திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -19
Hiiii வாசகர்களே ✨
“ஹாப்பி தீபாவளி 🎇”
என்ற குறுஞ் செய்தியை நான் எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு வந்து, தலை துவட்டி துண்டை தோளில் போட்டு பின் பார்த்தேன்… “ஜெஷ்வந்த் இது போல் செய்பவனே இல்லையே!! என்ன எலி ஸ்வெட்டர் போட்டு ஓடுது?!!” என்று மனம் குழம்பியது…
மதியம் போல் “வீட்டுல என்ன ஸ்பெஷல் இன்னிக்கு?” என்று அவன் இரண்டு மணிக்கு கேட்க, நான் எல்லாம் தீபாவளி ஸ்வீட்ஸ் உண்ட மயக்கத்தில் உறங்கி கொண்டு இருந்தேன், வெடி வெடித்து தள்ளிய களைப்பில்!! 😴 💤
மாலை தான் உறங்கி எழுந்து மொபைல் எடுத்து இதை கண்டேன்… பதில் சொல்லாமல் விட்டு இருக்கவும், இப்போது நானும் “ஹாப்பி தீபாவளி” என்று வாழ்த்து சொல்லி விட்டு வெளியில் படம் பார்க்க கிளம்பி விட்டோம் குடும்பமாக…
பாதி படம் ஓடும் நிலையில் எனக்கு அவன் அழைத்து கொண்டே இருந்தான்… 7 மணி என நேரம் பார்த்தேன், பிறகு ஹோட்டல் சென்று சாப்பிட்டு வந்தோம்! அப்போது மீண்டும் அழைக்க, நான் ஏற்று பேசினேன்..
“அக்காவுக்கு மாப்பிள்ளை செட் ஆகி இருக்கு… டிசம்பர் மாசம் நிச்சய தாரத்தம் பண்ண போறோம்!! நான் பைக் வாங்கி இருக்கேன்… நேத்து ஸ்டோரி பார்த்து இருப்ப தானே! எதுவுமே சொல்லலையே…”
“ஹான் பாத்தேன்… Have a safe ride always!”
“இன்னிக்கு எங்க வீட்டுல மட்டன்!! அங்க என்ன??”
“ஹான் சாம்பார்…”
“ஓ ஓகே…. நான் பிளாக் கலர் பைக் தான் கேட்டு இருந்தேன்! அம்மா சேவ் பண்ண காசு அக்கா கல்யாணத்துக்கு அதிகமாவே இருந்துச்சு..!! அதுனால தான் பைக் வாங்கி கொடுத்தாங்க… ஒயிட் கலர் வாங்குனா வாங்கு, இல்ல ஒன்னும் கிடையாதுன்னு சொல்லிட்டாங்க..!!”
“ஓ!! ஆனா இதுவும் நல்லா தான் இருக்கு..”
“ஆமா… அம்மா அக்கா எல்லாரையும் ஒரு ரவுண்டு கூட்டிட்டு போனேன்!! நீ மதுரைக்கு வா, உன்னையும் நா கூட்டிட்டு போறேன்…”
“ம்ம்..” என்று சொல்லிய என் மனமோ, இவனுக்கு எப்படி நான் எப்போ சென்னை வந்து போறேன்னு எல்லா விவரமும் தெரிஞ்சு இருக்கு? என்று யோசனையில் ஆழ்ந்தது…
“எப்போ வருவ?”
“ஹான்!!! 25”
“ஆமா உனக்கு ஹாஸ்டல் வேற எடத்துல கிடைக்கலையா?? போயும் போயும் அந்த ஏரியா ஏன் போய் இருக்க!!?”
இந்த கேள்வியை என்னிடம் கேட்கும் 100 நபர் இவனாக தான் இருக்கும்… ஹாஸ்டலில் இருக்கேன் என்று தெரிந்து கொண்ட அனைவரும் கேட்கும் அடுத்த கேள்வி, எங்க?… அதை நான் சொல்லியதும், இவனை போலவே தான் அதே கேள்வியை கேட்பார்கள்..!!
