திரையிட்டு விலகாதே!
அத்தியாயம் -21
Hiiii வாசகர்களே ✨
அக்டோபர் மாதம் தான் பேசும் போது, ஜெஷ்வந்த் என்னிடம் சம்மந்தமே இல்லாமல் “உன்னை நான் லியோ படத்திற்கு அழைத்து செல்கிறேன்!” என்று வாய் வார்த்தை கொடுத்தான்…
ரிலீஸ் அன்று காலை ஸ்டோரி பார்த்தால், குரங்கு போல் தவ்வு தவ்வு என்று பைக்கில் இருந்து தாவிய படி நண்பர்களோடு, 14 டிக்கெட், தளபதி போஸ்டர் முன்பாக நின்று செல்ஃபி எடுத்து போஸ்ட் செய்து இருந்தான்… அன்றே நான் குமாரு, அம்ஜத் udan நடந்து வீட்டுக்கு வரும் போது, “நானும் லியோ பார்க்க வேண்டும் என்று கேட்டேன்!”
அம்ஜத் அவ்வளவாக தியேட்டர் சென்று படம் பார்க்க விரும்ப மாட்டான்… குமார் அஜித் ஃபேன், ஆயினும் எனக்காக இருவரும், “அந்த வாரத்தில் ஞாயிற்று கிழமை போய் பார்ப்போம்!” என ஒப்புக் கொண்டனர்…
ஆனால், அன்றே மாலை குமார் அவன் பள்ளி தோழன் ஓடு படத்திற்கு போய் ஸ்டோரி போஸ்ட் செய்து விட்டான்.!! அம்ஜத் உடனடியாக பின் வாங்கி விட்டான், “ஐயோ அவன் வரலன்னா நானும் வரல!” என்று சொல்லி…
வந்து கூடிய கோபத்திற்கு, நானே படம் ரிலீஸ் ஆன இரண்டாம் நாள் என்பதால் கூட்டம் கம்மியாக டிக்கெட் புக் ஆகாமல் இருப்பதை பார்த்து விட்டு, அடுத்து நாளாக விடிந்த, வெள்ளி கிழமை முதல் ஷோ படத்திற்கு நடந்தே தனியாக சென்று விட்டேன்!!
காலேஜ் லீவ் போட்டு விட்டு, வேண்டும் என்றே தான் செய்தேன்… டிக்கெட் கவுண்டரில் இருக்கும் நபர், நான் தனியாக பெண்கள் வரிசையில் வந்து ஒரு டிக்கெட் வாங்கவும் அதிர்ந்து போய் என்னை நிமிர்ந்து பார்த்தார்!! பின்னால் நின்ற குடும்பத்தோடு வந்து இருந்த ஆண்களும் தான்!!
“SOLO MOVIE DATE 🍿” என அனைவரும் பார்க்கும் படி, கொட்டை எழுத்தில் நானும் இன்ஸ்டாகிராம் என் கணக்கில் ஒரு பதிவு செய்தேன்!!
இவர்களை விட்டால் எனக்கு படம் பார்க்க முடியாதா என்ன? ஒன்று வருகிறேன் என்று வாக்கு கொடுத்தால் காப்பாற்ற வேண்டும், இல்லையெனில் பொய் சொல்லி அப்போதைக்கு ஏமாற்றாமல் இருக்க வேண்டும்!! இரண்டும் செய்ததால், வந்த ஏமாற்றம் என்னை தனியாக செல்ல உந்தியது…
ஒன்றும் மோசமாக எல்லாம் நடக்க வில்லை, இது வரை அனைவரும் சொல்லி அவர்கள் சித்தரித்தது போல்.. பால்கனி டிக்கெட் 200 ரூபாய், முதன் முறையாக நானே எனக்காக செலவழித்த பெரிய தொகை… ஆம்! ஹாஸ்டல் உணவு எவ்வளவு மோசமாக இருந்தாலும், வெறும் வயிற்றோடு உறங்கி இருக்கிறேனே தவிர, ஒரு வேளை கூட வெளியில் காசு செலவழித்து வாங்கி சாப்பிட்டது இல்லை!!
