திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -20
Hiiii வாசகர்களே ✨
இருவருக்கும் ஆர்டர் செய்த நூடுல்ஸ் கூட வந்து விட்டது! எனக்கு அதை சாப்பிடவும் பிடிக்கவில்லை, இப்போதைக்கு அவனையே தான் பதற்றமாக தேடி கொண்டே இருந்தது என் கண்கள்… டொமாடோ சாஸ் பாட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு போனான் ஒரு சிறுவன், அவன் பார்க்கும் பார்வையே சரி இல்லை!
தவிர இப்போது கூட்டம் வர ஆரம்பித்து விட்டது, 8 மணியை நெருங்குவதால்… மணி 8 தொட்டு விட்டதால், நான் ஹாஸ்டல் சாப்பாடு எடுக்க வைத்து இருந்த அலாரம் சத்தமாக ஒலித்தது!! அப்போது அதை எடுத்து அமர்த்தி விட்டு, மொபைலை உள்ளே வைக்கும் போது தான் நான் காசே எடுத்து கொண்டு வரவில்லை என்பதை கவனித்தேன்!!
என் கல்லூரி பையில் தான் என் money purse 👛 இருந்தது!! கிளம்பும் அவசரத்தில் அதை மறந்து விட்டு வந்து விட்டேன், என்னிடம் GPay கூட இல்லை… ஒரு கட்டத்தில் எனக்கு கண் எல்லாம் கலங்கி விட்டது… அப்போது என் பக்கம் இருந்து திடீரென ஒரு குரல் கேட்டது!!
“என்ன சூடு அள்ளி வாயில வெச்சுட்டியா?”
திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன், ஜெஷ்வந்த் தான் அவன் மொபைலை பாக்கெட்டில் வைத்த படி பேசி கொண்டே வந்து என் பக்கம் இருந்த ஒரு சேர் இழுத்து போட்டு அமர்ந்தான்… நான் எதுவுமே பதில் பேசாமல், அவனை அனல் காக்கும் விழிகளோடு முறைப்பதை கண்டவன்…
“அம்மா கால் பண்ணி இருந்தாங்க!! அதான்….” என்றான் சற்று தாழ்ந்த குரலில்..
நான் பன்னீர் நூடுல்ஸ் வாங்கி இருந்தேன்!
அவன் சிக்கன் நூடுல்ஸ்… அதன் பிறகு நான் அவன் பக்கமே திரும்பவில்லை, கொலை காண்டில் இருந்தேன்!! போர்க் பயன் படுத்தி பொறுமையாக சாப்பிட்டு கொண்டு இருக்கையில், அவன் கையால் எடுத்து உண்டு முடித்தும் விட்டு “என்ன அப்படியே வெச்சு கிட்டு இருக்க?? என்னாச்சு பிடிக்கலையா?!!” என்றான்..
அப்போது தான் நான் நிமிர்ந்து அவன் தட்டை பார்த்தேன், காலியாக இருந்தது! என் தட்டிலோ பாதிக்கு மேல் அப்படியே இருக்க, அவன் சற்று பொறுமை இழந்து காண பட்டான்… அதற்காக நான் கடோத்கஜன் போல், வாயை திறந்து அனைத்தையும் உள் இழுத்து கொள்ள முடியாதே, அவன் அவசரத்திற்கு!!

பொறுமையாக தான் உண்டேன், அவன் கை கழுவி விட்டு பில் வர கவுண்டர் சென்று பணமும் செலுத்தி விட்டு வந்தான்… 250 ரூபாய் ஆகி இருந்தது, ஆனால் அவன் என் கண்ணில் காட்டாமல் எடுத்து சென்று விட்டான்..!!
ஒரு வழியாக நானும் உண்டு முடிக்க, என் அப்பா அண்ணன் போல் அவனும் “இங்கேயே இரு… நான் பைக் எடுத்துட்டு வரேன்!” என்று சொல்லி சென்றான்…
அங்கு ஒரு 5 நிமிடம் நிற்க, சரலை கல் தடுக்கி சறுக்கியதோ இல்லையோ அவன் வந்து சேர்ந்தான், நான் செல்ஃபி எடுத்து கொண்டு நிற்கும் போது!!
வரும் போது எல்லாம் உயிர் பயத்தில், கை பிடியை விடாமல் இறுக பற்றி கொண்டு இருந்த நான், இப்போது பழகி விட்டேன்… போகும் வழியில் சரவணா ஸ்டோர்ஸ் வரவும் நான் ஸ்நாப் சாட் செயலியில் வீடியோ எடுத்து கொண்டு இருக்கும் போது தான், அவன் வாய் திறந்தான்…
அதில் அவன் பேசிய அனைத்துமே ரெகார்ட் ஆகி விட்டது, “இன்னுமா என்னைய லவ் பண்ற?!!!” என்று வியப்பாக ஒரு கேள்வியோடு தான் பேச்சை ஆரம்பித்தான்… “ம்ம்?” என்று நான் புரியாமல் கேள்வி கேட்க, அவனுக்கு அது நான் ஆமாம் என்று சொல்லியது போல் தோன்றியது போலும், பலத்த காற்று வீசி கொண்டு இருக்க அந்த சத்தத்தில்…
“என்னைய… வந்து…. நான்!!! அது… எனக்கு ஆல்ரெடி பிரேக் அப் ஆகி இருக்கு தெரியும் லே உனக்கு!!?”