நான் என்ன அந்த தெருவிலையா தங்கி இருக்கேன்!!? அங்கு ஒரு கட்டிடத்திற்குள் தானே தங்கியிருக்கேன்!! ஏன் இத்தனை இழிவான பார்வை அந்த ஏரியா மீது என்பது கடவுளுக்கே வெளிச்சம்… நான் உள்ளூர் ஆள் இல்லை, உள்ளூரில் இருக்கும் நபர்கள் முகம் செய்கிறார்களே தவிற காரணம் கூற மறுக்கிறார்கள்!!
ஆனால் என் ஹாஸ்டலில் இருந்து பார்க்கும் போது, ரயில்வே ட்ராக் தெரியும்… என் காது படவே “இன்னிக்கு ஒரு டெட் பாடி கெடச்சிதாம்…” என்று மாலை தேநீர் அருந்திய படி பெண்கள் குழுமி அமர்ந்து பேசுவதையும் நான் கேட்டு இருக்கேன்! அன்று அதே காலையில் அதை கடந்து தான், கல்லூரிக்கு சென்று வந்து இருந்த போதிலும்…
என்ன செய்வது?
சில நாட்கள் தானே!!
ஐந்து மாதம் கடந்து ஆயிற்று… இன்னும் ஐந்து மாதம் தானே, இருக்கும் இடம் தெரியாமல் இருந்து விட்டு கிளம்பி விடுவோம் என்று நான் எண்ணி இருக்க, விதியோ என்னை பார்த்து, வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தது!! 🤣🤣
ஜெஷ்வந்த் அப்படியே அவன் அக்காவை முன்னால் பார்த்து சென்ற மாப்பிள்ளை பற்றி, அவர்கள் கொடுத்த பரிசு பற்றி, அது இறுதியில் நின்ற பிறகு, இப்போது உள்ள சம்மந்தம் வந்து தேதி முடிவாகி இருப்பதையும்… அவன் அம்மா நேற்று சென்று வாங்கி சேர்த்த திருமண நகை பற்றி, அவன் அக்கா விடாமல் பார்த்து இருக்கும் மாப்பிள்ளையோடு பேசுவதை பற்றியும் கதை கதையாக சொல்லி தீர்த்தான்…
இப்போது நாங்கள் இருவருமே கிட்ட தட்ட ஒரே நிலையில் தான் இருந்தோம்..!! முதல் பிறந்த குழந்தையோடு எங்கள் பெற்றவர்கள் ஏதோ பேசி பிசியாக இருந்து, எங்களை தனித்து விட்டு இருந்த நிலையில் தங்கு தடை இன்றி இவன் சொல்வதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்தேன்!!
அவனுக்கும் அதே நிலை கல்லூரியிலும், ஒரு உண்மையான நட்பு கூட இல்லை என்பதை பற்றியும் சொல்லி கொண்டு இருந்தான்… மேலும் அவன் அம்மா, கல்லூரிக்கு காலேஜ் பஸ் பீஸ் முழு ஆண்டுக்கு கட்டிய பின் தான் இவனுக்கு பைக் வாங்கி கொடுத்து இருப்பாத, அவன் சொல்வதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்து விட்டது!!
“ஏன் அப்படி?”
“ஹான்!! ஆக்சிடென்ட் ஆகிருமாம்….”
“ஓகே ஓகே”
“ஆனா நான் பைக் கேட்டதே காலேஜ் போறதுக்கு தான்!!!” என்று சிணுங்கிய படி குழந்தை போல் குழைந்த குரலில் பேசினான்… அவன் இப்போது, பெரிய தனியார் கல்லூரியில் MBA முதுகலை பட்ட படிப்பிற்கு சேர்ந்து முதல் ஆண்டில் இருந்தான்…
“ஆமா என் அக்கா எங்கேஜ்மண்ட் இன்வைட் பண்றேன் வந்துரு….” என்றான் இயல்பாக..
“சரி ட்ரை பண்றேன்!”
