திரையிட்டு விலகாதே! -23

திரையிட்டு விலகாதே! 

அத்தியாயம் -23

Hiiii வாசகர்களே ✨

ஆம்! என் கண்களை நேராக பார்க்க தைரியம் கொள்ளாமல் ஜெஷ்வந்த், என்னை போல் நேராக ரோட்டை பார்த்து கொண்டே என்னிடம் “I LOVE YOU SHREYA” என்று உணர்ச்சிகள் அற்ற குளிர்ந்த குரலில் இயல்பாக பேசினாலும் பயந்து பயந்து வார்த்தைகளை தொடுத்து வாக்கியமாக சொல்லி முடித்தான்…

அதை கேட்ட எனக்கு தான் பூமி கால் அடியில் இருந்து நழுவுவது போல் ஓர் உணர்வு தோன்றியது!! நான்கு ஆண்டுகள் கழித்து வந்து, “நான் உன்னை காதலிக்கிறேன்!” என்று ஒற்றை வாக்கியத்தில் அவன் அத்தனை ஆண்டுகள் செய்த செயலை எல்லாம் அம்னீஷியா வியாதி வந்து அனைத்தும் மறந்து விட்டது போல், இயல்பாக பேசினால் யாரால் அதை உடனடியாக ஏற்க முடியும்!!!?

எந்த உயிர் உள்ள உணர்வு கொண்ட மனிதனாலும் அதை நிச்சயம் உடனடியாக ஏற்க முடியாது!! நானும் விதி விலக்கு அல்லவே… ஆம்! எனக்கு என் வாழ்வில் ஒன்பதாவது படிக்கும் போதில் இருந்தே அன்பு என்ற ஒன்று வீட்டில் கிடைக்க வில்லை தான்! அதற்காக, இவன் வந்து வந்து பேசி போகும் போது எல்லாம் இவனுக்காக வாழ் நாள் முழுவதும் நம்பி காத்து இருக்க முடியுமா??

ஆகையால் அவன் ஆர்வமாக சொல்லி விட்டு என் முகத்தை காண, அவனை என்னால் நிமிர்ந்து பார்க்க திராணி இல்லாமல் தலை தாழ்த்தி கொண்டு நின்றேன்!! நெகிழ்ச்சி அடைய வேண்டிய தருணத்தில், கழுத்தில் நெகிழி பையை மாட்டி விட்டார் போல் மூச்சு திணறி கொண்டு நின்றேன்!!

அவனோ எனக்கு பதில் சொல்ல நேரம் தர எண்ணினானோ என்னமோ, என்னை அப்படியே பொம்மை போல் பின்னால் நகர்த்தி, அங்கு இருக்கும் ஸ்டோன் பெஞ்சில் அமர வைத்து விட்டு சென்றான்…

விளையாட்டாக போற போக்கில், என் நான்கு வருட காதலை 4 வார்த்தையில் சொல்லி விட்டு… அவன் பாட்டிற்கு பார்க்கிங் ஏரியா உள்ளே நுழைபவனின் முதுகை வெறித்து பார்த்து கொண்டு ஆற்றாமை கொண்டு பொறுமிய மனதுடன் அமர்ந்து இருந்தேன்!!

“ஓ” என ஜெர்சி படத்தில் வரும் காதா நாயகன் போல் கத்த வேண்டும் என்று எனக்கு மனதில் ஓர் உணர்வு ரத்த நாளம் எல்லாம்.முறுக்கு ஏற, எரிமலை போல் வெடித்து சிதறியது!! 🌋 ஆனால், அது மருத்துவமனை வளாகம் என்று என்னை நானே கட்டு படுத்திக் கொண்டு, மீண்டும் ஒரு முறை எழுந்து வந்த பாதையிலேயே நடந்தேன்!!

நடந்து போய் மீண்டும் வந்த எனக்கு, என் மன கண்கள் அவன் காதலை சொல்லிய விதம் தான் அந்த இடத்தில் கால் பதிக்கும் போது திரையிட்டு மறைந்தது… எனக்கு எதிரில் பைக் ஓடு மீண்டும் வந்து நின்றான் ஜெஷ்வந்த்..!! 