“ஹ்ம்ம்” இதற்கு மேல் கதை கேட்பது போல் ம்ம் ம்ம் என சொல்லி தப்பிக்க முடியாது என்று புரிந்து போகவே, நான் நெஞ்சுக்கு நேராக ஹேன்ட் பேக் பிடித்து கொண்டு சற்று அவன் தோள் பக்கமாக முன் சாய்ந்து அவன் பேசுவதை உன்னிப்பாக கவனித்தேன்!! ஹெல்மெட் தாண்டி அவன் பேசுவது, என்னமோ கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் தான் கேட்டது…
“என்னைய ஏன் இத்தனை வருஷமா இவ்வளோ லவ் பண்ற??? நான் எல்லாம் அதுக்கு ஒர்த் ஏ இல்ல!! தெரியுமா..”
“நான் இது வரைக்கும் உங்க கிட்ட ப்ரொபோஸ் பண்ணலயே… அதனால நான் லவ் பண்றதுக்கு, உங்க பெர்மிஷன் தேவை இல்ல எனக்கு!!”
அவன் வாய் அடைத்து போய் விட்டான், சடக்கென யாரோ குறுக்க வந்து சாலையை கடக்க மூன்று நான்கு பைக், ஒரு கார் அனைத்தும் சட்டன் பிரேக் அடித்து நின்றோம்!! அதில் நான் ஒரு கன நேரம், அவன் மீது இடித்து விட்டு வந்து அமர்ந்தேன்!
ஒரு ரவுண்டு போகலாம் என சுற்றியவன், அவன் காலேஜ் போகும் பாதை காட்டி விட்டு மீண்டும் ஒட்டி வந்து என் ஹாஸ்டிலிலேயே இறக்கி விட்டான்… இம்முறை நான் ஹாஸ்டல் பற்றி சொல்லியதும், இரண்டு பில்டிங் தாண்டி போய் நிறுத்த சரியாக ஆன்டி சமைத்து முடித்து விட்டு வெளியே வந்தவர் எங்கள் இருவரையும் பார்த்து விட்டார்..!!
ஆனால் யார் என்று எல்லாம் கேட்டு கொள்ளவில்லை, அவர் பாட்டுக்கு சென்று விட, அவன் விடாமல் பேசி கோடானு இருக்க… ஆன்டி போய் அந்த அக்காவை அழைத்து வந்து விட்டார்!! “ஐயோ மாட்டுனேன்!!” என நான் பயந்து போய் இருக்க, ஜெஷ்வந்த் அசால்டாக நிலைமையை சமாளித்தான்…
“நான் ரிலேடிவ் பையன்… இவளுக்கு அண்ணன் முறை தான் வேணும்!! ஒரு வேலையா ஊருக்கு வந்தேன், அதான் இவளை பார்த்து வெளிய சாப்பிட வெச்சு கூட்டிட்டு வந்தேன்!” என வாய்க்கு வந்ததை அடித்து விட்டான்..
“இந்த நேரத்துல இங்க நிக்க வேணாம்!” என்று மட்டும் அந்த அக்கா சொல்லி விட்டு, அதற்கு மேல் ஒன்றும் அவனிடம் கேட்காமல் சென்று விட்டார்… அது வரை பைக்கில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தவன், அக்கா இடம் பதில் பேச இறங்கி நின்று கொண்டான்…
அவர்கள் போனதும், என்னிடம் திரும்பி மீண்டும் பேச்சை தொடர்ந்தான்… “என்னை ஏன் இவ்வளோ லவ் பண்ற..? என்னால உன்னய இவ்வளோ எல்லாம் லவ் பண்ண முடியாது!! ஏன் புரிஞ்சிக்காம அடம் பிடிக்கிற??” என மீண்டும் அதே தான் கேட்டான்…
நான் பதிலே பேசாமல் தலை கவிழ்ந்து நின்று இருந்தேன், என் குட்டி ஹேன்ட் பேக்கை திறந்து திறந்து மூடி விளையாடிய படி!! அழுகை முட்டி கொண்டு வந்து, கண்ணீர் என் பார்வையை திரையிட்டது! ஆகவே தான் அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை, “எனக்காக தான் ஊரை விட்டு போகாம… இப்படி ஒரு ஹாஸ்டலில் வந்து தனியா இருந்து கஷ்ட படுரியா?”
“ம்ம்! பாய்…” என எனக்கு அழுகை பீறிட்டு வரவும், அவனிடம் இருந்து திரும்பி ஹாஸ்டல் நோக்கி நடக்க, என் மணி கட்டை பிடித்து வெடுக்கென என்னை திருப்பியவன், எதிர் பாரா விதமாக என்னை அனைத்து கொண்டான் தோளில் இரு கை இறுக கட்டி கொண்டு!!