“ஜோயாலுக்காஸ் நகை கடை பக்கத்தில் இருக்க ஒரு ஹோட்டல் தான் புக் பண்ண போறோம்… நானே கூட வந்து உன்னய கூட்டிட்டு போறேன்!! ஓகே…”
“ம்ம்” என்று சொல்லிய எனக்கு, தேதியே சொல்லாம இவன் என்ன ஊர் கதை உலக கதைலாம் சொல்லிட்டு இருக்கான்…? என்று வியப்பாக இருந்தது… நம்மள வெச்சு காமெடி பண்றானோ? என்றும் ஒரு பக்கம் சந்தேகமாக இருந்தது!!
“ஓகே அதை அப்போ பார்ப்போம்! பாய்…” என நானே அழைப்பை துண்டித்து விட்டேன்..
நவம்பர் மாதம் வந்தாயிற்று… ஐந்தாம் தேதி, “இன்னிக்கு நீ ஃப்ரீயா?” என்று மதியம் பன்னிரண்டு மணிக்கு எனக்கு லஞ்ச் பிரேக் அப்போது மெசேஜ் அனுப்பி இருந்தான்… “இல்ல, ஏன் கேக்கறீங்க?”
“சும்மா தான்… சரி 7th நைட்டு ரெடியா இரு உன்னய நான் ட்ரீட் கொடுக்க கூட்டிட்டு போறேன்!” என்று மெசேஜ் அனுப்பி விட்டு அவன் ஆஃப் லைன் போய் விட்டான்… அதை மறு முனை திரையில் கண்ட எனக்கு தான் நிலை கொள்ளவில்லை..!!
ஆம்! கண் இமைக்கும் நொடியில் ஏழாம் தேதி வந்தது… வைஷூ பிறந்த நாள் என்பதால், அவளோடு மாலை கால் பேசி வாழ்த்து சொல்லி வைத்ததும், ஜெஷ்வந்த் அழைத்தான்… “உனக்கு ஞாபகம் இருக்கு லே? 7 மணிக்கு வரேன்… ரெடியா இரு!!” என்று சொல்லி விட்டு, அழைப்பை துண்டித்தான்…
அவன் இப்போது தான் கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறான் போலும், ஒரே இரைச்சல் சத்தம்… பாதி பாதி தான் கேட்டது!! ஆனால், அந்த புதிர் எல்லாம் என் மூளை சேர்த்து பார்த்ததும், அதிர்ந்து போனது!! “அப்போ இவன் விளையாட்டுக்கு சொல்லலையா??!!!”
அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தேன், படுத்து கொண்டே போன் பேசிய பொழுதைக் கழித்த நான்… என் ஹாஸ்டலில் வெளியே போவதற்கு எல்லாம் பெர்மிஷன் கேட்க தேவை இல்லை, எப்போது வேண்டும் ஆனாலும் போய் எப்போது வேண்டும் ஆனாலும் வரலாம்…
என்ன ஒன்று? எந்த ஆணும் ஹாஸ்டல் குள்ளே அனுமதி இல்லை! அது மட்டும் இல்லை!! ஹாஸ்டல் இருக்கும் தெரு குள்ளேயே அனுமதி இல்லை!! அப்பா அண்ணன் வந்தால் மட்டும், வாசலில் வைத்து பேசிக் கொள்ளலாம்…
இந்த எருமையோ சரியாக ஹாஸ்டல் கேட் முன்பாக வந்து நின்று, பே என இரண்டாம் மாடியை வெறித்து பார்த்து கொண்டு நின்று இருந்தது… படி இறங்கி கீழே அவன் பின்னால் வந்த நான், இதை கண்டு அதிர்ந்து போய் பயந்து விட்டேன், ஆன்டி பார்த்து விடுவார்களோ? என்று…
பட்டென முதுகில் அடித்து, “வண்டியை எடு!!!!” என காட்டமாக சொல்லி கொண்டே, டக்கென ஏறி அமர்ந்து கொண்டேன்… இதயம் பட படவென துடித்தது!! அவன் தெருவை தாண்டும் வரை எனக்கு பதிப்பு சமன் நிலை அடைந்த பாடு இல்லை…
அப்போது தான் நான் எனக்கும் அவனுக்கும் 1 சென்டி மீட்டர் இடைவெளி மட்டுமே இருப்பதை உணர்ந்தேன்!! பின்னால் தள்ளி அமர போக, என் உயிர் போய் இருக்கும்… அங்கு இடமே இல்லை!!!
