம், நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை… ஐயா என்னிடம் certificate கோர்சுக்கு பீஸ் கட்ட வேண்டும் என “உன் கிட்ட 1000 ரூபாய் இருக்கா!!? எனக்கு வேண்டும்…” என்று கேட்டு பெற்ற உள்ளார், எப்போது திருப்பி கொடுப்பார்? இவ்வளவு ஏன், “திருப்பி கொடுப்பேன் இல்லை…”  என்றே சொல்லாமல்…

700 ரூபாய் நான் என்னிடம் GPay இல்லாததால், அருகில் இருக்கும் மெடிக்கல் ஷாப்பில் இருந்து அனுப்பி வைத்தேன்… 300 ரூபாய் பிரகதி இடம் பெற்று தந்தேன்! அந்த 300 ரூபாய் மட்டும் திரும்பி பெற்று கொடுத்து விட்டேன், அவள் இரண்டு நாளில் பார்சல் வருகிறது என்று சொல்லியதும்…

இதில் வேறு மீண்டும் வீட்டில் மாட்டிக் கொண்டேன், அந்த மருந்து கடை காரர் என் அண்ணனிடம் கமிஷன் பணம் 30 ரூபாய் கேட்டு பெற்ற நிலையில்… என் அண்ணன் சண்டை போட, அவரோ இவனின் அக்கவுண்ட் டீட்டைல்ஸ் எடுத்து காண்பித்து விட்டார், “இவருக்கு தான் உங்கள் தங்கை பணம் அனுப்பி உள்ளார் எங்கள் கடையில் இருந்து!” என்று ஆதாரத்துடன் மாட்டிக் கொண்டேன்…

“ம்ம்ம்மா ஃப்ரெண்ட் தான் மா புக் வாங்க காசு போட்டு விட சொன்னா… நா தான் எங்க வீட்டு பக்கத்தில ஒரு கடையில போட்டு விடுவாங்கன்னு சொல்லி ஹெல்ப் பண்ண வாங்கிட்டு வந்தேன்!”

அவனை யார் என்றே தெரியாததால், வீட்டில் வெடித்த பிரச்னை எளிதில் முடிந்து விட்டது..!! இவனால் இரண்டாம் முறை மாட்டிக் கொண்டு, இந்த முறையும் ஒரு பொய் சொல்லி தப்பினேன்… 😮‍💨

இவனுக்காக!!

அதன் பிறகு இப்போது மாலை, எந்த மெசேஜ் கால் எதுவும் வரவில்லை… இம்முறை நான் அவன் பிறந்த நாளுக்காக எல்லாம் 12 மணி வரை தூங்காமல் காத்து இருந்து விஷ் கூட செய்யவில்லை வேண்டும் என்றே அவாய்ட் செய்து கொண்டு, அவன் ஏதேனும் கேட்டால் லேட் ரிப்ளை செய்வதுமாக இருந்தேன்!!

இதற்கு இடையில், நான் மீண்டும் அவன் படிக்கும் கல்லூரிக்கு பூவுலகின் நண்பர்கள் நடத்திய விழாவுக்கு பங்கேற்பு சான்றிதழ் பெற அழைப்பு வந்ததனால், வேறு வழி இன்றி போகல் ஆனேன்!!

நான் 3 மணி நேர விழாவில், ஒரே இடத்தில் அமர்ந்து இருக்கும் போது இன்ஸ்டாவில் என்னுடன் வந்த பிற மாணவர்கள் பதிவேற்றம் செய்த ஸ்டோரியை பகிர்ந்தேன்! இம்முறை அவன் மீண்டும் கேள்வி கேட்டான், “என் காலேஜ்க்கு வந்து இருக்க… சொல்ல வேண்டிய தானே.!! நாமே மீட் பண்ணி இருக்கலாம்…”

போன ஒரு முறை அவன் சொன்ன அதே மொக்கை பதிலை, நான் இம்முறை அவனுக்கு சொல்லி விட்டேன்… 
“நான் வீட்டுக்கு வந்து 1 மணி நேரம் ஆச்சு!”

“ஹேய் நீ தான் ஹாஸ்டலில் இருக்கியே!!” என்னமோ ஜப்பானிய சையென்டிஸ்ட் கண்டு பிடிப்பு போல் சொல்லி பல்லை காட்டினான்..

“சரி ஹாஸ்டல்… எனக்கு தூக்கம் வருது பாய்!!” என்று கட் செய்து விட்டு, அங்கும் இங்கும் நடந்தேன், நிஜத்தில் வந்த தூக்கமும் போய் விட்டது!! அவன் கல்லூரிக்குள் தான் இன்னும் உட்கார்ந்து இருந்தேன்… வெளியேறும் போது அவன் பார்த்து விட்டால்?