அதை பார்த்து முதலில் பொங்கியது ஜெஷ்வந்த் தான்!!! “ஹேய் லூசா உனக்கு?!!! சினிமா தியேட்டர் கெல்லாம் ஒரு பொண்ணு தனியாவா போறது?”
அம்ஜத், குமாரும் கூட இதே தான் கேட்டார்கள்… அனைவரின் வாயையும், ஒரு வாக்கியம் சொல்லி தான் அடித்தேன்!
“எனக்கு படம் பார்க்கணும் நான் போனேன்!” மூன்று பேருக்கும் சுருக்கென்று முள் போல் தைத்தது போலும், அதற்கு மேல் பேசவில்லை… அன்று இரவு தான் நான் ட்ரெயின் ஏறி, தீபாவளி விடுமுறைக்கு பயணிக்கும் போது ஜெஷ்வந்த் பைக் வாங்கியதை கண்டு மகிழ்ந்தேன்!!
இப்போது அதே போல், நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தீபாவளி விடுமுறைக்காக ஊருக்கு சென்று விட்டு வந்தேன்!! கல்லூரியில் டூர் அழைத்து செல்ல பேச்சு எடுக்க ஆரம்பித்தனர்… வழக்கம் போல் என் வீட்டில் சிவப்பு கொடி தூக்கி விட்டனர், எந்த இடம் என்று கூட முடிவு ஆகும் முன்னரே!
இடம் தேதி அனைத்தும் முடிவாகியதும் தான் நான் HOD மேடம் இடம் வீட்டில் அனுமதிக்கவில்லை என்ற விஷயத்தையே சொன்னேன்..!! என்னமோ நான் விருப்ப படாதது போல், என்னை ஐந்து பேர் ஆசிரியர்கள் சுற்றி வளைத்து நின்று, கன்வின்ஸ் செய்து ஒப்பு கொள்ள வைக்க பார்த்தனர்..
பிறகு தான் உண்மையை உணர்ந்தனர், நான் தனியாக இருக்க எல்லாம் பிடிக்காமல் பொய் சொல்லி தப்ப முயலவில்லை! நிஜமாகவே வீட்டில் விடாமல் தான் வரவில்லை என்று பிடித்த பிடியில் நிற்பதை தெரிந்து கொண்டு அடுத்த நொடி, என் தாய்க்கு அழைப்பு விடுத்து பேசினார்..
“இது லைஃப் டைம் மெமொரி மேடம்… கிளாஸ் 41 பேரில் உங்க பொண்ணு மட்டும் தான் வரல..!!! அனுப்பி விடுங்க நாங்க பார்த்துக்கிறோம்…” என்று சொல்ல என் அப்பாவிடம் கேட்டு சொல்வதாக சொல்லி, அம்மா அழைப்பை துண்டித்து விட்டார்…
மாலை நேரமாக பார்த்து என் அம்மா மெசேஜ் அனப்பி விட்டார்… “3000 ரூபாய் எடுத்து உடனே கொண்டு போய் குடுத்துரு!” என்று… மனம் மாறுவதற்குள், நான் ஹாஸ்டல் செல்லும் வழியில் இருக்கும் ATM இல் இருந்து காசு எடுத்து கிட்னி சென்று விட்டேன்!! அடுத்த நாள் காலை பணம் கொடுக்கவும், என் பெயரை சேர்த்து கொண்டனர்…
தினம் அழைத்து இரவு உணவு உண்ணும் போது பேசுவான் ஜெஷ்வந்த், அவ்வளவு தான்!! மீண்டும் 29 ஆம் தேதி டிக்கெட் போட்டு இருந்ததால், நான் ஊருக்கு சென்றேன்… “ஏன் இந்த மாசம் ரெண்டாவது வாட்டி போற?!!” என்றான் அதை தெரிந்து கொண்ட ஜெஷ்வந்த்..