R15 பைக்கில் ஆவது ஆங்கில் மாறுவதால், சற்று இடை வெளி இருந்தது… MT 15 பைக்கில் ஒரு சிறிய ஹேண்ட் பாக் கூட நடுவில் வைக்க முடியாமல், கிட்ட தட்ட ஓட்டுநர் ஓடு ஒட்டி உட்கார வேண்டிய நிலை.!!! ஆனால், ஒன்று கை பிடி இருந்தது…
நான் இப்படி நெளிவதை உணர்ந்தானோ என்னமோ ஜெஷ்வந்த், “உனக்கு உட்கார இடம் பத்துதா??” என்று கேட்டான்… எனக்கு கோபம் வந்து கூடி போக, காட்டமாக “விழுந்து ஒண்ணு செத்துற மாட்டேன்… ரோட்டை பார்த்து வண்டி ஓட்டுங்க!!” என்றேன்… 😠
கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருந்தால் என்னை எங்கு அமரவும் இடம் பற்றாது என நினைத்து விட்டானா..?
“காட்டு மாடு!! 🦬” என்று கழுவி ஊற்றினேன், மனம் கொண்ட ஆற்றாமையில்..!!
மோட்டோ ஸ்பேஸ் ரெஸ்டாரன்ட் வந்து வண்டியை நிறுத்தினான்… நிறுத்தும் போது கல் மீது சக்கரம் ஏறி சறுக்க, அவனை விட துரிதமாக செயல் பட்டு, நான் ஒரு கால் ஊன்றி இருவரும் வண்டியோடு குடை சாயாமல் தடுத்து விட்டேன்!!
என்னை அழைத்து வந்து, என்னையே விட்டு விட்டு தனியாக அவன் மட்டும் முதல் ஆளாக உள்ளே சென்று ஒரு மேஜை பார்த்து “இது ஓகே வா?” என்று கேட்டான்.. கொஞ்சம் விரைவாக வந்ததால், அவ்வளவாக கூட்டம் இல்லாமல் பெரும்பாலும் காலி ஆகவே இருந்தது!!
வெளியில் ஃபவுண்டைன் ஓரம் இருந்த, உட்புற இருக்கை ஒன்றை இழுத்து போட்டான் ஜெஷ்வந்த் என்னை அமர சொல்லி செய்கை காட்டி!! அது ஃபேமிலி டேபிள், ஆகையால் பெரிதாய் இருப்பதில் அவன் எனக்குநெதிரில் சென்று அமரவும் எனக்கு ஏதோ போல் ஆனது!!
ஆகவே இருவருமே ஒரே நேரத்தில் எழுந்து வந்து ஒரு இருக்கை மாற்றி அமர, அந்த வட்ட மேஜையில் நடுவில் ஒரு இருக்கை மட்டும் காலி விட்டு இருவரும் அமர்ந்து ஒரு மெனு கார்டு வைத்து அதை பார்த்து கொண்டு இருந்தோம்!!
“ஷ்ரேயா நூடுல்ஸ் ஓகே வா உனக்கு?!!”
“ம்ம்” என்றேன் நான் என் கண்களை மற்ற மெனு மீது ஓட விட்டு, எனக்கும் அதை தவிர வேறு எதுவும் அவ்வளவாக நன்றாக இருப்பது போல் தோன்றவில்லை.. ஒருவர் வந்து ஆர்டர் எடுத்து கொண்டு செல்லவும், அவன் அமர்ந்து கதை பேச ஆரம்பித்ததான்…
பேசி கொண்டே இருந்தவன், “ஒரு நிமிஷம்” என்று சொல்லி சென்று கிட்ட தட்ட 10 நிமிடம் ஆகியும் வரவே இல்லை!! சுற்றிலும் பார்க்க, ஆளையும் காணவில்லை!!
ஜெஷ்வந்த் எங்கே சென்றான்?
இப்போது எந்த இடம் அது என்று கூட தெரியாமல், அந்த ராத்திரி நேரத்தில் தனியாக எவ்வாறு மீண்டும் ஹாஸ்டல் செல்வாள்?
என்ன நடக்க போகிறது?
என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨
Thanks for reading மக்களே 🩷