“அடித்து துரத்தி விடு அந்த நாயை…” என்று என் மூளை கோபம் கொண்டு கூச்சல் இட்டது… “அவனை அரவணைத்து நெஞ்சின் வலி எல்லாம் அவன் நெஞ்சில் சாய்ந்து அழுது கரித்து விட்டு, காதலை ஏற்று கொள்!!” என்று நான்கு ஆண்டுகளாய் தவம் கொண்டது போல் காதல் கொண்டு விம்மி வெம்பி போய் இருந்த என் மனம்…

நடந்தது என்னமோ இரண்டும் இல்லை!! அவன் வண்டியை நிறுத்து விட்டு என் அருகில் வந்து, கையை பிடித்து மீண்டும் அமர வைக்க போக… அப்போது தான் திக்கி திணறி வாழ்வில் முதல் முறையாக பேச்சு வருவது போல் பேசி “இ… ஹி… ஹ… ஹான்… இது… இது…. நிஜமா தான்!!!!?” என அதற்கு மேல் வார்த்தை வராமல் திக்கி, என்னை அமர வைத்து என் முன்னால் நின்றவன் என் இரு குண்டு கொழு கொழு கன்னங்கள், அவன் உள்ளங்கையில் பற்றி பிடித்து “நிஜம் தான் நம்பு!!!” என்றான்…

“உஃப் உஃப் உஃப்” 😮‍💨 என நெஞ்சு வலி வராத குறையாக எதிரில் இருக்கும் ஹாஸ்பிடல் வாசலை பார்த்தேன், “ஒரு வேளை வழி வந்து உள்ளே சென்றாள் சிகிச்சை அளிப்பவர்களா?” என்பது போல்… என் கை எல்லாம் ஜில்லிட்டு போய், உடல் எல்லாம் காஷ்மீரில் ஜெர்கின் இல்லாமல் நிற்பது போல் தட தடவென நடுங்கியது, அத்துடன் கன்னம் பிடித்து சொல்லி, கிள்ளி விட்டு என் அருகில் ஓட்டி கொண்டு அமர்ந்தவனை நான் கண்கள் வெளியே வந்து விழும் அளவுக்கு முட்டையாக மிழிகளை விரித்தது பார்த்தேன்!!!

இம்முறை நான் கூட என் மொபைலை எடுக்க வில்லை… ஆனால் அவன் எடுத்து, ஒரு செல்ஃபி எடுத்தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தார் போல்!! 

“இந்த தருணத்தை freeze செய்துக்க போறேன்!! Future லே நம்ம புள்ளைங்களுக்கு காட்டலாம்…😁” என்று சொல்லி, எனக்கு வேறு அதை உடனடியாக வாட்ஸ் ஆப்பில் அனுப்பி விட்டான்…

நான் அவனையே தான் உற்று பார்த்து கொண்டு இருந்தேன்!! கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் முடிவுற்று இருந்ததே.. அவனை நான் இவ்வளவு ரசனையாக பார்த்து!! அதுவும் அப்போது போல் இல்லாமல், இது இப்போது காதல் என்ற உறவின் உணர்வோடு பார்ப்பதில் அவன் இன்னும் அழகாக தெரிந்தான்!!😍

ஜெஷ்வந்த் என்னிடம் திரும்பி “சரி அப்போ போலாமா!? டைம் ஆயிருச்சு…” என்று பைக் எடுத்தான், நான் பின்னால் ஏறிக் கொண்டதும் வளாகம் விட்டு வெளியேறினோம்… மீண்டும் விரகனூர் சாலை வந்து, தெப்பக்குளம் பக்கமாக வரும் போது “எதாச்சும் சாப்பிடுரியா?” என்றான்… 

“வேணா….” 

“சரி ஸ்நாக்ஸ் மாறி ஆச்சு எதாச்சும் சாப்பிடு!” என்று கூட்டமாக இருக்கும் ஒரு பகுதியில் வண்டியை நிறுத்தினான்… 

நான் ஒரு சாக்கோ பார் குச்சி ஐஸ் கிரீம் வாங்கி கொண்டேன்… குளத்தின் அந்த கரை சுவரி அமர்ந்த படி, இருளில் ஒளிரும் அந்த அழகை கண்ட வண்ணம் பனி குலையலை சுவைத்து உண்டேன்… கை எல்லாம் உருகி ஊற்றி பிசு பிசுவென ஆகியது, நான் பொறுமையாக உண்டதால்… 

அவன் குச்சியை வாங்கி குப்பையில் போட, நான் என் துப்பட்டாவிலேயே கையை துடைத்து விட்டேன்! எப்போதும் அப்படி செய்ய மாட்டேன், ஆனால் இம்முறை அவனின் எதிர் வினையை காண்பதற்காகவே நான் வேண்டும் என்றே செய்து படக்கென பைக்கில் ஏறி அமர்ந்தேன்… 

“ஆச்சோ….. கைய தான் கழுவேன்!!” 😫

“முடியா முடியாது… வண்டிய எடு…” என்று நக்கலாக சொல்லி விட்டு, அவன் கவனிக்காத வண்ணம் சிரித்து கொண்டேன்!! அவனோ “என்னமோ போ…” என்று புறப்பட்டான்…

“ஆமா நீ எதுவும் சாப்பிடலையா?” 

“ஹான் நா ஐஸ் கிரீம் சாப்பிட மாட்டேன்… எனக்கு அடிக்கடி கோல்டு வரும்..” 