என்ன ஆனால் என்ன? என்று நான் பேசுபவரின் உரையில் கவனம் பதித்து, இவனை மறந்தேன்.. அப்போது தான் என் இரு தோழர்களும், “யார் அவன்? இவ்வளோ காட்டமாக பேசுற… எதாச்சும் யாராச்சும் தொல்லை பண்றாங்களா? பயப்படாம சொல்லு… நாங்க என்னன்னு பேசுறோம்!!” என்றனர்…
 

“ஹான்… அதெல்லாம் ஒண்ணு இல்ல பா,” என்று துவங்கி மொத்த கதையையும் சொல்லி முடித்து, அவர்கள் கேட்டது போல் போட்டோவையும் காண்பித்தேன்…. இருவரும் ஒன்று பார்த்தார் போல் ஒரே பதிலை தான் தனி தனியாக சொன்னார்கள்..!!
 

“இவன் லாம் உனக்கு செட் ஆக மாட்டான்..”
 

எனக்கு ஏதோ போல் ஆனது, பின்ன கிட்ட தட்ட இவனை தானே நான் அத்தனை ஆண்டுகளாக காதில்து வந்து இருக்கிறேன்!!! 
 

அவ்வாறு இருக்கையில், “இருவரும் ஒரு வார்த்தையில் அதை ஒன்றும் இல்லாத ஒரு உப்பு பெறாத விஷயம் போல் சொல்லி விட்டார்களே!!” என செய்வது அறியாமல், அங்கு அதற்கு மேல் இருக்கவும் பிடிக்காமல், மனதில்  மருகி கொண்டு அமர்ந்து இருந்தேன்!
 

ஒரு வழியாக விழா முடிந்தது, வெளியேறும் போது வெற்று சான்றிதழும் ஒரு இனிப்பும் கையில் கொடுக்க, வேப்பங்காயை போல் கசந்த மனதுடன் அதை வாங்கி கொண்டு, ஒரு பயத்துடனே வெளியே வந்தேன்!!
 

இம்முறை வழி தெரியாமல் சுற்றி சுற்றி எல்லாம் ஒரே இடத்திற்கு வரவில்லை… அவர்கள் இருவருமே என்னை, பார்க்கிங் வந்து அழைத்து சென்று விட்டனர்..!! அம்ஜத் இன்னொரு மாணவனோடு வீடு சென்று சேர்ந்தான். நான் குமாரோடு அவன் புது பைக்கில் ஏறிக் கொள்ள, அவன் வீடு போகும் வழியில், என்னை இறக்கி விட்டு போனான்… 
 

அம்ஜத், குமார் ஆகிய இருவருமே என்னை கான்பரன்ஸ் கால் போட்டு அன்று மாலை பேசினார்கள்… “இதற்காக எல்லாம் வருத்த பட வேண்டாம் ஷ்ரேயா! காதலித்தது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை… இது நிரந்தரம் இல்லை..!! அதனால் இப்போது அவனை நினைத்து கவலை கொண்டு, உன் சந்தோஷத்தை நீ இழந்து விடாதே!!” என சொல்லி அழைப்பை துண்டித்தனர்…
 

தோசை வழக்கம் போல்… போய் எடுத்து கொண்டு வருகையில், மீண்டும் எனக்கு ஜெஷ்வந்த் அழைத்து இருந்தான்… நான் பாட்டிற்கு பாக்கெட் FM போட்டு கதை கேட்டு கொண்டே, நைட்டு உறங்க தயார் ஆனேன்!
 

அக்டோபர் மாதமும் வந்து விட்டது, கிட்ட தட்ட ஜூலை மாதத்தில் இருந்து அவன் இடம் நான் சரியாக பேசா விடினும் அவன் தொடர்ந்து பேசுவது எனக்கு ஏதோ போல் ஆனது… முதல் முறையாக, நான் ஹாஸ்டலில் அம்மா அப்பா ஓடு வீட்டில் இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடுகிறேன்….
 

ஆகையால் எனக்கு சொல்லாமல், சர்ப்ரைஸ் ஆக கேக் ஆர்டர் போட்டு விட்டு இருந்தார்கள் என் கல்லூரிக்கே… HOD மேடம் கூட பெர்மிஷன் கொடுக்க, வகுப்பில் 40 பேரோடு வெட்டி கொண்டாடினேன்!! அப்போது மட்டும், இயல்பாக வந்து ஒரு வாய் வாங்கி கொண்டு “ஹாப்பி பர்த்டே!!” என்று ஒட்ட வைத்த புன்னகையோடு சொல்லி சென்றனர்…
 

அதை குமார் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பகிர, நானும் பதிலுக்கு பகிர்ந்தேன்!! அதை பார்த்து விட்டு இருந்த ஜெஷ்வந்த், “உனக்கு எப்போ நாளைக்கா பர்த்டே!!?” என்று கேட்டான்…
 

உலகில் யாரேனும் இது போல் கேட்டு பார்த்து உள்ளீர்களா…. எனக்கு வந்த கடுப்பில், வண்டை வண்டையாக பேசி விட போகிறேன்! என்ற எரிச்சலோடு மொபைலை ஏரோப்ளேன் மோட் ON செய்து போட்டு, இரவு உறங்கி போனேன்!
 