போன இடத்தில் தான் வீட்டில் மிக் ஜாங் புயலில் மாட்டி கொண்டேன்!! இருக்கும் ரிட்டர்ன் டிக்கெட்டும் கேன்சல் செய்து விட்டு, மொபைலுக்கு சார்ஜ் போட கூட கரெண்ட் இல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தோம் குடும்பமாக… கல்லூரிக்கு மூன்று நாள் லீவ் ஆகி விட்டது!!
ஒரு வழியாக மதுரைக்கு வந்து சேர்ந்தேன், இம்முறை ஜனவரி மாதம் வரும் பொங்கல் செலேபிரேஷன் மற்றும் ஃபேர்வெல் பார்டி இரண்டுக்கும் கட்ட இரு சேலை எடுத்து வந்தேன், இது வரை அரிதாய் பயன் படுத்தும் உடைகளை எல்லாம் ஒரு சூட் கேஸ் கொண்டு போய் வீட்டில் வைத்து விட்டு திரும்பிய போது…
டூருக்கு செல்லும் நாளும் வந்தது, கொச்சி, மூணாறு வேகமோன் என்று ஊரை சுற்றினாலும், உணவு ஒற்று கொள்ளாமல் வாந்தி வாந்தியாக எடுத்து தள்ளினோம் பேருந்தில் இருந்த 41 பேரும்… இதில் நான் சுத்தம், கிளம்பும் போதே எனக்கு ஃபீவர் இருந்தது!!
சொன்னது போல் அது லைஃப் டைம் மெமொரி ஆக தான் அந்த இரண்டு நாளும் அமைந்தது!! என்ன தான் குடும்பமாக சுற்றி இருந்தாலும், என் வயதில் இருக்கும் பிற சக மாணவர்களோடு ஒரு பயணம் புதிய அனுபவமாக தான் இருந்தது!!
ஆனால் என்ன?
என்னை சுற்றி இருந்த 40 பெருக்கும் வீட்டில் இருந்து அவ்வப்போது அழைத்து, சாப்பிட்டியா? தூங்கினியா? வாந்தி நின்றுச்சா? இப்போ எங்க இருக்கீங்க? என்று கேட்டு கொண்டே இருந்தார்கள் அவரவர் பெற்றோர்கள்… எனக்கு வழக்கம் போல் தான், என் வீட்டில் இருந்து ஒரு குறுஞ் செய்தி கூட வரவில்லை… 🤷🙃
BSNL கேட்கவே வேண்டாம்! நானே சில புகை படங்கள் பகிர்ந்தாலும், அது போன பாடு இல்லை!! பிறர் போல் 1000 கணக்கில் பிடித்த சாக்லேட், கீ செயின், எதுவுமே வாங்காமல் நான் தனித்து கடை வாசலிலேயே நின்று கொண்டேன்…
ஒரு அரண்மனை கோட்டை வாசலில் தான், 150 ரூபாய்க்கு அம்மாவுக்கு பிடிக்குமே என்று யானைக்குள் யானை இருப்பது போல் ஒரு பொம்மை வாங்கி கொண்டேன், போட்டிங் சென்ற இடத்தில் ஒரு ஐஸ் கிரீம் 30 ரூபாய்க்கு, அணை அருகில் ஒரு ஜுஸ் பசி தாங்க முடியாது, 20 ரூபாய்க்கு வாங்கினேன்! ஆக 200 ரூபாய் செலவு போக, 50 ரூபாய் சேமித்து இருந்தேன்!!