“ஓ” என்று கேட்டு கொண்ட பின், ரயில்வே ட்ராக் அருகில் வந்து விட்டதனால் எனக்கு என்னமோ போல் ஆனது!! என் மனமோ, “இந்த நொடி அப்படியே உறைந்து விடாதா? இல்லை இன்னும் கொஞ்சம் நேரம் மட்டும் நீண்டு இருந்தால் நன்றாக இருக்குமே!!” என ஏக்கம் கொண்டது…

என் அறைக்கு வந்ததும் நான் மீண்டும் அவன் வாசம் உணர்ந்தேன் என் உடை எங்கும், வெக்கம் கொண்டு அப்படியே முகம் எங்கும் தக்காளி பலம் போல் சிவந்து என் குண்டு கன்னம் குழி விழும் அளவு சிரித்து மகிழ்ந்தது…☺️

அப்படியே சினிமாவில் வரும் ஹீரோயின் போல் துப்பட்டாவை காற்றில் ஒரு கைகளில் பிடித்து சுழற்றி அந்த சிறிய அறைக்குள் அங்கும் இங்கும் ஓடி, பொத்தென அப்படியே சுழன்று வந்து என் கட்டிலில் சரிந்து அதை காற்றில் தூக்கி வீசி பறக்க விட்டேன்… 

பின்ன இந்த அளவு கூட சந்தோஷம் இருக்காத என்ன? 

வாழ்வின் முதல் காதல், சிதைந்து போய் விட்டது என்று இருந்த நிலையில் கை கூடி வந்து இருக்கிறது… ஆனால், ஒன்று..!!

“நான் ஓகே சொல்லி அக்செப்ட் பண்ணவே இல்லையே!!” என்று யோசனையோடு, என் மொபைல் எடுத்து பார்த்தேன்…

அதில் ஜெஷ்வந்த் “நான் வீட்டுக்கு வந்துட்டேன்!” என்று நான் கேட்காமலேயே தானாக சொல்லி இருந்தான்… அது போக அந்த குறுஞ்செய்தி மேல் அவன் அனுப்பி விட்டு இருந்த, நாங்கள் கிளம்பும் எடுத்து கொண்ட செல்ஃபி இருந்தது… 💗💓

அன்று இரவு எனக்கு சாப்பிட வேண்டும் என்று கூட தோண வில்லை… எப்படியும் போனால் இப்போது ஒன்றுமே இருக்காது, பிறகு எதற்கு? என்று நானும் அப்படியே விட்டு விட்டேன்… வெகு நாட்கள் கழித்து அந்த சந்தோஷத்தில் பசி கூட மறந்தவளாக முதன் முறையாக வெறும் வயிற்றோடு மனம் நிறைந்து இருந்ததால் நிம்மதியான உறக்கம் கொண்டேன்!!

அவனோ இரவு 10:30 மணிக்கு ஓரிரு முறை அழைத்து பார்த்து விட்டு, 5 6 மெசேஜ் போட்டு விட்டு இருந்தான்… 

“ஹேய் இதை எல்லாம் இன்ஸ்டாவில் போஸ்ட் போடாத… 

கொஞ்ச நாளைக்கு நாம நம்ம ரிலேஷன் ஷிப்பை பிரைவேட் ஆக வெச்சுப்போம்!

ஃப்ரெண்ட்ஸ் கிட்டயும் உளறி வைக்காத…

வீட்டுல மாட்டிக்காம safe ஆக இரு!!

ஹாஸ்டலில் யாராச்சும் எதாச்சும் கேட்டா, ஒன்னும் சொல்லாத…” என்று நீண்ட நேரமாக ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து அனுப்பி விட்டு இருந்த பின், “குட் நைட் குட்டி மா❤️” என்றும் அனுப்பி விட்டு இருந்தான்…

பிப்ரவரி 2, 2024 இந்த தேதி ஷ்ரேயாவின் ஆயிசுக்கும் அவளால் மறக்க முடியாத ஒரு மகிழ்வான நாள் ஆகி போனது… நீண்ட ஆண்டுகள் கழித்து நிம்மதியாக உறங்கும் அவளுக்கும் அது தான் அவள் அடுத்த பல ஆண்டுகளின் நேரத்திற்கு அவள் உறங்கிய கடைசி நான் ஆக போகிறது, என்பதை தெரியாமல் போனது பேதை அவளுக்கு…

அது போக, இன்னும் 12 நாளில் காதலர்கள் தினம் வேறு வர போகிறதே!! அது அப்போதைய டிரெண்ட் படி, வாலண்டைன்சு வீக் ஆக வாரம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டே ஆக செலேபிரேட் பண்ண போகிறார்களா? 

என்ன என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள் ✨ 

Thanks for reading மக்களே 🩷 

 

 

❤️ Loading reactions...
2 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this page