அடுத்த நாள் காலை எழுந்ததும் தான், அவனுக்கு “இல்ல நேத்து!” என பதில் அளித்தேன்… அவனும் கொஞ்சமும் ஒரு மன சுருக்கம் இல்லாமல், “ஹாப்பி பர்த்ட🎈” என்று மட்டும் அனுப்பி விட்டு இருந்தான்…
 

குளித்து விட்டு வந்து பார்த்த என் வாய், “வெக்கம் கெட்டவன்…” என்று தான் திட்டியது!! “இவனுக்கா போயும் போயும் 12 மணி வர முழிச்சு இருந்து விஷ் பண்ணோம்?!!!!” என்று எனக்கே என் மீது வெறுப்பாக இருந்தது…
 

அக்டோபர் மாதம் இறுதியில் நான் தீபாவளி லீவுக்காக, ஊருக்கு செல்ல கிளம்பினேன்… இரவு உணவு உண்டு, தட்டை கழுவி போட்டு, உடை மாற்றி, வேக வேகமாக இறங்கி வெளியேறி… 
 

அந்த முச்சந்தியில் நடக்க துவங்கினேன், காதி கிராஃப்ட் கதை தாண்டி பெரியார் வந்து, கிராஸ் செய்து இன்னும் நடந்து போய், மதுரை ஜங்ஷன் வந்து சேர்ந்தேன்!

முதல் பிளாட்பார்மில் ட்ரெயின் கண் எதிரில் இருந்தாலும், எனக்கு தேர்ட் AC கோச் என்பதால், B வரிசை பெட்டியை நோக்கி நடந்தேன்!!
 

உள்ளே ஏறி அமர்ந்ததும் தான் எனக்கு மூச்சே வந்தது, முதுகில் ஒரே ஒரு பாக் பேக் மட்டும் தான் என்பதால் ஒன்றும் பெரிதாய் எந்த பாரமும் இல்லை… ஆனால், இரவு 10 மணிக்கு தனியாக அது போல் ஒரு இருண்ட இடம் தாண்டி வந்து ட்ரெயின் ஏறி அடுத்து ஒரு 8 மணி நேரம் ஏறியது போல் ஊரில் இறங்க வேண்டுமே!!
 

சைட் லோயர் பெர்த், நன்றாக வெள்ளை போர்வையை எடுத்து கட்டி கொண்டு குளிருக்கு இதமாக அமர்ந்து தூக்கம் களைந்து போனதால், மொபைலில் கேம் விளையாடி கொண்டு இருந்தேன்!!

அப்போது தான், ஜெஷ்வந்த் உடைய தோழன் ஒருவன், அவனுக்கு வாழ்த்துக்கள் மச்சா என்று ஸ்டோரி பகிர்ந்து இருப்பதை, அவன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக மறு முறை ரீ ஷேர் செய்து இருந்தான்!!

(அவன் ஜெஷ்வந்த் உடைய உயிர் தோழன் என்பது, என்னை பிளாக் செய்து இருக்கும் போது அவன் கணக்கை வேவு பார்த்து ஜெஷ்வந்த் பற்றி தெரிந்து கொண்ட எனக்கு தெரியும்!! 🤷🙃)
 

ஒரு வழியாக பைக் வாங்கி விட்டான்… அவன் கேட்டது போல் அதே MT யமஹா பைக்!! எனக்கே என் கண்களை நம்ப முடியவில்லை… ஆச்சரியம் கொண்டு அந்த 12 செகண்ட் வீடியோவை பல முறை மீண்டும் மீண்டும் பார்த்தேன்!!
 

அவன் கனவு நனவாகி விட்டது, என்னமோ என் கனவு நிறைவேறி விட்டது போல் அவ்வளவு எல்லையற்ற மகிழ்ச்சி கொண்டேன்!!! இப்போதும் அதே அளவு வெறுப்பு கொண்டு இருந்தாலும், வழக்கம் போல் என் விரல்கள் ஒன்று கூடி ஸ்கிரீன் ஷாட் எடுக்க தவறவில்லை…

ஒரு வழியாக தாம்பரம் வரவும் இறங்கி, 5:30 மணி முதல் 6:30 மணி வரை மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரிக்கு எதிர் பக்க சாலையில் காத்து நின்றேன் எனக்கு தெரிந்த ஒரே வீட்டுக்கு செல்லும் பேருந்து V51 வருவதற்காக..!!

விடிந்தும் விடியாத இருட்டிய வானம், போக வர “ஆட்டோ மா ஆட்டோ வேணுமா…?” கொசு கடி, எனக்கே தெரியாமல் நின்று கொண்டு இருக்கும் சமயம் என்னிடம் பலரும் வந்து “இந்த பஸ் இந்த பக்கம் வருமா?” என்று கேட்பவர்கள் இடம், “எனக்கே என் பேருந்து எண்ணை விட்டால் வீட்டிற்கு போக தெரியாது!” என்று உண்மையை சொல்ல முடியாது, மண்டை அசைத்து விட்டு மொபைலை நோண்டி தவிர்ப்பேன்…

Thanks for reading மக்களே 🩷

 

❤️ Loading reactions...
7 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page