எந்த அளவு என்றால்?
எனக்கு திகைப்பில் அதிர்ந்து மூச்சு வாங்க, அதை கூட சுவாசிக்க முடியாத அளவுக்கு…
என் 16 வருட வாழ்வில் முதல் முறையாக ஒரு ஆண் வாசம் அவன் ஸ்பரிசித்து அனைத்த அணைப்பில் உணர்ந்து, உறைந்து போய் நின்றேன்!!
நான் இந்த மூன்று வருட ஒரு தலை காதலில், அவனோடு திருமணம் செய்து இரு பிள்ளைகள் பெரும் அளவு பெரிய கனவு ஆசை எல்லாம் வளர்த்து வைத்து இருந்தேன்!! “கட்டுனா இவனை தான் கட்டுவேன்! இல்லை காலம் முழுக்க கன்னியாக கிடப்பேன்!!” என்று மெர்சல் பட வெற்றிமாறன் தளபதி போல் டயலாக் எல்லாம் பேசி தள்ளினேன்…
ஆனால் அவன் ஒரு அணைப்பு, ஒரு நொடியில் என்னை முழுதாய் வேரோடு சாய்த்து விட்டது!!
மேலும் இரு கையை இறக்கியவன், என் இடையை பிடித்து கொண்டு, வேறு பக்கம் இருந்த அவன் முகத்தை என் தோளில் பதித்து, கழுத்து வளைவில் முகம் புதைத்து ஆழ்ந்த சுவாசம் உள் இழுத்து கொண்டான்…
அவன் மீசை தாடி குறும் முடிகள் குத்திட, அப்படியே எனக்கு உடல் சிலிர்த்து, மயிர் கூச்சரிந்து குத்திட்டு எழுந்து நின்றது… இடையில் இருந்து ஒரு கையை கொண்டு ஒரு உலுக்கு உலுக்கி “சரி எனக்கும் கொஞ்சம் டைம் குடு!!” என்று சொல்லிட, பனி இன்றி இரவின் இருளில் உறைந்து நின்ற நான், எந்த எதிர் வினையும் இன்றி அப்படியே திரும்பி நடந்தேன்!!
இதை எல்லாம் நான் என் அறைக்கு வந்து, உடை மாற்றிய படியே யோசித்து கொண்டு, அவன் நினைவில் என்னை தொலைத்து அப்படியே அதில் மூழ்கி போனது என் இரவு!!
இதை எவ்வாறு ஏற்று கொள்வதே என்று எனக்கு தெரியவில்லை…
யார் இடம் சொல்லி, இது என்ன? என விளக்கம் கேட்டு தெரிந்து கொள்வேன்…
மொத்த இரு தளத்திலும், BSc படிக்கும் ஒரே இளம் பெண் நான் தான், பிறர் எல்லாம் வேளைக்கு செல்பவர்கள், PG TRB தேர்வுக்கு படிப்பவர்கள், இல்லையெனில் திருமணம் ஆகி டிவோர்சு ஆன தனித்து வாழும் பெண்கள்…
இந்நேரம் வேறு ஒருவன் இதே போல் கூட இல்லாமல், என் கையை தொட்டு இருந்தால் கூட எனக்கு சட்டு சட்டென வரும் கோபத்திற்கு அறைந்து இருப்பேன்!!
இவன் இறுக்கி அணைத்து, கழுத்தில் வாசம் பிடித்தும் எனக்கு கையை உயர்த்தி எந்த எதிர் வினை கூட ஆற்ற முடியாது போனது ஏன்??????
வைஷூ இடம் இதை எல்லாம் சொல்ல முடியாது, பிரகதி இடம் நான் மீண்டும் சண்டை வந்து பேசுவது இல்லை… அவள் ஆகாஷ் விடுத்து மணி என்பவனை காதலித்து, மீண்டும் ஒரு முறை எல்லாம் செய்து அவளையே அவனிடம் கொடுத்து விட்டு, அதன் பிறகு ஆகாஷ் திரும்பி வந்தான் என்று பாவம் பார்த்து மணிக்கு தெரியாமல் ஆகாஷ் ஓடு பேசி பழகி வந்து இருக்க, மணி என்னிடம் அழைத்து நியாயம் கேட்டு, அதை வைத்தே எங்கள் மூவருக்கும் பெரிய சண்டையாகி விட்டது!!
“அவன் எதற்கு என்னிடம் டைம் கேட்டான்?”
என்றும் எனக்கு மண்டை காய்ந்து போனது, அவன் போட்டு சென்ற புதிர்களில்…
டிசம்பர் மாதம் பல் இழித்து கொண்டு வந்து இறங்கி விட்டது..!!
அடுத்த சம்பவம் கொண்டு, என்னை வைத்து செய்து புயல் அடித்தார் போல் புரட்டி போட!!! 🙃🫠
Thanks for reading மக்களே 🩷