DJ பாடல் போட்ட இடத்தில் தான் நான் முதல் முறையாக, போது வெளியில் ஆடினேன்!! ஆம்! சிறு வயதில், பரத நாட்டியம் கிளாஸ் அனுப்பி விட்டு அரங்கேற்றம் வரும் சமயம் பார்த்து நிறுத்தி விட்டார்கள்… அதன் பிறகும், கல்லூரியில் ஆண்டு விழா அன்று ஆட, HOD அழைத்து அனுமதி கேட்டும், முடியாது என்று முட்டு கட்டை போட்டு விட்டனர்.!!
“ஆடினால் நிச்சய பரிசு வெல்வோம்!” என்று தெரிந்தே நான் மூன்று ஆண்டுகளாக தவிர்த்து விட்டேன், பெற்றோர்களின் வறட்டு பிடிவாதம் மற்றும் கவுரவத்திற்காக.. 🙃🤷
உலகமே வஞ்சித்து, சாபம் பெற்றது போல் தனிமை தனிமை தனிமை என்பது மட்டுமே தான் பல ஆண்டுகளாக என்னை அது விழுங்கி கொண்டு இருக்கிறது!! அவ்வாறு தான் இயங்கியாக, தனித்து இருந்து வாழ்வில் ஜெஷ்வந்த் தினம் “சாப்பிட்டியா?” என்று கேட்கும் ஒரு சிறிய உரையாடலே எனக்கு பெரிய விஷயமாக தோன்றியது…
அது போக, ஹாஸ்டலில் கூட அப்படி தான்… கணவர்கள், அப்பா அம்மா, அண்ணன், அக்கா என்று பலரும் பலரை வந்து பார்த்து செல்வார்கள்.!! ஆனால், இத்தனை மாதத்தில் என் வீட்டில் இருந்து ஒரு நாதி கூட என்னை இருக்கியா? செத்தியா? என்றும் வந்து பார்ப்பது ஏன், அழைத்து, இல்லை இல்லை அது கூட வேண்டாம், தினம் ஒரு மெசேஜ் கூட வந்து இருக்காத நிலையில், யாரேனும் வந்து பார்த்து செல்வார்கள் என்று நினைப்பது எல்லாம் பேராசை தானே!!!
நான் ஆசை ஆசையாக வாங்கி சென்ற பொம்மையை கூட அம்மா ஆர்வமாக வாங்கி பார்க்கவில்லை, டிவி மேஜைக்கு அடியில் அலங்கார் பொருளாக சிறு விட்டார் அவ்வளவே… “இந்த தண்டம் 150 ரூபாய்யா? ஹ்ம்ம்…😏 எங்க போனாலும் ஏமாந்து வர வேண்டியது தானா!!?” என்பது தான் அவரின் எதிர் வினை…
வாழ்வில் முதன் முறையாக, “வீட்டுக்கு ஏன் டா வந்தோம்?” என்றாகி போனது எனக்கு… என் அண்ணன் ஹாஸ்டலில் இருந்து வந்த போது இருந்த ராஜ மரியாதை கவனிப்பு எல்லாம், எனக்கு ஒன்றுமே இருக்காது!! சொல்ல போனால் சென்னை வீட்டில், நான் உறங்க கூட இடம் இல்லை!!
பாய் விரித்து தரையில், தலையணை கூட இன்றி சோபா குஷன் வைத்து உறங்கி விட்டு செல்ல, உப்மா செய்து அனுப்பி விடுவார் அம்மா… பாயும் கூட முழுதாய் விரிக்க முடியாது!! அரை பாய் தான் கட்டிலும் பீரோவுக்கும் இடையில் ஒற்றை அடி பாதை போன்ற இடத்தில் விரித்து படுத்து தூங்குவேன்…
ஷ்ரேயாவின் வாழ்க்கை நம்ப முடியாத அளவு இருக்கிறது அல்லவா?
துன்பங்கள் இன்னும் முடிந்த பாடு இல்லை என்பதே நிதர்சனம்… தொடர்ந்து படித்து இறுதி கட்ட ட்விஸ்ட் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்!!!✨
Thanks for reading மக்களே 🩷
